கடவுளிடம் நீங்கள் எவ்வாறு நெருங்கிவரலாம்
அதிகாரம் 16
கடவுளிடம் நீங்கள் எவ்வாறு நெருங்கிவரலாம்
ஒரு கிழக்கத்திய நாட்டுக்கு வந்திருந்த சுற்றுலா பயணி ஒருவர், ஒரு புத்தமத ஆலயத்தில் தான் கவனித்த மதசம்பந்தமான சடங்குகளைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். உருவங்கள் மரியாள் அல்லது கிறிஸ்துவினுடையதாக இல்லாவிட்டாலும், அநேக சடங்குகள் தன்னுடைய சொந்த தேசத்திலிருந்த சர்ச்சினுடைய சடங்குகளை ஒத்திருந்தன. உதாரணமாக, ஜெபமாலை பயன்படுத்தப்படுவதையும் ஜெபங்கள் ஓதப்படுவதையும் அவர் கவனித்தார். மற்றவர்களும்கூட இப்படி ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றனர். கிழக்கோ மேற்கோ, பக்தர்கள் கடவுளிடம் அல்லது தாங்கள் வழிபடுபவற்றிடம் நெருங்கிவர பயன்படுத்தும் முறைகள் குறிப்பிடத்தக்கவிதத்தில் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
2அநேகர் கடவுளிடமாக ஜெபிப்பதன் மூலமாக அவரிடம் நெருங்கிவர விசேஷமாக முயற்சிசெய்கின்றனர். ஜெபம் என்பது, “புனிதமான அல்லது பரிசுத்தமானதோடு—கடவுளோடு, கடவுட்களோடு, மனித எல்லைக்கு அப்பாற்பட்ட மண்டலத்தோடு அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளோடு—பேச்சுத்தொடர்பு கொள்ளும் ஒரு செயல்,” என்பதாக விளக்கப்பட்டிருக்கிறது. (தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா) என்றபோதிலும், கடவுளை ஜெபத்தில் அணுகும்போது, சிலர் அதிலிருந்து என்ன நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் மட்டுமே யோசிக்கிறார்கள். உதாரணமாக ஒரு சமயம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை ஒரு மனிதன் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் எனக்காக ஜெபித்தால், எனக்கு என்னுடைய வீட்டிலும், வேலை செய்யுமிடத்திலும், என்னுடைய உடல்நலத்திலுமுள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?” அந்த மனிதன் தீர்ந்துவிடும் என யோசித்தார், ஆனால் அநேகர் ஜெபிக்கின்றனர், தங்களுக்குப் பிரச்சினைகள் தொடர்ந்திருப்பதையும் காண்கின்றனர். ஆகவே, ‘நாம் ஏன் கடவுளிடம் நெருங்கி வரவேண்டும்?’ என்பதாக நாம் ஒருவேளை கேட்கலாம்.
ஏன் கடவுளிடம் நெருங்கிவர வேண்டும்
3ஜெபம் என்பது அர்த்தமற்ற ஒரு சடங்கும் இல்லை அல்லது வெறுமனே ஏதோவொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வழியும் இல்லை. கடவுளை அணுகுவதற்கு முக்கிய காரணம் அவரோடு ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதற்காகவே ஆகும். ஆகவே நம்முடைய ஜெபங்கள் யெகோவா தேவனிடமாகச் செய்யப்படவேண்டும். ‘தம்மை நோக்கிக்கூப்பிடுகிற யாவருக்கும் யெகோவா சமீபமாயிருக்கிறார்,’ என்பதாக சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னார். (சங்கீதம் 145:18, NW) யெகோவா தம்மோடு சமாதானமுள்ள ஒரு உறவுக்குள் வரும்படியாக நம்மை அழைக்கிறார். (ஏசாயா 1:18) இந்த அழைப்புக்குப் பிரதிபலிக்கிறவர்கள், “எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்,” என்று சங்கீதக்காரன் சொல்வதை ஒப்புக்கொள்கிறார்கள். ஏன்? ஏனென்றால் யெகோவா தேவனிடம் நெருங்கி வருபவர்கள் உண்மையான மகிழ்ச்சியையும் மன சமாதானத்தையும் அனுபவித்துக் களிப்பர்.—சங்கீதம் 73:28.
4‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே நமக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறாரென்றால்’ கடவுளிடம் ஏன் உதவிக்காக ஜெபிக்கவேண்டும்? (மத்தேயு 6:8; சங்கீதம் 139:4) நமக்குக் கடவுளில் விசுவாசம் இருக்கிறது என்பதையும் ‘நன்மையான எந்த ஈவுக்கும் பூரணமான எந்த வரத்துக்கும்’ அவரை ஊற்றுமூலராக நாம் கருதுவதையும் ஜெபம் காண்பிக்கிறது. (யாக்கோபு 1:17; எபிரெயர் 11:6) யெகோவா நம்முடைய ஜெபங்களில் பிரியப்படுகிறார். (நீதிமொழிகள் 15:8) ஒரு தகப்பன் தன்னுடைய இளம் பிள்ளை நன்றியறிதலான வார்த்தைகளை உண்மையான மனதுடன் பேசுவதைக் கேட்கையில் சந்தோஷப்படுவதைப் போலவே, போற்றுதலையும் துதியையும் வெளிப்படுத்தும் நம்முடைய அர்த்தமுள்ள வார்த்தைகளைக் கேட்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். (சங்கீதம் 119:108) ஒரு நல்ல தகப்பன்-பிள்ளை உறவு இருக்கையில், அங்கே கனிவுள்ள பேச்சுத்தொடர்பும் இருக்கிறது. நேசிக்கப்படும் ஒரு பிள்ளை தன்னுடைய தகப்பனிடம் பேச விரும்புகிறான். கடவுளோடுள்ள நம்முடைய உறவைப் பற்றியதிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. யெகோவாவைப் பற்றி நாம் கற்றறிவதையும் நமக்கு அவர் காண்பித்திருக்கும் அன்பையும் உண்மையில் மதித்துணர்ந்தால், ஜெபத்தில் நம் எண்ணங்களை அவருக்கு வெளிப்படுத்துவதற்கு நாம் பலமான ஆசையைக் கொண்டிருப்போம்.—1 யோவான் 4:16-18.
5மகா உன்னதமான கடவுளை அணுகும்போது, நாம் பயன்படுத்துகிற குறிப்பிட்ட வார்த்தைகளைக் குறித்து அளவுக்கு அதிகமாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், நாம் மரியாதையுள்ளவர்களாக எபிரெயர் 4:16) நாம் எப்பொழுதும் யெகோவாவை அணுகமுடியும். ஜெபத்தில் கடவுளிடம் ‘நம்முடைய இருதயத்தை ஊற்றமுடிவது,’ என்னே ஒரு சிலாக்கியம்! (சங்கீதம் 62:8) யெகோவாவுக்கான போற்றுதல், விசுவாசமுள்ள மனிதனாகிய ஆபிரகாம் கடவுளுடைய சிநேகிதனாக அவரோடு அனுபவித்ததைப் போன்ற ஒரு கனிவான உறவுக்கு வழிநடத்துகிறது. (யாக்கோபு 2:23) ஆனால் சர்வலோகத்தின் உன்னத அரசதிகாரமுள்ள ஆண்டவரிடம் ஜெபிக்கையில், அவரை அணுகுவதற்கு அவர் தேவைப்படுத்துபவற்றோடு நாம் இணக்கமாயிருக்க வேண்டும்.
