Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சரியான உச்சரிப்போடு சரளமாக, சம்பாஷணை முறையில் பேசுதல்

சரியான உச்சரிப்போடு சரளமாக, சம்பாஷணை முறையில் பேசுதல்

படிப்பு 29

சரியான உச்சரிப்போடு சரளமாக, சம்பாஷணை முறையில் பேசுதல்

1. ஒரு பேச்சைக் கொடுப்பதற்காக ஒரு கேட்போர் கூட்டத்துக்கு முன்னால் ஏறி நிற்கையில், நீங்கள் அடிக்கடி சரியான வார்த்தைகளுக்காகத் தடவிக் கொண்டிருப்பதைக் காண்கிகறீர்களா? அல்லது, சப்தமாக வாசிக்கையில் ஒரு சில சொற்களில் தடுமாறுகிறீர்களா? அப்படியானால் சரளமாக பேசுவதில், உங்களுக்குப் பிரச்சனை இருக்கிறது. சரளமாக பேசும் ஒரு நபர் வார்த்தைகளின் உபயோகத்தில் தயாராக இருப்பவராவார். அது “வெறும் சொல்வளமுடைய” நபரை அர்த்தப்படுத்துவதில்லை, அதாவது, முன்யோசனையில்லாமலும் அல்லது உண்மையில்லாமலும் வார்த்தைகளில் தாராளமாக இருப்பவரை அர்த்தப்படுத்துவதில்லை. அது சிரமமில்லாமல் அல்லது சுதந்திரமாக தடைபடாது தொடரும் நயமான அல்லது மகிழ்விக்கிற நளினமான பேச்சாகும். பேச்சு ஆலோசனைத் தாளில் விசேஷமான கவனத்துக்காக சரளமாக பேசுதல் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

2. பேசுகையில், சரளமான பேச்சில் குறைவுபடுவதற்கு மிகப் பொதுவான காரணங்கள் தெளிவாகச் சிந்திப்பதிலும் பொருளைத் தயாரிப்பதிலும் குறைவுபடுவதே ஆகும். இது பொருள் செறிவற்ற சொல்தொகுப்பு அல்லது வார்த்தைகனின் தெரிவில் குறைபாடு ஆகியவற்றின் விளைவாகவும் இருக்கலாம். வாசிக்கையில், சரளம் குறைவுபடுவதற்குக் காரணம் பொதுவாக சப்தமாய் வாசித்துப் பழகுவதில் குறைவுபடுவதே ஆகும், இங்கேயும்கூட வார்த்தைகளின் அறிவு குறைவுபடுவது தடுமாற்றத்தை அல்லது தயக்கத்தை உண்டுபண்ணக்கூடும். வெளி ஊழியத்தில், சரளமாக பேசுவதில் குறைவுபடுவதற்குக் காரணம் இந்தக் காரணிகள் சேர்ந்ததன் விளைவும் அதோடு பயந்த சுபாவம் அல்லது நிச்சயமின்மையும் சேர்வதால் இருக்கலாம். அங்கே பிரச்சனை விசேஷமாக வினைமையானதாய் இருக்கிறது. ஏனென்றால் சில சந்தரப்பங்களில் உங்கள் கேட்போர் கூட்டம் உண்மையில் வெளிநடப்பு செய்துவிடுவார்கள். இராஜ்ய மன்றத்தில் உங்கள் கேட்போர் கூட்டம் உண்மையில் வெளிநடப்புசெய்யமாட்டார்கள், ஆனால் அவர்களுடைய மனங்கள் சுற்றித்திரிய, நீங்கள் சொல்வதில் பெரும் பகுதி இழக்கப்பட்டுவிடும். ஆகவே இது முக்கியமான ஒரு விஷயம்; சரளமாகப் பேசுவது நிச்சயமாகவே முயன்று அடையப்பெற வேண்டிய ஒரு பண்பாகும்.

3. அநேக பேச்சாளர்களுக்கு “மேலுமாக” அல்லது அதுபோன்ற ‘தேவையற்ற வார்த்தைகளை’ உட்புகுத்தும் குழப்பமுண்டாக்கும் இயற்கைப் பழக்கங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சொற்றொடர்களை எவ்வளவு அடிக்கடி உங்கள் பேச்சில் நீங்கள் சேர்க்கிறீர்கள் என்பது தெரியாதிருந்தால், ஒத்திகை பார்க்க முயற்சிசெய்யலாம். இதில் ஒருவர் பேசுவதை கேட்டு இவற்றை நீங்கள் சொல்லும் ஒவ்வொரு முறையும் உங்களுக்குப் பின்னால் அதைத் திரும்ப சொல்ல வைத்துப் பார்க்கலாம். நீங்கள் ஒருவேளை ஆச்சரியமடையலாம்.

