Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உற்சாகத்தையும் கனிவையும் வெளிப்படுத்துதல்

உற்சாகத்தையும் கனிவையும் வெளிப்படுத்துதல்

படிப்பு 33

உற்சாகத்தையும் கனிவையும் வெளிப்படுத்துதல்

1உற்சாகமே பேச்சின் உயிர்மூச்சாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைக் குறித்து உற்சாகமாக இல்லையென்றால், உங்கள் கேட்போர் நிச்சயமாகவே அவ்விதமாக இருக்கமாட்டார்கள். அது உங்களைச் செயல்படத் தூண்டவில்லையென்றால், அவர்களை அது செயல்படத் தூண்டாது. ஆனால் ஒரு பேச்சாளராக உண்மையான உற்சாகத்தை நீங்கள் வெளிக்காட்டுவதற்கு, உங்கள் கேட்போர் நீங்கள் சொல்லவிருப்பதைக் கேட்பது அவசியம் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். பேச்சை நீங்கள் தயாரிக்கையில் அவர்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது, அவர்களுக்கு அதிக பிரயோஜனமாயிருக்கும் குறிப்புகளைத் தெரிவுசெய்து உங்கள் கேட்போர் உடனடியாக அவற்றின் மதிப்பைப் போற்றும்விதமாக அவற்றை உருவமைத்திருக்கிறீர்கள். இதை நீங்கள் செய்திருந்தால், ஊக்கமாக பேச நீங்கள் உந்துவிக்கப்பட்டவர்களாக உணருவீர்கள், மேலும் உங்கள் கேட்போர் பிரதிபலிப்பார்கள்.

2உயிரோட்டமுள்ள பேச்சினால் உற்சாகம் காண்பித்தல். உயிரோட்டமுள்ள உங்கள் பேச்சில் உற்சாகம் அதிக தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. நீங்கள் அலட்சியமாக அல்லது சோர்வுற்ற மனநிலையில் இருக்க முடியாது. உங்கள் முகபாவனையில், உங்கள் குரல் தொனியில் மற்றும் பேசும் முறையில் நீங்கள் முற்றிலும் உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும். அப்படியென்றால் நீங்கள் பலத்தோடும் சுறுசுறுப்போடும் பேச வேண்டும். கருத்தை வற்புறுத்துகிறவராக இல்லாமல் உறுதியாக நம்புகிறவராக நீங்கள் தொனிக்க வேண்டும். நீங்கள் உற்சாகமாக இருக்கையில், ஒருபோதும் வரம்புமீறிய உற்சாகத்துக்கு தள்ளப்படக்கூடாது. தன்னடக்கத்தை இழப்பது என்பது உங்கள் கேட்போரை இழப்பதை அர்த்தப்படுத்தும்.

3உற்சாகம் தொற்றும் தன்மையுள்ளது. உங்கள் பேச்சைக் குறித்து நீங்கள் உற்சாகமாக இருந்தால், உங்கள் கேட்போர் அந்த உற்சாகத்தை எய்தப்பெறுவார்கள். முறையே, கேட்போருடன் நல்ல தொடர்பு, உங்களிடமாக திரும்ப பிரதிபலிக்க, உங்கள் சொந்த உற்சாகத்தையும் அது உயிருள்ளதாக வைக்கும். மறுபட்சத்தில், நீங்கள் சோர்வுற்றுப்போனால், உங்கள் கேட்போரும் உங்களோடு சோர்வடைந்துவிடுவார்கள்.

4நாம் கடவுளுடைய ஆவியில் அனலுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று பவுல் சொல்கிறார். அப்படியிருந்தால், உயிரோட்டமுள்ள உங்கள் பேச்சு கடவுளுடைய ஆவி உங்கள் கேட்போர்மீது பொழியச்செய்ய, அவர்கள் செயல்நடவடிக்கைக்குத் தூண்டப்படுவார்கள். அப்பொல்லோ அப்படிப்பட்ட ஆவியை தன் பேச்சில் காண்பித்தார், அவர் சொல்திறமிக்க பேச்சாளர் என்றழைக்கப்படுகிறார்.—ரோ. 12:11; அப். 18:25; யோபு 32:18-20; எரே. 20:9.