இருக்கவேண்டும். (கடவுளிடமாக நெருங்கி வருவதற்கு தேவைப்படுபவை
6கடவுளை அணுகுவதற்கு பணம் அவசியமா? அநேக ஆட்கள் தங்களுக்காக ஜெபிப்பதற்கு பாதிரிமார்களுக்கு பணம் செலுத்துகிறார்கள். தாங்கள் செய்யும் நன்கொடையின் அளவுக்கு ஏற்ப தங்களுடைய ஜெபங்கள் கேட்கப்படும் என்பதாகக்கூட சிலர் நம்புகிறார்கள். என்றபோதிலும், ஜெபத்தில் யெகோவாவை அணுகுவதற்கு நாம் காணிக்கை பணம்செலுத்த வேண்டும் என்பதாக கடவுளுடைய வார்த்தை சொல்லுவது கிடையாது. அவருடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளும் ஜெபத்தில் அவரோடு கொண்டிருக்கும் உறவின் ஆசீர்வாதங்களும் செலவில்லாமல் கிடைக்கின்றன.—ஏசாயா 55:1, 2.
7அப்படியென்றால் என்ன தேவைப்படுகிறது? தேவைப்படும் ஒரு காரியம் சரியான இருதய நிலையாகும். (2 நாளாகமம் 6:29, 30; நீதிமொழிகள் 15:11) யெகோவா தேவன் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்றும் “அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவ”ரென்றும் நம்முடைய இருதயத்தில் நாம் விசுவாசிக்க வேண்டும். (சங்கீதம் 65:2; எபிரெயர் 11:6) நாம் மனத்தாழ்மையுள்ள ஒரு இருதயத்தையும்கூட கொண்டிருக்க வேண்டும். (2 இராஜாக்கள் 22:19; சங்கீதம் 51:17) இயேசு கிறிஸ்து, தம்முடைய உவமைகள் ஒன்றில், கடவுளை அணுகும்போது தாழ்மையான இருதய நிலையைக் கொண்டிருந்த ஒரு மனத்தாழ்மையுள்ள வரி வசூலிப்பவன் மேட்டிமையான ஒரு பரிசேயனைவிட அதிக நீதிமானாக நிரூபித்தான் என்பதாக காண்பித்தார். (லூக்கா 18:10-14) ஜெபத்தில் கடவுளை அணுகும்போது, “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்,” என்பதை நாம் நினைவில் வைப்போமாக.—நீதிமொழிகள் 16:5.
8நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்க வேண்டும் என்பதாக நாம் விரும்பினால், பாவமுள்ள நடத்தையிலிருந்து நம்மைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். சீஷனாகிய யாக்கோபு மற்றவர்களை கடவுளிடம் யாக்கோபு 4:8) தவறு செய்பவர்களும்கூட மனந்திரும்பி தங்களுடைய முந்தைய வாழ்க்கை முறையை விட்டுவிடும்போது யெகோவாவோடு சமாதானமுள்ள ஒரு உறவுக்குள் வரமுடியும். (நீதிமொழிகள் 28:13) நாம் நம்முடைய வழிகளைச் சுத்திகரித்துவிட்டது போல வெறுமனே பாசாங்கு செய்வோமானால் யெகோவா நமக்குச் செவிகொடுக்கமாட்டார். “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது,” என்பதாக கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது.—1 பேதுரு 3:12.
நெருங்கிவரும்படியாக உற்சாகப்படுத்தியபோது அவர் கூடுதலாக இவ்வாறு சொன்னார்: “பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.” (9பைபிள் சொல்கிறது: “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.” (பிரசங்கி 7:20) ‘அப்படியென்றால் நாம் யெகோவா தேவனை எவ்வாறு அணுக முடியும்?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். பைபிள் பதிலளிக்கிறது: “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” (1 யோவான் 2:1) நாம் பாவிகளாயிருந்தபோதிலும், மீட்கும் பொருளாக நமக்காக மரித்த இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் பேச்சு சுயாதீனத்தோடு கடவுளை அணுகமுடியும். (மத்தேயு 20:28) யெகோவா தேவனை நாம் அணுகுவதற்கு அவரே ஒரே வழிமூலமாக இருக்கிறார். (யோவான் 14:6) இயேசுவின் மீட்கும் பலியின் மதிப்பு நம்முடைய எல்லா பாவங்களையும் தானாகவே மூடிவிடும் என்பதாக ஊகித்துக்கொண்டு வழக்கமாக பாவத்தை வேண்டுமென்றே செய்துகொண்டிருக்கக்கூடாது. (எபிரெயர் 10:26) என்றபோதிலும், தீமையானதிலிருந்து விலகியிருக்க நம்மாலான அனைத்து முயற்சியும் செய்துவந்து, அப்படியிருந்தும் சில சமயங்களில் தவறு செய்வோமானால், நாம் மனந்திரும்பி கடவுளிடமாக மன்னிப்புக் கேட்கலாம். மனத்தாழ்மையான இருதயத்தோடு நாம் அவரை அணுகும்போது, அவர் நமக்கு செவிகொடுத்து கேட்பார்.—லூக்கா 11:4.
