Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேதவசனங்களை வாசிப்பதும் பொருத்துவதும்

வேதவசனங்களை வாசிப்பதும் பொருத்துவதும்

படிப்பு 25

வேதவசனங்களை வாசிப்பதும் பொருத்துவதும்

1தனிப்பட்ட விதத்திலோ பொதுமேடையிலிருந்தோ நீங்கள் மற்றவர்களிடம் கடவுளுடைய நோக்கங்களைப்பற்றி பேசும்போது, உங்களுடைய கலந்துரையாடல் பைபிளிலிருந்து வாசிக்கும் வேதவசனங்களைச் சுற்றி அமைகிறது. எனவே வேதவசனங்களை உண்மையில் வாசிப்பது கட்டாயமாக நன்றாய்ச் செய்யப்பட வேண்டும். அது எழுச்சியற்ற விதத்தில் செய்யப்படக்கூடாது. மாறாக, வாசிப்பு அதனுடைய நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமானால், அது உங்கள் அளிப்புக்கு மேலுமான தூண்டுதலைக் கொண்டுவர வேண்டும். இந்தக் காரணத்துக்காக திறம்பட்ட ஊழியராக விரும்பும் ஒவ்வொருவராலும் விசேஷித்த வகையில் கவனிக்கப்பட வேண்டியதென்று, “வேதவசனங்களை அழுத்தத்துடன் வாசித்தல்” என்பதை பேச்சு ஆலோசனைத் தாள் பட்டியலிடுகிறது.

2வேதவசனங்கள் உணர்ச்சியுடன் வாசிக்கப்பட வேண்டும், ஆனால் இது அளவிற்கதிகமாகச் செய்யப்படக்கூடாது. வசனத்துக்குக் கொடுக்கப்படும் உணர்ச்சியின் அளவு, அந்த வசனத்தையும் அதன் பேச்சு அமைப்பையும் சார்ந்திருக்கும். அது விவாதத்தை உச்சக்கட்டத்துக்குக் கொண்டுவர வேண்டும், ஆனால் வாசிப்புக்கு கவனத்தை இழுக்கக்கூடாது.

3மேலுமாக வாசிப்பு, உங்களுடைய விவாதத்தை நிலைநிறுத்தும் வசனத்தின் பாகத்துக்கு கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். கேட்போரை நம்பவைக்கும் விதத்தில் அது மனதில் பதியக்கூடியதாக இருக்க வேண்டும். இவ்விதமாக, வேதவசனங்களைச் சரியான அழுத்தத்துடன் வாசிப்பது நம்பிக்கையை புகட்டுகிறது. அது வாசிப்பை அதிகாரமுள்ளதாக்குகிறது.

4சரியான வார்த்தைகளுக்கு அழுத்தம். ஒரு வசனம் எதற்காக வாசிக்கப்படுகிறது என்பது, என்ன அழுத்தப்படப்போகிறது என்பதைக் கட்டுப்படுத்துகிறது. வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் எல்லா எண்ணங்களும் சமமாக அழுத்தப்பட்டால், எதுவுமே மேலெழுந்து நிற்காது, உங்களுடைய விவாதத்தின் குறிப்பும் இழக்கப்பட்டுவிடும். ஆகவே, எந்த எண்ணத்துக்காக அந்த வசனம் உபயோகிக்கப்படுகிறதோ, அந்த எண்ணத்தைக் கொடுக்கும் வார்த்தைகள் முதன்மையாக அழுத்தம் பெறுவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

5உதாரணமாக, பாவம் நித்திய வாதனைக்கல்ல, மரணத்துக்கே வழிநடத்துகிறது என்று நிரூபிக்க எசேக்கியேல் 18:4-ஐ பயன்படுத்தினால் அதை நீங்கள் இவ்விதமாக வாசிப்பீர்கள்: “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.” தடித்த எழுத்துக்களில் உள்ள வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து. ஆனால் நீங்கள் குறிப்பிட விரும்பும் குறிப்பு, வெறுமனே அந்த உடலல்ல, உண்மையில் அந்த ஆத்துமாவே சாகிறது என்பதாக இருந்தால், அழுத்தத்தை இடம் மாற்றி வாசிப்பீர்கள்: “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.” நீங்கள் அழுத்தத்தை எங்கே கொடுக்கிறீர்கள் என்பது அந்த வசனத்தை என்ன காரணத்துக்காக வாசிக்கிறீர்கள் என்பதால் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

6அழுத்தத்தின் பலன்தரத்தக்க முறையைப் பயன்படுத்துதல். மேலெழுந்து நிற்க வேண்டுமென்று நீங்கள் விரும்பும் கருத்தை எடுத்துச்செல்லும் வார்த்தைகளை அநேக விதங்களில் அழுத்திக்காட்டலாம். நீங்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் வேதவசனத்துடனும் பேச்சின் அமைப்புடனும் ஒத்திருக்க வேண்டும்.

