Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 19ஆ

ஒரு மெல்லிய நீரோடை ஆறாகப் பெருக்கெடுக்கிறது!

ஒரு மெல்லிய நீரோடை ஆறாகப் பெருக்கெடுக்கிறது!

ஆலயத்திலிருந்து ஒரு மெல்லிய நீரோடை புறப்படுவதை எசேக்கியேல் பார்க்கிறார். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலேயே அது அற்புதமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைகளில் மரங்கள் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. அவற்றின் கனிகள் உணவாகவும், இலைகள் மருந்தாகவும் பயன்படுகின்றன. இவை எதைக் குறிக்கின்றன?

ஆசீர்வாதங்களைத் தரும் ஆறு

பூர்வ காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள், தாய்நாட்டுக்குத் திரும்பிய பிறகு, தூய வணக்கத்தை நிலைநாட்டும் வேலையில் ஈடுபட்டார்கள். அப்போது, யெகோவாவின் ஆசீர்வாதங்கள் ஆறுபோல் ஓடிவந்தன

நம் காலத்தில் 1919-ல் தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது. அப்போது, கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களை நோக்கி வரலாறு காணாதளவுக்கு ஆன்மீக ஆசீர்வாதங்கள் பாய்ந்தோடி வந்தன

எதிர்காலத்தில் அர்மகெதோனுக்குப் பிறகு, ஆன்மீக விதத்திலும் மற்ற விதங்களிலும் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்கள் பாய்ந்தோடி வரும்

உயிரளிக்கும் தண்ணீர்

பூர்வ காலத்தில் கீழ்ப்படிந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், அவர்கள் எல்லாரையும் யெகோவா அளவின்றி ஆசீர்வதித்தார். ஆன்மீக விதத்தில் செழித்தோங்க வைத்தார்

நம் காலத்தில் ஆன்மீகப் பூஞ்சோலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவர்கள் யெகோவா தரும் ஏராளமான ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெற்று ஆன்மீக விதத்தில் உயிரடைந்திருக்கிறார்கள்

எதிர்காலத்தில் அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்களோடு, உயிர்த்தெழுந்து வரும் கோடிக்கணக்கான மக்களும் சேர்ந்துகொள்வார்கள். எல்லாரும் யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்

உணவளிக்கிற, குணமளிக்கிற மரங்கள்

பூர்வ காலத்தில் உண்மையுள்ள மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிய பிறகு, அவர்களுக்கு ஆன்மீக விதத்தில் யெகோவா உணவளித்தார்; பல காலமாக இருந்த ஆன்மீக வியாதியிலிருந்தும் அவர்களைக் குணமாக்கினார்

நம் காலத்தில் இன்று உலகம் ஆன்மீக வியாதியிலும் பஞ்சத்திலும் கிடக்கிறது. அவற்றைச் சமாளிக்க போதுமான ஆன்மீக உணவு மக்களுக்குக் கிடைக்கிறது

எதிர்காலத்தில் கிறிஸ்துவும் அவரோடு ஆட்சி செய்யும் 1,44,000 பேரும், கீழ்ப்படிதலுள்ள மக்கள் எல்லாருமே பரிபூரணத்தை அடைய... என்றென்றும் ஆரோக்கியத்தோடும் இளமையோடும் வாழ... உதவுவார்கள்