5ஒரு பேச்சைக் குறித்து உற்சாகமாயிருக்க கொடுப்பதற்குப் பயனுள்ள ஏதோவொன்று உங்களிடம் இருப்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். ஒரு பேச்சாளராக முதலில் உங்களை உந்துவிக்கக்கூடிய எதையாவது நீங்கள் கொண்டிருக்கும்வரையாக அளிக்கவிருக்கும் பொருளின்பேரில் வேலைசெய்யுங்கள். அது புதிய பொருளாக இருக்கவேண்டியதில்லை, ஆனால் தலைப்புப் பொருளை நீங்கள் அணுகுவது புதுமையாக இருக்கலாம். அவர்களுடைய வணக்கத்தில் அவர்களைப் பலப்படுத்தக்கூடிய ஒன்றை, அவர்களை மேம்பட்ட ஊழியர்களாக அல்லது மேம்பட்ட கிறிஸ்தவர்களாக ஆக்கக்கூடிய ஒன்றை உங்கள் கேட்போருக்கு நீங்கள் கொண்டிருப்பதாக உணர்ந்தால், உங்கள் பேச்சைக்குறித்து உற்சாகமாக இருப்பதற்கு எல்லா காரணமுமிருக்கிறது, சந்தேகமின்றி நீங்கள் அவ்வாறே இருப்பீர்கள்.

6பொருளுக்குப் பொருத்தமான உற்சாகம். உங்கள் பேச்சில் வேறுபாட்டுக்காகவும் உங்கள் கேட்போரின் நன்மைக்காகவும், பேச்சு முழுவதிலும் மட்டுக்கு மீறிய உயர் அளவில் உற்சாகத்தைக் கொண்டுசெல்லக்கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாகவேகூட களைத்துப்போய்விடுவார்கள். இது உங்கள் பேச்சில் வேறுபாட்டை அனுமதிப்பதற்காக போதிய வித்தியாசமான பொருளைத் தயாரிப்பதற்கான தேவையை மறுபடியும் வலியுறுத்துகிறது. நீங்கள் கலந்துரையாடும் சில குறிப்புகள் மற்றவற்றைக் காட்டிலும் இயற்கையாகவே அதிக உற்சாகமாக பேசுவதைத் தேவைப்படுத்தும் என்பதையும் அவை உங்கள் பேச்சு முழுவதிலும் திறம்பட்ட முறையில் பின்னிப்பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது.

7பிரதான குறிப்புகள் விசேஷமாக உற்சாகமாக அளிக்கப்பட வேண்டும். உங்கள் பேச்சில் உச்சநிலைகள், கட்டி அமைக்க உச்சக்கட்டங்கள் இருக்க வேண்டும். இவை உங்கள் பேச்சின் முக்கிய குறிப்புகளாக இருப்பதன் காரணமாக, இவையே பொதுவாக உங்கள் கேட்போருக்குத் தூண்டுதலளிக்கவும், உங்கள் விவாதத்தின் பொருத்தம், உங்கள் காரணங்கள் அல்லது உங்கள் புத்திமதியை மனதில் பதிய வைக்கவும், வடிவமைக்கப்பட்ட குறிப்புகளாக இருக்கும். உங்கள் கேட்போரை நம்பவைத்தப் பிறகு, இப்பொழுது அவர்களுக்குத் தூண்டுதலளிக்க வேண்டும், உங்கள் முடிவுகளின் பயன்களை, இந்த நம்பிக்கைகளைத் தொடருவது அவர்களுக்குக் கொண்டுவரும் சந்தோஷங்களையும் சிலாக்கியங்களையும் காட்ட வேண்டும். இது உற்சாகமாக பேசுவதைத் தேவைப்படுத்துகிறது.

8இப்படியிருந்தாலும், உங்கள் அளிப்பில் மற்ற சமயங்களில் அலட்சியமாக இருக்கும் தவறை ஒருபோதும் செய்துவிடக்கூடாது. உங்கள் தலைப்புப் பொருளைப் பற்றிய பலமான உணர்ச்சியை நீங்கள் ஒருபோதும் இழந்துவிடவோ அல்லது ஆர்வக் குறைவை வெளிப்படுத்தவோ கூடாது. காடுவெட்டி திருத்தப்பட்ட ஒரு சிறிய நிலத்தில் அமைதியாக புல்மேய்ந்துகொண்டிருக்கும் ஒரு மானை உங்கள் மனதில் கற்பனை செய்துபாருங்கள். தோற்றத்தில் தளர்ந்த நிலையில் இருந்தாலும், ஆபத்துபற்றிய ஒரு மிகச் சிறிய அறிகுறியைக் கண்டமாத்திரத்தில் வேகமாக குதித்தெழுந்து பாய்ந்தோடச் செய்யும் மறைந்திருக்கும் சக்தி அதன் மெல்லிய கால்களில் இருக்கிறது. அது செளகரியமாக இருக்கிறது, ஆனால் எப்போதும் விழிப்பாயிருக்கிறது. முழு உற்சாகத்தோடும் பேசாதிருக்கையிலும்கூட நீங்களும் அப்படியே இருக்கலாம்.

