Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய மக்களின் மத்தியில் பாதுகாப்பை கண்டடையுங்கள்

கடவுளுடைய மக்களின் மத்தியில் பாதுகாப்பை கண்டடையுங்கள்

அதிகாரம் 17

கடவுளுடைய மக்களின் மத்தியில் பாதுகாப்பை கண்டடையுங்கள்

கடுமையாக வீசிய ஒரு புயல்காற்று நீங்கள் வாழுமிடத்தை நாசமாக்கிவிடுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் வீடு இடிந்துவிட்டது, உங்கள் உடைமைகள் அனைத்தையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள். உணவு கிடைப்பதில்லை. நிலைமை நம்பிக்கையற்றதாக தோன்றுகிறது. அப்பொழுது, எதிர்பாராத நிவாரணப் பொருட்கள் வந்துசேருகின்றன. ஏராளமான உணவும் உடைகளும் கொடுக்கப்படுகின்றன. ஒரு புதிய வீடு உங்களுக்குக் கட்டித்தரப்படுகிறது. நிச்சயமாகவே இந்த ஏற்பாடுகளை உங்களுக்குக் கிடைக்கும்படியாகச் செய்த நபருக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்.

2இதற்கு ஒப்பான ஒன்று இன்று சம்பவித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் புயல்காற்றைப் போல, ஆதாம் மற்றும் ஏவாளின் கலகத்தனம் மனித இனத்துக்கு அதிகமான சேதத்தை விளைவித்தது. மனிதவர்க்கத்தின் பரதீஸ் வீடு இழக்கப்பட்டது. அப்போது முதற்கொண்டு, மனித அரசாங்கங்கள் போர், குற்றச்செயல் மற்றும் அநீதியிலிருந்து தங்களுடைய மக்களுக்குப் பாதுகாப்பை அளிக்க தவறிவிட்டிருக்கின்றன. மதமானது திரளான மக்களை ஆரோக்கியமான ஆவிக்குரிய உணவில்லாமல் பசியால் வாடிக்கொண்டிருக்கும்படி விட்டிருக்கிறது. என்றபோதிலும், ஆவிக்குரிய விதமாக பேசுகையில், யெகோவா தேவன் இப்பொழுது உணவு, உடை மற்றும் உறைவிடத்தை அளித்துவருகிறார். அதை அவர் எவ்விதமாகச் செய்து வருகிறார்?

“உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”

3நிவாரணப் பொருட்கள் பொதுவாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வழிமூலத்தினால் பகிர்ந்துகொடுக்கப்படுகின்றன, அதேவிதமாகவே யெகோவா தம்முடைய மக்களுக்காக ஆவிக்குரிய ஏற்பாட்டை செய்திருக்கிறார். உதாரணமாக, இஸ்ரவேலர் சுமார் 1,500 வருடங்களாக ‘யெகோவாவின் சபையாக’ இருந்தனர். அவர்கள் மத்தியில் அவருடைய சட்டத்தைக் கற்பிப்பதற்கு கடவுளுடைய வழிமூலமாக சேவித்த ஆட்கள் இருந்தனர். (1 நாளாகமம் 28:8, NW; 2 நாளாகமம் 17:7-9) பொ.ச. முதல் நூற்றாண்டில், யெகோவா கிறிஸ்தவ அமைப்பைப் பிறப்பித்தார். சபைகள் ஏற்படுத்தப்பட்டன, அவை அப்போஸ்தலராலும் மூப்பர்களாலும் ஆன ஒரு நிர்வாகக் குழுவினுடைய வழிநடத்துதலின்கீழ் இயங்கின. (அப்போஸ்தலர் 15:22-31) அதேவிதமாகவே இன்று, யெகோவா தம்முடைய மக்களோடு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொகுதியின் மூலமாக செயல்தொடர்பு கொள்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்?

