சத்தியத்தின் இதமான வார்த்தைகளைப் பேசுதல்
படிப்பு 1
சத்தியத்தின் இதமான வார்த்தைகளைப் பேசுதல்
1யெகோவா பேச்சாற்றலின் தலைசிறந்த படைப்பாளர். புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் மத்தியில் பேச்சுத்தொடர்புக்குரிய இந்த அதிசயமான சாதனத்துக்காக எல்லா பாராட்டும் அவருக்கே செல்ல வேண்டும். கடவுள் செய்யும் அனைத்துமே நன்மையாக இருப்பதன் காரணமாக, மனிதனுக்கு அவர் கொடுத்த பரிசாகிய பேச்சாற்றல் பைபிளில் யாக்கோபு 1:17-ல் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ‘பூரணமான வரங்களில்’ ஒன்றாக ஆதியில் இருந்தது என்பதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம். மனிதரின் பேச்சாற்றலைக் குறித்து சொற்களில் வல்லுநரான லட்விக் கோஹலர் எழுதினார்: “பேச்சில் உண்மையில் என்ன நடக்கிறது, பேசப்பட்ட சொல்லாக பிறப்பதற்குப் பகுத்துணரும் பொறி ஆவியை எவ்வாறு தூண்டிவிடுகிறது என்பது நமது அறிவாற்றலுக்கு புரியாதபடி திகைக்கச் செய்கிறது. மனித பேச்சாற்றல் ஓர் இரகசியமாகும்; இது ஒரு தெய்வீக பரிசு, ஓர் அற்புதம்.”
2இப்படியாக ஆதாம் படைக்கப்பட்டபோது அவனுக்குச் சொற்களின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டது. அவனுக்கு புதிய சொற்களை உருவாக்கும் திறமையுமிருந்தது. அவன் நிச்சயமாகவே திறம்பட்ட முறையில் பேச்சுத்தொடர்புகொள்ளும் திறமையைப் பரிசாகப் பெற்றிருந்தான். நல்ல பேச்சின் மூலம் தன் எண்ணங்களை வெளிப்படுத்த முடிந்ததோடு மட்டுமல்லாமல், பேச்சை புரிந்துகொள்ளும் திறமையையும் பெற்றிருந்தான். கடவுள் ஆதாமிடம் பேசி அவனுக்குப் போதனைகளைக் கொடுத்த உண்மையிலிருந்து இதை நாம் அறிகிறோம். இதன் விளைவாக ஆதாம் ஏவாளோடு பேச்சுத்தொடர்பு கொள்ளமுடிந்தது.—ஆதி. 1:27-30; 2:16-20.
3இருப்பினும், பூமியின்மீது அக்கிரமம் மிக அதிகமாயிருந்த சமயத்தில், பாபேல் கோபுரத்தில், கடவுள் மனிதரின் பேச்சை தாறுமாறாக்கினார். (ஆதி. 11:4-9) அதன் காரணமாகவே இன்று அநேக மொழிகளும் இவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு கிளைமொழிகளும் இருக்கின்றன. இந்த மொழிகளில் சில சிறிய மலைவாழ் மக்கள் தொகுதிகளாலும் மற்றவை லட்சக்கணக்கானோராலும் பேசப்படுகின்றன. மனிதனின் பேச்சு, மனிதனைப் போலவே ஆரம்பத்திலிருந்த பரிபூரண நிலையிலிருந்து வெகுவாக வீழ்ச்சியடைந்துவிட்டிருக்கிறது. அடிக்கடி அவனுடைய பேச்சாற்றல் பொய்யைப் பரப்புவதற்கும் மக்களைக் கடவுளிடமிருந்து விலகிச்செல்ல செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
4மறுபட்சத்தில் யெகோவாவின் ஊழியர்களாக, நாம், பேச்சாற்றலை சரியாக பயன்படுத்த விரும்புகிறோம். உண்மை கடவுளைப்பற்றி மக்களிடம் பேசுவதற்கும், நீதியுள்ள புதிய உலகில் நித்திய ஜீவனைப்பற்றிய அவருடைய கிளர்ச்சியூட்டும் செய்தியை அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கும் நாம் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். இதைத் திறம்பட்ட வகையில் செய்ய நமக்கு உதவுவதற்காக இந்த தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் அளிக்கப்படுகிறது.
