வெளி ஊழியத்துக்கு ஏற்ப பொருளை அமைத்தல்
படிப்பு 35
வெளி ஊழியத்துக்கு ஏற்ப பொருளை அமைத்தல்
1இன்று கிறிஸ்தவ ஊழியர்களாக நம்முடைய வேலையின் பெரும்பகுதி பைபிளைப்பற்றி அதிகம் அறிந்திராத ஆட்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதையும் போதிப்பதையும் உட்படுத்துகிறது. அவர்களில் ஒருபோதும் பைபிளைச் சொந்தமாக வைத்திராதவர்கள் சிலர் இருக்கின்றனர். மற்றவர்கள் ஒரு பிரதியை வெறுமனே நிலையடுக்கில் வைத்திருக்கின்றனர். நாம் சொல்லுகிறவற்றிலிருந்து அவர்கள் முழுமையாகப் பயனடைய வேண்டுமென்றால், நாம் அவர்களுடைய சூழ்நிலைகளுக்கேற்ப அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. நாம் செய்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதல்ல, ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழிநடையில் அதை வெளிப்படுத்துவதற்கு விசேஷித்த முயற்சி எடுக்கிறோம். உண்மையில், நம்முடைய பொருளை இவ்விதமாக மாற்றியமைக்க அழைக்கப்படுவது, நாம்தாமே அதை எவ்வளவு முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு ஒரு சோதனையாகும்.
2மாற்றி அமைத்தல் என்பது புதிய நிலைமைகளுக்குத் திருத்தி அமைத்தலை, இணக்குவித்துச் சரிசெய்வதை அர்த்தப்படுத்துகிறது. எதையோ ஒன்றை ஒருவருடைய சொந்த அல்லது மற்றொருவரின் திருப்திக்கு ஏற்ப ஒப்புரவாக்குதலை அர்த்தப்படுத்துகிறது. வெளி ஊழியத்துக்கு ஏற்ப பொருளை அமைத்தல் என்ற விஷயத்தைச் சிந்திப்பது, வெளி ஊழியத்தில் அல்லது வேறு ஒரு பேச்சில் அளிப்புகளைக் குறிப்பிட்ட கேட்போருக்கும் குறிப்பாக வெளி ஊழியத்தில் சந்திக்கும் புதிதாக அக்கறைகாட்டும் ஆட்களுக்கு எளிதாகவும் புரிந்துகொள்ளும்விதமாகவும் செய்வதற்குரிய தேவையை வலியுறுத்த வேண்டும். ஆகவே, பள்ளியில் இந்தப் பண்பில் வேலைசெய்கையில், உங்கள் கேட்போரை வீட்டுக்கு வீடு சாட்சிகொடுக்கையில் சந்திக்கும் ஆட்களைப் போலவே நீங்கள் எப்போதும் நோக்க வேண்டும்.
3இந்தப் பண்பில் நீங்கள் வேலைசெய்துகொண்டிருக்கையில் உங்கள் பேச்சு வீட்டுக்கு வீடு அளிப்பின் வடிவை ஏற்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. பள்ளிக்காக தற்போது உபயோகத்திலுள்ள அறிவுரைகளில் வருணிக்கப்பட்டிருக்கும் அதேவிதமாகவே அளிப்பில் எல்லா பேச்சுக்களும் இருக்கும். நீங்கள் என்ன வகையான அளிப்பைச் செய்தாலும், விரிவாக்கும் விவாதங்களும் பயன்படுத்தும் மொழிநடையும் வெளி ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் நீங்கள் பயன்படுத்தும் வகையானதாகவே இருக்கும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. நம்முடைய அதிகளவான பேச்சு வெளி ஊழியத்தில் செய்யப்படுவதால், வெளி ஊழியத்தில் சந்திக்கும் பெரும்பாலான ஆட்கள் புரிந்துகொள்ளக்கூடிய அளவில், எளிமையாகப் பேசவேண்டிய அவசியத்தை உணரும்படியாக இது உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும். இந்தப் பண்பில் ஓரளவு தயாரிப்பை நீங்கள் படிப்பு 21-ல் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது அதனுடைய குறிப்பிடத்தக்க தேவை மற்றும் முக்கியத்துவத்தின் காரணமாக தனியாக இது கையாளப்படவிருக்கிறது.
