Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 4அ

‘நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்’

‘நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்’

பூர்வகால அசீரியாவிலும் பாபிலோனியாவிலும் இருந்த மாளிகைகளையும் கோயில்களையும் காவல்காக்க, அவற்றின் நுழைவாசலில் காளைகள் மற்றும் சிங்கங்களின் மாபெரும் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதையெல்லாம் எசேக்கியேல் பார்த்திருப்பார். அவற்றுக்கு மனித தலையும் சிறகுகளும் இருந்தன. எல்லாரையும் போல அவரும் அவற்றைப் பார்த்து வியந்துபோயிருப்பார். அவற்றில் சில, கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு இருந்தன. அவை பார்ப்பதற்கு அதிக சக்தியுள்ளவையாகத் தெரிந்தாலும் அவை உயிரற்ற கற்சிலைகளாகத்தான் இருந்தன.

ஆனால், எசேக்கியேல் பார்த்த நான்கு ஜீவன்கள் உயிருள்ளவையாக இருந்தன. அந்தச் சிலைகளுக்கும் இந்த ஜீவன்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அவர் பார்த்த காட்சி அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதால், அவருடைய தீர்க்கதரிசனத்தின் ஆரம்பத்தில் ‘ஜீவன்கள்’ என்ற வார்த்தையை 10 தடவைக்கும் அதிகமாகப் பயன்படுத்தினார். (எசே. 1:5-22) கடவுளுடைய சிம்மாசனத்துக்குக் கீழே அந்த நான்கு ஜீவன்களும் ஒரே சமயத்தில் ஒன்றுசேர்ந்து போவதை அந்தத் தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்தார். எல்லா படைப்புகளும் யெகோவாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை இதிலிருந்து அவர் தெளிவாகத் தெரிந்துகொண்டிருப்பார். இன்றும் அந்தத் தரிசனம் யெகோவாவின் மகத்துவத்தையும் வல்லமையையும் அவருடைய பேரரசாட்சியின் சிறப்பையும் நமக்குத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.—1 நா. 29:11.