Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும்

கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும்

படிப்பு 32

கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும்

1கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும் சேர்ந்து ஒரு பேச்சை அர்த்தமுள்ளதாயும் சுவைமிக்கதாயும் செய்கின்றன. இவை இல்லாவிடில், எண்ணங்கள் சிதைந்துவிடுகின்றன, அக்கறைப் பின்னடைந்துவிடுகின்றது. இவ்விரண்டில் தேர்ச்சிபெறுவதற்கு கருத்து அழுத்தமே பொதுவாக சுலபமாய் இருப்பதால், அதற்கு நாம் முதலில் கவனம்செலுத்தலாம்.

2கருத்து அழுத்தம் எதை சாதிக்க வேண்டும் என்பதை மனதில் வையுங்கள். திருத்தமாக கருத்தை எடுத்துச்சென்று அவற்றின் சம்பந்தப்பட்ட முக்கியத்துவத்தை உங்கள் கேட்போருக்கு காட்டும் வகையில் வார்த்தைகளை அல்லது எண்ணங்களை அழுத்திச்சொல்ல வேண்டும் என்பதே. சில சமயங்களில் தேவைப்படும் அழுத்தம் வெறுமனே அதிகமாக அல்லது இலேசாக இருக்கிறது, ஆனால் அழுத்தத்தை மென்மையாக படிப்படியாக வேறுபடுத்துவதைத் தேவைப்படுத்தும் சமயங்களும்கூட இருக்கின்றன.

3வாக்கியங்களிலுள்ள கருத்து தெரிவிக்கும் வார்த்தைகளை அழுத்திச் சொல்லுதல். அழுத்தத்திற்குரிய இடம் என்பது அடிப்படையில் என்ன வார்த்தைகள் அழுத்தப்படுகின்றன என்பதைப்பற்றிய விஷயமாக இருக்கிறது. கருத்தைத் தெரிவிக்கும் வார்த்தைகளை அடையாளங்கண்டுகொண்டு, சரியான சொல்லழுத்தம் அல்லது அழுத்தத்தின் மூலமாக, சுற்றியுள்ள வார்த்தைகளின் சம்பந்தமாக அவற்றை மேலெழுந்து நிற்கச்செய்வதை அது உட்படுத்துகிறது. கருத்தைத் தெரிவிக்கும் வார்த்தைகளைத் தவிர மற்றவை அழுத்திக்கூறப்பட்டால், அர்த்தம் தெளிவற்றதாக அல்லது சிதைந்துவிடும்.

4பெரும்பாலான ஆட்கள் சகஜமான, அன்றாட பேச்சில் அவர்களின் கருத்தை தெளிவாகச் சொல்லுவர். முன்னிடைச் சொற்களை அழுத்திசொல்லுதல் போன்ற விசேஷமான இயற்கைப் பழக்கம் உங்களுக்கு இருந்தாலொழிய, இந்த அம்சம் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. சரியான இடத்தில் அழுத்தம் என்ற விஷயத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க பலவீனமிருந்தால், அது பொதுவாக இப்படிப்பட்ட சில இயற்கைப் பழக்கங்களின் விளைவாகவே இருக்கிறது. அது உங்களுடைய பிரச்சினையாக இருக்குமானால், அதற்காக ஊக்கமாக வேலைசெய்யுங்கள். சாதாரணமாக இப்படிப்பட்ட பழக்கங்களை ஓரிரண்டு பேச்சுக்களில் முறித்துவிட முடியாது, ஆகவே உங்கள் கருத்தையே சிதைத்துவிடும் அளவு தவறான இடத்தில் அழுத்தம் அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லையென்றால் உங்கள் ஆலோசகர் உங்களை அதில் நிறுத்திவைக்கமாட்டார். ஆனால் மிகவும் வலிமையான மற்றும் பலன்தரத்தக்க பேச்சுக்கு, சரியான இடங்களில் அழுத்தம் கொடுப்பதில் நீங்கள் தேர்ச்சிபெறும் வரையில் தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருங்கள்.

