ஒவ்வொரு நாளும் நல்ல பேச்சைப் பயன்படுத்துதல்
படிப்பு 11
ஒவ்வொரு நாளும் நல்ல பேச்சைப் பயன்படுத்துதல்
1“கர்த்தாவே, என் வாயின் வார்த்தைக[ள்] . . . உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” (சங். 19:14) நம்முடைய விஷயத்தில் இது உண்மையாயிருக்க, நாம் சரியான காரியங்களைப்பற்றியும் கடவுளுடைய ஓர் ஊழியருக்குத் தகுதியாயிருக்கும் ஒரு முறையிலும் பேசுவது அவசியமாகும். நம்முடைய பேச்சு வெறுமனே ராஜ்ய மன்றத்திலோ வெளி ஊழியத்திலோ இருக்கையில் மட்டுமல்ல, நாம் ஒவ்வொரு நாளும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். அப்போது நம்முடைய வீடுகளில், வேலையில், பள்ளியில், நாம் பயன்படுத்தும் மொழிநடை நம்முடைய ஊழியத்தின்மீது சாதகமாகப் பிரதிபலிக்கும்.—2 கொ. 6:3.
2நம்முடைய பேச்சுப்பாங்கு முக்கியமாக இருக்கிறது. இது நம்முடைய முக பாவனையையும் குரலின் தொனியையும்கூட உட்படுத்துகிறது. யெகோவாவின் ஊழியர்களாக நம்முடைய மகிழ்ச்சி நம்முடைய முகங்களில் காணப்பட வேண்டும். சிநேகமான ஒரு பாங்கும் கனிவான ஒரு புன்சிரிப்பும் மக்களைக் கவருகின்றன. நாம் பேசுகின்ற பைபிள் சத்தியங்கள் முக்கியமானவையாக இருக்கையில், அவை இருதயத்துக்கு அனலூட்டுவதாயும்கூட இருக்கின்றன. ஆகவே உற்சாகமாயிருங்கள்! உணர்ச்சியற்ற ஒரு முகத்தோற்றம் நம்முடைய நம்பிக்கையின் செய்திக்குப் பொருத்தமாயில்லை.
3நல்ல பேச்சோடு உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளும்போது, வார்த்தைகளுக்கும் முகத்தோற்றங்களுக்கும் “ஆளுமை” இருப்பதை உணர்ந்துகொள்வீர்கள். அவை கசப்பாக அல்லது இனிமையாக, மென்மையாக அல்லது கடினமாக, சிநேகபாவமாக அல்லது பகைமையுள்ளதாக, கட்டியெழுப்புவதாக அல்லது ஒழுக்கம் கெடுப்பதாக இருக்கலாம். அப்படியென்றால் சரியான வார்த்தையை அல்லது முகத்தோற்றத்தை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக சத்தியத்தின் வார்த்தைகள், ராஜ்யத்தினுடைய நற்செய்தி உட்பட்டிருக்கும்போது இது இவ்வாறு இருக்கிறது.
4உங்கள் சொற்களின் தொகுதியை விரிவாக்குதல். எந்த ஓர் அகராதியையும் பார்வையிடுவது காண்பிக்கும்விதமாக, யெகோவாவைத் துதிப்பதில் பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தைகளுக்கு குறைவில்லை. ஆனால் கேள்வியானது, கிடைக்கக்கூடிய சொற்களின் களஞ்சியத்தை நீங்கள் எவ்வளவு நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள்? வாசிக்கையில் உங்களால் முழுவதுமாகப் புரிந்துகொள்ளமுடியாத வார்த்தைகளை எடுத்துப் பார்க்கிறீர்களா அல்லது ஒருவேளை கட்டுரையை வாசித்து முடித்தப்பின்பு எடுத்துப்பார்க்க அவற்றை குறித்து வைக்கிறீர்களா? இது சொற்களின் தொகுதியை அதிகரிக்க உங்களுக்கு உதவிசெய்யும். நீங்கள் அறிந்திருக்கின்ற, ஆனாலும் அன்றாட பேச்சில் பயன்படுத்தாத அநேக வார்த்தைகள் இருப்பதையும்கூட காண்பீர்கள். பொருத்தமாக இருக்கையில் அவற்றைப் பயன்படுத்த உணர்வுடன் முயற்சிசெய்யுங்கள். ஒரு கிறிஸ்தவ ஊழியராக அல்லது மாணாக்கராக, நன்றாகப் பேசும் திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வது நிச்சயமாகவே உங்களுடைய நலனுக்காகவே.