7“வசனங்களை அழுத்தத்துடன் வாசித்தல்” என்ற பண்பின் இந்த அம்சம் வாய்மொழி அழுத்தத்தின் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டில்லை. கருத்து அழுத்தம் பற்றி நீங்கள் படிக்கும்போது இதன் விளக்கங்களை முழுமையாக கையாளுவீர்கள். ஆனால் வேதவசனங்களைப் பலன்தரத்தக்கவிதமாக வாசிக்கும் திறமையை முயன்று பெற உங்களுக்கு உதவியாக சில வழிகள் இங்கே வரிசையாகத் தரப்படுகின்றன.

8குரல் அழுத்தம். இது குரலில் எந்த மாற்றத்தையும் உட்படுத்துகிறது. கருத்தை எடுத்துச்செல்லும் வார்த்தைகள் வாக்கியத்தின் மற்ற பகுதிகளிலிருந்து மேலோங்கி நிற்பதற்காக குரல் தொனியின் செறிவிலோ வேகத்திலோ வலிமையிலோ மாற்றம் செய்தல்.

9நிறுத்தம். உங்கள் வசனத்தின் முக்கிய பாகத்தின் முன்போ பின்போ அல்லது இரண்டு இடத்திலுமே இது செய்யப்படலாம். முக்கியமான ஒரு கருத்துக்கு முன்பாக நிறுத்தம் செய்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது; பின்னால் நிறுத்துவது ஏற்படுத்திய பாதிப்பை ஆழப்பதிய வைக்கிறது.

10திரும்பச் சொல்லுதல். உங்களை இடையிலே நிறுத்தி, ஒரு சொல்லையோ சொற்றொடரையோ திரும்ப வாசிப்பதால் விசேஷமான ஒரு குறிப்பின்பேரில் அழுத்தத்தைக் காட்ட முடியும். இந்த முறை விவேகத்துடன் கையாளப்பட வேண்டும்.

11சைகைகள். ஒரு சொல்லை அல்லது சொற்றொடரை நிறுத்திக்காட்ட, உடல் அசைவு மற்றும் முகபாவனை அநேக சமயங்களில் உதவிசெய்யக்கூடும்.

12குரலின் தொனி. சில சமயங்களில் வார்த்தைகள் வாசிக்கப்படும் தொனி அவற்றின் அர்த்தத்தைப் பாதித்து, அவற்றைத் தனிப்படுத்தும், ஆனால் இங்கும்கூட, முக்கியமாக வசையாக உபயோகிக்கும்போது விவேகம் காண்பிக்கப்பட வேண்டும்.

13வீட்டுக்காரர் வாசிக்கும் வசனங்கள். ஒரு வீட்டுக்காரர் ஒரு வசனத்தை வாசிக்கும்போது, அவர் தவறான வார்த்தைகளை அழுத்திவிடலாம் அல்லது ஒன்றையும் அழுத்தாமலிருக்கலாம். அப்பொழுது நீங்கள் என்ன செய்யக்கூடும்? பொதுவாக இப்படிப்பட்ட ஒரு சமயத்தில் நீங்கள் அழுத்திக்கூற விரும்பும் குறிப்புகளுக்காக வசனத்தின் பொருத்தத்தைக் கூற நாடுவது மிகச் சிறந்ததாகும். வாசிப்பு முடிந்தவுடன் அந்த வார்த்தைகளை மறுபடியும் சொல்வதன் மூலமாக அல்லது கேள்விகள் கேட்பதன் மூலமாக நீங்கள் வீட்டுக்காரரின் கவனத்தை இழுக்கலாம்.

14இது வேறு ஒரு விதத்திலும் கையாளப்படலாம். ஆனால் அது எச்சரிப்பையும் சாதுரியத்தையும் தேவைப்படுத்துகிறது. நீங்கள் சரியான குறிப்பில் வாசிப்பைத் தடுத்து, அதற்காக மன்னிப்பைக் கேட்டுக்கொண்டு, பின்பு அழுத்திக்காட்ட விரும்பும், வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சொல் அல்லது சொற்றொடருக்குக் கவனத்தை இழுக்கலாம். வீட்டுக்காரரைச் சங்கடமான நிலையில் வைக்காமல் அல்லது வெறுப்பை ஏற்படுத்தாமல் இது செய்யப்படக்கூடுமென்றால் பலன்தரத்தக்கதாக இருக்கும், ஆனால் இது மிகக் குறைவாகவே செய்யப்பட வேண்டும்.

