Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 7ஆ

எசேக்கியேல் புத்தகத்திலுள்ள முக்கியமான சொற்றொடர்கள்

எசேக்கியேல் புத்தகத்திலுள்ள முக்கியமான சொற்றொடர்கள்

“மனிதகுமாரனே”

90-க்கும் அதிகமான தடவை வருகிறது

எசேக்கியேல், 90-க்கும் அதிகமான தடவை “மனிதகுமாரனே” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். (எசே. 2:1) எசேக்கியேலுக்கு விசேஷப் பொறுப்புகள் கிடைத்திருந்தாலும், அவர் ஒரு சாதாரண மனிதன்தான் என்பதை இதன் மூலம் யெகோவா ஞாபகப்படுத்தினார். சுவிசேஷப் புத்தகங்களில் இயேசுவும் சுமார் 80 தடவை ‘மனிதகுமாரன்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். இயேசு மனித உருவத்தில் வந்த ஒரு தேவதூதர் அல்ல, அவர் பூமியில் ஒரு மனிதராகத்தான் இருந்தார் என்பதை இது காட்டுகிறது.—மத். 8:20.

“நான் யெகோவா என்று . . . தெரிந்துகொள்வீர்கள்”

50-க்கும் அதிகமான தடவை வருகிறது

“நான் யெகோவா என்று . . . தெரிந்துகொள்வீர்கள்” அல்லது “நான் யெகோவா என்று . . . [மக்கள்] தெரிந்துகொள்வார்கள்” போன்ற சொற்றொடர்களை 50-க்கும் அதிகமான தடவை தன்னுடைய புத்தகத்தில் எசேக்கியேல் பதிவு செய்திருக்கிறார். தூய வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள யெகோவா மட்டுமே தகுதியானவர் என்பதை இந்த வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.—எசே. 6:7.

“உன்னதப் பேரரசராகிய யெகோவா”

217 தடவை வருகிறது

“உன்னதப் பேரரசராகிய யெகோவா” என்ற சொற்றொடர் 217 தடவை பயன்படுத்தப்பட்டிருப்பது, கடவுளுடைய பெயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதோடு, எல்லா படைப்புகளும் அவருக்குக் கீழ்ப்பட்டவை என்பதை வலியுறுத்துகிறது.—எசே. 2:4.