5சரியான வார்த்தையைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். இரண்டு வார்த்தைகளுக்கு ஒரேமாதிரியான அல்லது வித்தியாசமான சூழ்நிலைகளின்கீழ் பயன்படுத்துவதற்கு சிறிதே வித்தியாசப்பட்ட அர்த்தங்கள் இருக்கலாம். இதை நீங்கள் கவனத்தில் கொண்டால், உங்கள் கேட்போரை புண்படுத்துவதைத் தவிர்த்து, உங்கள் பேச்சில் தெளிவை முன்னேற்றுவிக்கலாம். நல்ல ஓர் அகராதியை எடுத்துப்பார்ப்பது பிரயோஜனமாயிருக்கிறது. ஒருசில அகராதிகள் ஒவ்வொரு வார்த்தையின் கீழும் ஒரு பொருள் குறித்த பல சொற்களை (ஒத்த, ஆனால் ஒரே பொருளுடையதாக இல்லாத வார்த்தைகளையும்) மற்றும் எதிர்ப்பதங்களையும் (ஓரளவு எதிர்மாறான அர்த்தமுடைய வார்த்தைகளையும்) பட்டியலிடுகின்றன. இவ்விதமாக ஒரே கருத்துக்கு நீங்கள் பல்வேறுபட்ட சொற்களை மட்டுமல்லாமல் அர்த்தத்தில் சிறிதே வேறுபடுகின்ற சொற்களையும் காண்பீர்கள். சரியான சூழ்நிலைகளுக்குச் சரியான வார்த்தையை நீங்கள் நாடும்போது இது மிகவும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. சரியான வார்த்தையைப் பயன்படுத்துவது, அநாவசியமாக தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துவதிலிருந்து உங்களைப் பாதுகாத்து, குறிப்புக்குவர உதவுகிறது. தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துவது கருத்துக்களை மறக்கடித்துவிடுகிறது. ஆகவே ஒருசில வார்த்தைகளிலேயே உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பழகிக்கொள்ளுங்கள். அதை நீங்கள் நன்றாகச் செய்கையில், பின்னர் கருத்து நயத்தையும் அர்த்தத்தையும் கூட்டுகின்ற விரித்துரைக்கும் சொற்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
6உங்கள் சொற்களின் தொகுதியை நீங்கள் விரிவாக்கும்போது புதிய வார்த்தைகளைப் பற்றி மட்டுமே யோசிக்காதீர்கள், ஆனால் குறிப்பாக வேறுபடுத்திக் காட்டும் இயல்புகளுள்ள வார்த்தைகளைச் சிந்தித்துப்பாருங்கள்: சுறுசுறுப்பை வெளிப்படுத்தும் வினைச்சொற்கள்; கருத்துப் பொலிவை அறிவிக்கும் பெயரடைகள்; சலிப்பைத் தவிர்க்க உதவும் இடையிணைப்புச் சொற்கள்; கனிவைக் காண்பித்து தயவின் தொனியைக் கொண்ட சொற்கள். சொஸைட்டியின் பிரசுரங்களை வாசிக்கையில், தெரிந்துகொள்வதற்கிருக்கும் மிகப் பல வகையான வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நீங்கள் கவனிக்கலாம்.