4. மற்ற ஆட்கள் எப்போதும் பின்னால் சென்று பேசுகின்றனர், அதாவது ஒரு வாக்கியத்தை ஆரம்பித்து, தாங்களாகவே இடையில் நிறுத்தி பின்னர் மறுபடியுமாக முதலிலிருந்து பேசுவது. இந்தக் கெட்ட பழக்கத்தினால் நீங்கள் அவதியுற்றால், உங்கள் அன்றாட சம்பாஷணையில் இதை மேற்கொள்ள முயற்சிசெய்துபாருங்கள். முதலில் யோசித்து எண்ணத்தைத் தெளிவாக மனதில் கொண்டுவர உணர்வுடன்கூட முயற்சித்துப் பாருங்கள். பின்னர் நிறுத்தாமல் அல்லது “நட்டாற்றில்” கருத்துக்களை மாற்றிக்கொள்ளாமல் முழுமையாக எண்ணத்தை வெளியிடுங்கள்

5. மற்றொரு காரியம், நம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்துகையில் வார்த்தைகளைப் பயன்படுத்த பழக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். ஆகவே நாம் என்ன சொல்ல விரும்புகிறோம் என்பதை சரியாக அறிந்திருந்தால், வார்த்தைகள் இயற்கையாகவே வர வேண்டும். வார்த்தைகளைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், வெறுமனே கருத்து உங்கள் மனதில் தெளிவாக இருப்பதை நிச்யப்படுத்திக் கொள்வதைப் பழகிக்கொள்வதற்காக, வார்த்தைகளைச் சிந்தித்துப்பாருங்கள். அப்படிச் செய்கையில், நீங்கள் பேசும் வார்த்தைகளில் மனதை வைப்பதற்கு பதிலாக உங்கள் மனதை கருத்தின்மீது வைப்பீர்களேயானால், வார்த்தைகள் தானாகவே வர வேண்டும், உங்கள் எண்ணங்கள் உண்மையில் நீங்கள் உணரும்விதமாக வெளிப்படுத்தப்படவும் வேண்டும். ஆனால் கருத்துக்களுக்கு பதிலாக வார்த்தைகளை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்ட உடனே உங்கள் பேச்சு இடையில் நின்றுவிடும்.

6. வார்த்தைகளைத் தெரிவு செய்யும் விஷயமே சரளமாக பேசுவதில் கொஞ்சம் ஒழுங்கான படிப்பு தேவையாக இருக்கிறது. காவற்கோபுரம் இன்னும் சொசைட்டியின் மற்ற பிரசுரங்களில், உங்களுக்குப் பரிச்சமயம் இல்லாத வார்த்தைகளை விசேஷமாக கவனித்து அவற்றில் சிலவற்றை உங்கள் அன்றாட சொல்தொகுப்போடு சேர்த்துக்கொள்ளுங்கள்.

7. வார்த்தைகளில் நல்ல பழக்கமில்லாதிருத்தலே சரளமாக பேசுவதில் குறைவுபடுவதற்கு பொதுவாக காரணமாய் இருப்பதால், இது உங்கள் பிரச்சினையாக இருக்குமென்றால் ஒழுங்காகவும் முறையாகவும் சப்தமாக வாச்த்துப்பழகுவது உங்களுக்கு நன்மையாக இருக்கும்.

8. இதைச் செய்வதற்கு ஒரு வழி, பொருளிலிருந்து ஒன்று அல்லது இரண்டு பாராக்களைத் தெரிந்துகொண்டு அந்தப் பகுதியிலுள்ள முழு எண்ணத்தோடும் நீங்கள் நன்கு பழக்கப்பட்டவராகும் வரையாக மனதுக்குள் அதை கவனமாக வாசிப்பதாகும். எண்ணத்தொகுதிகளைப் பிரித்தெடுத்து தேவையானால் அவற்றை குறித்துக்கொள்ளவும், பின்னர் இந்தப் பகுதியைச் சப்தமாக வாசித்துப் பழக ஆரம்பிக்கவும். பழகுப்போது, எந்த ஒரு தயக்கமும் அல்லது தவறான இடங்களில் நிறுத்தமும் இல்லாமல் முழுமையாக எண்ணத் தொகுதிகளை உங்களால் வாசிக்க முடிகிறவரையில் திரும்பத் திரும்ப வாசிக்கவும்.