5பொதுவாக முற்றிலும் சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சைக் காட்டிலும் பொது வாசிப்புக்குத் தயாரிக்கையில் கருத்து அழுத்தத்துக்கு அதிக உணர்வுடன் கூடிய சிந்தனை செலுத்தப்பட வேண்டும். சபை காவற்கோபுர படிப்பில் பாராக்களை வாசிப்பதில் இருப்பதைப் போலவே ஒரு பேச்சில் வேதவசனங்களை வாசிப்பதிலும் இது உண்மையாக இருக்கிறது. வாசிப்பு செய்யப்பட வேண்டியிருக்கையில் கருத்து அழுத்தத்துக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதற்குக் காரணம் நாம் வாசிக்கும் பொருள் பொதுவாக வேறு ஒருவரால் எழுதப்பட்டதாயிருக்கிறது. ஆகவே நாம் அதை கவனமாக படித்து, எண்ணத்தை அலசிப்பார்த்து, அவை நமக்கு இயற்கையாக வரும்வரையாக சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்க வேண்டும்.

6சொல்லழுத்தம் அல்லது கருத்து அழுத்தம் எவ்வாறு செய்யப்படுகிறது? பல்வேறு வழிகள், அநேகமாக அவை ஒன்றுசேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன: அதிகமான சப்தம் மூலமாக, அதிகமான செறிவு அல்லது உணர்ச்சி மூலமாக, தொனியைத் தாழ்த்துவதன் மூலமாக, தொனிநிலையைக் கூட்டுவதன் மூலமாக, சாவதானமாக நிதானித்துச் சொல்வதன் மூலமாக, வேகத்தை அதிகரிப்பதன் மூலமாக, ஒரு கூற்றுக்கு முன்னால் அல்லது பின்னால் (அல்லது இரண்டு இடத்திலும்) நிறுத்தத்தின் மூலமாக, சைகைகள் மற்றும் முகபாவனைகள் மூலமாக.

7முதலில் முக்கியமான வார்த்தைகளை மேலெழுந்து நிற்கச்செய்வதற்காக உங்கள் அழுத்தம் சரியான இடத்திலும் போதுமான அளவிலும் இருப்பதைக் குறித்தே அடிப்படையில் அக்கறையுள்ளவர்களாயிருங்கள். ஆகவே, உங்கள் பொருளைத் தயாரிக்கும்போது, நீங்கள் அதை வாசிக்கப்போவதாக இருந்தால் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், எண்ணங்களை மனதில் தெளிவாக கொண்டிருங்கள். உங்கள் குறிப்புகளில் முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி பின்னர் அந்த வார்த்தைகளை அழுத்திக்காட்டுங்கள்.

8பேச்சின் முக்கிய கருத்துக்களின் அழுத்தம். இதுவே மிக அடிக்கடி குறைவுபடுகின்ற கருத்து அழுத்தத்தின் அம்சமாகும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், பேச்சில் உச்சக்கட்டங்கள் இருப்பதில்லை. மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக எதுவுமே மேலெழுந்து நிற்பதில்லை. பேச்சு முடிந்தப்பிறகு, கவனத்தை ஈர்த்ததென எதையுமே நினைவில் வைப்பது அநேகமாக கூடாத காரியமாக இருக்கிறது. மேலெழுந்து நிற்கும்படியாக பிரதான குறிப்புகள் சரியாக தயாரிக்கப்பட்டிருந்தாலும்கூட, பேச்சு கொடுக்கையில் அவற்றுக்குச் சரியான அழுத்தம் கொடுக்கத் தவறுவது அவை மறைந்துபோகும் அளவுக்கு அவற்றை பலவீனப்படுத்திடக்கூடும்.