9அப்படியென்றால் இவை அனைத்தும் எதை அர்த்தப்படுத்துகின்றன? உயிரோட்டமுள்ள பேச்சு ஒருபோதும் கட்டாயப்படுத்தப்பட்டதல்ல. அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும், உங்கள் பொருள் அந்தக் காரணத்தை உங்களுக்கு கொடுக்க வேண்டும். உங்கள் உற்சாகம் பொருளுக்குப் பொருத்தமானதாக இருந்ததா என்பதைக் குறித்தே உங்கள் ஆலோசகர் அக்கறையுள்ளவராக இருப்பார். அது அளவுக்கு அதிகமாக இருந்ததா, மிகக் குறைவாக இருந்ததா அல்லது தவறான இடத்தில் இருந்ததா? நிச்சயமாகவே, அவர் உங்கள் சொந்த தனிப்பட்ட ஆளுமையையும் கருத்தில் கொள்வார், ஆனால் நீங்கள் கூச்சமாகவும் கலகலப்பில்லாமலும் இருந்தால் உங்களை உற்சாகப்படுத்துவார், நீங்கள் சொல்லும் அனைத்துக் காரியங்களைக் குறித்தும் அளவுக்கு அதிகமாக கிளர்ச்சியுற்றவராக நீங்கள் தோன்றினால் உங்களை எச்சரிப்பார். ஆகவே உங்கள் பொருளுக்குப் பொருத்தமாக உற்சாகமாயிருங்கள், உற்சாகமான உங்கள் பேச்சு முழுவதுமாக சமநிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும்பொருட்டு உங்கள் பொருளை வித்தியாசப்படுத்துங்கள்.

**************

10உற்சாகம் என்பது கனிவோடும் உணர்ச்சியோடும் நெருக்கமாக சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. இருந்தபோதிலும், அவை வெளிப்படுவது வித்தியாசமான உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு உங்கள் கேட்போரில் வித்தியாசமான விளைவுகளைக் கொண்டுவருகிறது. ஒரு பேச்சாளராக உங்கள் பொருளின் காரணமாக நீங்கள் பொதுவாக உற்சாகமாயிருக்கிறீர்கள், ஆனால் உங்கள் கேட்போரைப்பற்றி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தோடு சிந்திக்கையில் நீங்கள் கனிவுள்ளவர்களாக இருக்கிறீர்கள். பேச்சு ஆலோசனைத் தாளில் பட்டியலிடப்பட்டிருக்கும் “கனிவு, உணர்ச்சி” யோசனையுடன் கவனிப்பதற்கு தகுதியுள்ளதாயிருக்கிறது.

11கனிவையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவீர்களானால், நீங்கள் அன்பு, தயவு மற்றும் மென்மையான பரிவைக்காட்டும் நபர் என்பதை உங்கள் கேட்போர் உணர்ந்துகொள்வர். குளிரான இரவில் நெருப்பினிடமாக கவரப்படுவது போல அவர்கள் உங்களிடமாக கவரப்படுவார்கள். உற்சாகமுள்ள பேச்சு ஊக்கமூட்டுகிறது, ஆனால் மென்மையான உணர்ச்சியும்கூட தேவையாயிருக்கிறது. மனதை இணங்கச்செய்வது மட்டுமே எப்போதும் போதுமானதாக இல்லை; இருதயத்தை நீங்கள் செயல்பட தூண்ட வேண்டும்.

12உதாரணமாக, அன்பு, நீடியபொறுமை, தயவு மற்றும் சாந்தம் போன்ற இந்தப் பண்புகளை உங்களுடைய சொந்த நடத்தையில் கொஞ்சமாவது பிரதிபலிக்காமல் கலாத்தியர் 5:22,23-லிருந்து அவற்றை வாசிப்பது பொருத்தமாக இருக்குமா? மேலுமாக, 1தெசலோனிக்கேயர் 2:7, 8-ல் பவுலின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மென்மையான உணர்ச்சியைக்கூட கவனியுங்கள். இவை கனிவையும் உணர்ச்சியையும் தேவைப்படுத்தும் சொற்களாகும். அது எவ்விதமாக காண்பிக்கப்பட வேண்டும்?