4சொற்றொடர்கள் பொதுமக்கள் புரிந்துகொள்ளும்படி செய்யப்படுதல். நம்முடைய சகோதரர்களில் சிலர் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் புதிய படிப்புகளிலும் பயன்படுத்தும் சொற்களினால் இந்தப் பண்புக்கான தேவை
காண்பிக்கப்படுகிறது. வேதாகமத்தைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதல் பொதுவாக அறியப்பட்டிராத சொற்களின் தொகுப்பை நமக்கு அளித்திருக்கிறது. “மீதியானோர்,” “வேறே ஆடுகள்” போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். இவற்றை நம்முடைய பேச்சில் பயன்படுத்துவோமானால், வெளி ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களுக்கு பொதுவாக எந்த அர்த்தத்தையும் அவை எடுத்துச்செல்வதில்லை. அவை புரிந்துகொள்ளப்படுவதற்குப் பொருத்தமான அதே பொருளுடைய சொற்களால் அல்லது விளக்கத்தினால் தெளிவுபடுத்தப்பட வேண்டும். “அர்மகெதோன்” மற்றும் “ராஜ்ய ஸ்தாபனம்” போன்றவற்றைக் குறிப்பிடுவதும்கூட அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஓரளவு விளக்கமில்லாமல் எந்த அர்த்தத்தையும் எடுத்துச்செல்வதில்லை.5இந்த அம்சத்தைச் சிந்திப்பதில், பைபிள் சத்தியத்தைப் பற்றி அறியாத ஒரு நபர் அந்தக் குறிப்பை அல்லது சொல்லை புரிந்துகொள்வாரா என்பதாக உங்கள் ஆலோசகர் தன்னையே கேட்டுக்கொள்வார். இப்படிப்பட்ட தேவாட்சிக்குட்பட்ட பதங்களைப் பயன்படுத்துவதிலிருந்து அவர் அவசியமாகவே உங்களைத் தடை செய்யமாட்டார். அவை நம்முடைய சொற்தொகுப்பின் பாகமாக இருக்கின்றன, புதிதாக அக்கறை காட்டும் ஆட்கள் அவற்றில் பழக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் இந்தப் பதங்களில் எதையாகிலும் நீங்கள் பயன்படுத்தினால், அவை விளக்கப்படுகின்றனவா என்பதை அவர் கவனிப்பார்.
6பொருத்தமான குறிப்புகள் தெரிந்தெடுக்கப்படுதல். பேச்சு அமைப்பைப் பொருத்து, நீங்கள் பயன்படுத்தும் பதங்கள் வித்தியாசப்படுவது போலவே வெளி ஊழியத்தில் அளிக்க நீங்கள் தெரிந்தெடுக்கும் கருத்துக்களும் வித்தியாசப்படும். அது ஏனென்றால் புதிதாக அக்கறைக்காட்டும் ஒரு நபரிடம் நாம் கலந்துரையாட தெரிந்துகொள்ளாத சில காரியங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைகளில் பொருளைத் தெரிவுசெய்வது முற்றிலும் உங்களிடமே விடப்படுகிறது. ஆனால் பள்ளியில் உங்களுக்கு ஒரு நியமிப்பு கொடுக்கப்படுகையில், நீங்கள் பேசவேண்டிய பொருள் உங்களுக்காக ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நியமிப்பில் அடங்கியிருப்பதிலிருந்து மட்டுமே உங்களால் தெரிவுசெய்ய முடியும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