கடவுளிடம் பேசுவதற்கு சந்தர்ப்பங்கள்
10இயேசு கிறிஸ்து யெகோவாவோடு தம்முடைய உறவை மிக உயர்வாக மதித்தார். ஆகவே, தனிப்பட்ட ஜெபத்தில் கடவுளோடு பேசுவதற்கு அவர் நேரத்தை ஒதுக்கி வைத்தார். (மாற்கு 1:35; லூக்கா 22:40-46) நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒழுங்கான அடிப்படையில் கடவுளிடமாக ஜெபிப்பது நல்லது. (ரோமர் 12:12) ஒரு நாளை ஜெபத்தோடு ஆரம்பித்து, படுக்கைக்குச் செல்லுமுன் அந்நாளின் நடவடிக்கைகளுக்காக யெகோவாவுக்கு நன்றிசெலுத்துவது பொருத்தமானதாய் இருக்கிறது. ஒரு நாளின்போது, “எந்தச் சமயத்திலும்” கடவுளை அணுக தீர்மானமாயிருங்கள். (எபேசியர் 6:18) யெகோவாவால் கேட்க முடியும் என்பதை அறிந்தவர்களாய், நாம் நம்முடைய இருதயத்தில் மெளனமாகக்கூட ஜெபிக்கலாம். கடவுளிடம் தனிமையில் பேசுவது அவரோடு நம்முடைய உறவை உறுதியாக்க நமக்கு உதவிசெய்கிறது, தினந்தோறும் யெகோவாவிடம் ஜெபிப்பது அவரிடம் இன்னும் அதிகமாக நெருங்கிவர நமக்கு உதவிசெய்கிறது.
11மக்கள் தொகுதிகளின் சார்பாகச் செய்யப்படும் ஜெபங்களைக்கூட யெகோவா செவிகொடுத்துக் கேட்கிறார். (1 இராஜாக்கள் 8:22-53) குடும்பத்தின் தலைவன் ஜெபத்தில் தலைமைதாங்கும்போது, ஒரு குடும்பமாக நாம் கடவுளிடம் நெருங்கி வரலாம். இது குடும்பப் பிணைப்பை பலப்படுத்துகிறது, தங்களுடைய பெற்றோர் கடவுளிடம் மனத்தாழ்மையோடு ஜெபிப்பதைக் கேட்கும் இளம் பிள்ளைகளுக்கு யெகோவா உண்மையான ஒரு நபராக ஆகிறார். ஒரு தொகுதியை ஒருவர் பிரதிநிதித்துவம் செய்கையில், ஒருவேளை யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்தில், யாராவது ஒருவர் ஜெபிக்கையில் அப்போது என்ன? சபையாரில் நாம் இருந்தால், ஜெபத்தின் முடிவில் “அப்படியே ஆகட்டும்,” என்ற பொருளுடைய “ஆமென்” என்பதை நாம் முழு இருதயத்தோடும் சொல்லும்படி கவனமாக செவிகொடுத்துக் கேட்போமாக.—1 கொரிந்தியர் 14:16.