2 தீ. 1:13) சிலர் “சத்தியத்துக்குச் செவியை விலக்கி”விடுவார்கள் என்று பவுல் எச்சரித்தார், ஆனால் கடவுளுடைய வார்த்தையாகிய “திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு”வதே சரியான காரியம் என்று காண்பித்தார். ஆகவே கடவுளுடைய சத்திய வார்த்தையைப் பற்றிக்கொண்டிருந்து, நாம் செய்யும் எல்லா பிரசங்கிப்பிலும் போதனையிலும் அதை ஆதாரமாக பயன்படுத்த வேண்டும்.—2 தீ. 4:1-5.
5சத்திய வார்த்தைகளைப் பேசுதல். பேச்சாற்றலை சரியாக பயன்படுத்துவது கடவுளுடைய வார்த்தைக்கு முழு இசைவோடு நாம் எப்பொழுதும் சத்தியத்தைப் பேசுவதை தேவைப்படுத்துகிறது. செவிசாய்ப்பவர்களுக்கு பொய்யானது ஆவிக்குரிய ஆரோக்கியத்தை அளிக்கமுடியாது. ஆகவே அப்போஸ்தலன் பவுல் ஞானமாக அறிவுரை கூறினார்: “என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.” ஏன்? ஏனென்றால் அந்த ‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்’ கடவுளிடமிருந்து வந்திருந்தது. (6ஏற்ற சமயத்தில் பேசப்பட்ட ஏற்ற சொல் ஒருவர் நித்திய ஜீவனுக்குப் போகும் வழியில் செல்ல ஆரம்பிக்கவோ ஜீவனுக்குப் போகும் வழியில் நிலைத்திருக்கவோ உதவிசெய்யக்கூடும் என்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். (நீதி. 18:21; யாக். 5:19, 20) ஆகவே சொற்களின் சரியான உபயோகம், ஊழியர்களில் நம் ஒவ்வொருவருக்கும் அதிமுக்கியத்துவமுள்ளதாக இருக்கிறது, தேவராஜ்ய ஊழியப் பள்ளி இந்த உண்மையை வலியுறுத்த நாடுகிறது.
7சொற்களின் தெரிவு. பேச்சாளரின் மனதிலிருக்கும் எண்ணங்களை அல்லது கருத்துக்களை அவருக்கு செவிசாய்த்துக்கொண்டிருப்போருக்கு தெரிவிப்பதற்காக சொற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பேச்சாளர் தன் எண்ணங்களை துல்லியமாக வெளிப்படுத்துகிற மற்றும் அவருக்கு செவிகொடுப்போருக்கு தெரிந்த அல்லது எளிதில் அடையாளங்கண்டுகொள்ளப்படுகிற சொற்களைத் தெரிந்துகொண்டால் மாத்திரமே இதை வெற்றிகரமாக செய்ய முடியும். பலன்தரத்தக்க சொற்களை தெரிவுசெய்வது ஆரம்பத்தில் எளிதாக வருவதில்லை. ஞானியான சாலொமோன் ராஜா, இஸ்ரவேலின் பிரசங்கியும்கூட, “அநேகம் நீதிமொழிகளை வரிசைப்படுத்துவதற்காக ஆழ்ந்து யோசனைசெய்து முழுமையாக ஆராய்ந்துபார்த்தான். பிரசங்கி இதமான வார்த்தைகளையும் சத்தியத்தின் சரியான சொற்களையும் கண்டுபிடிக்க வகைதேடினான்.” (பிர. 12:9, 10, NW) ஆகவே மனதுக்கு உகந்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க மனதின் முயற்சி, ஆராய்ச்சி மற்றும் நல்ல நிதானிப்பு தேவையாயிருக்கிறது. அதே பைபிள் அதிகாரம் பதினோராம் வசனத்தில், நன்கு தெரிவுசெய்யப்பட்ட சொற்களின் பயன் விளக்கிக்காட்டப்பட்டுள்ளது. “ஞானிகளின் வார்த்தைகள்” (NW) ஜீவபாதையில் செல்ல மக்களைத் தூண்டி உற்சாகப்படுத்தும் ‘தாற்றுக்கோல்களுக்கு’ ஒப்பிடப்படுகின்றன.
