தேவனை அறியும் அறிவை வெளிப்படுத்தும் அந்தப் புத்தகம்
அதிகாரம் 2
தேவனை அறியும் அறிவை வெளிப்படுத்தும் அந்தப் புத்தகம்
நம்முடைய அன்பான படைப்பாளர் அறிவுரையும் வழிநடத்துதலும் அடங்கிய ஒரு புத்தகத்தை மனிதவர்க்கத்துக்கு அளிப்பார் என்பது நியாயமாகவே இருக்கிறது. மனிதர்களுக்கு வழிநடத்துதல் தேவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்களா?
2தீர்க்கதரிசியாயும் சரித்திராசிரியராயும் இருந்த ஒருவர் 2,500 ஆண்டுகளுக்கும் முன்னால் பின்வருமாறு எழுதினார்: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) வேறு எந்தக் காலத்திலும் இருந்ததைவிட இன்று அந்தக் கூற்று உண்மையாயிருப்பது அதிக தெளிவாக இருக்கிறது. இவ்விதமாக, சரித்திராசிரியர் வில்லியம் ஹெச். மேக்நெல் குறிப்பிடுகிறார்: “இந்தக் கிரகத்தின்மீது மனித அனுபவம், ஏறக்குறைய இடைவிடாத தொடர்ச்சியான நெருக்கடிகளும் சமுதாயத்தின் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கு குலைக்கப்படுவதுமாக இருந்திருக்கிறது.”
3ஞானமான அறிவுரைக்கான நம்முடைய எல்லா தேவைகளையும் பைபிள் பூர்த்திசெய்கிறது. பைபிளை முதன் முதலாக ஆராய்கையில் அநேகர் திணறிப்போவது உண்மையே. அது ஒரு பெரிய புத்தகம், அதிலுள்ள சில பகுதிகளைப் புரிந்துகொள்வது சுலபமல்ல. ஆனால் மதிப்புள்ள ஒரு பரம்பரைச் சொத்தைப் பெறுவதற்காக நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சுருக்கமாக கூறும் ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டால், அதைக் கவனமாக படிப்பதற்கு நேரத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா? ஆவணத்தின் ஒருசில பகுதிகள் புரிந்துகொள்ள கடினமாக இருப்பதை நீங்கள் கண்டால், இப்படிப்பட்ட விஷயங்களில் அனுபவமுள்ள எவரோ ஒருவரின் உதவியை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். இதேப்போன்ற ஒரு மனநிலையோடு ஏன் பைபிளை அணுகக்கூடாது? (அப்போஸ்தலர் 17:11) பொருள் சம்பந்தமான ஒரு பரம்பரைச் சொத்தைவிட அதிகம் ஆபத்திலிருக்கிறது. முந்தைய அதிகாரத்தில் நாம் கற்றுக்கொண்ட விதமாகவே, தேவனை அறியும் அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும்.
4தேவனை அறியும் அறிவை வெளிப்படுத்தும் அந்தப் புத்தகத்தை நாம் ஆராய்வோமாக. முதலில் பைபிளின் பொதுவான சுருக்கத்தைக் கொடுப்போம். அதற்குப் பின்பு, தகவலறிந்த அநேகர் ஏன் இது கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை என்பதாக நம்புகிறார்கள் என்பதற்கான காரணங்களை நாம் சிந்திப்போம்.
பைபிளில் என்ன அடங்கியிருக்கிறது
5பைபிள் பெரும்பாலும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் இரண்டு பகுதிகளில் 66 புத்தகங்களைக் கொண்டிருக்கிறது. முப்பத்தொன்பது பைபிள் புத்தகங்கள் பெரும்பாலும் எபிரெயுவிலும் 27 கிரேக்கிலும் எழுதப்பட்டிருந்தன. ஆதியாகமம் முதல் மல்கியா வரை உள்ள எபிரெய வேதாகமம், படைப்பையும் மனித சரித்திரத்தின் முதல் 3,500 ஆண்டுகள் காலப்பகுதியையும் உள்ளடக்குகிறது. பைபிளின் இந்தப் பகுதியை ஆராய்கையில், பொ.ச.மு. 16-வது நூற்றாண்டில் ஒரு தேசமாக பிறப்பிக்கப்பட்ட சமயம் முதற்கொண்டு பொ.ச.மு. 5-வது நூற்றாண்டுவரை இஸ்ரவேலரோடு கடவுளுடைய செயல்தொடர்புகளைப் பற்றி நாம் கற்றறிகிறோம். a மத்தேயு முதல் வெளிப்படுத்துதல் வரையாக உள்ள புத்தகங்களைக் கொண்ட கிரேக்க வேதாகமம் பொ.ச. முதல் நூற்றாண்டின்போது இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சீஷர்களின் போதனைகள் மற்றும் நடவடிக்கைகளின்மீது கவனத்தை ஊன்றவைக்கிறது.
