Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 16ஆ

பெருமூச்சுவிட்டுக் குமுறுவதும், அடையாளம் போடுவதும், நொறுக்குவதும்​—⁠எப்போது, எப்படி?

பெருமூச்சுவிட்டுக் குமுறுவதும், அடையாளம் போடுவதும், நொறுக்குவதும்​—⁠எப்போது, எப்படி?

எசேக்கியேல் 9-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தரிசனத்துக்கு நவீன கால நிறைவேற்றம் இருக்கிறது. அது எப்படி நிறைவேறும் என்பதைப் புரிந்துகொள்வது, இந்த உலகத்தின் முடிவின்போது தைரியமாக இருக்க நமக்கு உதவும்

‘பெருமூச்சுவிட்டுக்­ குமுறுவது’

எப்போது: கடைசி நாட்களின்போது, அதாவது மிகுந்த உபத்திரவத்துக்கு முன்

எப்படி: நல்மனமுள்ளவர்கள் இந்த உலகத்தில் நடக்கிற அக்கிரமங்கள்மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பை, சொல்லிலும் செயலிலும் காட்டுவார்கள். நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வார்கள்; கிறிஸ்துவின் சுபாவத்தைக் காட்ட ஆரம்பிப்பார்கள்; யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பார்கள்; கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையோடு ஆதரவு கொடுப்பார்கள்

‘அடையாளம் போடுவது’

எப்போது: மிகுந்த உபத்திரவத்தின்போது

எப்படி: செயலாளரின் மைப் பெட்டியை வைத்திருப்பவர், எல்லா தேசத்தாரையும் நியாயந்தீர்க்க வருகிற இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறார். அவர் அப்படி வரும்போது திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் செம்மறியாடுகளாகத் தீர்ப்பு பெறுவார்கள், அதாவது அடையாளம் போடப்படுவார்கள். அவர்கள் அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பார்கள் என்பதை இது குறிக்கும்

‘நொறுக்குவது’

எப்போது: அர்மகெதோன் போரின்போது

எப்படி: இயேசு கிறிஸ்துவும் அவருடைய பரலோகப் படைவீரர்களும், அதாவது தேவதூதர்களும் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யும் 1,44,000 பேரும், இந்தப் பொல்லாத உலகத்தை அடியோடு அழிப்பார்கள். ஆனால், தூய வணக்கத்தாரை அந்த அழிவிலிருந்து காப்பாற்றி நீதியான புதிய உலகத்துக்கு வழிநடத்துவார்கள்