9. பழக்கப்பட்டிராத அல்லது கடினமான வார்த்தைகள் உங்களால் எளிதில் சொல்லமுடிகிற வரையில் மறுபடியும் மறுபடியும் உச்சரிக்கப்பட வேண்டும். தனியாக அந்த வார்த்தையை உங்களால் சொல்ல முடிந்தபிறகு, அந்த வார்த்தையோடுகூட முழு வாக்கியத்தையும் வாசித்துப் பாருங்கள், அதிக பழக்கப்பட் வார்த்தைகளைத் தாராளமாக உங்களால் வாசிக்க முடிவதுபோலவே இதையும் வாக்கியத்தோடு சேர்த்து வாசிக்க முடியும்வரை அதைச் செய்யுங்கள்

10. மேலுமாக கண்ட மாத்திரத்தில் ஒழுங்காக வாசிப்பதைப் பழகிக்கொள்ளுங்கள். உதாரணமாக எப்பொழுதும் தின வசனத்தையும் குறிப்புகளையும் நீங்கள் முதன்முறையாக கண்டவுடன் சப்தமாக வாசிக்கவும். ஒரு சமயம் ஒரு வார்த்தையை மாத்திரமே பார்ப்பதற்குப் பதிலாக உங்கள் கண்கள் முழுமையான எண்ணங்களைத் தெரிவிக்கும் வார்த்தைத் தொகுதிகளைப் பார்க்கும்படி அனுமதிக்க பழகிக்கொள்ளுங்கள். பழகிக்கொள்வீர்களானால், பலன் தரத்தக்க பேச்சு மற்றும் வாசிப்பின் இந்த இன்றியமையாத பண்பின் நீங்கள் வெற்றிபெறலாம்.

*******************

11. ஆலோசனைத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு விரும்பத்தக்க பேச்சு அம்சம் “சம்பாஷனைமுறை பண்பு” என்பதாகும். இது அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கொண்டிருக்கும் ஒன்றாகும், ஆனால் ஒரு பேச்சு கொடுக்க ஏறும்போது இதை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? எப்படியோ, பெரிய ஒரு தொகுதியோடுகூட சுலபமாக சம்பாஷிக்கும் ஆட்கள், “ஒரு பேச்சைக் கொடு”ப்பதற்கும் முன்கூட்டியே தயாரிக்கும்படி அழைக்கப்படுகையில் அனேகமாக மிகவும் முறைப்படியாகவும் ஓரளவு “பிரசங்கிக்கிற பாணியானவர்களாகவும்” ஆகிவிடுகின்றனர். என்றபோதிலும் பொதுப் பேச்சினுடைய மிகவும் பலன்தரத்தக்க விதமானது சம்பாஷனைமுறையில் பேசுவதாகும்.

12. சம்பாஷனைமுறை சொற்றொடர்களைப் பயன்படுத்துதல். சம்பாஷனைமுறையில் பேசுவதிலிருக்கும் பலன்தரத்தக்கதன்மையில் பெரும்பகுதி பயன்படுத்தப்படும் சொற்களைச் சார்ந்திருக்கிறது. சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சை தயாரிக்கையில் அச்சில்தோன்றும் அதே சொற்களைத் திரும்பச் சொல்வது பொதுவாக நல்லதல்ல. எழுத்துப் பாணி பேசப்படும் வார்த்தையிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஆகவே உங்களுடை சொந்த தனிப்பட்ட பாவனைக்கேற்ப இந்தக் கருத்துக்களை உருவமைத்துக்கொள்ளுங்கள். சிக்கலான வாக்கிய அமைப்பின் உபயோகத்தை தவிர்த்திடுங்கள்.