*************

15வசனத்தை அழுத்தத்துடன் வாசிப்பதும்கூட, பொதுவாக உங்களுடைய நோக்கத்தை நிறைவேற்ற போதுமானதல்ல. உங்களுடைய விவாதத்தில் பொருத்த நீங்கள் நினைத்த எண்ணத்தை, சில சமயங்களில் வசனமே கொண்டுவந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் அநேக சமயங்களில் வசனத்திலுள்ள எண்ணத்தை எடுத்துச்செல்லும் வார்த்தைகளுக்கு மறுபடியும் கவனத்தை இழுத்து, பின்பு அது விவாதத்துக்கு எப்படிப் பொருந்துகிறது என்று காட்டுவது அவசியமாயிருக்கும். இதைத்தான் பேச்சு ஆலோசனைத் தாள், “வேதவசனத்தின் பொருத்தத்தைத் தெளிவாக்குதல்” என்று குறிப்பிடுகிறது. ஒரு சராசரி நபர் பைபிளோடு பரிச்சயமில்லாதவராக இருக்கிறார், ஒரே வாசிப்பில் உங்களுடைய குறிப்பை கிரகித்துக்கொள்ள இயலாதவர் என்பதை நினைவில் வையுங்கள். முக்கிய வார்த்தைகளை திரும்ப அழுத்திக் காட்டிப் பொருத்துவது கருத்துக்கள் ஆழப்பதிவதை அனுமதிக்கிறது.

16ஒரு வசனத்தைப் பொருத்துவது உங்களுக்கு சாத்தியமாக இருக்க வேண்டுமென்றால், அது உங்கள் விவாதத்துக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும், மேலும் பொதுவாக, அது சரியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பின்பு, போதிப்பதை மனதில் கொண்டவராக, உங்களுடைய பொருத்தத்தை முடிந்தவரையில் எளிமையாக்க வேண்டும்.

17மேலுமாக, வசனத்தின் தெளிவான புரிந்துகொள்ளுதல் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களுடைய பொருத்தம் திருத்தமாக இருக்க வேண்டும். வேதவசனத்தின் உங்கள் உபயோகம் தேவைப்படுத்தினால், சூழமைவு, பயன்படுத்தப்பட்ட நியமங்கள் அல்லது உட்பட்டுள்ள நபர்களைக் கருத்தில் கொள்ளுங்கள். எழுதியவருடைய நோக்கத்துக்கு இசைவு இல்லாத விதத்தில் ஒருபோதும் வேதவசனத்தை உபயோகிக்காதீர்கள். பொருத்தத்தின்பேரில் சொஸைட்டியின் வெளியீடுகளை நெருங்க பின்பற்றுங்கள்.

18பொருத்தப்படவிருக்கும் வார்த்தைகள் தனிப்படுத்தப்படுதல். வசனத்தைப் பொருத்துவதற்கு முன்போ பொருத்தும்போதோ முக்கிய வார்த்தைகள் பொதுவாக திரும்ப அழுத்திக்காட்டப்படும். வசனத்தில், உங்களுடைய விவாதத்துக்குச் சம்பந்தப்படாத அனைத்துக் குறிப்புகளையும் தாழ்த்திக்காட்ட அல்லது இரண்டாவது முக்கியத்துவமுள்ளதாகக் காட்ட இது தேவையாயிருக்கிறது. பொதுவாக அவ்வாறே செய்யப்பட்டாலும்கூட இதைச் செய்வதற்காக வசனத்தில் காணப்படுகிற சரியான வார்த்தைகளே திரும்பச் சொல்லப்படவேண்டியதில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில், வேறு ஒரு வழியிலும்கூட சிந்திக்கப்படும் தனிப்படுத்தப்பட்ட எண்ணங்களின்மீது உங்கள் கேட்போர் கவனத்தை பலன்தரத்தக்கவிதமாக ஒருமுகப்படுத்த முடியும். உங்களுடைய கருத்தை மறுபடியும் சொல்லும்போது ஒத்த அர்த்தம் கொண்ட வார்த்தைகளை உபயோகிப்பது இதைச் செய்வதற்கு ஒரு வழியாகும். மற்றொரு வழி கேள்விகள் கேட்பதாகும். உங்களுடைய அளிப்பு ஒரு வீட்டுக்காரரை உட்படுத்தினால், மற்றவரிடமிருந்து முக்கிய எண்ணங்களைக் கொண்டுவரும் விதத்தில் உங்களுடைய கேள்விகள் அமைக்கப்படலாம்.