7விரிவாக்கப்பட்ட ஒரு சொற்களின் தொகுதியினுடைய நோக்கம், நிச்சயமாகவே மற்றவர்களுக்குத் திறமையைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல. நம்முடைய குறிக்கோள் தகவலை தெரிவிப்பதேயன்றி நம்முடைய கேட்போர்மீது தனிப்பட்ட அபிப்பிராயத்தை உண்டுபண்ணுவது அல்ல. நம்முடைய 1 கொ. 14:9, 19) ஒருவருடைய பேச்சு புரிந்துகொள்ளப்படுவதற்கு அதிக கடினமாக இருக்குமானால், அது அந்நிய பாஷையிலேயே இருக்கலாம். அதேவிதமாகவே விவரங்களுக்கு மதிப்புக்கொடுக்காதவர்களிடம் அநாவசியமாக நுட்பவிவரங்களைத் தெரிவிப்பதைத் தவிர்ப்பதும் ஞானமான காரியமாகும். சாதாரண உரையாடலிலும்கூட நாம் சிக்கலான பேச்சு அல்லது நீண்ட வார்த்தைகளின் மூலமாக கேட்போரை கவர முயலக்கூடாது. நாம் என்ன சொல்ல வேண்டுமோ அதை கேட்போர் கிரகித்துக்கொள்வதே அதிமுக்கியமாகும். நீதிமொழிகள் 15:2-ன் பிரகாரம், “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்,” என்பதை நினைவில் வையுங்கள். நம்முடைய பேச்சு சலிப்பூட்டுவதாயும் சுவாரசியமற்றதாயும் இருப்பதற்குப் பதிலாக அதை புத்துயிரளிப்பதாயும் ஊக்கமுள்ளதாயும் ஆக்க நல்ல வார்த்தைகளின் தெரிவு, எளிதில் புரிந்துகொள்ளப்படுகிற வார்த்தைகள் உதவிசெய்கின்றன.—கொலோ. 4:6.
நோக்குநிலை அப்போஸ்தலன் பவுல் வெளிப்படுத்தியதைப் போன்றே இருக்க வேண்டும்: “நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.” (8வார்த்தைகளைச் சரியாகச் சொல்லக் கற்றுக்கொள்வதும்கூட முக்கியமாக இருக்கிறது. அவற்றைச் சரியாக உச்சரியுங்கள். நீங்கள் ஓர் அகராதியை வைத்து சரிபார்த்துக்கொள்ளலாம்; மேலும் மற்றவர்கள் எவ்விதமாக சில வார்த்தைகளை உச்சரிக்கின்றனர் என்பதைக் கவனிக்கலாம். இது உச்சரிப்பில் கவலையீனமாக இருப்பதைத் தவிர்க்க உங்களுக்கு உதவிசெய்யும். வார்த்தைகளைத் தெளிவின்றி உச்சரிப்பதும், வார்த்தைகளின் பிற்பகுதிகளை விட்டுவிடுவதும் அன்றாட பேச்சில் தவிர்க்கப்படவேண்டிய மற்ற ஆபத்துக்களாகும். உங்கள் பற்களினூடாகப் பேசாதீர்கள். நல்ல சொல்நடையை பயன்படுத்துங்கள். தெளிவாக உச்சரிப்பதற்கு உங்கள் வாயைத் திறவுங்கள்.
9தவிர்க்கப்படவேண்டிய மொழிநடை. அன்றாட வாழ்க்கையில் எத்தகைய பேச்சைத் தவிர்ப்பது என்பதைப்பற்றி கடவுளுடைய வார்த்தை நம்மை வழிநடத்துகிறது. உதாரணமாக அப்போஸ்தலன் பவுல், “ஆபாசமான பரியாசம்” (NW) போன்ற ‘தகாதவற்றை’ தவிர்க்கும்படியாக நமக்குப் புத்திசொல்கிறார். (எபே. 5:3, 4) ஆபாசமாகவும் பண்பற்றதாகவும் இருக்கும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நாம் தவிர்க்க வேண்டும். பவுல் பின்வருமாறும்கூட எழுதினார்: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (எபே. 4:29) ஆகவே கிறிஸ்தவர்கள் சாப வார்த்தைகளையும் கடுமையான பேச்சையும் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட மொழிநடை அவர்கள் அழுத்தம் என்று சொல்வதை உண்டுபண்ணுகிறது என்பதாக சில ஆட்கள் நினைக்கின்றனர். ஆனால் வலிமைமிக்க நல்ல வார்த்தைகள் ஏராளமுண்டு. இப்படிப்பட்ட ஆட்களின் அநாகரிகமான பேச்சை, அவர்களோடு பேசும்போது நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. எளிய மொழிநடை பிரயோஜனமாயிருக்கலாம், ஆனால் அது சுத்தமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும்.