4இராஜ்ய வல்லமையில் தம்முடைய வந்திருத்தலின்போது, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” தம்மைப் பின்பற்றுவோருக்கு ‘ஏற்ற வேளையில் உணவை’ அளித்துக்கொண்டிருப்பதாக காணப்படுவார்கள் என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 24:45-47, NW) இயேசு பரலோக ராஜாவாக 1914-ல் சிங்காசனத்திலேற்றப்பட்ட போது, யார் இந்த “அடிமை”யாக நிரூபித்தனர்? நிச்சயமாகவே கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் அல்ல. அவர்கள் பெரும்பாலும், முதல் உலகப்போரில் தங்களுடைய சொந்த தேசிய அரசாங்கங்களை ஆதரித்த பிரச்சாரங்களாலேயே தங்கள் மந்தைகளைப் போஷித்து வந்தார்கள். ஆனால் சரியான, காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவு, கடவுளுடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பெற்றிருந்தவர்களும் இயேசு குறிப்பிட்ட அந்தச் “சிறு மந்தை”யின் பாகமாகவும் இருந்த உண்மைக் கிறிஸ்தவர்களின் ஒரு தொகுதியால் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. (லூக்கா 12:32) அபிஷேகம் பெற்ற இந்தக் கிறிஸ்தவர்கள் மனித அரசாங்கங்களை அல்ல, கடவுளுடைய ராஜ்யத்தையே பிரசங்கித்தார்கள். இதன் விளைவாக, கடந்த வருடங்களில் லட்சக்கணக்கான நீதியுள்ள மனச்சாய்வுடைய ‘வேறே ஆடுகள்’ உண்மை வணக்கத்தை அப்பியாசிப்பதில் அபிஷேகம் பெற்றிருக்கும் “அடிமை”யோடு சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். (யோவான் 10:16) ‘உண்மையுள்ள அடிமையையும்’ அதனுடைய தற்கால நிர்வாகக் குழுவையும் பயன்படுத்தி, கடவுள் ஆவிக்குரிய உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அவற்றை விரும்பும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய தம்முடைய ஒழுங்கமைக்கப்பட்ட மக்களை வழிநடத்திவருகிறார்.

‘ஏற்ற வேளையிலே உணவு’

5இயேசு சொன்னார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:4) ஆனால் வருந்தத்தக்கவிதமாக, பெரும்பாலான ஆட்கள் கடவுளுடைய வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்துவது கிடையாது. யெகோவாவின் தீர்க்கதரிசி ஆமோஸ் முன்னுரைத்த விதமாகவே, “ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்ச”மிருக்கிறது. (ஆமோஸ் 8:11) அதிக மதப்பற்றுள்ள ஆட்களும்கூட ஆவிக்குரிய விதமாக பட்டினியாய் இருக்கிறார்கள். என்றபோதிலும், “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்,” வேண்டுமென்பது யெகோவாவின் விருப்பமாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 2:3, 4) இதற்கிசைவாக, அவர் ஏராளமான ஆவிக்குரிய உணவை அளித்துவருகிறார். ஆனால் அதை எங்கே பெற்றுக்கொள்ள முடியும்?

6வரலாறு முழுவதிலும், யெகோவா ஒரு தொகுதியாக தம்முடைய மக்களுக்கு ஆவிக்குரிய உணவைப் பகிர்ந்தளித்து வந்திருக்கிறார். (ஏசாயா 65:13) உதாரணமாக, இஸ்ரவேல ஆசாரியர்கள், ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் ஒரு தொகுதியாக போதிக்கப்படுவதற்காக கூட்டிச்சேர்த்தனர். (உபாகமம் 31:9, 12) நிர்வாகக் குழுவின் வழிநடத்துதலின்கீழ், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சபைகளை ஏற்படுத்தி அனைவருடைய போதனைக்காகவும் உற்சாகத்திற்காகவும் கூட்டங்களை நடத்தினர். (ரோமர் 16:5; பிலேமோன் 1, 2) யெகோவாவின் சாட்சிகள் இந்த மாதிரியைப் பின்பற்றுகின்றனர். அவர்களுடைய எல்லா கூட்டங்களுக்கும் ஆஜராயிருக்கும்படியாக நீங்கள் அன்போடு அழைக்கப்படுகிறீர்கள்.

7நிச்சயமாகவே, நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலமாக அதிகத்தை ஏற்கெனவே கற்றிருக்கலாம். ஒருவேளை யாராவது ஒருவர் உங்களுக்கு உதவிசெய்திருக்கலாம். (அப்போஸ்தலர் 8:30-35) ஆனால் உங்களுடைய விசுவாசமானது, தகுதியான கவனம் செலுத்தப்படாவிட்டால் வாடி, பட்டுப்போய்விடும் ஒரு செடிக்கு ஒப்பிடப்படலாம். ஆகவே, நீங்கள் சரியான ஆவிக்குரிய போஷாக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 4:6) ஆவிக்குரிய விதமாக உங்களுக்கு போஷாக்கை அளித்து நீங்கள் தேவனை அறியும் அறிவில் பெருகி விசுவாசத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்க உங்களுக்கு உதவிசெய்வதற்காக வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான ஒரு போதனா திட்டத்தை கிறிஸ்தவக் கூட்டங்கள் அளிக்கின்றன.—கொலோசெயர் 1:9, 10.