6“பழைய ஏற்பாடு” யூதர்களுக்கென்றும் “புதிய ஏற்பாடு” கிறிஸ்தவர்களுக்கென்றும் சிலர் சொல்கின்றனர். ஆனால் 2 தீமோத்தேயு 3:16, 17-ன்படி, ‘வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.’ ஆகவே, சரியாக வேதவாக்கியங்களைப் படிப்பது முழு பைபிளையும் உட்படுத்தவேண்டும். உண்மையில், பைபிளின் இரண்டு பாகங்களும் ஒன்றையொன்று நிறைவுசெய்வதாய், அனைத்தையும் உள்ளிட்ட ஒரு பொருளைப் படிப்படியாக விவரிப்பதற்காக கலந்து ஒன்றுபடுகின்றன.
7ஒருவேளை பல ஆண்டுகள் நீங்கள் மத ஆராதனைக் கூட்டங்களில் ஆஜராயிருந்து அங்கு பைபிளின் சில பகுதிகள் சப்தமாக வாசிக்கப்படுவதைக்
கேட்டிருக்கலாம். அல்லது நீங்கள்தாமே அதின் சில பாகங்களை வாசித்திருக்கலாம். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரையாக பைபிள் பொதுவான ஒரு செய்தியைக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஒத்திசைவான ஒரு பொருள் பைபிள் முழுவதிலும் பரவியிருக்கிறது. அந்தப் பொருள் என்ன? அது மனிதவர்க்கத்தை ஆளுவதற்கான கடவுளுடைய உரிமையை நியாயநிரூபணம் செய்வதும் அவருடைய ராஜ்யத்தின் மூலமாக அவருடைய அன்புள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதுமாகும். இந்த நோக்கத்தைக் கடவுள் எவ்வாறு உண்மையில் நிறைவேற்றுவார் என்பதை பின்னால் நாம் பார்க்கலாம்.8கடவுளுடைய நோக்கத்தை விவரிப்பதோடுகூட, பைபிள் அவருடைய ஆளுமையை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, கடவுளுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதையும் நாம் செய்யும் தெரிவுகள் அவருக்கு முக்கியத்துவமுடையவையாக இருக்கின்றன என்பதையும் பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். (சங்கீதம் 78:40, 41; நீதிமொழிகள் 27:11; எசேக்கியேல் 33:11) சங்கீதம் 103:8-14 கடவுள் “உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்,” என்பதாகச் சொல்கிறது. ‘நாம் மண்ணென்றும்’ மரணத்தின்போது மண்ணுக்குத் திரும்புகிறோம் என்பதையும் ‘நினைவில்கொண்டு’ அவர் நம்மை இரக்கமாக நடத்துகிறார். (ஆதியாகமம் 2:7; 3:19) என்னே மகத்தான பண்புகளை அவர் வெளிப்படுத்துகிறார்! இப்படிப்பட்ட ஒரு கடவுளை அல்லவா நீங்கள் வணங்க விரும்புவீர்கள்?
9பைபிள் கடவுளுடைய தராதரங்களைப் பற்றிய தெளிவான கருத்தை நமக்கு அளிக்கிறது. இவை சில சமயங்களில் கட்டளைகளாக சொல்லப்பட்டிருக்கின்றன. என்றபோதிலும், அநேக சமயங்களில் அவை பொருட்பாடங்கள் வாயிலாக கற்பிக்கப்படும் நியமங்களில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய இஸ்ரவேல வரலாற்றில் நடைபெற்ற ஒருசில சம்பவங்களை நம்முடைய நன்மைக்காக கடவுள் எழுதிவைக்கப்படும்படி செய்தார். மனிதர்கள் கடவுளுடய நோக்கங்களுக்கு இசைவாக வேலைசெய்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் அவர்களுடைய சொந்த வழியில் செல்லும்போது வருகிற வருத்தமான விளைவுகளைப் பற்றியும் இந்தத் தெளிவான பதிவுகள் காண்பிக்கின்றன. (1 இராஜாக்கள் 5:4; 11:4-6; 2 நாளாகமம் 15:8-15) இப்படிப்பட்ட உண்மை வாழ்க்கை பதிவுகளை வாசிப்பது சந்தேகமின்றி நம்முடைய இருதயங்களைத் தொடுவதாக இருக்கும். பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களை நாம் கற்பனைசெய்து பார்க்க முயன்றால், அவற்றில் உட்பட்டிருந்த ஆட்களோடு நம்மை அடையாளம் காணமுடியும். இவ்விதமாக, நல்ல உதாரணங்களிலிருந்து நாம் நன்மையடையவும் தவறுசெய்தவர்களைச் சிக்க வைத்த படுகுழிகளை நாம் தவிர்க்கவும் முடியும். என்றபோதிலும், இந்த இன்றியமையாத கேள்வி ஒரு பதிலைத் தேவைப்படுத்துகிறது: நாம் பைபிளில் வாசிப்பவை உண்மையில் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டதென்று நாம் எவ்விதமாக நிச்சயமாயிருக்கலாம்?
