Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 9ஈ

சிறையிருப்பும் திரும்ப நிலைநாட்டப்படுவதும்

சிறையிருப்பும் திரும்ப நிலைநாட்டப்படுவதும்

யூத மக்கள் பூர்வ பாபிலோனில் சிறைப்பட்டிருந்ததைப் பற்றிய நிறைய தீர்க்கதரிசனங்களுக்கு இன்னொரு நிறைவேற்றமும் இருந்தது. அதாவது, கிறிஸ்தவ சபை மகா பாபிலோனின் சிறையிருப்பில் இருந்தபோது அவை பெரியளவில் நிறைவேறின. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

1. எச்சரிப்புகள்

2. சிறையிருப்பு

3. திரும்ப நிலைநாட்டப்படுவது

முதல் நிறைவேற்றம்

கி.மு. 607-க்கு முன்​—ஏசாயா, எரேமியா மற்றும் எசேக்கியேல் யெகோவாவின் மக்களை எச்சரிக்கிறார்கள்; ஆனாலும் விசுவாசதுரோகம் அதிகமாகிறது

கி.மு. 607​—எருசலேம் அழிக்கப்படுகிறது; கடவுளுடைய மக்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்படுகிறார்கள்

கி.மு. 537-லும் அதைத் தொடர்ந்தும்​—மீதியாக இருந்த உண்மையுள்ள யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்து, ஆலயத்தைக் கட்டி, தூய வணக்கத்தைத் திரும்ப ஆரம்பிக்கிறார்கள்

பெரியளவு நிறைவேற்றம்

முதல் நூற்றாண்டு​—இயேசு, பவுல் மற்றும் யோவான் கிறிஸ்தவ சபையை எச்சரிக்கிறார்கள்; ஆனாலும் விசுவாசதுரோகம் அதிகமாகிறது

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து​—உண்மைக் கிறிஸ்தவர்கள் மகா பாபிலோனின் சிறையிருப்பில் இருக்கிறார்கள்

1919-லும் அதைத் தொடர்ந்தும்​—இயேசுவின் ஆட்சியின் கீழ், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ஆன்மீகச் சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்று தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுகிறார்கள்