8கற்றுக்கொள்ளப்படவேண்டிய அடிப்படை நியமங்களில் ஒன்று எளிமையான சொற்களாகும். பேச்சை பலன்தரத்தக்கதாக்குவதற்கு வார்த்தைகள் சிக்கலானவையாக அல்லது கடினமானவையாக இருக்கவேண்டியதில்லை. உண்மையில், எளிமையே புரிந்துகொள்வதற்கு இன்றியமையாததாகவும் இவ்விதமாக நினைவாற்றலுக்கு பெரும் உதவியாகவும் இருக்கிறது. “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்,” பிர. 12:13.
என்ற பைபிள் பதிவின் இந்த ஆரம்ப சொற்களைக் காட்டிலும் எளிமையான ஆனால் அதிக கம்பீரமான சொற்கள் வேறு என்ன இருக்கமுடியும்? உங்களால் அவற்றை மறக்கமுடியாது. அதேவிதமாகவே பிரசங்கி எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசனைசெய்து அடைந்த முடிவும்கூட இருக்கிறது: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.”—9கடவுளுடைய சத்தியத்தின் தெளிவான ஒலியை அடக்கும் வார்த்தைகளை நாம் தவிர்க்க விரும்புகிறோம். ‘அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்த’ நாம் விரும்புவதில்லை. (யோபு 38:2) “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால்” யார் கேட்டு புரிந்துகொள்வார்?—1 கொ. 14:8.
10நாமனைவரும் கிறிஸ்து இயேசுவின் நேர்த்தியான முன்மாதிரியிலிருந்து பயனடையலாம். அவருடைய எளிய சொல்லமைப்பும், வாழ்க்கையில் சாதாரணமான நிகழ்ச்சிகளிலிருந்து கொடுத்த உதாரணங்களும் கேட்போர்மீது வல்லமையான பாதிப்பைக் கொண்டிருந்தது. மத்தேயுவின் சுவிசேஷத்தில் அதிகாரங்கள் ஐந்து முதல் ஏழு வரையிலுமாக கப்பர்நகூமுக்கு அருகே மலையின்மீது அவர் கொடுத்த சொற்பொழிவை நினைவுபடுத்திப்பாருங்கள். சொல்நயமிக்க சொற்பொழிவா? இல்லை. தெளிவற்ற சொற்களா? இல்லவே இல்லை. சத்தியம் மக்களின் இருதயங்களைப் பாதிக்கும்படிக்கு அதை அவர்களுடைய மனங்களுக்குள் எடுத்துச்செல்வதில் இயேசு அக்கறையுள்ளவராக இருந்தார். அவர் உண்மையாகவே தம்முடைய தந்தையாகிய யெகோவாவின் சிந்தையை உடையவராக இருந்தார். பேச்சு சம்பந்தமாக யெகோவாவின் ஊழியர்கள் அனைவருக்கும் அவருடையது மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.
11தெளிவான, எளிமையான, நன்கு தெரிந்துகொள்ளப்பட்ட சத்திய வார்த்தைகளின் வல்லமையான பாதிப்பை நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுவிடாதிருப்போமாக. அவை மகிழ்விக்கமுடியும், உயிர்ப்பூட்டமுடியும், செயல்பட தூண்டிட முடியும். இயேசுவின் பேச்சாற்றலைப்பற்றி லூக்கா 4:22-லுள்ள பதிவு, கேட்போர் “எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்”டார்கள் என்று சொல்கிறது. அவருடைய அப்போஸ்தலரும்கூட கேட்க ஆர்வமுள்ளவராயிருந்த அநேகரைக் கண்டனர். அந்தக் காலத்திலிருந்த பிரபலமான யூதர்கள் அந்த அப்போஸ்தலரை, “படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும்” அறிந்திருந்த உண்மையின் மத்தியிலும் இவ்வாறு இருந்தது. (அப். 4:13) விளக்கம் என்னவாக இருந்தது? அவர்கள் தங்கள் எஜமானராகிய கிறிஸ்துவிடமிருந்து தங்கள் முறையைக் கற்றிருந்தார்கள். இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு, இளைஞருக்கும் முதியோருக்கும் பெரும் ஊக்குவிப்பாக அது இல்லையா?