நீங்கள் பைபிளை நம்பமுடியுமா?
10ஆலோசனை அளிக்கும் அநேக புத்தகங்கள் ஒருசில வருடங்களில் காலத்துக்கு ஒவ்வாமல் போய்விடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். பைபிளைப் பற்றி என்ன? அது மிகப் பழமையானது, அதன் கடைசி வார்த்தைகள் எழுதப்பட்டது முதற்கொண்டு ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. ஆகவே நம்முடைய நவீன சகாப்தத்துக்கு அது பொருத்தமற்றது என்பதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டதென்றால், அதிக பழமையானதாக இருப்பினும் அதன் ஆலோசனை எப்பொழுதும் காலத்துக்கொத்ததாக இருக்க வேண்டும். வேதவாக்கியங்கள் இன்னும் “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிரு”க்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:16, 17.
11பைபிள் நியமங்கள் அவை முதலில் எழுதப்பட்ட சமயத்தில் இருந்தவிதமாகவே இன்றும் பொருந்துகின்றன என்பதை கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பது வெளிப்படுத்துகிறது. உதாரணமாக மனித இயல்பின் சம்பந்தமாக, மனிதவர்க்கத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் பொருந்துகின்ற தெளிவான புரிந்துகொள்ளுதலைப் பைபிள் பிரதிபலிக்கிறது. மத்தேயு புத்தகத்தில் அதிகாரங்கள் 5 முதல் 7 வரையில் காணப்படும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் இதை நாம் எளிதில் காணமுடியும். இந்தப் பிரசங்கம் காலஞ்சென்ற இந்திய தலைவரான மோகன்தாஸ் கே. காந்தியை அவ்வளவாக கவர்ந்த காரணத்தால் அவர் பிரிட்டிஷ் ராஜ பிரதிநிதி ஒருவரிடம் இவ்வாறு சொன்னதாக அறிவிக்கப்படுகிறது: “கிறிஸ்து இந்த மலைப்பிரசங்கத்தில் சொன்ன போதனைகளின்படி உங்களுடைய நாடும் என்னுடைய நாடும் வாழ்ந்தால், நம்முடைய நாடுகளின் பிரச்சினைகளை மாத்திரமல்ல, முழு உலகத்தினுடைய பிரச்சினைகளையும் நாம் தீர்த்துவிட்டிருப்போம்.”
12இயேசுவின் போதனைகளால் மக்கள் கவரப்படுவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! மலைப்பிரசங்கத்தில் உண்மையான மகிழ்ச்சிக்குரிய வழியை அவர் நமக்குக் காண்பித்தார். சச்சரவுகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதை அவர் விளக்கினார். எவ்வாறு ஜெபிப்பது என்பதன் பேரில் இயேசு போதனைகளை வழங்கினார். பொருளாதார தேவைகளைக் குறித்த ஞானமுள்ள மனநிலையை அவர் சுட்டிக்காண்பித்து, மற்றவர்களோடு சரியான உறவுகளைக் காத்துக்கொள்வதற்கு பொன்விதியைக் கொடுத்தார். மத சம்பந்தமான மோசடிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் எவ்விதமாக பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை அனுபவிப்பது போன்ற குறிப்புகள் இந்தப் பிரசங்கத்தில் இடம்பெற்றிருந்தன.