13. மேடையின்மீது பேச்சு உங்கள் அன்றாட மொழியை பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் “வீண் ஜம்பத்தோடு” பேசக்கூடாது. இருந்தபோதிலும், தயாரிக்கப்பட்ட உங்கள் பேச்சு இயற்கையாகவே அன்றாட பேச்சைவிட முன்னேற்றுவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும், ஏனென்றால், உங்கள் கருத்துக்கள் அதிக கவனத்தோடு முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையாக, அதிக சரளத்தோடு வரும். இதன் விளைவாக, உங்கள் சொற்றொடர்கள் நல்லவிதமாக தொகுக்கப்பட்டிருக்கும்.

14. இது தினசரி பழகுவதனுடைய முக்கியத்துவத்தை அழுத்திக்காண்பிக்கிறது. பேசும்போது, நீங்களாகவே இருங்கள். கொச்சையாக பேசுவதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கிருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான எண்ணத்தையும் எடுத்துச்சொல்ல ஒரே சொற்களையும் சொற்டொடர்களையும் எப்பொழுதும் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். அர்த்தத்தோடு பேச கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அன்றாட பேச்சில் பெருமைகொள்ளுங்கள், நீங்கள் மேடையின் மீதிருக்கையில், வார்த்தைகள் அதிக உடனடியாக வரும், எந்த ஒரு கேட்போர் கூட்டத்துக்கும் தெளிவாயும், எளிதாயும், ஏற்றுக்கொள்ளத்தக்கதாயும் இருக்கும் சம்பாஷனைமுறை பண்பில் உங்களால் பேசமுடியும்.

15. இது விசேஷமாக வெளி ஊழியத்தில் உண்மையாக இருக்கிறது. மேலும் உங்கள் மாணாக்கர் பேச்சுக்களில் ஒரு வீட்டுக்காரரிடம் நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், வெளி ஊழியத்தில் இருந்தால், நீங்கள் பேசுவது போன்று இயற்கையாகவும் எளிதான முறையிலும் சொற்களைப் பயன்படுத்தி பேச முயற்சிசெய்துபாருங்கள். இது முறைப்படியாக அமையாத மற்றும் நடைமுறைக்கு பயனுள்ள ஒரு பேச்சாக இருக்கும், அதிக முக்கியமாக, இது வெளி ஊழியத்தில் அதிக பலன்தரத்தக்க அளிப்புகளைக் கொடுப்பதற்கு உங்களைப் பயிற்றுவிக்கும்.

16. சம்பாஷணை பாணியில் பேச்சுக் கொடுத்தல். சம்பாஷணை முறை பண்பு பயன்படுத்தப்படும் சொற்களின்மீது பயன்படுத்தப்படும் சொற்களின்மீது மாத்திரமே சார்ந்தில்லை. நீங்கள் பேச்சுக் கொடுக்கும்முறை அல்லது பாணியும்கூட முக்கியமாக இருக்கிறது. இது குரலின் தன்மை, குரல் மாற்றம் செய்தல் மற்றும் இயற்கையாக பேசுதல் ஆகியவற்றை உட்படுத்துகிறது. கேட்போர் கூட்டத்துக்காக சப்தம் அதிகப்படுத்தப்பட்டாலும், அன்றாசட பேச்சைப் போன்றே அது தன்னிச்சையாக இருக்கிறது.

17. சம்பாஷசனைமுறை பேச்சு பிரசங்கம் செய்வதற்கு நேர் எதிர்மாறானது. இது “பிரசங்கிக்கும் பாணியான” பேச்சின் எல்லா அம்சங்களும் இன்றி, எல்லாபோலி நடிப்பிலிருந்தும் விடுபட்டதாக இருக்கிறது.

