Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திரும்பத் திரும்பச் சொல்வதன் உபயோகமும் சைகைகளும்

திரும்பத் திரும்பச் சொல்வதன் உபயோகமும் சைகைகளும்

படிப்பு 26

திரும்பத் திரும்பச் சொல்வதன் உபயோகமும் சைகைகளும்

1உங்கள் கேட்போர் நினைவில் வைத்து பயன்படுத்தக்கூடிய தகவலை கொடுப்பதே பேசுவதில் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். அவர்கள் அதை மறந்துபோனால், நன்மை இல்லாமற்போய்விடும். அதிமுக்கியமானதாக இருக்கும் குறிப்புகளைத் திரும்பத் திரும்பக்கூறுவதே நீங்கள் சொல்வதை அவர்கள் மனதில் பதிய வைப்பதற்கு உதவக்கூடிய ஒரு முக்கியமான வழிமுறையாகும். திரும்பத் திரும்பச் சொல்லுதலே நினைவில் தக்கவைப்பதற்கு அவசியம் என்று பொருத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. திரும்பத் திரும்பச் சொல்வது போதிக்கும் நுணுக்கங்களில் அத்தியாவசியமான ஒன்றாகும். உங்கள் வேதவசனங்களுடைய உபயோகத்தின் சம்பந்தமாக நீங்கள் அதன் மதிப்பை ஏற்கெனவே கற்றிருக்கிறீர்கள். ஆனால் “அழுத்தத்திற்காக திரும்பத் திரும்பச் சொல்லுதல்” உங்கள் பேச்சு ஆலோசனைத் தாளில் தனியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது, ஏனென்றால் இது உங்கள் பேச்சின் மற்ற பாகங்களுக்குங்கூட பொருந்துகிறது.

2அழுத்தத்திற்காக திரும்பத் திரும்பச் சொல்லுதலில் தேர்ச்சிபெற உங்களுக்கு உதவுவதற்கு, நாம் இரண்டு வித்தியாசமான அம்சங்களிலிருந்து காரியத்தைப் பார்க்கப்போகிறோம். ஒவ்வொன்றும் திரும்பத் திரும்பச் சொல்லுவதில் வித்தியாசமான வழிமுறையோடு தொடர்புடையதாய் இருக்கிறது. ஒவ்வொன்றும் வித்தியாசமான நோக்கத்தை குறிக்கோளாக கொண்டுள்ளது. பிரதான குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் நினைவாற்றலுக்கு ஓர் உபகரணமாக சேவிக்கிறது. புரிந்துகொள்ளப்படாத குறிப்புகளை திரும்பத் திரும்பச் சொல்லுவது புரிந்துகொள்வதில் உதவியாக இருக்கிறது.

3இந்தப் பண்பைச் சிந்திக்கையில் பேச்சு கொடுப்பது மாத்திரமல்ல, தயாரிப்பும்கூட அத்தியாவசியமாகும். என்ன கருத்துக்கள் திரும்பத் திரும்பச் சொல்லுதலைத் தேவைப்படுத்துகின்றன மற்றும் அவற்றை எப்போது திரும்பத் திரும்பச் சொல்லுவது மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதை நீங்கள் முன்கூட்டியே தீர்மானிப்பது அவசியமாகும்.

4பிரதான குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல். பிரதான குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுவது, வழக்கமாக ஏதாவது ஒரு வகை சுருக்கத்தின் மூலமாக செய்யப்படுகிறது. முக்கியமான இரண்டு வகைகளை நாம் கலந்தாலோசிப்போம், அவற்றை “முன்னேற்றமான” சுருக்கம், “முடிவான” சுருக்கம் என்றழைக்கலாம்.

5முன்னேற்றமான சுருக்கம் ஒவ்வொரு பிரதான குறிப்பின் இன்றியமையாத கூறுகளையும் அவை சிந்திக்கப்படும்போதே மறுபார்வை செய்வதை உட்படுத்துகிறது. அதற்கு முன்கூறப்பட்ட பிரதான குறிப்புகளின் இன்றியமையாத கூறுகளை அடுத்தடுத்துவரும் ஒவ்வொரு சுருக்கத்திலும் கவனத்துக்குக் கொண்டுவருவதை உட்படுத்துகிறது. இவ்விதமாக பேச்சின் நூலிழை எப்பொழுதும் இழுத்து இணைக்கப்படுகிறது.