13மலைப்பிரசங்கத்திலும் அதனுடைய மற்ற பக்கங்கள் முழுவதிலுமாக, வாழ்க்கையில் நம்முடைய தனிப்பட்ட நிலைமைகளை முன்னேற்றுவிப்பதற்கு எதைச் செய்ய வேண்டும் மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை பைபிள் நமக்குத் தெளிவாக சொல்கிறது. அதனுடைய புத்திமதி நடைமுறைக்கு அவ்வளவு பயனுள்ளதாக இருப்பதன் காரணமாக கல்வியாளர் ஒருவர் இவ்வாறு சொல்ல தூண்டப்பட்டார்: “இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு பயின்று, மன ஆரோக்கியம் மற்றும் மனவியல் பற்றிய புத்தகங்களை ஏராளமாக வாசித்திருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி ஆலோசகராக இருந்தபோலும், வெற்றிகரமான திருமணத்தைக் கொண்டிருத்தல், சிறார் குற்றச்செயலைத் தடுத்தல், நண்பர்களை எவ்வாறு பெற்று காத்துக்கொள்வது போன்ற காரியங்களில் பைபிளின் புத்திமதி, நான் வாசித்திருக்கும் அல்லது கல்லூரியில் படித்திருக்கும் எதைக் காட்டிலும் மிக அதிக உயர்ந்ததாக இருப்பதை நான் கண்டேன்.” நடைமுறைக்கு ஏற்றதாயும் காலத்துக்கொத்ததாயும் இருப்பதோடுகூட பைபிள் நம்பத்தகுந்ததாயும் இருக்கிறது.
திருத்தமானதும் நம்பகமானதும்
14பைபிள் ஒரு அறிவியல் பாடபுத்தகமாக இல்லாவிட்டாலும், அது அறிவியல்பூர்வமாக திருத்தமாக உள்ளது. உதாரணமாக, பூமி தட்டையானது என்பதாக பெரும்பாலான ஆட்கள் நம்பிக்கொண்டிருந்த சமயத்தில், ஏசாயா தீர்க்கதரிசி அதை ஒரு “உருண்டை” (எபிரெயுவில் சூக் [chugh], “கோளம்” என்ற கருத்தை தெரிவிக்கிறது) என்பதாக குறிப்பிட்டார். (ஏசாயா 40:22) ஏசாயாவின் நாளுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வரையாக கோள வடிவ பூமி பற்றிய கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலுமாக, யோபு 26:7—3,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது—கடவுள் “பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்,” என்று சொல்கிறது. பைபிள் கல்விமான் ஒருவர் சொல்வதாவது: “காணக்கூடிய ஆதாரம் எதுவுமின்றி காலியான விண்வெளியில் பூமி தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதாக வானியல் மெய்ப்பித்துக்காட்டும் உண்மையை யோபு எவ்விதமாக அறிந்திருந்தார் என்பது பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதை மறுதலிப்பவர்களால் எளிதாக விடைகாண முடியாத கேள்வியாகும்.”
15பைபிளில் செய்தி அறிவிக்கப்படும் பாணியும்கூட இந்தப் பழமையான புத்தகத்தில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. கட்டுக்கதைகளைப் போல் இல்லாமல், பைபிளில் பதிவாகியுள்ள சம்பவங்கள் திட்டவட்டமாக மக்களோடும் தேதிகளோடும் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. (1 இராஜாக்கள் 14:25; ஏசாயா 36:1; லூக்கா 3:1, 2) பண்டைய வரலாற்றாசிரியர்கள் ஏறக்குறைய எப்போதும் தங்கள் ஆட்சியாளர்களின் வெற்றிகளை மிகைப்படுத்தியும் தங்கள் தோல்விகளையும் தவறுகளையும் மறைத்தும்விடுகையில், பைபிள் எழுத்தாளர்கள் கபடமில்லாமலும் நேர்மையாகவும் இருந்தனர்—தங்களுடைய சொந்த வினைமையான பாவங்களைக் குறித்ததிலும்கூட அவர்கள் அவ்விதமாகவே இருந்தனர்.—எண்ணாகமம் 20:7-13; 2 சாமுவேல் 12:7-14; 24:10.
ஒரு தீர்க்கதரிசனப் புத்தகம்
16நிறைவேறிமுடிந்த தீர்க்கதரிசனம் பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதற்கு நம்பவைக்கிற அத்தாட்சியை அளிக்கிறது. நுட்பமான விவரங்களோடு நிறைவேறிமுடிந்த அநேக தீர்க்கதரிசனங்களை பைபிள் தன்னகத்தே கொண்டிருக்கிறது. தெளிவாக, வெறும் மனிதர்கள் இதற்குப் பொறுப்பாயிருக்க முடியாது. அப்படியென்றால், இந்தத் தீர்க்கதரிசனங்களுக்குப் பின்னால் இருப்பது என்ன? “தீர்க்கதரிசனமானது 2 பேதுரு 1:21) ஒருசில உதாரணங்களைச் சிந்தியுங்கள்.
ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்தஆவியினாலே [“கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியினாலே,” NW] ஏவப்பட்டுப் பேசினார்கள்,” என்பதாக பைபிள்தானே சொல்கிறது. (17 பாபிலோனின் வீழ்ச்சி. பாபிலோன் மேதிய பெர்சியர்களின் மூலமாக வீழ்ச்சியடையும் என்பதை ஏசாயாவும் எரேமியாவும் முன்னறிவித்தனர். பாபிலோன் கைப்பற்றப்படுவதற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தச் சம்பவத்தைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்! தீர்க்கதரிசனத்தின் பின்வரும் அம்சங்கள் இப்பொழுது சரித்திரப்பூர்வமாக ஆதாரத்துடன் உறுதிசெய்யப்பட்டுள்ளன: ஒரு செயற்கை ஏரியில் தண்ணீர்களைத் திருப்பிவிடுவதன் மூலம் ஐபிராத்து நதி வறண்டுபோனது. (ஏசாயா 44:27; எரேமியா 50:38); பாபிலோன் ஆற்றின் மதகுகள் பொறுப்பற்று பாதுகாக்கப்படாதிருந்தன (ஏசாயா 45:1); கோரேசு என்ற பெயருள்ள ஒரு அரசனின் வெற்றி.—ஏசாயா 44:28.
18 “கிரேக்கு தேசத்தின் ராஜா”வுடைய எழுச்சியும் வீழ்ச்சியும். ஒரு தரிசனத்தில் தானியேல் ஒரு வெள்ளாட்டுக்கடா ஒரு ஆட்டுக்கடாவின் மேல் பாய்ந்து அதன் இரண்டு கொம்புகளை முறித்துப்போடக் கண்டார். பின்னர் வெள்ளாட்டுக்கடாவின் பெரிய கொம்பு முறிக்கப்பட்டது, அதற்குப் பதிலாக அதனிடத்தில் நாலு கொம்புகள் முளைத்தெழும்பின. (தானியேல் 8:1-8) தானியேலுக்கு இவ்வாறு விளக்கப்பட்டது: “நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.” (தானியேல் 8:20-22) இந்தத் தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக, சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், “கிரேக்கு தேசத்தின் ராஜா” மகா அலெக்ஸாந்தர் இரண்டு கொம்புகளுள்ள மேதிய பெர்சிய பேரரசை தோற்கடித்துவிட்டார். அலெக்ஸாந்தர் பொ.ச.மு. 323-ல் மரித்துப்போனார், அவருடைய இடத்தை அவருடைய நான்கு தளபதிகள் கைப்பற்றினர். என்றபோதிலும், பின்வந்த இந்த ராஜ்யங்கள் எதுவுமே அலெக்ஸாந்தருடைய பேரரசின் வல்லமைக்கு இணையாக இருக்கவில்லை.
19 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை. எபிரெய வேதாகமம் இயேசுவின் மீகா 5:2; லூக்கா 2:4-7) மேசியா அடிக்கவும் துப்பவும்படுவார் என்பதாக மீகாவோடு சமகாலத்தில் வாழ்ந்த ஏசாயா முன்னுரைத்தார். (ஏசாயா 50:6; மத்தேயு 26:67) ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, மேசியா 30 வெள்ளிக்காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கப்படுவார் என்பதை சகரியா தீர்க்கதரிசனமாகச் சொன்னார். (சகரியா 11:12; மத்தேயு 26:15) ஓராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கும் முன்னரே, மேசியாவாகிய இயேசுவின் மரணத்தோடு சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகளை தாவீது முன்னுரைத்தார். (சங்கீதம் 22:7, 8, 18; மத்தேயு 27:35, 39-43) சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, மேசியா எப்பொழுது தோன்றுவார், அவருடைய ஊழியம் நீடிக்கும் காலம் மற்றும் அவருடைய மரணத்தின் சமயம் ஆகியவற்றை தானியேலின் தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தியது. (தானியேல் 9:24-27) இயேசு கிறிஸ்துவில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களுக்கு இது வெறும் ஒரு மாதிரியே ஆகும். பின்னால் அவரைப் பற்றி இன்னும் அதிகத்தை வாசிப்பது பலனளிப்பதாக நீங்கள் காண்பீர்கள்.
பிறப்பு, ஊழியம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் நிறைவேறிய மிகப் பல தீர்க்கதரிசனங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. உதாரணமாக, 700-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகவே, மேசியா அல்லது கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்பதாக மீகா முன்னுரைத்தார். (தீத்து 1:3) மேலுமாக, நாம் வேதவாக்கியங்களை வாசித்து அவற்றின் ஆலோசனையைப் பொருத்துகையில், மனிதர்கள் சொந்தமாக முயன்று அடைய முடியாத ஞானத்தை நாம் அப்பியாசிக்கிறோம், ஏனென்றால் பைபிள் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற தேவனை அறியும் அறிவை வெளிப்படுத்தும் ஒரு புத்தகமாகும்.