8கூட்டங்கள் மற்றொரு அத்தியாவசியமான ஒரு நோக்கத்தை சேவிக்கின்றன. பவுல் எழுதினார்: ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபைகூடிவருதலை விட்டுவிடாதிருப்போமாக.’ (எபிரெயர் 10:24, 25) ‘ஏவும்படி’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “கூர்மையாக்குவது,” என்றும்கூட பொருள்படுகிறது. ஒரு பைபிள் நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” (நீதிமொழிகள் 27:17) நாம் அனைவரும் தொடர்ந்து ‘கூர்மையாக்கப்படுவது’ அவசியமாயிருக்கிறது. தினந்தோறும் உலகிலிருந்து வரும் அழுத்தங்கள் நம்முடைய விசுவாசத்தை மழுங்கிப்போகச் செய்துவிடக்கூடும். நாம் கிறிஸ்தவக் கூட்டங்களில் ஆஜராயிருக்கும்போது, அங்கே உற்சாகம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. (ரோமர் 1:11, 12) சபையின் அங்கத்தினர்கள் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி,” செய்யவேண்டும் என்ற அப்போஸ்தலன் பவுலின் புத்திமதியைப் பின்பற்றுகிறார்கள், இப்படிப்பட்ட காரியங்கள் நம்முடைய விசுவாசத்தை கூர்மையாக்குகின்றன. (1 தெசலோனிக்கேயர் 5:11) ஒழுங்காக கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நாம் வந்திருப்பது, கடவுளை நேசிப்பதையும்கூட காட்டுகிறது, மேலும் அவரைத் துதிப்பதற்கு நமக்கு சந்தர்ப்பங்களை அளிக்கிறது.—சங்கீதம் 35:18.

“அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்”

9பவுல் எழுதினார்: “இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (கொலோசெயர் 3:14) யெகோவா கிருபையுடன் இந்த உடையை நமக்கு அளித்திருக்கிறார். என்ன விதத்தில்? கிறிஸ்தவர்கள் அன்பைக் காண்பிக்க முடியும், ஏனென்றால் யெகோவாவுடைய பரிசுத்த ஆவியின் கடவுள்-கொடுத்த கனிகளில் ஒன்றாக இது இருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) நாம் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கும்பொருட்டு யெகோவாதாமே தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்புவதன் மூலம் மிகப் பெரிதான அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். (யோவான் 3:16) இந்த அன்பின் உன்னதமான வெளிக்காட்டு இந்தப் பண்பை வெளிப்படுத்துவதில் நமக்கு ஒரு மாதிரியை அளித்தது. “தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புக்கூரக் கடனாளிகளாயிருக்கிறோம்,” என்பதாக அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோவான் 4:11.

10இராஜ்ய மன்றத்தில் கூட்டங்களில் நீங்கள் ஆஜராயிருப்பது அன்பு காட்ட மிகச் சிறந்த ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளிக்கும். அங்கே பல்வேறு வகையான ஆட்களை நீங்கள் சந்திப்பீர்கள். அவர்களில் அநேகரிடம் நீங்கள் உடனடியாகவே கவர்ந்திழுக்கப்படுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாகவே, யெகோவாவைச் சேவிப்பவர்கள் மத்தியில்கூட ஆளுமை வேறுபடுகிறது. கடந்த காலங்களில் நீங்கள் உங்களுக்கிருக்கும் அதே அக்கறைகளை அல்லது குணங்களைக் கொண்டில்லாதவர்களை ஒருவேளை நீங்கள் வெறுமனே தவிர்த்திருப்பீர்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் ‘சகோதரர்களின் முழு கூட்டுறவிலும் அன்புகூர’ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். (1 பேதுரு 2:17, NW) ஆகவே, ராஜ்ய மன்றத்திலுள்ளவர்களோடு பழகுவதை உங்கள் குறிக்கோளாக்கிக்கொள்ளுங்கள்—வயது, ஆளுமை, இனம் அல்லது கல்வியின் அளவு ஆகியவற்றில் உங்களிலிருந்து வித்தியாசப்படுகிறவர்களோடும்கூட ஒவ்வொருவரும் ஏதோவொரு அருமையான பண்பில் மேம்பட்டு இருப்பதைக் காண்பீர்கள்.