19அறிமுக குறிப்பு தெளிவாயிருத்தல். நீங்கள் வசனத்தை உபயோகிப்பதனுடைய நோக்கம் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டு, போற்றப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்வதையே இது அர்த்தப்படுத்துகிறது. ஒரு வசனத்துக்கு முறைப்படியான அறிமுகம் ஏதோவொரு காரணத்துக்காக அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கதாக இல்லை என்று நீங்கள் கண்டிருக்கலாம். அது வசனத்தின் குறிப்பு தெளிவாக்கப்பட வேண்டியதில்லை என்பதை அர்த்தப்படுத்தாது. ஆனால், ஒரு சட்டமாக, வசனம் வாசிக்கப்படுவதற்கு முன், உங்களுடைய விவாதத்துக்கு முன்கூட்டியே குறைந்தபட்சம் ஓரளவாவது தயாரித்திருக்கிறீர்கள். இப்பொழுது, வசனத்தின் உபயோகத்தை முழுமைப்படுத்த நீங்கள் அதைச் சற்றுப் பின்தொடர்ந்து விளக்க வேண்டும்.

20எந்த அளவுக்குப் பொருத்த வேண்டும் என்பதை உங்களுடைய கேட்போரும் அளிப்பின் மொத்தப் பொருளில் இந்தக் குறிப்பின் முக்கியத்துவமும் தீர்மானிக்கும். பொதுவாக வசனத்தை கலந்துரையாடுவது மட்டுமே போதாது. வசனத்தில் அழுத்தப்பட்ட எண்ணங்களை உங்களுடைய அறிமுக விவாதத்துடன் இணைக்க வேண்டும். அந்த இணைப்பு என்னவென்று நீங்கள் தெளிவாகக் கூற வேண்டும்.

21பொருத்தம் எளிமையாக இருந்தும், உங்கள் நோக்கம் நிறைவேறினால், அது சிறந்ததாக இருக்கும். அது தொடர்பற்ற எல்லா விளக்கங்களிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். இது கூடியவரை ஒருசில உண்மைகளைக் கொண்டு உங்கள் விவாதத்தைச் சுருக்கி அமைப்பதன் மூலமும், பின்பு புரிய வைப்பதற்கு எவை தேவையோ, அவற்றை மட்டும் கூட்டுவதன் மூலமும் செய்யப்படலாம். முன்னுரையில் ஏதாவது பதிலளிக்கப்படாமல் விடப்பட்டிருந்தால் உங்களுடைய பொருத்தம் அதை வழங்க வேண்டும்.

22பேச்சுப் பயிற்சி திட்டத்தினுடைய முன்னேற்றத்தின் இந்தக் கட்டத்தில், உங்களுடைய இலக்கு எளிமை மற்றும் நேரடியாகச் சொல்வதாக இருக்க வேண்டும். இதை நீங்கள் முயன்று அடையும்போது, வேதவசனங்களின் உங்கள் வாசிப்பும் பொருத்தமும் ஒரு திறம்பட்ட போதகரின் திறமையைப் பிரதிபலிக்கும்.

[கேள்விகள்]

1-3. பேச்சுக்களைக் கொடுக்கும்போது, நாம் எப்படி வேதவசனங்களை வாசிக்க வேண்டும்?

4, 5. “சரியான வார்த்தைகளுக்கு அழுத்தம்” என்பதன் பொருள் என்ன? விளக்கவும்.

6-12. ஒரு வசனத்தின் கருத்தை எடுத்துச்செல்லும் வார்த்தைகளை நாம் எவ்விதங்களில் அழுத்தலாம்?

13, 14. ஒரு வீட்டுக்காரர் வசனத்தை வாசிக்கும்போது நாம் எவ்விதம் அதன் முக்கிய குறிப்புகளை அழுத்தலாம்?

15-17. வேதவசனத்தின் பொருத்தத்தைத் தெளிவாக்குவது ஏன் முக்கியமானது?

18. பொருத்தப்படவிருக்கும் முக்கிய வார்த்தைகளை நாம் எப்படி பலன்தரத்தக்க விதமாக தனிப்படுத்தலாம்?

19-22. “அறிமுக குறிப்பு தெளிவாயிருத்தல்” என்பதன் மூலம் என்ன பின்தொடருதல் குறிப்பிடப்படுகிறது?