யெகோவா செவிகொடுத்துக் கேட்கும் ஜெபங்கள்
12கிறிஸ்துவின் மூலமாக அவரிடம் ஜெபித்தாலும்கூட கடவுள் தங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில்லை என்பதாக சிலர் நினைக்கக்கூடும். என்றபோதிலும், அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னார்: “நாம் எதையாகிலும் அவருடைய [கடவுளுடைய] சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறா[ர்].” (1 யோவான் 5:14) அப்படியென்றால் நாம் கடவுளுடைய சித்தத்தின்படி கேட்பது அவசியமாகும். நம்முடைய ஆவிக்குரிய நலனில் அவர் அக்கறையுள்ளவராக இருப்பதன் காரணமாக, நம்முடைய ஆவிக்குரிய தன்மையைப் பாதிக்கும் எதுவுமே ஜெபிப்பதற்கு பொருத்தமான விஷயமாக இருக்கிறது. முற்றிலும் சரீரப்பிரகாரமான தேவைகளின் பேரிலேயே கவனத்தை ஒருமுகப்படுத்தும் தூண்டுதலை நாம் எதிர்க்க வேண்டும். உதாரணமாக நோயை சமாளிப்பதற்கு உட்பார்வைக்காகவும் மனவலிமைக்காகவும் ஜெபிப்பது பொருத்தமாக இருந்தாலும், உடல்நலத்தைப் பற்றிய கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய அக்கறைகளை நெருக்கிவிடக்கூடாது. (சங்கீதம் 41:1-3) அளவுக்கு அதிகமாக தன்னுடைய உடல்நலத்தைப் பற்றி அக்கறையாய் இருப்பதை உணர்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண், தன்னுடைய நோயைக் குறித்து சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்க தனக்கு உதவுமாறு யெகோவாவிடம் கேட்டார். இதன் விளைவாக, அவருடைய உடல்நலப் பிரச்சினை மிகவும் சிறிய விஷயமாக ஆனது, அவர் ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தி’ தனக்கு அளிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார். (2 கொரிந்தியர் 4:7, NW) மற்றவர்களுக்கு ஆவிக்குரிய விதமாக உதவியாய் இருக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை தீவிரமானது, அவர் ஒரு முழுநேர ராஜ்ய அறிவிப்பாளராக ஆனார்.
13யெகோவா கேட்பதற்குப் பிரியப்படும்படியாக நாம் நம்முடைய ஜெபங்களில் எவற்றைச் சேர்க்கலாம்? எவ்விதமாக ஜெபிப்பது என்பதை இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார். மத்தேயு 6:9-13-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள மாதிரி ஜெபத்தில், நாம் ஜெபிப்பதற்குரிய சரியான விஷயங்களின் ஒரு மாதிரியை அவர் வைத்திருக்கிறார். நம்முடைய ஜெபங்களில் முக்கிய அக்கறை என்னவாக இருக்கவேண்டும்? யெகோவா தேவனின் பெயரும் ராஜ்யமும் அதிமுக்கியமானதாக வைக்கப்படவேண்டும். நம்முடைய பொருளாதார தேவைகளுக்காக கேட்பது பொருத்தமாயிருக்கிறது. நம்முடைய பாவங்களுக்காக மன்னிப்பு கேட்பதும் சோதனைகளிலிருந்தும் பொல்லாங்கன் பிசாசாகிய சாத்தானிடமிருந்தும் விடுதலைக்காக கேட்பதும்கூட முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஜெபத்தையே நாம் முணுமுணுத்துக்கொண்டிருக்கவோ அல்லது திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கவோ அதனுடைய அர்த்தத்தைப் பற்றி யோசிக்காமல் மனப்பாடமாய் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்றோ இயேசு விரும்பவில்லை. (மத்தேயு 6:7) ஒரு பிள்ளை தன்னுடைய தகப்பனிடம் பேசும்போதெல்லாம் அதே வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தால் அது என்னவிதமான ஒரு உறவாக இருக்கும்?