11சபையிலுள்ள பல்வேறுபட்ட ஆளுமைகள் உங்களைக் கலக்கமடையச் செய்யவேண்டியதில்லை. இதை விளக்குவதற்கு, சாலையில் எண்ணிறந்த வாகனங்களோடுகூட நீங்கள் உங்கள் வாகனத்தில் பயணம் செய்வதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எல்லாம் ஒரே வேகத்தில் ஓடிக்கொண்டில்லை, அல்லது எல்லாம் ஒரே நிலைமையிலும் இல்லை. சில வாகனங்கள் அநேக கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்திருக்கின்றன, ஆனால் மற்றவை உங்களைப் போலவே இப்போதுதானே பயணத்தை ஆரம்பித்திருக்கின்றன. என்றபோதிலும் இந்த வித்தியாசங்களின் மத்தியிலும், அனைத்தும் சாலையில் பயணம் செய்துகொண்டிருக்கின்றன. ஒரு சபையில் அடங்கியுள்ள தனிநபர்களின் விஷயத்திலும் இது இவ்வாறே இருக்கிறது. அனைவருமே ஒரே வேகத்தில் கிறிஸ்தவப் பண்புகளை வளர்த்துக்கொள்வது கிடையாது. மேலுமாக, எல்லாருமே ஒரே சரீரப்பிரகாரமான அல்லது உணர்ச்சிப்பூர்வமான நிலைமையில் இல்லை. சிலர் யெகோவாவை அநேக ஆண்டுகளாக வணங்கிவந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இப்போதுதானே வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். என்றபோதிலும், அனைவருமே “ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்,” நித்திய ஜீவனுக்குச் செல்லும் வழியில் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 1:10) ஆகவே, சபையிலுள்ளவர்களின் தாழ்ந்த குணங்களைப் பார்க்க நாடுவதற்கு பதிலாக உயர்ந்த குணங்களைப் பார்க்க நாடுங்கள். அதைச் செய்வது உங்கள் இருதயத்துக்கு கனிவூட்டும், ஏனென்றால் கடவுள் உண்மையில் இந்த மக்களின் மத்தியில் இருப்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். நிச்சயமாகவே இங்கேதான் நீங்களும் இருக்க விரும்புவீர்கள்.—1 கொரிந்தியர் 14:25.

12எல்லா மனிதர்களும் அபூரணராக இருப்பதன் காரணமாக, சில சமயங்களில் சபையிலுள்ள யாரோ ஒருவர் உங்களை நிலைகுலைந்துபோகச் செய்யும் எதையோ சொல்லிவிடவோ அல்லது செய்துவிடவோ கூடும். (ரோமர் 3:23) சீஷனாகிய யாக்கோபு நடைமுறையில் இருப்பதை எழுதினார்: ‘நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரண புருஷனாயிருக்கிறான்.’ (யாக்கோபு 3:2) யாராவது உங்களுக்கு விரோதமாக தவறுசெய்தால் நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்? ஒரு பைபிள் நீதிமொழி சொல்கிறது: “மனுஷனுடைய விவேகம் [“உட்பார்வை,” NW] அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” (நீதிமொழிகள் 19:11) உட்பார்வையைக் கொண்டிருப்பது என்பது ஒரு நிலையை ஆழமாக பார்ப்பது, ஒரு நபரை குறிப்பிட்ட விதத்தில் பேச அல்லது செயல்பட வைத்த அடிப்படையான காரணங்களைக் கிரகித்துக்கொள்வது என்பதாகும். நம்மில் அநேகர் நம்முடைய சொந்த தவறுகளுக்கு சாக்குப்போக்கு சொல்ல அதிகமான உட்பார்வையைப் பயன்படுத்துகிறோம். மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும் மற்றவர்களின் அபூரணங்களை மூடவும்கூட ஏன் அதைப் பயன்படுத்தக்கூடாது?—மத்தேயு 7:1-5; கொலோசெயர் 3:13.