6பேச்சின் முடிவில், முடிவான சுருக்கம், முன்னேற்றமான சுருக்கங்களோடு பயன்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அனைத்தையும் ஒன்றுசேர்க்கிறது, முழு பேச்சையும் ஒருசில சுருக்கமான கூற்றுகளில் மறுபார்வை செய்துவிட முடியும். மறுபார்வை செய்யப்படவிருக்கும் குறிப்புகளின் சரியான எண்ணிக்கையை எப்போதாவது குறிப்பிடுவது உதவியாக இருக்கும். இது நினைவாற்றலுக்கு மேலுமான உபகரணமாகும்.

7ஒரு சுருக்கமானது சுவையில்லாமல் திரும்பத் திரும்பச் சொல்வதாக அல்லது குறிப்புகள் அல்லது கருத்துக்களின் மறு அறிக்கையாக இருக்கவேண்டியதில்லை. அது பல்வேறு வழிகளில் செய்யப்படலாம்: உதாரணத்தின் மூலம், ஒரு வேதவசன உபயோகத்தின் மூலம், வித்தியாசமான ஒரு நோக்குநிலையிலிருந்து காரியத்தை அணுகுவதன் மூலம், ஒப்புமைகள் அல்லது வேறுபாடுகள் மூலம், இணைப்பொருத்தங்களை விளக்கிவுரைப்பதன் மூலம், ஒரு பொருள் குறித்த பல சொற்கள் அல்லது கேள்விகளைப் பயன்படுத்துவதன் மூலம். ஒரு பொதுப் பேச்சின் மிகவும் நடைமுறைக்கேற்ற ஒரு சுருக்கத்தைக் காட்ட, அடிப்படை வேதவசனங்களையும் பேச்சின் முக்கிய விவாதங்களையும் பயன்படுத்தி ஒரு சுருக்கமான, ஐந்து நிமிட பகுதியாக இருக்கலாம். இது ஏறக்குறைய அனைவருமே எடுத்துச்சென்று பயன்படுத்தக்கூடிய ஏதோ ஒன்றாக, முழு பேச்சும் ஒரு மாத்திரையின் பொதியுறை வடிவில் இருக்கிறது.

8சுருக்க வகையில் திரும்பத் திரும்பச் சொல்வது விசேஷமாக நியாயவாதத்தையும் தர்க்கத்தையும் உட்படுத்தும் பேச்சுக்களின் சம்பந்தமாக பிரயோஜனமாயிருக்கிறது, கலந்துரையாடலுக்கும் சுருக்கமான மறுபார்வைக்கும் இடையேயுள்ள காலக்கடப்பு கேட்போரின் மனங்களில் எண்ணங்களை அதிக ஆழமாக பதியவைப்பதற்கு உதவுகிறது. இருப்பினும், ஒரு குறிப்பைச் சுருக்கமாக தொகுத்துரைப்பது எப்போதும் அவசியமில்லை. விரிவாக்கப்படவிருக்கும் மற்றொரு குறிப்புக்கு பலன்தரத்தக்க ஓர் அஸ்திவாரமாக பின்னால் அது அநேகமாக வெறுமனே மீண்டும் எடுத்துரைக்கப்படலாம்.

9பிரதான குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்கு மற்றொரு வழி, பேச்சின் முன்னுரையில் அவற்றைச் சுருக்கமாக வருணித்துவிட்டு, பின்னர் பொருளுரையில் தொடர்ந்து இந்தக் குறிப்புகளை விளக்கமாக விரிவுபடுத்துவதாகும். இந்தத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் மேலுமாக எண்ணங்களை மனதில் பதியவைத்துவிடுகிறது.

10பிரதான குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்கிருக்கும் இந்த வித்தியாசமான வழிகளைப் பழகிக்கொள்வதன் மூலம், ஒரு பேச்சை அக்கறையூட்டுவதாயும் அனுபவித்துக்களிக்க முடிவதாயும் செய்து, நினைவில் கொள்வதை எளிதாக்குவதற்கு அதிகத்தைச் செய்யமுடியும்.

11புரிந்துகொள்ளப்படாத குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல். புரிந்துகொள்ளுதலுக்காக ஒரு குறிப்பை திரும்பத் திரும்பச் சொல்லுவதா என்பது உங்கள் கேட்போர்மீதே ஏறக்குறைய முழுவதுமாகச் சார்ந்திருக்கிறது. அது ஓர் அத்தியாவசியமான குறிப்பாக இருந்து, மீண்டும் ஒருமுறை சொல்லப்படுவதைக் கேட்பதற்கு ஒரு வாய்ப்பில்லாமல் அவர்களுக்குத் தெளிவாக இராதென்றால் ஏதாவது ஒரு வகையில் அதை நீங்கள் மறுபடியுமாக சிந்திக்க வேண்டும் அல்லது உங்கள் கேட்போர் உடன்வராமல் உங்களுடைய பேச்சின் முடிவுக்கு வந்துவிடுவீர்கள். மறுபட்சத்தில், அழுத்தத்திற்காக பயன்படுத்தப்படாத தேவையற்ற திரும்பத் திரும்பச் சொல்லுதல் பேச்சைத் தேவைக்கு மேற்பட்ட சொற்கள் நிறைந்ததாயும் சுவையற்றதாயும் ஆக்கிவிடும்.