9இந்தப் பிரச்சினையை மேற்கொள்ளுவதற்கு, முதலாவது உங்கள் பொருளை நீங்கள் கவனமாக அலசிப்பார்க்க வேண்டும். பேச்சின் அதிமுக்கியமான குறிப்பு என்ன? அடுத்த அதிமுக்கியமான குறிப்பு என்ன? பேச்சின் சாராம்சத்தை ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் எடுத்துரைக்கும்படியாக கேட்கப்பட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? முக்கிய குறிப்புகளை அடையாளங்கண்டுகொள்ள அது மிகச் சிறந்த ஒரு வழியாகும். இவற்றைத் தெரிந்துகொண்ட பின்பு, உங்கள் குறிப்புகளில் அல்லது உரையில் குறித்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது நீங்கள் இந்தக் குறிப்புகளை உச்சக்கட்டங்களாக கட்டி அமைக்கலாம். அவை உங்கள் பேச்சின் உச்சநிலைகளாக இருக்கின்றன, உங்கள் பொருள் நல்ல முறையில் சுருக்கமாக எழுதப்பட்டு அதை நீங்கள் பலமான அளவு அழுத்தத்தோடு கொடுப்பீர்களேயானால், முக்கிய கருத்துக்கள் நினைவில் வைக்கப்படும். அதுவே உங்கள் பேச்சின் நோக்கமாகும்.

************

10எளிய கருத்து அழுத்தம் நீங்கள் சொல்வதை கேட்போர் புரிந்துகொள்ள உதவுகிறது, ஆனால் குரலில் ஏற்றத்தாழ்வு அளிக்கின்ற அழுத்தத்தில் வேறுபாடு அதை அவர்கள் அனுபவித்துக் கேட்கச் செய்கிறது. உங்கள் வெளி ஊழியத்திலும் சபையில் கொடுப்பதற்கு நீங்கள் சிலாக்கியம் பெறும் பேச்சுக்களிலும் குரலில் ஏற்றத்தாழ்வை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?

11குரலில் ஏற்றத்தாழ்வு என்பது தொனிநிலை, வேகம் மற்றும் சக்தியில் இடையிடையே காட்டப்படும் வித்தியாசமாகும். அக்கறையைப் பிடித்து நிறுத்தி, பேச்சாளராக உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் படிப்படியாக வெளிப்படுத்துவதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் நோக்கம் மிகச் சிறப்பாக நிறைவேறுவதற்கு, எந்த ஒரு குறிப்பிட்ட பேச்சின் பொருளும் அனுமதிக்கிற முழு அளவு வண்ணத்தையும் உங்கள் குரலில் ஏற்றத்தாழ்வு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குரலில் ஏற்றத்தாழ்வின் மேல்நிலை அளவில் கிளர்ச்சி, உற்சாகம் மற்றும் கூர்ந்த அக்கறையைக் குறைந்த அளவுகளில் நீங்கள் கொண்டிருக்கலாம். இடைநிலை அளவில் அடக்கமான ஆர்வமும் கீழ்நிலை அளவில் கருத்தாழமும் பயபக்தியும் தேவை.

12அளவுக்கு அதிகமான உணர்ச்சியோடு நாடகபாணியில் காட்சியளிக்க நீங்கள் எந்த ஒரு சமயத்திலும் விரும்பமாட்டீர்கள். நம்முடைய பேச்சு சுவையுள்ளதாக இருக்க வேண்டும், ஆர்த்தடாக்ஸ் மத குருமாருடையதைப் போல போலி பக்தியோடு பவித்திரமாக அல்லது கூடாரமடித்து கூட்டம் போடும் சுவிசேஷகரைப் போல கட்டுப்பாடற்ற கிளர்ச்சி நிறைந்தும் இருக்கக்கூடாது. இராஜ்ய செய்திக்குச் சரியான கண்ணியமும் மரியாதையும் இப்படிப்பட்ட எந்தக் கிறிஸ்தவமற்ற பகட்டாரவாரத்தையும் தவிர்த்திடும்.