13நாம்தாமே யெகோவாவின் மன்னிப்பைப் பெறவேண்டுமென்றால் மற்றவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (மத்தேயு 6:9, 12, 14, 15) நாம் சத்தியத்தை அப்பியாசித்தால், மற்றவர்களை அன்பான முறையில் நடத்துவோம். (1 யோவான் 1:6, 7; 3:14-16; 4:20, 21) ஆகவே, சபையிலுள்ள ஒரு நபரோடு நீங்கள் ஒரு பிரச்சினையை எதிர்ப்பட்டால், வன்மத்துக்கு இடங்கொடுப்பதற்கு எதிராக போராடுங்கள். நீங்கள் அன்பைத் தரித்திருந்தால், பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முற்படுவீர்கள், நீங்கள் குற்றத்தைச் செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டீர்கள்.—மத்தேயு 5:23, 24; 18:15-17.

14நம்முடைய ஆவிக்குரிய உடை அன்போடு நெருக்கமாக தொடர்புடைய மற்ற பண்புகளையும் உட்படுத்த வேண்டும். பவுல் எழுதினார்: ‘உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்.’ அன்பினால் சூழப்பட்ட இந்தக் குணங்கள் தேவபக்தியுள்ள ‘புதிய ஆளுமையின்’ பாகமாக இருக்கின்றன. (கொலோசெயர் 3:10, 12, NW) உங்களை இந்த விதமாக உடுத்துவித்துக்கொள்ள நீங்கள் முயற்சிசெய்வீர்களா? விசேஷமாக நீங்கள் சகோதர அன்பினால் உங்களை உடுத்துவித்துக் கொண்டவர்களாக இருந்தால் இயேசுவின் சீஷர்களை அடையாளப்படுத்தும் ஒரு குறியைத் தாங்கியவர்களாக இருப்பீர்கள், ஏனென்றால் அவர் சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.

பாதுகாப்பான ஒரு இடம்

15சபை ஒரு உறைவிடமாக, நீங்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய பாதுகாப்பளிக்கும் ஒரு புகலிடமாக சேவிக்கிறது. அதில் கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்வதற்கு உழைத்துக்கொண்டிருக்கும் நேர்மையான இருதயமுள்ள ஆட்களை நீங்கள் காண்பீர்கள். அவர்களில் அநேகர் நீங்கள் மேற்கொள்வதற்கு போராடிக்கொண்டிருக்கும் அதே கெட்ட பழக்கங்களையும் மனநிலைகளையும் ஒழித்துவிட்டிருக்கிறார்கள். (தீத்து 3:3) அவர்கள் உங்களுக்கு உதவமுடியும், ஏனென்றால் நாம், ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்படியாக’ சொல்லப்படுகிறோம். (கலாத்தியர் 6:2) இயற்கையாகவே, நித்திய ஜீவனுக்குப் போகும் வழியைப் பின்தொடருவது கடைசியில் உங்களுடைய சொந்த உத்தரவாதமே. (கலாத்தியர் 6:5; பிலிப்பியர் 2:12) என்றபோதிலும் உதவியும் ஆதரவும் பெற அற்புதமான வழியாக யெகோவா கிறிஸ்தவ சபையை ஏற்பாடு செய்திருக்கிறார். உங்களுடைய பிரச்சினைகள் எத்தனை வேதனையளிப்பதாக இருந்தாலும் உங்களுக்கு மதிப்புள்ள உதவிவாய்ப்பு ஒன்று கிடைக்கக்கூடியதாக இருக்கிறது—பெருந்துன்பம் அல்லது இழப்புகளின் சமயத்தில் உங்களுக்கு ஆதரவாக நிற்கும் அன்புள்ள ஒரு சபை.—ஒப்பிடுக: லூக்கா 10:29-37; அப்போஸ்தலர் 20:35.

16உங்களுக்கு உதவி தர விரைவோருள் ‘மனுஷரில் வரங்களாக’ இருப்பவர்கள்—மந்தையை மனமுவந்தும் ஆர்வத்தோடும் மேய்க்கும் நியமிக்கப்பட்ட சபை மூப்பர்கள் அல்லது கண்காணிகள் இருப்பார்கள். (எபேசியர் 4:8, 11, 12; அப்போஸ்தலர் 20:28; 1 பேதுரு 5:2, 3) அவர்களைக் குறித்து ஏசாயா இவ்விதமாக தீர்க்கதரிசனமுரைத்தார்: “அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருப்பார்கள்.—ஏசாயா 32:2, NW.