18. பொருளின் வசனப்போக்கை முன்கூட்டியே அதிக முழுமையாக தயாரிப்பதுதானே ஆரம்ப நிலையிலிருக்கும் பேச்சாளர்கள் அநேகமாக சம்பாஷணைமுறை பண்பை இழப்பதற்கு ஒரு வழியாக இருக்கிறது. பேச்சுக்கொடுப்பதற்காக தயாரிக்கையில், சரிவர தயாரிப்பதற்கு உண்மையில் மனப்பாடமாக உங்களுக்குத் தெரியும்வரையாக வார்த்தைக்கு வார்த்தை பேசிப்பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சில், பேச்சுக் கொடுப்பதற்காக தயாரிப்பு, தெரிவிக்கப்படவிருக்கும் கருத்துக்களைக் கவனமாக மறுபார்வை செய்வதற்கு அழுத்தத்தை வைக்க வேண்டும். ஒன்று மற்றொன்றை மனதில் எளிதாக பின்தொடரும்வரையாக இவை எண்ணங்களாக அல்லது கருத்துக்களாக மறுபார்வை செய்யப்பட வேண்டும். தர்க்கரீதியாக இவை விரிவாக்கப்பட்டிருந்தது நன்கு திட்டமிடப்பட்டிருந்தால் இது கடினமாக இருக்கக்கூடாது. பேச்சுக்கொடுக்கையில் கருத்துக்கள் தடங்கள் இல்லாமல் சுலபமாக வர வேண்டும். அது அவ்விதமாக இருக்க, பேச்சுத்தொடர்பு கொள்ளும் ஆசையோடு அவை சொல்லப்பட்டால், சம்பாஷணைமுறை பண்பு பேச்சின் பாகமாக இருக்கும்.

19. இதை உங்களுக்கு நீங்களே உறுதிசெய்துகொள்ள ஒரு வழி, கேட்போர் கூட்டத்திலுள்ள வித்தியாசமான தனிநபர்களிடம் பேசுவதற்கு முயற்சி எடுப்பதாகும். ஒரு சமயத்தில் ஒருவரிடம் நேரடியாக பார்த்துப் பேசுங்கள். அந்த நபர் ஒரு கேள்வியைக் கேட்டிருப்பதாக நினைத்துக்கொண்டு, பின்னர் பதிலளியுங்கள். அந்தக் குறிப்பிட்ட எண்ணத்தை விரிவுபடுத்துவதில் அந்த நபரோடு தனியாக பேசிக்கொண்டிருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் கேட்போர் கூட்டத்திலுள்ள மற்றொருவரைப் பார்த்து அதையே செய்யுங்கள்.

20. வாசிப்பதில் சம்பாஷனைமுறை, பாணியைக் காத்துக்கொள்வது தேர்ச்சிபெறுவதற்கு அதிக கடினமான பேச்சுப் பண்பாகும், இருப்பினும் அதிக அத்தியாவசியமானதுமாகும். நிச்சயமாகவே பொரும்பகுதியான நமது பொதுவாசிப்பு சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சின் சம்பந்தமாக பைபிளிலிருந்து வசனங்களை வாசிப்பதாகவே இருக்கிறது. பைபிள் உணர்ச்சியோடும் வாசிக்கப்பட வேண்டும். அது உயிரோட்டமுள்ளதாக இருக்கவேண்டும். மறுபக்கத்தில், கடவுளுடைய உண்மையான ஊழியர்கள் மதகுருமார்கள் போலி பக்தியாக சொல்லுறுதியில் மாறுதல் செய்யும் தொனியை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். இந்தப் புத்தகத்தின் உயிருள்ள மொழிக்குத் தகுதியாக இருக்கும் இயற்கையான ஆழத்தோடும் மாய்மாலமில்லாமல் உள்ளபடியேயும் அவருடைய வார்த்தையை யெகோவாவின் ஊழியர்கள் வாசிப்பார்கள்

21. இதுவே காவற்கோபுரம் அல்லது புத்தகப்படிப்பில் பாராக்களைக் வாசிப்பதிலும் உண்மையாக இருக்கிறது. ணறுபடியுமாக இங்கே, சொற்றொடர்களும் வாக்கிய அமைப்பும் சம்பாஷணைமுறையில் வடிவமைக்கப்பட்டில்லை, ஆகவே உங்கள் வாசிப்பு எப்போதும் ஒரு சம்பாஷணையைப் போல தொனிக்க முடியாது. ஆனால் நீங்கள் வாசிப்பதனுடைய கருத்தை அறிந்து, உங்களால் முடிந்தவரை அதை இயற்கையாகவும் அர்த்தமாகவும் வாசிப்பீர்களானால், அநேகமாக அதை சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் ஒரு பேச்சைப் போல தொனிக்கச் செய்யலாம், என்றாலும் அது சாதாரணமாக இருப்பதைவிட சற்று அதிக முறைப்படியாக இருக்கும் ஆகவே முன்கூட்டியே தயாரிக்க முடிந்தால் உங்களுக்கு உதவக்கூடிய குறிப்புகளை எழுதிவைத்து, பொருளை உள்ளபடியேயும் இயற்கையான பாணியிலும் அளிக்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்வது உங்களுடைய பழக்கமாக இருக்க வேண்டும்.