20நீண்டகால எல்லையை உட்படுத்தும் மற்ற அநேக பைபிள் தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டிருக்கின்றன. ‘ஆனால் இது என்னுடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். சரி, எவரோ ஒருவர் அநேக வருடங்களாக உங்களிடம் உண்மையே சொல்லிவந்திருக்கையில், புதியதாக ஏதோவொன்றைச் சொன்னால் நீங்கள் திடீரென்று அவரைச் சந்தேகிப்பீர்களா? இல்லை! கடவுள் பைபிள் முழுவதிலும் உண்மையையே சொல்லியிருக்கிறார். வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸ் சம்பந்தமான தீர்க்கதரிசனங்கள் போன்ற பைபிளின் வாக்குறுதிகளில் இது உங்கள் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் அல்லவா? ஆம், ‘கடவுள் பொய் சொல்லக்கூடாதவர்,’ என்பதாக எழுதிய இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களில் ஒருவரான பவுல் கொண்டிருந்த அதே நம்பிக்கையை நாமும் கொண்டிருக்கலாம். (தேவனை அறியும் அறிவுக்காக “வாஞ்சையாயிருங்கள்”
21பைபிளை நீங்கள் படிக்கையில், கடந்த காலத்தில் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருப்பவற்றிலிருந்து வித்தியாசப்படும் காரியங்களை நீங்கள் கற்றுக்கொள்ள எதிர்பார்க்கலாம். நீங்கள் மிகவும் போற்றிவந்த மதசம்பந்தமான சில பழக்கங்கள் கடவுளைப் பிரியப்படுத்துவதில்லை என்பதையும்கூட நீங்கள் காணக்கூடும். கட்டுப்பாடில்லாத இந்த உலகில் பொதுவாயுள்ளவற்றைவிட உயர்ந்ததாக இருக்கும் சரி மற்றும் தவறு பற்றிய தராதரங்கள் கடவுளுக்கு இருப்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். முதலில் இது அளவுக்கு அதிகமாக மிக கண்டிப்பானதாக தோன்றலாம். ஆனால் பொறுமையாயிருங்கள்! தேவனை அறியும் அறிவை கண்டுபிடிப்பதற்கு வேதவாக்கியங்களை கவனமாக ஆராய்ந்து பாருங்கள். பைபிளின் ஆலோசனை உங்களுடைய சிந்தனையிலும் செயல்களிலும் சரிப்படுத்துதல்களைத் தேவைப்படுத்தக்கூடும் என்பதை ஏற்க மனமுள்ளவர்களாயிருங்கள்.
22நல்ல நோக்கமுள்ள நண்பர்களும் உறவினர்களும் நீங்கள் பைபிள் படிப்பதை எதிர்க்கக்கூடும், ஆனால் இயேசு சொன்னார்: “மனுஷர் முன்பாக மத்தேயு 10:32, 33) நீங்கள் ஒரு மத உட்பிரிவோடு உங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றோ அல்லது ஒரு மதவெறியனாக மாறிவிடுவீர்கள் என்றோ அவர்கள் பயப்படக்கூடும். என்றபோதிலும், உண்மையில், நீங்கள் வெறுமனே தேவனைப் பற்றியும் அவருடைய சத்தியத்தைப் பற்றியும் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ளவே முயன்றுவருகிறீர்கள். (1 தீமோத்தேயு 2:3, 4) மற்றவர்கள் இதைப் புரிந்துகொள்வதற்கு, நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுகையில் தர்க்கம் செய்கிறவர்களாக இல்லாமல், நியாயத்தன்மையோடிருங்கள். (பிலிப்பியர் 4:5) பைபிள் அறிவு உண்மையில் மக்களுக்குப் பிரயோஜனமாயிருப்பதற்கான அத்தாட்சியை அவர்கள் காண்கையில் அநேகர் “போதனையின்றி,” “ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்,” என்பதை நினைவில் வையுங்கள்.—1 பேதுரு 3:1, 2.