17இயேசு பூமியில் இருந்தபோது, வருந்தத்தக்கவிதத்தில், மதத்தலைவர்களுடைய அன்பான மேற்பார்வை இல்லாமலிருந்தது. மக்களின் நிலைமை அவருடைய மனதை நெகிழச்செய்தது, அவர் விசேஷமாக அவர்களுக்கு ஆவிக்குரிய விதமாக உதவிசெய்ய விரும்பினார். அவர்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால்,” இயேசு அவர்கள் மேல் மனதுருகினார். (மத்தேயு 9:36) ஆவிக்குரிய உதவிக்காகவும் ஆறுதலுக்காகவும் நாடுவதற்கு எவரையும் கொண்டில்லாமல் மிகுதியான மனவேதனையளிக்கும் பிரச்சினைகளை இன்றைய நாளில் சகித்துக்கொண்டிருக்கும் அநேகருடைய பரிதாபமான நிலைமையை இது எவ்வளவு பொருத்தமாக வருணிக்கிறது! ஆனால் யெகோவாவின் மக்களுக்கு ஆவிக்குரிய உதவி இருக்கிறது, ஏனென்றால் அவர் இவ்விதமாக வாக்களித்தார்: “அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லை.”—எரேமியா 23:4.

18சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்களோடு பழகி அவர்களை அறிந்துகொள்ளுங்கள். தேவனை அறியும் அறிவைப் பொருத்துவதில் அவர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் பைபிளில் கண்காணிகளுக்காக விவரிக்கப்பட்டிருக்கும் தகுதிகளைப் பூர்த்திசெய்திருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) கடவுள் தேவைப்படுத்துகிறவற்றிற்கு முரணாக இருக்கும் ஒரு பழக்கத்தை அல்லது குணத்தை மேற்கொள்வதற்கு உங்களுக்கு ஆவிக்குரிய உதவி தேவைப்படுமானால் அவர்களில் ஒருவரை அணுக தயங்கவேண்டாம். மூப்பர்கள் பவுலின் பின்வரும் புத்திமதியைப் பின்பற்றுவதை நீங்கள் காண்பீர்கள்: “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 2:7, 8; 5:14.

யெகோவாவின் மக்களோடு பாதுகாப்பை அனுபவித்து மகிழுங்கள்

19அபூரணமான நிலைமைகளின் மத்தியில் இப்பொழுது நாம் வாழ்ந்து வந்தாலும், யெகோவா நமக்கு ஆவிக்குரிய உணவையும், உடையையும், உறைவிடத்தையும் அளித்துவருகிறார். நிச்சயமாகவே, இயற்கையான ஒரு பரதீஸின் நன்மைகளை அனுபவிப்பதற்கு நாம் கடவுளுடைய வாக்களிக்கப்பட்ட புதிய உலகிற்காகக் காத்திருக்க வேண்டும். ஆனால் யெகோவாவின் அமைப்பின் பாகமாக இருப்பவர்கள் தற்போது ஒரு ஆவிக்குரிய பரதீஸின் பாதுகாப்பை அனுபவித்து வருகிறார்கள். அவர்களைக் குறித்து எசேக்கியேல் இவ்வாறு முன்னறிவித்தார்: “தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.”—எசேக்கியேல் 34:28; சங்கீதம் 4:8.

20யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமாகவும் அமைப்பின் மூலமாகவும் அன்புள்ள ஆவிக்குரிய ஏற்பாடுகளைச் செய்துவருவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்! கடவுளுடைய மக்களிடம் நெருங்கிவாருங்கள். தேவனை அறியும் அறிவை நீங்கள் எடுத்துக்கொள்வதற்காக உங்களைப்பற்றி நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயத்தில் அவ்விதமாக செய்வதிலிருந்து பின்வாங்காதீர்கள். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொண்டு ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜராயிருப்பது சிலருக்குப் பிரியமில்லாமல் இருக்கக்கூடும். ஆனால் கடவுள் அவருடைய வணக்கத்துக்காக நீங்கள் செய்யும் எந்தத் தியாகத்தையும் அபரிமிதமாக ஈடுசெய்துவிடுவார். (மல்கியா 3:10) மேலுமாக இயேசு சொன்னார்: “என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் வீட்டையாவது சகோதரரையாவது சகோதரிகளையாவது தாயையாவது தகப்பனையாவது பிள்ளைகளையாவது நிலங்களையாவது விட்டவன் எவனும் இப்பொழுது இம்மையிலே இம்சைகளோடேகூட நூறத்தனையாக வீடுகளையும் சகோதரரையும் சகோதரிகளையும் தாய்களையும் பிள்ளைகளையும் நிலங்களையும் மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவா[ன்].” (மாற்கு 10:29, 30, தி.மொ.) ஆம், நீங்கள் விட்டுவந்தவை அல்லது சகித்திருக்க வேண்டியவை எதுவாக இருந்தாலும், கடவுளுடைய மக்கள் மத்தியில் நீங்கள் மகிழ்ச்சிதரும் தோழமையையும் ஆவிக்குரிய பாதுகாப்பையும் கண்டடையலாம்.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

“உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யார்?