13சக்தியில் வேறுபாடு. குரலில் ஏற்றத்தாழ்வைப் பெறுவதற்கு மிகவும் எளிமையான வழி உங்கள் குரலின் சக்தியை வித்தியாசப்படுத்துவதாகும். உச்சக்கட்டங்களைக் கட்டி அமைத்து உங்கள் பேச்சின் பிரதான குறிப்புகளை அழுத்துவதற்கு இது ஒரு வழியாகும். இருப்பினும் வெறுமனே உங்கள் சப்தத்தை அதிகரிப்பதுதானே குறிப்புகளை எப்பொழுதும் மேலெழுந்து நிற்கச்செய்யாது. சில சந்தர்ப்பங்களில், அவற்றை அதிக முக்கியமானதாக அது ஆக்கக்கூடும். ஆனால் அவை கூடுதலான வலிமையோடு கொடுக்கப்பட்டது உங்கள் நோக்கத்தை தோற்கடித்துவிடக்கூடும். உங்கள் குறிப்புகள் உற்சாகமான ஒரு தொனியைக்காட்டிலும் அதிகமாக கனிவு மற்றும் உணர்ச்சியைத் தேவைப்படுத்தலாம். இந்தச் சந்தர்ப்பத்தில், உங்கள் சப்தத்தைக் குறைத்து செறிவைக் கூட்டுங்கள். கவலை அல்லது பயத்தை நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் இதுவே உண்மையாக இருக்கும்.

14சக்தியில் வேறுபாடு குரலில் ஏற்றத்தாழ்வுக்கு அத்தியாவசியமாக இருந்தாலும், சிலரால் கேட்கமுடியாத அளவுக்கு மிகவும் மெதுவாக பேசிவிடாதபடிக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதே சமயத்தில் எரிச்சலூட்டும் அளவுக்கு சப்தம் அதிகரிக்கப்படக்கூடாது.

15வேகத்தில் வேறுபாடு. ஆரம்ப நிலையிலுள்ள ஒருசில பேச்சாளர்களே மேடையில் தங்கள் வேகத்தை வித்தியாசப்படுத்திடுவர். நம்முடைய அன்றாட பேச்சில் இதை எப்பொழுதும் நாம் செய்கிறோம். ஏனென்றால் நம்முடைய வார்த்தைகள் நமக்குள்ளிருந்து நாம் அவற்றை யோசிக்கும் விதமாக அல்லது அவை தேவைப்படுவதற்கேற்ப தானாகவே வெளிப்படுகின்றன. ஆனால் புதிய பேச்சாளர் மேடையில் இதைச் செய்வதற்கு பொதுவாக தன்னை அனுமதிக்கமாட்டார். அவர் தன் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் மிகவும் ஜாக்கிரதையாக தயாரிப்பதால், எல்லா வார்த்தைகளும் அதே வேகத்தில் வெளிவருகின்றன. ஒரு குறிப்புத்தாளிலிருந்து பேசுவது இந்தப் பலவீனத்தைச் சரிசெய்ய உதவிசெய்யும்.

16உங்கள் பேச்சின் முக்கியமான போக்கு மிதமான வேகத்தில் இருக்க வேண்டும். சிறிய குறிப்புகள், விவரணம், பெரும்பாலான உதாரணங்கள் போன்றவை வேகத்தைக் கூட்ட உங்களை அனுமதிக்கும். முக்கியமான விவாதங்கள், உச்சக்கட்டங்கள் மற்றும் பிரதான குறிப்புகள் பொதுவாக நிதானமாய் பேசுவதைத் தேவைப்படுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில், விசேஷமாக பலமான அழுத்தத்துக்கு, மெதுவான, நிதானித்து செய்யப்படும் அழுத்தத்தைப் பயன்படுத்தலாம். வேகத்தில் ஒரு முழுமையான மாற்றமாக, நிறுத்தத்தில் நீங்கள் முற்றிலும் நிறுத்தியுங்கூடவிடலாம்.