22. சம்பாஷணைமுறை வாசிப்பு அல்லது பேச்சில், உண்மை மனமும் இயற்கையானத் தன்மையும் முக்கிய குறிப்புகளாகும். உங்கள் இருதயம் பொங்கிவழிய, கேட்போரைக் கவரும் வகையில் பேசுங்கள்.

23. நல்நடத்தையை எவ்விதமாக ஒரு சந்தரப்பத்திற்காக எடுத்து அணிந்து கொள்ள முடியாதோ அவ்விதமாகவே நல்ல பேச்சும் இருக்கிறது. ஆனால் வீட்டில் நல்ல நடத்தையானது எப்பொழுதும் பொதுவிடங்களிலும் அப்படியே வெளிப்படுவது போலவே அன்றாட பேச்சில் நீங்கள் நல்ல பேச்சைப் பயன்படுத்துவீர்களானால் மேடையிலும் அது வெளிப்படும்.

*******************************

24. உச்சரிப்பு. உச்சரிப்புங்கூட முக்கியமானது, மேலும் அது பேச்சு ஆலோசனைத் தாளில் தனியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. பேதுருவும் யோவானும் கல்வியறிவில்லாதவர்களும் சாதாரணமான மனிதர்களுமாக இருந்தது கவனிக்கப்பட்டது போலவே, எல்லா கிறிஸ்தவர்களும் அதிகளவு உலகப்பிரகாரமான கல்லவி கற்றவர்களாக இல்லாதபோதிலும், மோசமா உச்சசரிப்பினால் நாம் அளிக்கும் செய்தியிலிருந்து கவனமாற்றத்தைத் தவிர்ப்பது இன்னமும் முக்கியமாக இருக்கிறது. நாம் போதிய அளவு கவனத்தை அதற்கு அளித்தால் உடனடியாக திருத்தப்படக்கூடிய ஒன்றாக இரு இருக்கிறது.

25. ஒரு நபரின் உச்சரிப்பு மிக மோசமாக இருந்தால், கேட்போரின் மனங்களுக்கு அவர் தவறான கருத்துக்களையுங்கூட எடுத்துச்செல்ல முடியும், இது விரும்பத்தகாதது. ஒரு வார்த்தையை ஒருவர் தன்னுடைய பேச்சில் தவறாக உச்சரிப்பதை வீங்கள் கேட்கையில், ஒரு சிவப்பு விளக்குச் செய்வதுபோன்று அது உங்கள் மனதுக்கு முன்னால் வந்து தோன்றுவதுபோல பொதுவான பாதிப்பாக இருக்கிறது. அவருடைய விவாதம் சென்றுகொண்டிருக்கும் போக்கை பின்பற்றுவதை நிறுத்திவிட்டு அவர் தவறாக உச்சரித்த வார்த்தையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடாலாம். என்ன சொல்லப்படுகிறது என்பதிலிருந்து அது எப்படிச் சொல்லப்படுகிறது என்பதற்கு உங்களுடைய கவனத்தை மாற்றும்டி அது செய்துவிடலாம்.

26. உச்சரிப்பின் சம்பந்தமாக பொதுவான மூன்று விதமான பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்லப்படலாம். ஒன்று நிச்சயமாகவே தவறான உச்சரிப்பாகும், இங்கே தவறான இடத்தில் அசை அழுத்தம் கொடுக்கப்படுகிறது அல்லது எழுத்துக்களுக்கு தவறான ஒலி கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான நவினமொழிகள், அசை அழுத்தத்துக்கு ஒரேவிதமான பாங்கைக் கொண்டிருக்கின்றனர், ஆனால் ஆங்கில மொழியில் பாங்கு ஒரே சீராக இல்லை, இது பிரச்சனையை அதிக கடினமாக்கிவிடுகிறது. மேலுமாக, சரியானதாக இருந்தாலும், மிகைப்படுத்தப்பட்டதாக, அளவுக்கு அதிகம் துல்லியமாக, ஜம்பமாக வெளிப்பகட்டான ஒரு தோற்றத்தைக்கூட கொடுக்கும் உச்சரிப்பு இருக்கிறது, இது விரும்பத்தக்கதல்ல. மூன்றாவது பிரச்சினை எப்பொழுதும் தெளிவில்லாத வார்த்தைகள், அசைகளை ஒன்றை ஒன்றுக்குள் நுழைத்தல் அல்லது அவசரமாக தாவுதல் ஆகிய தன்மைகளைக்கொண்ட அஜாக்கிரதையான பேச்சு ஆகும். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