14வேண்டுதல்கள் மற்றும் இருதயப்பூர்வமான விண்ணப்பங்களைத் தவிர, நாம் துதி மற்றும் நன்றியறிதல்களுள்ள ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும். (சங்கீதம் 34:1; 92:1; 1 தெசலோனிக்கேயர் 5:18) நாம் மற்றவர்களுக்காகவும்கூட ஜெபிக்கலாம். பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது துன்புறுத்தப்பட்டுவரும் நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்காக ஜெபிப்பது அவர்களிடமுள்ள நம்முடைய அக்கறையைக் காண்பிக்கிறது, இப்படிப்பட்ட அக்கறையை நாம் வெளிப்படுத்துவதைக் கேட்பதில் யெகோவா பிரியப்படுகிறார். (லூக்கா 22:32; யோவான் 17:20; 1 தெசலோனிக்கேயர் 5:25) உண்மையில், அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
ஜெபத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபடுங்கள்
15நீங்கள் கடவுளைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டு வந்தாலும், உங்களுடைய ஜெபங்கள் சில சமயங்களில் பதிலளிக்கப்படாமல் போவதாக நீங்கள் ஒருவேளை உணரக்கூடும். இது அவ்விதமாக இருக்கக்கூடும், ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு ஜெபத்துக்குப் பதிலளிப்பதற்கு அது கடவுளுடைய நேரமாக இல்லாமல் இருக்கலாம். (பிரசங்கி 3:1-9) யெகோவா சிறிது காலத்துக்கு ஒரு நிலைமை தொடர்ந்திருக்கும்படியாக அனுமதிக்கக்கூடும், ஆனால் அவர் நிச்சயமாகவே ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார், மேலும் அதைச் செய்வதற்கான மிகச் சிறந்த நேரத்தையும் அவர் அறிந்தவராய் இருக்கிறார்.—2 கொரிந்தியர் 12:7-9.
16ஜெபத்தில் நாம் விடாமுயற்சியுடன் ஈடுபடுவது கடவுளிடமாக சொல்லும் காரியத்தில் நம்முடைய இருதயப்பூர்வமான அக்கறையை வெளிப்படுத்துகிறது. (லூக்கா 18:1-8) உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு பலவீனத்தை மேற்கொள்வதற்கு நமக்கு உதவிசெய்யும்படியாக யெகோவாவை நாம் கேட்கலாம். ஜெபத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபடுவது நம்முடைய வேண்டுதல்களுக்கு இசைவாக செயல்படுவதன் மூலம், நாம் நம் உண்மைத்தன்மையைக் காட்டுகிறோம். நம்முடைய வேண்டுதல்களில் நாம் திட்டவட்டமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். நாம் ஒரு சோதனையை அனுபவிக்கையில் ஊக்கமாக ஜெபிப்பது விசேஷமாக முக்கியமாக இருக்கிறது. (மத்தேயு 6:13) நம்முடைய பாவமுள்ள தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்துகொண்டே தொடர்ந்து ஜெபிக்கையில், யெகோவா நமக்கு எவ்வாறு உதவி செய்கிறார் என்பதைக் காண்போம். இது நம்முடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்பி அவரோடு நம்முடைய உறவை பலப்படுத்துவதாக இருக்கும்.—1 கொரிந்தியர் 10:13; பிலிப்பியர் 4:13.
17யெகோவா தேவனுக்குப் பரிசுத்த சேவை செய்வதில் ஜெபசிந்தையோடுகூடிய ஒரு மனநிலையை வளர்த்துக்கொள்வதன் மூலம், நாம் நம்முடைய சொந்த பலத்தில் அவரைச் சேவித்துக்கொண்டில்லை 1 கொரிந்தியர் 4:7) இதை ஒப்புக்கொள்வது மனத்தாழ்மையுள்ளவர்களாக இருக்க நமக்கு உதவிசெய்யும், அவரோடுகூட நம்முடைய உறவை செழுமையுள்ளதாக்கும். (1 பேதுரு 5:5, 6) ஆம், ஜெபத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபடுவதற்கு நமக்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய ஊக்கமுள்ள ஜெபங்களும் நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பனிடம் எவ்வாறு நெருங்கிவரலாம் என்பதைப் பற்றிய விலையேறப்பெற்ற அறிவும் நம்முடைய வாழ்க்கையை உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளதாக்கும்.