17எச்சரிக்கையான சில வார்த்தைகள். உங்கள் சொற்களின் தெரிவு பாதிக்கப்படும் அளவுக்கு வேகமாக ஒருபோதும் பேசாதீர்கள். தனிப்பட்ட பயிற்சி நேரங்களில் முடிந்தவரை வேகமாக தடுமாற்றமின்றி சப்தமாக வாசிக்க முயற்சிசெய்வது மிகச் சிறந்த ஒரு பயிற்சியாகும். தடுமாற்றமில்லாமல் அல்லது தெளிவான ஒலியை அடக்காமல் உங்கள் வேகத்தை இடைவிடாமல் கூட்டி அதே பாராவைத் திரும்பத் திரும்ப வாசித்துப்பாருங்கள். பின்னர் முடிந்தவரை மெதுவாக, வார்த்தைகளை வெட்டி குறுக்கிவிடாமல் உ-யி-ரெ-ழுத்-துக்--ளை நீ-ட்-டி ஒலித்து வாசிக்க முயற்சிசெய்யுங்கள். பின்னர் உங்கள் குரல் எளிதில் இசைந்துகொடுத்து, நீங்கள் விரும்புகிறதைச் செய்யும்வரையாக மாறி மாறியும் விட்டுவிட்டும் வேகத்தைக் கூட்டியும் பின்னர் குறைத்தும் பாருங்கள். இப்பொழுது பேசும்போது, நீங்கள் சொல்லும் கருத்தைப் பொருத்து வேகத்தில் உங்கள் மாற்றங்கள் தானாகவே வந்துவிடும்.

18தொனிநிலையில் வேறுபாடு. குரலில் ஏற்றத்தாழ்வில் ஒருவேளை எந்த அளவிலும் அதிக கடினமானது தொனிநிலையில் மாற்றமே ஆகும். நிச்சயமாகவே நாம் எப்போதும் தொனிநிலையை உயர்த்தி அதோடு பொதுவாக சிறிய அளவில் சக்தியைக் கூட்டி வார்த்தைகளை அழுத்துகிறோம். சொல்லப்போனால் நாம் வார்த்தைகளை தாக்குகிறோம்.

19ஆனால் குரலில் ஏற்றத்தாழ்வின் இந்த அம்சத்திலிருந்து மிக அதிகமான நன்மையைப் பெற இதைவிட தொனிநிலையில் அதிகமான மாற்றம் தேவையாக இருக்கிறது. ஆதியாகமம் 18:3-8 மற்றும் 19:6-9-ஐ சப்தமாக வாசிக்க முயற்சிசெய்யுங்கள். இந்த வசனங்களில் வேகத்திலும் தொனிநிலையிலும் தேவைப்படும் அதிகமான வேறுபாட்டைக் கவனியுங்கள். துயரத்தையும் கவலையையும்விட கிளர்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் எப்பொழுதும் உயர்ந்த தொனிநிலையே வடிகாலாக இருக்கிறது. உங்கள் பொருளில் இந்த உணர்ச்சிகள் தோன்றுகையில், அதற்கேற்ப அவற்றை வெளிப்படுத்துங்கள்.

20தொனிநிலைப் போதுமான அளவில் குறைவுபடுவதே இந்தப் பேச்சு அம்சத்தில் பலவீனத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அது உங்கள் பிரச்சினையாக இருக்குமானால் அதில் வேலைசெய்யுங்கள். இந்தப் படிப்பு ஆரம்பத்தில் யோசனையாக தெரிவிக்கப்பட்டிருக்கும் பயிற்சியைப் போன்ற ஒன்றை முயற்சிசெய்துபாருங்கள். ஆனால் இந்தச் சமயத்தில் வேகத்தை மாற்றுவதற்குப் பதிலாக தொனிநிலையைக் கூட்டிக் குறைப்பதில் வேலை செய்யுங்கள்.