12பிள்ளைகள் தங்களுடைய கருத்துக்களை நன்கு வெளிப்படுத்துவதற்கு உதவிசெய்ய பெற்றோர் மிக அதிகத்தைச் செய்யமுடியும். வீட்டில் நாள்தோறும் நேர்த்தியான பேச்சு முன்மாதிரியின் மூலமும் போதிப்பதன் மூலமும் ஆழமாக மனதில் ஊன்றப்படலாம். ஒருவருடைய பேச்சை வழிநடத்த வேண்டிய பைபிள் நியமங்கள் இளம் மனங்களில் பதியவைக்கப்படலாம். (உபா. 6:6-9) அநேக குடும்பங்கள் ஒவ்வொரு நாள் காலையும் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறுபுத்தகத்திலுள்ளபடி அந்நாளுக்குரிய பைபிள் வசனத்தை கலந்தாலோசிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றனர், மற்ற சமயங்களில் அவர்கள் காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-வை ஒன்றாகச் சேர்ந்து வாசிக்கின்றனர். அவர்களுடைய சொற்களின் தொகுதியோடு புதிய வார்த்தைகளைச் சேர்ப்பதும், மற்றவர்களோடு அதிக பலன்தரத்தக்க பேச்சுத்தொடர்புக்காக இந்தச் சொற்கள் எவ்வாறு இதமாக சொற்களின் உருவில் வெளிப்படுத்தப்படலாம் என்பதைக் காண்பிப்பதுமாகிய இது குடும்பத்துக்கு மிகச் சிறந்த பயிற்றுவிப்பாகும். இவ்விதமாகவும்கூட, குடும்பத்தார் காரியங்களின்பேரில் யெகோவாவின் சிந்தையை பெற்றுக்கொள்கின்றனர், அவர்களுடைய பேச்சு அதைப் பிரதிபலிக்கும்.
13தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பங்குகொள்வதன் மூலம் முன் னேற்றஞ்செய்தல். இந்தத் துணைநூலில் குறிப்பிடப்பட்டுள்ள படிப்பு பயிற்சியின் உதவியோடு ஊழியத்தில் முன்னேற உண்மை மனதுடன் விரும்பும் நாம் அனைவரும், ‘இதமான வார்த்தைகளை, சத்தியத்தின் சரியான சொற்களை’ பயன்படுத்த உதவப்படுவோம். வயது அல்லது கல்வி அந்தஸ்து எதுவாக இருப்பினும், யெகோவாவின் வழிநடத்துதலின்மீதும் அவருடைய ஆவியின்மீதும் சார்ந்திருப்பீர்களானால் நீங்கள் அபிவிருத்திசெய்து கிறிஸ்தவ ஊழியத்தில் முன்னேறலாம். ஆனால் தேவையான முயற்சியை நீங்கள் எடுப்பது அவசியமாகும். நீங்கள் “தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திருக்”கும்படி துரிதப்படுத்தப்படுகிறீர்கள்.—1 தீ. 4:15.
14நம் ஒவ்வொருவருடைய பாகத்திலும் முயற்சி, யெகோவாவின் மக்களுடைய எல்லா சபை கூட்டங்களிலும் ஆஜராயிருக்க தீர்மானமாயிருப்பதையும் அந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதையும் உட்படுத்துகிறது. குறிப்பாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் வாராந்தர கூட்டங்களில், அப்போஸ்தலன் பவுலின் ஆலோசனையை நீங்கள் நிறைவேற்றுவதற்கு உதவி அளிக்கப்படும்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை [சரியாகக் கையாளுகிறவனாயும், NW] உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.”—2 தீ. 2:15.