27. பொதுவாக அன்றாட பேச்சில் நமக்கு நன்கு பரிச்சயமான வார்த்தைகளை நாம் பேசுகிறோம்; ஆகவே இதன் தொடர்பாக உச்சரிப்பு பெரியபிரசிசனையாக இல்லை. மிகப் பெரிய பிரச்சினை வாசிப்பதில் தோன்றுகிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் பொதுவிடங்களிலும் தனிமையாகவும் அதிகமான அளவில் வாசிப்பைச் செய்கின்றனர். நாம் வீட்டுக்கு வீடு செல்லும்போது, பைபிளை ஆட்களுக்கு வாசித்துக் காட்டுகிறோம். சில சமயங்களில் காவற்போபுர படிப்பில், வீட்டு பைபிள் படிப்பில் அல்லது சபை புத்தகப்படிப்பில் பாராக்களை வாசிக்கும்படியாக நாம் அழைக்கப்படுகிறோம். வாசிப்பு திருத்தமாகவும் உச்சரிப்பு சரியாகவும் இருப்பது முக்கியமாகும். இல்லையென்றால், எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோமோ என்பதைப் பற்றி நாம் அறியாமலிருக்கிறோம் என்ற அபிப்பிராயத்தை அது கொடுக்கிறது. செய்தி செய்தியிலிருந்து கவனத்தையும் வேறு பக்கமாக திருப்பிவிடுகிறது.

28. தவறான உச்சரிப்பின் பேரில் ஆலோசனைத்ல தேவையான அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. ஓரிரு வார்த்தைகளைப் பற்றி ஏதாவதப கேள்வியிருக்குமானால், தனிப்பட்ட ஆலோசனை போதுமானதாக இருக்கலாம். ஆனால் பேச்சின்போது ஒருசில வார்த்தைகள் மட்டுமே தவறாக உச்சரிக்கப்பட்டாலுங்கூட, இவை நம்முடைய ஊழியத்திலும் நம்முடைய அன்றாட பேச்சிலும்கூட, வழக்கமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளாக இருந்தால், இவற்றை சரியாக உச்சரிக்க அவர் கற்றுக்கொள்ளும்பொருட்டு பள்ளி கண்காணி இவற்றிற்கு கவனத்தைத் திருப்புவது மாணாக்கருக்கு உதவியாக இருக்கும்.

29. மறுபட்சத்தில், பைபிளிலிருந்து வாசிக்கையில் மாணாக்கர் ஓரிரண்சு எபிரேய பெயர்களைத் தவறாக உச்சரிக்க நேரிட்டால், இது குறிப்பிடத்தக்க ஒரு பலவீனமாக கருதப்படாது. இருப்பினும், அநேக பெயர்களை அவர் தவறாக உச்சரிப்பாரேயானால், இது தயாரிப்பு குறைவுக்கு அத்தாட்சியளிக்கும். ஆலோசனை கொடுக்கப்பட வேண்டும். மாணாக்கர் சரியான உச்சரிப்பை உறுதிசெய்து அதை எவ்வாறு பழகிப்பார்ப்பது என்பதைக் கற்றுக்கொள்ள உதவிசெய்யப்பட வேண்டும்.

30. அதேவிதமாகத்தான் மிகைப்படுத்தப்பட்ட உச்சரிப்பும், மாறாத பழக்கமாக இது இருப்பதன் காரணமாக உண்மையில் பேச்சிலிருந்து திசைதிருப்புவதாக இருக்குமானால் மாணாக்கருக்கு உதவி கொடுக்கப்பட வேண்டும். வேகமாக பேசும்போது, பெரும்பாலான ஆட்கள் ஒருசில வார்த்தைகளைத் தெளிவில்லாமல் உச்சரிக்கும் மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதுங்கூட கவனிக்கப்பட வேண்டும். இதன்பேரில் ஆலோசனை கொடுக்கப்பட தேவையில்லை, ஆனால் இது வழக்கமான ஒரு பழக்கமாக இருந்தால், வார்த்தைகளை மாணக்கர் அடிக்கடி தெளிவில்லாமல் உச்சரித்து, அவருடையப் பேச்சைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தால், அல்லது செய்தியிலிருந்து கவனத்தைத் திருப்புவதாக இருந்தால் அப்பொழுது தெளிவான பேச்சின் பேரில் ஏதாவது உதவியளிப்பது உகந்ததாய் இருக்கும்.