21கருத்து அல்லது உணர்ச்சிக்குப் பொருத்தமான குரலில் ஏற்றத்தாழ்வு. இதுவரையாக இந்தப் பண்பைப் பற்றிய நம்முடைய கலந்துரையாடலிலிருந்து, வெறுமனே குரலை மாற்றுவதால் மட்டுமே வேறுபாட்டை முயன்று பெறமுடியாது என்பது வெகு தெளிவாகிறது. உங்கள் பாவனைகள் நீங்கள் சொல்வதன் மனநிலைக்குப் பொருத்தமாயிருக்க வேண்டும். அப்படியென்றால் குரலில் ஏற்றத்தாழ்வு எங்கே ஆரம்பமாகிறது? தெளிவாகவே நீங்கள் கொடுப்பதற்காக தயாரித்திருக்கும் பொருளோடு ஆரம்பமாகிறது. உங்கள் பேச்சில் விவாதங்களைத் தவிர எதையும் கொண்டில்லாமல் அல்லது புத்திமதியைத் தவிர எதையும் கொண்டில்லாமல் இருந்தால், உங்கள் பேச்சில் அதிக வேறுபாடு இருக்காது. ஆகவே குறிப்புத்தாளை எழுதி முடித்தப்பிறகு ஒரு சுவைமிக்க அர்த்தமுள்ள அளிப்புக்கு எல்லா பகுதிகளும் உங்களிடமிருப்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு அதை ஆராய்ந்துபாருங்கள்.

22ஆனால் சில சமயங்களில் உங்கள் பேச்சின் நடுவில், வேகத்தில் ஒரு மாற்றத்துக்கான தேவையை நீங்கள் உணருகிறீர்கள். உங்கள் பேச்சு இழுத்துக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்யலாம்? மறுபடியுமாக இங்கே சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சு அனுகூலமாயிருக்கிறது. நீங்கள் தொடரும்போது உங்கள் பொருளின் இயல்பை மாற்றிக்கொள்ளலாம். எவ்விதமாக? பேசுவதை நிறுத்திவிட்டு பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசிக்க ஆரம்பிப்பது ஒரு வழியாக இருக்கும் அல்லது ஏதோவொரு கூற்றை கேள்வியாக மாற்றி அழுத்தத்துக்காக நிறுத்தம் கொடுக்கலாம். ஒருவேளை உங்கள் குறிப்புத்தாளிலுள்ள ஒரு விவாதத்தை மாற்றியமைக்க ஓர் உதாரணத்தை உள்ளே நீங்கள் நுழைக்கலாம்.

23பேச்சின் சமயத்தில் பயன்படுத்தப்படும் இந்த உத்திகள் நிச்சயமாகவே அனுபவமுள்ள பேச்சாளர்களுக்காகும். ஆனால் உங்கள் நியமிப்பிலிருந்து உங்கள் பொருளை முன்கூட்டியே தயாரிப்பதில் இதே யோசனைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

24குரலில் ஏற்றத்தாழ்வு ஒரு பேச்சில் வாசனைப் பொருள் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. சரியான வகையும் சரியான அளவிலும் பயன்படுத்தப்பட்டால், அது உங்கள் பொருளின் முழு சுவையையும் வெளிக்கொண்டுவந்து உங்கள் கேட்போரை மகிழ்விப்பதாக இருக்கும்.

[கேள்விகள்]

1, 2. கருத்து அழுத்தம் ஒரு பேச்சுக்கு என்ன செய்கிறது?

3-7. நல்ல கருத்து அழுத்தத்தை ஒருவர் எவ்விதமாக முயன்று அடைய முடியும் என்பதைச் சொல்லுங்கள்.

8, 9. முக்கிய கருத்துக்கள் அழுத்தப்படுவது ஏன் முக்கியமாக இருக்கிறது?

10-12. குரலில் ஏற்றத்தாழ்வு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை விளக்கவும்.

13, 14. சக்தியில் வேறுபாடு என்பதன் பொருள் என்ன?

15-17. வேகத்தில் வேறுபாடு எவ்விதமாக ஒரு பேச்சை உயர்த்திக்கொடுக்கிறது?

18-20. ஒருவர் எவ்விதமாக தொனிநிலையில் வேறுபாட்டை முயன்றுபெறலாம் என்பதை விளக்கவும்.

21-24. குரலில் ஏற்றத்தாழ்வு ஏன் கருத்துக்கு அல்லது உணர்ச்சிக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்?