13முகபாவனையில் கனிவை உணரச்செய்தல். உங்கள் கேட்போரிடமாக கனிவான உணர்ச்சி இருக்குமானால், அது உங்கள் முகத்தில் தெரிய வேண்டும். இல்லையென்றால், நீங்கள் உண்மையில் கனிவாக இருப்பதைக் குறித்து உங்கள் கேட்போர் நம்பமாட்டார்கள். ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும். ஒரு முகமூடியைப் போல அதை அணிந்துகொள்ளமுடியாது. கனிவையும் உணர்ச்சியையும் உணர்ச்சிப்பசப்போடும் உணர்ச்சிவயப்படுவதோடும் குழப்பிக்கொள்ளக்கூடாது. தயவான முகபாவனை உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்.

14பெரும்பாலும் நீங்கள் சிநேகப்பான்மையான கேட்போரிடமே பேசுவீர்கள். ஆகவே, நீங்கள் உண்மையில் உங்கள் கேட்போரை பார்ப்பீர்களானால் அவர்களிடமாக கனிவாக உணருவீர்கள். நீங்கள் தளர்ந்தநிலையிலும் சிநேகப்பான்மையாகவும் இருப்பீர்கள். கேட்போரிலிருந்து விசேஷமாக சிநேகமான ஒரு முகத்தை தெரிந்துகொள்ளுங்கள். ஒருசில கணங்கள் தனிப்பட்டவிதமாக அந்த நபரிடமாக பேசுங்கள். மற்றொருவரைத் தெரிந்துகொண்டு அவரிடமாக பேசுங்கள். இது கேட்போருடன் நல்ல தொடர்பை கொடுப்பது மட்டுமல்லாமல், நீங்கள் கேட்போரிடமாக கவர்ந்திழுக்கப்படுவதை காண்பீர்கள், உங்கள் கனிவான முகபாவனையின் பிரதிபலிப்பு உங்கள் கேட்போரை கவர்ந்திழுக்கும்.

15குரலின் தொனியில் கனிவையும் உணர்ச்சியையும் உணரச்செய்தல். விலங்குகளும்கூட ஓரளவு குரலின் தொனியை வைத்து உங்கள் உணர்ச்சிகளை விளங்கிக்கொள்ள முடியும் என்பது நன்றாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அதனுடைய தொனியின் மூலமாக கனிவையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒரு குரலுக்கு கேட்போர் எத்தனை அதிகமாக பிரதிபலிப்பார்கள்.

16உங்கள் கேட்போரிலிருந்து தனியே பிரிக்கப்பட்டவர்களாக நீங்கள் உண்மையில் உணருவீர்களானால், உங்கள் கேட்போர் எவ்விதமாக அவற்றுக்குப் பிரதிபலிக்கப்போகின்றனர் என்பதைவிட நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகளைப் பற்றி அதிகமாக யோசித்துக்கொண்டிருந்தால், விழிப்பாயிருக்கும் ஒரு கேட்போர் கூட்டத்திடமிருந்து அதை மறைப்பது கடினமாக இருக்கும். ஆனால் உங்கள் அக்கறை பேசிக்கொண்டிருப்பவர்களை உண்மையில் மையமாகக் கொண்டிருந்தால், நீங்கள் நினைக்கும் வண்ணமாகவே அவர்களும் நினைக்கும் பொருட்டு உங்கள் எண்ணங்களை அவர்களுக்கு எடுத்துச்செல்ல ஊக்கமான ஆசை இருந்தால், உங்களுடைய குரலின் ஒவ்வொரு மாற்றத்திலும் உணர்ச்சி பிரதிபலிக்கப்படும்.

17ஆனால் இது உண்மையுள்ள ஓர் அக்கறையாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. உண்மையான கனிவு உற்சாகத்தைப்போன்றே போலி நடிப்பாக இருக்கக்கூடாது. மாய்மாலமான இனிமையான அபிப்பிராயத்தை ஒரு பேச்சாளர் ஒருபோதும் கொடுக்கக்கூடாது. கனிவையும் உணர்ச்சியையும் உணர்ச்சிப்பசப்போடு அல்லது இழிவான மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடுகிறவரின் போலியான நடுங்குகிற குரலோடு குழப்பிவிடக்கூடாது.