என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” (23பைபிள் நம்மைத் துரிதப்படுத்துகிறது: “புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு 2:2) ஒரு குழந்தை போஷாப்புக்காக தன்னுடைய தாயின் மேல் சார்ந்திருந்து அந்தத் தேவைப் பூர்த்திசெய்யப்படுவதை வற்புறுத்துகிறது. அதேவிதமாகவே, நாம் தேவனிடமிருந்து வரும் அறிவின்பேரில் சார்ந்திருக்கிறோம். உங்கள் படிப்பைத் தொடருவதன் மூலம் அவருடைய வார்த்தைக்காக “வாஞ்சையாயிருங்கள்.” ஆம், பைபிளை தினந்தோறும் வாசிப்பதை உங்கள் இலக்காக்கிக் கொள்ளுங்கள். (சங்கீதம் 1:1-3) இது மிகுதியான ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொண்டுவரும், ஏனென்றால் சங்கீதம் 19:11 கடவுளுடைய பிரமாணங்களைப் பற்றி சொல்கிறது: “அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.”
[அடிக்குறிப்புகள்]
a பொ.ச.மு. என்பது “பொது சகாப்தத்துக்கு முன்” என்று பொருள்படுகிறது, இது கி.மு.-வை (கிறிஸ்துவுக்கு முன்) விட அதிக துல்லியமானதாகும். பொ.ச. என்பது “பொது சகாப்தத்தைக்” குறிக்கிறது, இது பெரும்பாலும் கி.பி. என்று அழைக்கப்படுகிறது; “கிறிஸ்துவுக்குப் பின்” என்பதைக் குறிக்கிறது.
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
என்ன விதங்களில் பைபிள் ஈடிணையற்றதாக இருக்கிறது?
நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்?
பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை என்பதை உங்களுக்கு எது நிரூபிக்கிறது?
[கேள்விகள்]
1, 2. நம்முடைய படைப்பாளரின் வழிநடத்துதல் நமக்கு ஏன் தேவையாக இருக்கிறது?
3, 4. (அ) பைபிளைப் படிக்க நாம் எவ்வாறு அணுகவேண்டும்? (ஆ) பைபிளை ஆராய்வதை நாம் எவ்வாறு தொடருவோம்?
5. (அ) எபிரெய வேதாகமத்தில் என்ன அடங்கியிருக்கிறது? (ஆ) கிரேக்க வேதாகமத்தில் என்ன அடங்கியிருக்கிறது?
6. முழு பைபிளையும் நாம் ஏன் படிக்கவேண்டும்?
7. பைபிளின் பொருள் என்ன?
8. கடவுளுடைய ஆளுமையைப் பற்றி பைபிள் வெளிப்படுத்துவது என்ன?
9. பைபிள் எவ்விதமாக கடவுளுடைய தராதரங்களைப் பற்றிய தெளிவான கருத்தை நமக்கு அளிக்கிறது, இப்படிப்பட்ட அறிவிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
10. (அ) பைபிள் காலத்திற்கு ஒவ்வாதது என்பதாக ஏன் சிலர் நினைக்கின்றனர்? (ஆ) 2 தீமோத்தேயு 3:16, 17 பைபிளைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?
11-13. பைபிள் நம்முடைய நாளுக்கு நடைமுறையில் பயனுள்ளது என்பதாக நாம் ஏன் சொல்லமுடியும்?
14. பைபிள் அறிவியல்பூர்வமாக திருத்தமாக இருப்பதை எது காட்டுகிறது?
15. பைபிளில் செய்தி அறிவிக்கப்படும் பாணியினால் அதன்பேரில் நம்பிக்கை எவ்விதமாக பலப்படுத்தப்படுகிறது?
16. பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதற்கு மிக பலமான அத்தாட்சி எது?
17. பாபிலோனின் வீழ்ச்சியை எந்தத் தீர்க்கதரிசனங்கள் முன்னுரைத்தன, இவை எவ்வாறு நிறைவேறின?
18. “கிரேக்கு தேசத்தின் ராஜா”வுடைய எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் பைபிள் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
19. இயேசு கிறிஸ்துவில் என்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடைந்தன?
20. நிறைவேறிமுடிந்த தீர்க்கதரிசனத்தைப் பற்றிய பைபிளின் பூரண பதிவு என்ன நம்பிக்கையை நமக்குக் கொடுக்க வேண்டும்?
21. பைபிளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் சில காரியங்கள் அளவுக்கு அதிகமாக மிக கண்டிப்பானதாக தோன்றினால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
22. பைபிளை நீங்கள் ஏன் படிக்கிறீர்கள், மற்றவர்கள் இதைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?
23. தேவனை அறியும் அறிவுக்காக நீங்கள் எவ்வாறு ‘வாஞ்சையாக’ இருக்கலாம்?