7முதலாவதாக, பயன்படுத்தக்கூடிய குறிப்புகளில் நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பொருத்தமான குறிப்புகளை அதிகளவில் தெரிந்துகொள்வதை அனுமதிக்கும் ஒரு பேச்சு அமைப்பை உங்கள் பேச்சுக்கு நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் தெரிந்துகொள்ளும் குறிப்புகளிலும் அவை எவ்வாறு உங்கள் பேச்சின் சூழ்நிலைகளுக்குப் பொருந்துகிறது என்பதிலுமே உங்கள் ஆலோசகர் அக்கறையுள்ளவராக இருப்பார். இது ஏனென்றால் கவனிக்கப்படும் இந்தப் பண்பில், வெளி ஊழியத்தின் வித்தியாசமான அம்சங்கள் வித்தியாச வகையான பொருள்களைத் தேவைப்படுத்துகின்றன என்பதை நீங்கள் காண்பிக்கிறீர்கள். உதாரணமாக, புதிதாக அக்கறை காட்டும் நபரை ஒரு கூட்டத்துக்கு அழைக்கையில் பயன்படுத்தும் அதே பொருளை வீட்டுக்கு வீடு அளிப்பைச் செய்கையில் நீங்கள் பயன்படுத்தமாட்டீர்கள். ஆகவே, உங்கள் நியமிப்பு ஒரு வீட்டுக்காரரோடு கலந்துரையாடலையோ வழக்கமான மேடை பேச்சையோ தேவைப்படுத்தினாலும்சரி, நீங்கள் சொல்லும் காரியங்களினாலும் நியமிக்கப்பட்ட பொருளிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்புகளினாலும் குறிப்பிட்ட கேட்போரை அடையாளங்காணச் செய்யுங்கள்.
8குறிப்புகள் பொருத்தமானவையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு, உங்கள் ஆலோசகர் பேச்சின் நோக்கத்தை கவனத்தில் கொள்வார். ஒரு வீட்டுக்கு வீடு சந்திப்பில், கற்பிப்பதும் அதிகமாக படிப்பதற்கு வீட்டுக்காரரை ஊக்குவிப்பதுமே பொதுவாக உங்கள் நோக்கமாக இருக்கிறது. ஒரு மறுசந்திப்பில், உங்கள் நோக்கம் அக்கறையை வளர்ப்பதும், கூடுமானால், ஒரு வீட்டு பைபிள் படிப்பைத் துவங்குவதுமே ஆகும். ஒரு படிப்பைத் தொடர்ந்து செய்யப்படும் ஓர் அளிப்பாக அது இருக்குமானால், அப்பொழுது வீட்டுக்காரரை ஒரு கூட்டத்துக்கு வரச்செய்வது அல்லது வெளி ஊழியத்தில் ஈடுபடச்செய்வது போன்றவையாக இருக்கும்.
9நிச்சயமாகவே, ஊழியத்தின் ஒரே அம்சத்திலும்கூட, உங்கள் கேட்போர் நிமித்தமாக நீங்கள் தெரிவுசெய்யும் குறிப்புகள் வித்தியாசப்படலாம். ஆகவே இதுவும்கூட கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உங்களுக்கு நியமிக்கப்பட்ட பொருளில் உங்கள் நோக்கத்துக்குப் பொருத்தமாயிராத அந்தக் குறிப்புகள் பேச்சில் கொண்டுவரப்படக்கூடாது.
10இந்தக் காரியங்களை முன்னிட்டுப் பார்க்கையில், பேச்சைத் தயாரிப்பதற்கு முன்பு பேச்சு அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: நான் எதைச் சாதிக்க விரும்புகிறேன்? இந்த நோக்கத்தை நிறைவேற்ற தேவைப்படும் குறிப்புகள் யாவை, மேலும் பேச்சின் சூழமைவுகளுக்குப் பொருத்தமாக இருக்கும் பொருட்டு இந்தக் குறிப்புகள் எவ்வாறு திருத்தி அமைக்கப்பட வேண்டும்? இந்தக் காரியங்களை நீங்கள் தீர்மானித்துவிட்டீர்களானால், கஷ்டமில்லாமல் பொருத்தமான குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளி ஊழியத்துக்கு ஏற்ப பொருளை மாற்றி அமைத்து அளிக்கலாம்.