31. நிச்சயமாகவே, ஏற்றுக்கொள்ளப்படத்தக்க உச்சரிப்பு வெவ்வேறு இடங்களில் வித்தியாசப்படலாம் என்பதை உங்கள் ஆலோசகர் மனதில் கொள்வார். அகராதிகள்கூட ஒன்றுக்கும் மேற்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட உச்சரிப்புகளை அடிக்கடி வரிசையாக தருகின்றன. ஆகவே உச்சரிப்புகளை அடிக்கடி வரிசையாக தருகின்றன. ஆகவே உச்சரிப்பின் பேரில் ஆலோசனை கொடுக்கையில் அவர் கவனமாக இருப்பார், தனிப்பட்ட விருப்பத்தின் ஒரு விஷயமாக அதை அவர் ஆக்கமாட்டார்.

32. உச்சரிப்போடு ஒரு பிரச்சினை இருந்தால், உங்கள் மனதை அதில் ஊன்ற வைக்கையில் திருத்திக்கொள்வதை கடினமாக நீங்கள் காணமாட்டீர்கள். அனுபவமுள்ள பேச்சாளருங்கூட வாசிப்பு நியமிப்பு கொடுக்கப்படுகையில் ஓர் அகராதியை வெளியே எடுத்து அவர்களுக்கு நன்கு பரிச்சயமாயிராத வார்த்தைகளைப் பார்க்கின்றனர். அவர்கள் வெறுமனே அவற்றை ஊகிப்பதில்லை. ஆகவே அகராதியைப் பயன்படுத்துங்கள்.

33. உச்சரிப்பை முன்னேற்றுவிக்க மற்றொரு வழி, வார்த்தைகளை நன்றா உச்சரிக்கும் ஒருவரிடம் வாசித்துக்காண்பித்து, நீங்கள் தவறு செய்யும் ஒவ்வொரு சமயமும் உங்களை நிறுத்தி அதை திருத்தும்படியாக அவரைக்கேட்டுக்கொள்வதாகும்.

34. நல்ல பேச்சாளர்களுக்குக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்பது மூன்றாவது முறையாகும். செவிகொடுத்துக் கொண்டே சிந்தித்துப்பாருங்கள்; உங்களைவிட வித்தியாசமாக அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள். அவற்றை எழுதிவையுங்கள்; அகராதியில் அவற்றை சரிபார்த்து பழகிக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் நீங்களும்கூட சரியான உச்சரிப்பைக் கொண்டிருப்பீர்கள். சரியான உச்சரிப்போடுகூட சரளமாக, சம்பாஷனைமுறை பேச்சு உங்களை பேச்சை வெகுவாக மேம்படுத்திடும்.

[கேள்விகள்]

1-4. சரளமாக பேசுவதில் குறைவுபடுவதற்கு காரணங்களையும் அறிகுறிகளையும் வரிசையாக குறிப்பிடுங்கள்.

5-10. ஒரு பேச்சாளர் சரளமாக பேசுவதை முன்னேற்றுவிக்க என்ன ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன?

11-15. சம்பாஷனைமுறை பண்பு எவ்விதமாக பயன்படுத்தப்படும் சொற்களைப் பொருத்தியிருக்கிறது?

16-19. பேச்சுக் கொடுத்தல் எவ்விதமாக சம்பாஷனைமுறை பண்பைப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டுங்கள்.

20-23. ஒருவர் எவ்விதமாக தன்னுடைய வாசிப்பு இயற்கையாகத் தொனிக்கும்படிச் செய்யலாம்?

24, 25. மோசமான உச்சரிப்பு ஏன் விரும்பத்தகாககாகும்?

26, 27. உச்சரிப்பின் சம்பந்தமாக என்ன பிரச்சனைகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன?

28-34. ஒருவர் எவ்விதமாக தன்னுடைய உச்சரிப்பை முன்னேற்றுவிக்க உதவப்படலாம்?