என்பதை உணரத் துவங்குவோம். யெகோவாதாமே காரியங்களைச் செய்து முடிக்கிறார். (யெகோவா தேவனோடு பேச்சுத்தொடர்பு ஒரு சார்பானதல்ல
18கடவுள் நம்முடைய ஜெபங்களைக் கேட்கவேண்டுமென்று நாம் விரும்பினால், அவர் என்ன சொல்லுகிறார் என்பதை நாம் செவிகொடுத்துக் கேட்கவேண்டும். (சகரியா 7:13) அவர் இனிமேலும் தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகள் மூலமாக தம்முடைய செய்திகளை அனுப்புவதில்லை, மேலும் நிச்சயமாகவே ஆவியுலகத்தொடர்பு வழிமுறைகளையும் அவர் பயன்படுத்துவதில்லை. (உபாகமம் 18:10-12) ஆனால் நாம் அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதன் மூலம் அவருக்கு செவிகொடுக்கலாம். (ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16, 17) நமக்கு ஆரோக்கியம்தரும் சரீரப்பிரகாரமான உணவுக்கு நாம் ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாயிருப்பது போலவே, நாம் “திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிரு”க்கும்படியாக துரிதப்படுத்தப்படுகிறோம். கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிப்பதன் மூலம் ஆவிக்குரிய உணவின்மீது ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.—1 பேதுரு 2:2, 3; அப்போஸ்தலர் 17:11.
19பைபிளில் நீங்கள் வாசிப்பதன் பேரில் தியானம் செய்யுங்கள். (சங்கீதம் 1:1-3; 77:11, 12) அப்படியென்றால் அவ்விஷயத்தின்பேரில் நீங்கள் ஆழ்ந்து யோசிப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. உணவை ஜீரணிப்பதற்கு இதை நீங்கள் ஒப்பிடலாம். நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பவற்றை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஆவிக்குரிய உணவை ஜீரணிக்கலாம். அந்தத் தகவல் எவ்விதமாக உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள், அல்லது அது யெகோவாவின் பண்புகளையும் செயல்தொடர்புகளையும் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதன்பேரில் சிந்தித்துப்பாருங்கள். யெகோவா அளிக்கும் ஆவிக்குரிய உணவை இவ்விதமாக தனிப்பட்ட படிப்பின் மூலம் நீங்கள் உட்கொள்ளலாம். இது உங்களை கடவுளிடம் நெருங்கிவரச் செய்யும், மேலும் தினசரி பிரச்சினைகளைக் கையாளுவதற்கு இது உங்களுக்கு உதவிசெய்யும்.
20இஸ்ரவேலர் கடவுளுடைய நியாயப்பிரமாணம் எல்லாருக்கும் முன்பாக வாசிக்கப்படுவதைக் கேட்பதற்காக கூடிவந்தபோது, கவனமாக செவிகொடுத்தது போலவே, கிறிஸ்தவக் கூட்டங்களில் அவருடைய வார்த்தை கலந்தாலோசிக்கப்படுவதை செவிகொடுத்து கேட்பதன் மூலமாகக்கூட நீங்கள் கடவுளிடம் நெருங்கிவரலாம். அந்தச் சமயத்திலிருந்த போதனையாளர்கள் நியாயப்பிரமாணத்தின் வாசிப்பை அர்த்தத்தோடு செய்தனர், இவ்விதமாக செவிகொடுப்போர் புரிந்துகொள்ளவும் தாங்கள் கேட்டவற்றை பொருத்திப் பிரயோகிக்கவும் தூண்டப்படுவதற்கு உதவினர். இது அதிகமான சந்தோஷத்துக்கு வழிநடத்தியது. (நெகேமியா 8:8, 12) ஆகவே யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஆஜராவதை உங்கள் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். (எபிரெயர் 10:24, 25) இது நீங்கள் தேவனை அறியும் அறிவைப் புரிந்துகொண்டு, பின்னர் அதை உங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்க உதவிசெய்து உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும். உலகளாவிய சகோதர கூட்டுறவின் ஒரு பாகமாக இருப்பது யெகோவாவிடம் நெருங்கியிருக்க உங்களுக்கு உதவிசெய்யும். நாம் பார்க்கப் போகிற விதமாகவே, கடவுளுடைய மக்கள் மத்தியில் நீங்கள் உண்மையான பாதுகாப்பைக் காணமுடியும்.