11பொருளின் நடைமுறைப் பயன் உயர்த்திக்காட்டப்படுதல். பொருளின் நடைமுறைப் பயனை உயர்த்திக்காட்டுதல் என்பது, வீட்டுக்காரருக்கு அது அவருக்குச் சம்பந்தப்பட்ட, தேவையான அல்லது பயன்படுத்தக்கூடிய ஏதோவொன்று என்பதைத் தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமில்லாமலும் காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. பேச்சின் ஆரம்பத்திலிருந்தே, வீட்டுக்காரர் “இது என்னை உட்படுத்துகிறது” என்பதாக உணர வேண்டும். கேட்போரின் கவனத்தைப் பெற இது அவசியமாகும். ஆனால், அந்தக் கவனத்தை பிடித்து வைக்க, பேச்சு முழுவதிலுமாக விடாது அதேவிதமாக பொருள் தனிப்பட்ட வகையில் தொடர்ந்து பொருத்தப்படுவது அவசியமாகும்.
12இது கேட்போருடன் தொடர்பு மற்றும் நியாயமாக சிந்திக்க உங்கள் கேட்போருக்கு உதவுவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. இப்பொழுது நீங்கள் அதிக தூரம்சென்று பொருளின் பொருத்தத்துக்குள் உண்மையில் உங்கள் வீட்டுக்காரரைப் பொருத்த வேண்டும். வெளி ஊழியத்தில் நம்முடைய நோக்கமானது கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை மக்களுக்குப் போதித்து இரட்சிப்பின் வழியை கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்வதாகும். ஆகவே, சாதுரியத்தோடும் கரிசனையோடும், நீங்கள் சொல்லவிருப்பவற்றுக்கு அவர் செவிசாய்த்து அதன்பேரில் செயல்படுவதால் அவருக்கு கிடைக்கும் நடைமுறையான நன்மைகளை உங்கள் வீட்டுக்காரருக்குக் காண்பிக்க வேண்டும்.
13பண்பின் இந்த அம்சம் கடைசியாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது குறைந்தபட்ச முக்கியத்துவமுடையது என்பதால் அல்ல. இது ஓர் அத்தியாவசியமான குறிப்பாகும், இது ஒருபோதும் அசட்டைசெய்யப்படக்கூடாது. அதில் வேலைசெய்யுங்கள், ஏனென்றால் அது வெளி ஊழியத்தில் முக்கியமாகும்.
நீங்கள் சொல்வது வீட்டுக்காரருக்கு அவருடைய சொந்த வாழ்க்கையில் ஓரளவு பயனுள்ளதாய் இருக்குமென்பதாக அவரால் தெளிவாக காணமுடிந்தாலொழிய எந்த ஒரு காலமளவும் அவருடைய கவனத்தைப் பிடித்து வைப்பது உங்களுக்கு அரிதாக இருக்கும்.[கேள்விகள்]
1-3. நம்முடைய பொருளை வெளி ஊழியத்துக்கு ஏற்ப அமைக்க கற்றுக்கொள்வது ஏன் பிரயோஜனமுள்ளது?
4, 5. நம்முடைய சொற்களை ஏன் பொதுமக்கள் புரிந்துகொள்ளும்படிச் செய்ய வேண்டும் என்பதை விளக்குங்கள்.
6-8. நம்முடைய பேச்சுக்களைத் தயாரிக்கையில், பொருத்தமான குறிப்புகளைத் தேர்ந்தெடுக்க நாம் ஏன் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
9, 10. நாம் தெரிந்துகொண்ட குறிப்புகள் பொருத்தமானவையா என்பதை எவ்வாறு தீர்மானிக்கலாம்?
11-13. நாம் அளித்திருக்கும் பொருளின் நடைமுறைப் பயனை சுட்டிக்காட்டுவது ஏன் முக்கியமாக இருக்கிறது?