[பக்கம் 14-ன் பெட்டி]
உங்கள் பைபிளை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்
பைபிளோடு பழக்கப்பட்டவராவது கடினமாக இருக்கவேண்டியதில்லை. பைபிள் புத்தகங்களின் வரிசையையும் இடத்தையும் கற்றுக்கொள்ள அதனுடைய பொருளடக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பைபிளின் புத்தகங்கள் எளிதில் எடுத்துப்பார்ப்பதற்கு ஏதுவாக அதிகாரங்களையும் வசனங்களையும் கொண்டிருக்கின்றன. அதிகாரங்களின் பிரிவுகள் 13-வது நூற்றாண்டில் சேர்க்கப்பட்டன, 16-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு அச்சடிப்பாளர் கிரேக்க வேதாகமத்தை இப்போதிருக்கும் வசனங்களாக தெளிவாய் பிரித்தார். அதிகாரம் மற்றும் வசனங்களுடைய எண்களின் பிரிவுகளைக் கொண்ட முதல் முழு பைபிள் 1553-ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு பதிப்பாகும்.
வசனங்கள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்படுகையில், முதல் எண் அதிகாரத்தையும் அடுத்த எண் வசனத்தையும் குறிப்பிடுகிறது. உதாரணமாக, “நீதிமொழிகள் 2:5” என்ற இடக்குறிப்பு நீதிமொழிகள் புத்தகம், 2-ஆம் அதிகாரம் 5-ஆம் வசனத்தைக் குறிக்கிறது. இடக்குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களை எடுத்துப்பார்ப்பதன் மூலம், பைபிள் வசனங்களை உங்களால் எளிதில் கண்டுபிடிக்க முடிவதை நீங்கள் காண்பீர்கள்.
பைபிளோடு பழக்கப்பட்டவராவதற்கு மிகச் சிறந்த வழி அதைத் தினந்தோறும் வாசிப்பதாகும். முதலில், இது ஒரு சவாலாக தோன்றக்கூடும். ஆனால் அவற்றின் நீளத்தைப் பொருத்து, நீங்கள் ஒரு நாளுக்கு மூன்றிலிருந்து ஐந்து அதிகாரங்களை வாசித்தால் முழு பைபிளையும் ஒரு வருடத்திற்குள் வாசித்து முடித்துவிடுவீர்கள். இன்றே ஏன் ஆரம்பிக்கக்கூடாது?
[பக்கம் 19-ன் பெட்டி]
பைபிள்—ஈடிணையற்ற ஒரு புத்தகம்
•பைபிள் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) மனிதர்களைக்கொண்டு எழுதப்பட்டபோதிலும், பைபிள் உண்மையில் ‘தேவவசனமாக’ இருப்பதற்காக கடவுள் அவர்களுடைய எண்ணங்களை வழிநடத்தினார்.—1 தெசலோனிக்கேயர் 2:13.
•பைபிள் 16 நூற்றாண்டு காலப்பகுதியினூடாக எழுதப்பட்டது, வித்தியாசப்பட்ட பின்னணிகளிலிருந்து வந்த சுமார் 40 பேர் அதில் பங்கெடுத்தனர். என்றபோதிலும், முழு பைபிளும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரையாக ஒத்திசைவாக இருக்கிறது.
•வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் பைபிள் அதிகமான கருத்துவேறுபாடுகளைக் கடந்துவந்திருக்கிறது. இடைநிலைக் காலத்தின்போது, வெறுமனே பைபிளின் ஒரு பிரதியை வைத்திருந்த காரணத்துக்காகவே மக்கள் கழுமரத்தில் உயிரோடு எரிக்கப்பட்டனர்.
•பைபிள் உலகிலேயே முதன்மையாக விற்பனையாகும் நூலாக இருக்கிறது. அது முழுமையாகவோ பகுதியாகவோ 2,000-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன, பூமியில் ஒரு பிரதியைப் பார்க்கமுடியாத இடமே இல்லை.
•பைபிளின் மிகப் பழமையான பகுதி பொ.ச.மு. 16-வது நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது இந்து மத ரிக் வேதம் (சுமார் பொ.ச.மு. 1300) அல்லது புத்தமத “மூன்று கூடைகளின் திருமுறை” (பொ.ச.மு. ஐந்தாவது நூற்றாண்டு), அல்லது இஸ்லாமிய குர்ஆன் (பொ.ச. ஏழாவது நூற்றாண்டு), மற்றும் ஷின்டோ மதத்தினரின் நிஹோன்ஜி (பொ.ச. 720) தோன்றுவதற்கு முன்பாக ஆகும்.
[பக்கம் 20-ன் முழு படம்]