10இலக்கண வழக்கோடு முரண்படுகிற ஒருசில சொற்றொடர்களும் பேச்சுப்பாணிகளும்கூட தவிர்க்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட பேச்சு அநேகமாக உலகப்பிரகாரமான பொழுதுபோக்கை அளிப்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது அல்லது நவீன பாடல்களில் பொதுமக்கள் விரும்பும்படிச் செய்யப்படுகிறது. மக்கள் இவற்றை பின்பற்றும் மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கின்றனர். ரோ. 12:2.
ஆனால் இப்படிப்பட்ட பேச்சு மாதிரிகளை ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவர்களுக்கு நல்லதல்ல. அவ்விதமாகச் செய்வது நம்மை உலகத்தோடும் அதனுடைய வாழ்க்கைமுறையோடும் அடையாளப்படுத்துவதாக இருக்கும். முழு வாழ்க்கை மாதிரியையும் சட்டவிரோதமாக அல்லது ஒழுக்கங்கெட்டதாக வைத்திருக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களும் மற்றவர்களும் அநேகமாக தங்களுடைய சொந்த சொற்களின் தொகுதியை வைத்திருந்து, தற்செயலாக கேட்பவர் உடனடியாக தெரிந்துகொள்ளமுடியாத முறையில் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நம்முடைய பேச்சு தராதரம் இப்படிப்பட்ட உலகப்பிரகாரமான செல்வாக்குகளால் பாதிக்கப்படக்கூடாது.—11கிறிஸ்தவர்கள் பொருத்தமில்லாத மொழிநடையை தவிர்க்க கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். சில ஆட்கள் தங்கள் பேச்சுக்கு வெறுமனே அழுத்தத்தைக் கூட்டுவதற்காக அல்லது சாப வார்த்தைக்கு மாற்றீடாக “அடக் கடவுளே,” “தெய்வமே” மேலும் “இயேசுவே” மற்றும் “கிறிஸ்துவே” என்ற பதங்களைப் பயன்படுத்துகின்றனர். “கடவுள்” மற்றும் “இயேசு” என்பதிலிருந்து பெறப்பட்ட “காஷ்,” “காலி,” “ஜீ” போன்றவை வெறுமனே பிரியமில்லாததை மறைத்துச்சொல்லும் மற்ற ஆங்கில வார்த்தைகளாகும், ஆகவே இவையும்கூட வியப்பிடைச் சொற்களாக விரும்பத்தகாதவையாகும்.—யாத். 20:7; மத். 5:34-37.
12மக்கள் சொல்கின்ற மற்றும் செய்கின்றவை சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டக்கூடும். அப்படியிருந்தாலும், கோபத்துடன் அல்லது தூஷணமான பேச்சில் பதிலளிப்பது ஒரு கிறிஸ்தவனுக்குப் பொருத்தமற்றதாயிருக்கும். அப்போஸ்தலன் சொல்கிறார்: “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.” (கொலோ. 3:8) ஆகவே மற்றவர்களுடைய பேச்சு உங்களுக்கு எரிச்சலூட்டினாலும் உங்கள் ஆவியை அடக்குவதே ஞானமான போக்காகும்.—நீதி. 14:29; யாக். 3:11.
13சரியான இலக்கணம். சில ஆட்கள் தங்கள் இலக்கணம் மிகச் சிறந்ததாக இல்லை என்பதை உணரக்கூடும். ஒருவேளை அவர்கள் வேறு ஒரு நாட்டில் வளர்ந்திருக்கலாம் அல்லது அவர்கள் இளவயதிலிருக்கையில் அதிகமான பள்ளி படிப்பு வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கலாம். அவர்கள் உற்சாகமிழந்துவிடக்கூடாது. மாறாக அவர்கள் முன்னேறுவதற்கு உண்மையாக முயற்சி எடுக்க வேண்டும், நற்செய்திக்காக அவர்கள் அவ்விதமாகச் செய்ய வேண்டும். எடுக்கப்படக்கூடிய பிரயோஜனமுள்ள படிகள் இருக்கின்றன. உதாரணமாக குடும்ப வாசிப்பு இப்படிப்பட்ட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்புகளை அளிக்கின்றன. இலக்கணம் பற்றி நாம் அறிந்திருப்பதில் பெரும்பகுதி மற்றவர்கள் பேசுவதை கேட்பதன் மூலம் கற்றுக்கொண்டவை. ஆகவே முதிர்ச்சியுள்ள நல்ல கல்வி பயின்ற சகோதரர்கள் பேசும்போது கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள். பைபிளையும் சொஸைட்டியின் பிரசுரங்களையும் நீங்கள் வாசிக்கையில், வாக்கிய அமைப்பையும் பல்வேறு நிலைமைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளின் வகையையும் கவனிக்க விழிப்பாயிருங்கள். இந்த நல்ல முன்மாதிரிகளுக்கு இசைவாக உங்கள் சொந்த பேச்சை அமைத்துக்கொள்ளுங்கள்.