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
நீங்கள் ஏன் யெகோவாவிடம் நெருங்கிவர வேண்டும்?
கடவுளிடம் நெருங்கி வருவதற்கு தேவைப்படுபவற்றுள் சில யாவை?
உங்கள் ஜெபத்தில் எவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்?
நீங்கள் ஏன் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும்?
நீங்கள் எவ்வாறு இன்று யெகோவாவுக்கு செவிகொடுக்கமுடியும்?
[கேள்விகள்]
1. அநேக மதங்களில் என்ன ஒற்றுமைகள் காணப்படுகின்றன?
2. ஜெபம் எவ்விதமாக விளக்கப்பட்டிருக்கிறது, அநேக ஆட்கள் ஜெபிப்பதற்கு காரணம் என்ன?
3. நம்முடைய ஜெபங்கள் யாரிடமாக செய்யப்பட வேண்டும், ஏன்?
4, 5. (அ) கடவுளிடம் ஜெபிப்பது ஏன் முக்கியமாக இருக்கிறது? (ஆ) ஜெபத்தின் மூலமாக நாம் கடவுளோடு என்ன விதமான உறவை வளர்த்துக்கொள்ள முடியும்?
6, 7. நம்முடைய ஜெபங்களைக் கேட்பதற்கு கடவுள் பணம் கேட்காவிட்டாலும் நாம் ஜெபிக்கையில் அவர் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்?
8. நம்முடைய ஜெபங்களுக்கு கடவுள் பதிலளிக்க வேண்டும் என்பதாக நாம் விரும்பினால், நம்மைநாமே எதிலிருந்து சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்?
9. நாம் யெகோவாவை யார் மூலமாக அணுகவேண்டும், ஏன்?
10. ஜெபத்தைக் குறித்ததில் நாம் இயேசுவை எவ்வாறு பின்பற்றலாம், தனிப்பட்ட விதமாக ஜெபிப்பதற்கு என்ன சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றன?
11. (அ) குடும்பங்கள் ஏன் ஒன்றாகச் சேர்ந்து ஜெபிக்க வேண்டும்? (ஆ) ஜெபத்தின் முடிவில் “ஆமென்” என்று நீங்கள் சொல்லும்போது அது எதை அர்த்தப்படுத்துகிறது?
12. (அ) கடவுள் ஏன் சில ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில்லை? (ஆ) ஜெபிக்கும்போது நாம் ஏன் முற்றிலும் தனிப்பட்ட தேவைகளின்பேரிலேயே கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடாது?
13. மத்தேயு 6:9-13-ல் காண்பிக்கப்பட்டுள்ளபடி, நாம் நம்முடைய ஜெபங்களில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒருசில பொருத்தமான விஷயங்கள் யாவை?
14. வேண்டுதல்களைத் தவிர நாம் வேறு எத்தகைய ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும்?
15. நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படாதிருப்பதாக தோன்றும்போது நாம் எதை நினைவில் வைக்கவேண்டும்?
16. நாம் ஏன் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும், இதைச் செய்வது எவ்விதமாக கடவுளோடு நம்முடைய உறவைப் பாதிக்கக்கூடும்?
17. கடவுளைச் சேவிப்பதில் ஜெபசிந்தையோடுகூடிய ஒரு மனநிலையிலிருந்து நாம் எவ்வாறு பயனடைவோம்?
18. நாம் எவ்விதமாக கடவுளுக்கு செவிகொடுக்கலாம்?
19. பைபிளில் நீங்கள் வாசிப்பதன் பேரில் தியானம் செய்வதில் என்ன நன்மை இருக்கிறது?
20. கிறிஸ்தவக் கூட்டங்களில் ஆஜராயிருப்பது கடவுளிடம் நெருங்கி வருவதற்கு எவ்விதமாக உதவிசெய்கிறது?
[பக்கம் 157-ன் முழுபடம்]