12பேச்சைத் தயாரிக்கையில் உங்கள் கேட்போரை மனதில் கொண்டிருங்கள். உங்கள் கேட்போர் கொண்டிருக்கக்கூடிய விசேஷமான பிரச்சினைகளைச் சிறிதளவு எதிர்பார்க்க இது உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும். அவை வித்தியாசமான நோக்குநிலைகளிலிருந்து காணப்படும்படி ஏதாவது ஒரு வகையில் இப்படிப்பட்ட கருத்துக்களை திரும்பத் திரும்பச் சொல்ல தயாரியுங்கள்.

13நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்கின்றனரா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? உங்கள் கேட்போரைப் பாருங்கள். அவர்களுடைய முகபாவனைகளைக் கவனியுங்கள், அல்லது ஓரிரண்டு பேரிடம் பேசிக்கொண்டிருந்தால், கேள்விகளைக் கேளுங்கள்.

14ஆனால் இதை நன்றாக கவனிக்கவும்: அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது எப்போதும் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றாது. போதிப்பதில் அதைவிட அதிகமிருக்கிறது. கேட்போர் முதல் தடவை உங்களை புரிந்துகொள்ளவில்லையென்றால், அதே வார்த்தைகளை மீண்டும் வெறுமனே சொல்வது உங்களை நன்றாகப் புரிந்துகொள்ள போதுமானதாக இருக்காது. அதைக்குறித்து நீங்கள் என்ன செய்யலாம்? நீங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் பேச்சுக்கு திட்டவட்டமான தயாரிப்பு இல்லாத சேர்ப்புகள் தேவைப்படலாம். கேட்போரின் தேவைகளைச் சமாளிக்க நீங்கள் கற்றுக்கொள்வது, ஒரு போதகராக உங்கள் பலன்தரத்தக்கத் தன்மையை பேரளவில் தீர்மானிப்பதாக இருக்கும்.

************

15சைகைகளும்கூட நீங்கள் சொல்வதற்கு அழுத்தத்தைக் கூட்டுகின்றன, அவை அநேகமாக பேசப்பட்ட வார்த்தையின் கருத்துக்கு வலுவூட்டுகின்றன. இவ்விதமாக கருத்துக்களை நிறைவுசெய்து அவற்றுக்கு உயிர் கொடுக்கின்றன. உண்மையில் ஏதோ ஒருவிதமான சைகைகள் இல்லாமல் எவருமே பேசுவது கிடையாது. ஆகவே, மேடையில் சைகைகளைச் செய்யவில்லையென்றால், உங்கள் கேட்போர் நீங்கள் தளர்ந்த நிலையில் இல்லை என்பதைத் தெரிந்துகொள்வர். ஆனால் இயற்கையாக நீங்கள் சைகைகளைச் செய்தால், கேட்போர் உங்களைப் பற்றி யோசிக்கமாட்டார்கள்; நீங்கள் சொல்வதைப் பற்றியே யோசிப்பார்கள். சைகைகள் உங்களுக்கு உற்சாகமூட்டுவதன் மூலம் உதவுகின்றன, உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி இவ்விதமாக அளிப்புக்கு உயிர்ப்பூட்டுகின்றன. அவை ஏதோவொரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கக்கூடாது. எவ்விதமாக புன்னகைப்பது அல்லது சிரிப்பது அல்லது கோபங்கொள்வது என்பதை நீங்கள் ஒருபோதும் படிக்கவில்லை, ஆகவே வேறு ஒருவரின் சைகைகளைப் பார்த்து பின்பற்ற தேவையில்லை. அவை எத்தனை அதிகமாக இயற்கையாகவும் தானாகவேயும் வருகின்றனவோ அத்தனை நல்லது. பேசப்பட்ட வார்த்தைக்கு உணர்ச்சியூட்டுவதில் முகபாவனைகள் சைகை செய்வதோடு இணைந்தே செல்கின்றன.

16சைகைகள் அவற்றினுடைய இயல்பின் சம்பந்தமாக பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படலாம்: விவரிப்பதற்காக சைகைகள் மற்றும் அழுத்தத்திற்காக சைகைகள்.