14இளைஞர் பள்ளிக்குச் செல்லும் காலத்திலேயே நல்ல இலக்கணத்தையும் சொல்நடையையும் கற்றுக்கொள்வதற்கிருக்கும் வாய்ப்பை அனுகூலப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அல்லது அந்த இலக்கண விதிக்கான காரணத்தைப்பற்றி
நீங்கள் நிச்சயமாக இல்லாதவரையில், உங்கள் ஆசிரியரிடமிருந்து கூடுதலான தகவலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விடாமுயற்சியுடனிருக்க உங்களுக்கு நல்ல காரணமிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் நற்செய்தியின் ஒரு பலன்தரத்தக்க ஊழியராக இருக்க விரும்புகிறீர்கள்.15ஒவ்வொரு நாளும் நல்ல பேச்சைப் பயன்படுத்த முயற்சிசெய்யுங்கள். தன்னுடைய அன்றாட உரையாடலில் மேலீடான உணர்ச்சியுடன்கூடிய பேச்சுப் பழக்கங்களில் ஈடுபடும் ஒருவர், விசேஷமான சமயங்களில் நன்றாக பேச எதிர்பார்க்கமுடியாது. அது பழக்கத்தைத் தேவைப்படுத்துகிறது. ஆனால் வாழ்க்கையின் சாதாரணமான சூழல்களில் நல்ல தரமுள்ள பேச்சை நீங்கள் பயன்படுத்தினால் மேடையிலிருக்கையிலோ கடவுளுடைய சத்தியத்தைப்பற்றி மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்கையிலோ அது சுலபமாகவும் இயற்கையாகவும் உங்களுக்கு வந்துவிடும்.
16ஒவ்வொரு நாளும் நல்ல பேச்சைப் பழக்குவிப்பது நம்முடைய மனங்களையும் இருதயங்களையும் இதமான வார்த்தைகளால் நிரப்பிக்கொள்ள உதவுகிறது. இவற்றைக் கொண்டு அவருடைய ராஜ்யத்தின் மூலமாக யெகோவாவின் மகத்தான நோக்கங்களுக்கு நம்முடைய போற்றுதலை தெரிவிக்கலாம். அப்பொழுது நாம் லூக்கா 6:45-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுடைய உண்மையை அனுபவிக்கலாம்: “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்.”
[கேள்விகள்]
1. நம்முடைய பேச்சை யெகோவாவுக்கு எது பிரீதியாயிருக்கச் செய்யும்?
2, 3. நம்முடைய பேச்சுப்பாங்கும் வார்த்தைகளின் தெரிவும் ஏன் முக்கியமாக இருக்கின்றன?
4. நம்முடைய சொற்களின் தொகுதியை நாம் எவ்வாறு விரிவாக்கலாம்?
5, 6. வார்த்தைகளைச் சரியாக பயன்படுத்த கற்றுக்கொள்வதற்கு எது நமக்கு உதவிசெய்யும்?
7, 8. ஒரு விரிவாக்கப்பட்ட சொற்களின் தொகுதி சம்பந்தமாக என்ன ஆபத்துக்களை நாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்?
9-12.என்ன வகையான பேச்சை நாம் தவிர்க்க வேண்டும், ஏன்?
13-16. நம்முடைய இலக்கணத்தையும் நம்முடைய பேச்சுப் பழக்கங்களையும் முன்னேற்றுவிக்க எது நமக்கு உதவிசெய்யும்?