ஆவிக்குரிய விதமாக நம்மைப் போஷிப்பதற்கு யெகோவா என்ன ஏற்பாட்டை செய்திருக்கிறார்?

கிறிஸ்தவ சபையிலுள்ளவர்கள் நமக்கு எவ்விதமாக உதவிசெய்யமுடியும்?

[கேள்விகள்]

1, 2. மனிதவர்க்கத்தின் நிலைமை எவ்விதமாக புயல் காற்றினால் நாசமாக்கப்பட்ட ஓரிடத்தில் வாழும் மக்களுடையதைப்போல இருக்கிறது?

3. யெகோவா எவ்விதமாக மனிதவர்க்கத்துக்கு ஏற்பாடுகளை அளித்து வருகிறார், என்ன உதாரணங்கள் இதைக் காண்பிக்கின்றன?

4. நவீன காலங்களில், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ நிரூபித்திருப்பது யார், கடவுளுடைய ஆவிக்குரிய ஏற்பாடுகள் எவ்விதமாக கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றன?

5. இன்று உலகில் என்ன ஆவிக்குரிய நிலைமை இருந்து வருகிறது, ஆனால் இதைக் குறித்து யெகோவா என்ன செய்துகொண்டிருக்கிறார்?

6. யெகோவா எவ்விதமாக கடந்த காலங்களில் தம்முடைய மக்களை ஆவிக்குரிய விதமாக போஷித்து வந்திருக்கிறார்?

7. கிறிஸ்தவக் கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருப்பது எவ்விதமாக அறிவோடும் விசுவாசத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது?

8. யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் ஆஜராயிருக்க நாம் ஏன் உற்சாகப்படுத்தப்படுகிறோம்?

9. அன்பை வெளிப்படுத்துவதில் யெகோவா எவ்விதமாக முன்மாதிரியை வைத்திருக்கிறார்?

10. ‘சகோதரர்களின் முழு கூட்டுறவிலிருந்து’ நாம் எவ்வாறு நன்மையடையலாம்?

11. யெகோவாவின் மக்கள் மத்தியிலுள்ள வேறுபட்ட ஆளுமைகளினால் நீங்கள் ஏன் கலக்கமடைந்துவிடக் கூடாது?

12, 13. (அ) சபையிலுள்ள யாரோ ஒருவர் உங்களுக்கு விரோதமாக தவறுசெய்தால் நீங்கள் என்ன செய்யலாம்? (ஆ) வன்மத்துக்கு இடங்கொடாதிருப்பது ஏன் முக்கியமாக இருக்கிறது?

14. நாம் என்ன பண்புகளால் நம்மை உடுத்துவித்துக்கொள்ள வேண்டும்?

15. சபை எவ்விதமாக ஒரு உறைவிடம் போல இருக்கிறது?

16. சபை மூப்பர்கள் என்ன உதவியை அளிக்கின்றனர்?

17. (அ) விசேஷமாக என்ன வகையான உதவியை இயேசு கொடுக்க விரும்பினார்? (ஆ) கடவுள் தம்முடைய மக்களுக்கு என்ன ஏற்பாட்டை வாக்களித்தார்?

18. ஆவிக்குரிய உதவி நமக்குத் தேவைப்பட்டால் நாம் ஏன் ஒரு மூப்பரை அணுகவேண்டும்?

19. தம்முடைய அமைப்பினுள்ளே பாதுகாப்பைத் தேடுகிறவர்கள்மீது யெகோவா என்ன ஆசீர்வாதங்களை அருளியிருக்கிறார்?

20. தம்முடைய வணக்கத்துக்காக நாம் செய்யக்கூடிய எந்தத் தியாகத்தையும் யெகோவா எவ்விதமாக ஈடுசெய்வார்?

[பக்கம் 165-ன் முழுபடம்]