17விவரிப்பதற்காக சைகைகள். விவரிப்பதற்காக சைகைகள் செயலைத் தெரிவிக்கின்றன அல்லது பரிமாணம் மற்றும் இருப்பிடத்தைக் காண்பிக்கின்றன. இவையே கற்றுக்கொள்வதற்கு மிகவும் சுலபமானவையாகும். ஆகவே, மேடையில் சைகை செய்வதில் உங்களுக்குப் பிரச்சினையிருந்தால், எளிய, விவரிப்பதற்கான சைகைகளை முதலில் முயன்றுபாருங்கள்.

18பள்ளியில் நீங்கள் இந்தப் பண்பில் வேலைசெய்துகொண்டிருக்கும்போது, ஓரிரண்டு சைகைகளோடு திருப்தியடைந்துவிடாதீர்கள். பேச்சு முழுவதிலுமாக அடிக்கடி சைகை செய்ய முயன்றுபாருங்கள். இதைச் செய்வதற்கு, திசை, தூரம், அளவு, பரப்பளவு, வேகம், இருப்பிடம், வித்தியாசம், சம்பந்தப்பட்ட ஸ்தானங்கள் அல்லது ஒப்புமைக் காட்டும் வார்த்தைகளைக் கவனியுங்கள். தேவையானால், இந்த வார்த்தைகளை ஏதாவது ஒரு வகையில் உங்கள் குறிப்புகளில் குறித்து வையுங்கள். அந்த இடத்தில் சைகை செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு நினைப்பூட்டிக்கொள்ள அவ்விதமாகச் செய்யுங்கள். முதல் முறையே உங்களுக்கு “G” கிடைத்துவிட்டாலும்கூட இப்பழக்கத்தைத் தொடருங்கள். ஒருசில பேச்சுக்களுக்குப் பிறகு, உங்கள் சைகைகளைக் குறித்து வைப்பதோ முன்கூட்டியே அவற்றை யோசித்து வைப்பதோ இனிமேலும் உங்களுக்கு அவசியமில்லாமல், நீங்கள் இயற்கையாக சைகைசெய்வதைக் காண்பீர்கள்.

19அழுத்தத்திற்காக சைகைகள். அழுத்தத்திற்காக சைகைகள் உணர்ச்சியையும் உறுதியையும் தெரிவிக்கின்றன. அவை கருத்துக்களுக்கு இடையிடையே நிறுத்தக் குறிகளைப் போட்டு, உயிர்ப்பூட்டி அவற்றுக்கு வலுவூட்டுகின்றன. ஆகவே அழுத்தத்திற்காக சைகைகள் இன்றியமையாததாகும். ஆனால் எச்சரிக்கையாயிருங்கள்! அழுத்தத்திற்காக சைகைகள் பொதுவாக இயற்கைப் பழக்கங்களாக மாறிவிடும் வகையானவையாகும். இதைத் தடுப்பதற்கு, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சைகைகளைச் செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

20சைகை செய்வதில் இயற்கைப் பழக்கங்கள் உங்களுக்குப் பிரச்சினையாக இருக்குமானால், ஒரு காலப்பகுதிக்கு விவரிப்பதற்கான சைகைகளுக்கு மாத்திரமே உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வகையான சைகைகளில் நீங்கள் திறமைசாலியாகிவிட்டால், அழுத்தத்திற்கான சைகைகள் இயற்கையாகவே வந்துவிட வேண்டும். நீங்கள் அனுபவம் பெற்று மேடையில் அதிக செளகரியமாக உணரும்போது, உங்கள் திடநம்பிக்கையையும் நேர்மையையும் காட்டும் வகையில் அழுத்தத்திற்கான சைகைகள் உங்கள் உள்ளான உணர்ச்சிகளை இயற்கையாகவே தெரிவிக்கும். அவை உங்கள் பேச்சுக்கு அர்த்தத்தைச் சேர்க்கும்.

[கேள்விகள்]

1-3. திரும்பத் திரும்பச் சொல்வது ஏன் போதிக்கும் நுணுக்கத்தில் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது?

4-6. பிரதான குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்கு “முன்னேற்றமான” சுருக்கமும் “முடிவான” சுருக்கமும் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை விளக்கவும்.

7-10. குறிப்புகளைச் சுருக்க வகையில் திரும்பத் திரும்பச் சொல்வது எவ்விதமாக அக்கறையூட்டும் வகையில் விரிவுபடுத்தப்படலாம்?

11-14. புரிந்துகொள்ளப்படாத குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதில் என்ன முக்கிய காரணக்கூறுகள் உட்பட்டிருக்கின்றன?

15-18. ஒருவர் எவ்விதமாக விவரிப்பதற்கான சைகைகளைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம்?

19, 20. அழுத்தத்திற்காக சைகைகள் என்ன நோக்கத்தைச் சேவிக்கின்றன?