Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி மூன்று

‘நான் உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன்’​—⁠தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்ற வாக்குறுதி

‘நான் உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன்’​—⁠தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்ற வாக்குறுதி

எசேக்கியேல் 20:41

முக்கியக் குறிப்பு: தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவது பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள்

விசுவாசதுரோகத்தின் காரணமாக இஸ்ரவேலில் இருந்த ஒற்றுமை சின்னாபின்னமாகிறது. மக்கள் தூய வணக்கத்தைக் கறைபடுத்தி, கடவுளுடைய பெயரை அவமதித்ததற்கான தண்டனையை இப்போது அனுபவிக்கிறார்கள். நம்பிக்கை இழந்த மக்களுக்கு எசேக்கியேல் மூலமாக நம்பிக்கையூட்டும் தீர்க்கதரிசனங்களை யெகோவா வரிசையாகக் கொடுக்கிறார். தத்ரூபமான காட்சிகளையும் பிரமிக்க வைக்கும் தரிசனங்களையும் யெகோவா அவருக்குக் காட்டுகிறார். இதன் மூலம் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களை மட்டுமல்ல, தூய வணக்கம் நிலைநாட்டப்படுவதைப் பார்க்க ஏங்குகிற எல்லாரையும் யெகோவா பலப்படுத்துகிறார்.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 8

“ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்”

வருங்கால ராஜாவும் யெகோவாவுடைய மக்களின் மேய்ப்பருமான மேசியாவைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல்லும்படி கடவுள் தன்னுடைய சக்தியால் எசேக்கியேலைத் தூண்டுகிறார். அந்த மேசியா, தூய வணக்கத்தை நிரந்தரமாக நிலைநாட்டுவார்.

அதிகாரம் 9

“நான் உங்களுக்கு ஒரே இதயத்தை . . . கொடுப்பேன்”

பாபிலோனிய சிறையிருப்பில் இருந்த உண்மையுள்ள யூதர்களுக்குச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நம் நாளிலும் எப்படி நிறைவேறியிருக்கின்றன?

அதிகாரம் 10

“நீங்கள் உயிர் அடைவீர்கள்”

சமவெளி முழுவதும் கிடந்த எலும்புகள் உயிர் அடைந்ததைப் பற்றிய தரிசனம் எசேக்கியேலுக்குக் காட்டப்பட்டது. அதன் அர்த்தம் என்ன?

அதிகாரம் 11

“நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன்”

இந்தக் காவல்காரருக்கு என்ன பங்கும் பொறுப்புகளும் இருந்தன? என்ன எச்சரிப்பை அவர் கொடுக்க வேண்டியிருந்தது?

அதிகாரம் 12

“அவர்களை ஒரே தேசமாக்குவேன்”

யெகோவா தன்னுடைய மக்களை ஒன்றுசேர்ப்பதாக வாக்குக் கொடுக்கிறார்.

அதிகாரம் 13

‘ஆலயத்தைப் பற்றி விளக்கிச் சொல்’

ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்தின் அர்த்தம் என்ன?

அதிகாரம் 14

“இதுதான் ஆலயத்தைப் பற்றிய சட்டம்”

எசேக்கியேலின் காலத்திலிருந்த யூதர்கள் ஆலயத்தைப் பற்றி அவர் பார்த்த தரிசனத்திலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கலாம்? அந்தத் தரிசனத்திலிருந்து இன்று நாம் எப்படி பயனடையலாம்?