18உங்களுக்கு உறுதியான, கரடுமுரடான குரல் இருக்குமானால் சொற்களில் கனிவை வெளிப்படுத்துவது கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சினையையும் மேற்கொள்ள நீங்கள் மிகவும் கவனமாகவும் ஊக்கமாகவும் முயற்சிசெய்ய வேண்டும். இது குரல் பண்பின் ஒரு விஷயமாக இருக்கிறது, இதற்கு நேரமெடுக்கும். ஆனால் சரியான கவனமும் முயற்சியும் உங்கள் குரலின் கனிவை மேம்படுத்த அதிகத்தைச் செய்யமுடியும்.

19வெறும் இயந்திரத்தன்மையான நோக்குநிலையிலிருந்து உங்களுக்கு உதவக்கூடிய ஒரு காரியம் குறுகிய, வெட்டப்பட்ட உயிரெழுத்துக்கள் பேச்சைக் கடினமாக்குகிறது என்பதை மனதில் வைப்பதாகும். உயிரெழுத்துக்களை நீட்டி ஒலிக்க கற்றுக்கொள்ளுங்கள். இது அவற்றை மென்மையாக்கி உங்கள் பேச்சை தானாகவே தொனியில் கனிவுள்ளதாக்கும்.

20பொருளுக்குப் பொருத்தமான கனிவும் உணர்ச்சியும். உற்சாகத்தின் விஷயத்தில் இருப்பது போலவே, உங்கள் சொற்களில் தெரிவிக்கும் கனிவும் உணர்ச்சியும் பெரும் அளவில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதையே சார்ந்திருக்கிறது. இதற்கு ஓர் உதாரணம் மத்தேயு 23-ல் இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் கண்டனம் செய்யும் பதிவில் காணப்படுகிறது. புண்படுத்தும் இந்தக் கண்டன வார்த்தைகளை அவர் சுவாரஸ்யமில்லாமலும் உயிரில்லாமலும் பேசுவதை நம்மால் கற்பனை செய்துபார்க்கமுடியாது. ஆனால் வெறுப்பும் கோபமும் நிறைந்த இந்தச் சொற்களின் மத்தியில் கனிவும் மென்மையான உணர்வும் நிறைந்த ஒரு சொற்றொடர் இருக்கிறது. இந்த வார்த்தைகள் இயேசுவின் பரிவை வெளிப்படுத்துகின்றன: “கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.” இங்கே மென்மையான உணர்வு தெளிவாகவே காண்பிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அடுத்த கூற்று: “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்,” அதே உணர்ச்சியை எடுத்துச்செல்வதில்லை. அது நிராகரிக்கப்படும் அருவருப்பான தொனியாக இருக்கிறது.

21அப்படியென்றால், கனிவும் உணர்ச்சியும் எங்கே பொருத்தமாக இருக்கும்? வெளி ஊழியத்தில் அல்லது ஒரு மாணாக்கர் பேச்சில் நீங்கள் சொல்லக்கூடிய பெரும்பாலான காரியங்கள் இவ்விதமாக பேசுவதை அனுமதிக்கும், ஆனால் குறிப்பாக நீங்கள் நியாயங்காட்டி பேசும்போது, உற்சாகப்படுத்தும்போது, அறிவுரை கூறும்போது, அனுதாபம் தெரிவிக்கும்போது அப்படியிருக்கும். கனிவோடு இருப்பதை நினைவில் கொண்டிருக்கும்போது, பொருத்தமாக இருக்கையில் உற்சாகமாயிருக்க மறந்துவிடாதீர்கள். எல்லா காரியங்களிலும் சமநிலையோடிருங்கள், ஆனால் நீங்கள் சொல்லும் அனைத்தையும் கூடியவரை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.

[கேள்விகள்]

1. உற்சாகத்தை எது தூண்டிவிடும்?

2-5. உயிரோட்டமுள்ள ஒரு பேச்சு எவ்விதமாக உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது?

6-9. ஒருவருடைய பேச்சிலுள்ள பொருள், பேச்சின் உற்சாகத்தோடு என்ன தொடர்புடையதாக இருக்கிறது?

10-12. கனிவு மற்றும் உணர்ச்சி என்பதன் பொருள் என்ன?

13, 14. முகபாவனைகளில் எவ்விதமாக கனிவு காண்பிக்கப்படலாம்?

15-19. ஒரு பேச்சாளரின் குரலில் கனிவையும் உணர்ச்சியையும் எது வெளிப்படுத்த செய்யும் என்பதைக் காட்டுங்கள்.

20, 21. ஒரு பேச்சிலுள்ள பொருள் எவ்விதத்தில் பேச்சுக் கொடுக்கையில் கனிவையும் உணர்ச்சியையும் பாதிக்கிறது?