15சபையின் கூட்டங்களுக்கு ஆஜராயிருக்கும் ஆண் அல்லது பெண், இளைஞர் அல்லது முதியவர் ஆகிய ஒவ்வொருவரும் இந்தப் பள்ளியில் சேர்ந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம். முழுக்காட்டப்பட்டவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் சேர்ந்துகொள்ளலாம். ஒருவேளை மாம்சப்பிரகாரமாக ஞானிகளாய் இருக்கும் அநேகரும், உயர்குடியில் பிறந்தவர்களும், உலக நோக்குநிலையில் அதிக கல்வி கற்றவர்களும் ராஜ்ய செய்திக்கு பிரதிபலிக்கமாட்டார்கள் என்பதை கடவுள் முன்னறிந்திருந்ததைப் பள்ளி கல்வியில் குறைவுபடுகிறவர்கள் மனதில் வைக்க வேண்டும். (1 கொ. 1:26-29) ஆனால், உலகின் நோக்குநிலையில் இழிவாக கருதப்படும் அநேகர் அதற்கு செவிசாய்த்து சத்தியத்துக்காக பசியாயுள்ள மற்ற ஆட்களுக்கு அதை மனமுவந்து எடுத்துச்செல்வர் என்பதையும்கூட அவர் முன்னரே அறிந்திருந்தார். இந்தப் பள்ளியில் சேர்ந்துகொண்டு அதன் பாடங்களை உண்மையுடன் முழுவதுமாகப் பின்பற்றுவதன் மூலம், நேர்மை இருதயமுள்ளவர்களிடம் சத்தியத்தின் இதமான வார்த்தைகளைப் பேச உங்களுக்கு உண்மையிலேயே உதவிசெய்யும் அறிவுக்கு வழிநடத்தப்படுவீர்கள். இது உங்களுக்குப் புத்துயிரளிப்பதாகவும் உங்களுக்குச் செவிசாய்த்துக் கேட்போருக்கு புத்துயிரளிப்பதாகவும் இருக்கும்.
சங். 19:14) ஒவ்வொரு கிறிஸ்தவனும் சிருஷ்டிகருக்குப் பிரியமாயிருக்கும் சொற்களை உபயோகித்து எல்லா சமயங்களிலும் நன்றாக பேசமுடிகிறவராயிருப்பதற்கு பலமான ஆசையை உடையவராக இருக்க வேண்டும். தேவராஜ்ய ஊழியப் பள்ளி அந்த இலக்கை முயன்று அடைய மதிப்புள்ள உதவியை உங்களுக்கு அளிக்கிறது.
16எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பயிற்சியின் ஊக்கமுள்ள ஒரு மாணாக்கராக இருப்பதன் மூலம், சொல்லிலும் செயலிலும் இஸ்ரவேலின் தாவீது ராஜா ஜெபித்த அந்தக் காரியத்தை அடைய நாடுகிறவர்களாக இருப்பீர்கள்: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” ([கேள்விகள்]
1-3. மனிதரின் பேச்சு ஆரம்பமானது எப்படி, அது எவ்விதமாக வளர்ந்தது?
4. நம்முடைய பேச்சாற்றலை நாம் எவ்விதமாக பயன்படுத்த வேண்டும்?
5, 6. நாம் பேசுவது சத்தியமாக இருப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது?
7-9. என்ன வகையான வார்த்தைகள் பொதுவாக அதிக பலன்தரத்தக்கதாக இருக்கின்றன?
10, 11. இயேசு எவ்விதமாக நமக்குப் பேசுவதில் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்?
12. தங்கள் பிள்ளைகள் தங்களுடைய கருத்துக்களை நன்கு வெளிப்படுத்துவதற்கு பெற்றோர் எவ்விதமாக உதவிசெய்யமுடியும்?
13-16. தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து முழுமையாக பயனடைவதற்கு, நாம் தனிப்பட்டவிதமாக என்ன செய்ய வேண்டும்?