இந்த “உலகத்தின் முடிவு” நெருங்கியிருக்கிறது!
அதிகாரம் 18
இந்த “உலகத்தின் முடிவு” நெருங்கியிருக்கிறது!
இயேசு கிறிஸ்து சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிப்போட்டு தம்முடைய ராஜ்ய ஆட்சியைத் தொடங்கினபோது, சாத்தானுக்கும் அவனுடைய பொல்லாத ஒழுங்குமுறைக்கும் முடிவு நெருங்கிவிட்டதென்பதை அர்த்தப்படுத்தியது. (வெளிப்படுத்துதல் 12:7-12) ஆனால், தங்கள் கண்களுக்கு காணப்படாமல், பரலோகத்தில் நடக்கும் இந்தச் சம்பவம், நடந்தேறிவிட்டதென்று, பூமியிலிருக்கிறவர்களாகிய கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் எப்படித் தெரிந்துகொள்ளக்கூடும்? ராஜ்ய அதிகாரத்தில் கிறிஸ்து காணக்கூடாதவராக வந்திருந்தார் என்றும் இந்த “உலகத்தின் முடிவு” நெருங்கிவிட்டிருந்ததென்றும் அவர்கள் எப்படித் தெரிந்துகொள்ளக்கூடும்? இயேசு கொடுத்த அந்த “அடையாளம்” நிறைவேற்றமடைந்திருந்ததாவென்று ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் அவர்கள் தெரிந்துகொள்ளக்கூடும்.
2 இயேசுவின் மரணத்துக்குச் சில நாட்களுக்கு முன்பாக, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய அப்போஸ்தலரில் நான்கு பேர் அவரிடம் ஓர் “அடையாளத்தைக்” கேட்கும்படி வந்தனர். தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் அவர்களுடைய கேள்வி பின்வருமாறு பலரால் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும்.” (மத்தேயு 24:3) ஆனால் “உம்முடைய வருகைக்கும்,” “உலகத்தின் முடிவுக்கும்” என்ற இந்தச் சொற்றொடர்களின் உண்மையான பொருள் என்ன?
3 “வருகை” என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதன் கிரேக்கப் பதம் பரொசீயா என்பதாகும், இதன் பொருள் “வந்திருப்பது” என்பதாகும். அப்படியானால், அந்த “அடையாளம்” காணப்படுகையில், இது, கிறிஸ்துவைப் பார்க்க முடியாதபோதிலும் அவர் வந்திருக்கிறார் என்றும், ஏற்கெனவே ராஜ்ய அதிகாரத்தில் வந்துவிட்டார் என்றும் நாம் தெரிந்துகொள்வோமென்று பொருள்படும். “உலகத்தின் முடிவு” என்ற சொற்றொடரும் வெகுவாய்த் தவறாக வழி நடத்துகிறது. இது இந்தப் பூமியின் முடிவைக் குறிக்கிறதில்லை, அதற்கு மாறாக, சாத்தானின் காரிய ஒழுங்குமுறையின் முடிவையே குறிக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) ஆகவே இந்த அப்போஸ்தலரின் கேள்வி திருத்தமாய்ப் பின்வருமாறு இருக்கிறது: “இந்தக் காரியங்கள் எப்பொழுது சம்பவிக்கும், நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்? எங்களுக்குச் சொல்லும்.”—மத்தேயு 24:3, புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்).
4 இயேசு, வெறும் ஒரு சம்பவத்தை “அடையாளமாகக்” கொடுக்கவில்லை. அவர் பல சம்பவங்களையும் நிலைமைகளையும் குறிப்பிட்டார். மத்தேயு மட்டுமல்லாமல் மற்ற பைபிள் எழுத்தாளர்களும், இந்தக் “கடைசி நாட்களைக்” குறிக்கும் கூடுதலான சம்பவங்களைக் குறிப்பிட்டனர். முன்னறிவிக்கப்பட்ட இந்தக் காரியங்களெல்லாம், “கடைசி நாட்கள்” என்று பைபிள் எழுத்தாளர்கள் அழைத்த இந்தக் காலத்தின்போது நடைபெறும். (2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4) இந்தச் சம்பவங்களெல்லாம் ஓர் ஆளின் கைநாட்டுக் குறியை உண்டுபண்ணுகிற வெவ்வேறுபட்ட கோடுகளைப் போலிருக்கும், இந்தக் குறி வேறு எந்த ஆளுக்கும் உரியதாயிருக்க முடியாது. இந்தக் “கடைசி நாட்களுங்கூட” அவற்றின் சொந்தக் குறிகளின் தனிப்பட்ட மாதிரியை, அல்லது சம்பவங்களை உடையனவாக இருக்கின்றன. இவை, வேறு எந்தக் காலப் பகுதிக்கும் உரியதாயிருக்க முடியாத, உறுதிசெய்யப்பட்ட “கைநாட்டுக் குறி”யை உண்டுபண்ணுகின்றன.
5 1914-ல் கிறிஸ்து திரும்பி வந்து தம்முடைய சத்துருக்களின் மத்தியில் அரசாளத் தொடங்கிவிட்டார் என்பதற்குப் பைபிளின் அத்தாட்சியை நாம் இந்தப் புத்தகத்தின் 16-ம் அதிகாரத்தில் கவனித்தோம். இப்பொழுது கிறிஸ்து வந்திருப்பதைக் குறிக்கும் இந்த “அடையாளத்தின்” பற்பல அம்சங்களுக்கும் சாத்தானின் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களைக்” குறிக்கும் மேலுமான அத்தாட்சிகளுக்கும் கவனமாய்ப் பார்வையைச் செலுத்துங்கள். இந்த முன்னறிவிக்கப்பட்ட காரியங்களை நீங்கள் அடுத்த நான்கு பக்கங்களில் ஆராய்ந்து பார்க்கையில், அவை எப்படி 1914 முதற்கொண்டு நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கின்றனவென்பதைக் கவனியுங்கள்.
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.”—1914 முதல் அந்த “அடையாளத்தின்” இந்தப் பாகம் நிறைவேறி வருவதைக் கண்டிருக்கிறீர்கள்! 1914-ல் முதல் உலகப் போர் தொடங்கினது. அது சரித்திரத்திலேயே மிக பயங்கரமான போராக, அனைத்தும் உட்கொண்ட போராயிருந்தது. 1914-க்கு முன்பான 2,400 ஆண்டுகளில் நடந்த எல்லா போர்களைப் பார்க்கிலும் மிகப் பெரியது. என்றபோதிலும் 21 ஆண்டுளுக்குப் பின்பு, இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. அழிவோ நான்குமடங்கு அதிகம்.
பயங்கர போர்கள் தொடருகின்றன. 1945 முதல் பூமியில் நடந்துள்ள ஏறக்குறைய 150 போர்களில் 2 1/2 கோடி ஆட்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு சராசரி, 12 போர்கள் உலகத்தில் ஏதோவிடங்களில் நடந்திருக்கிறது. மற்றொரு உலகப் போரின் பயமும் இருக்கிறது. ஐக்கிய மாகாணங்கள் மாத்திரமே, பூமியிலுள்ள ஒவ்வொருவரையும், மாறி மாறி 12 தடவைகள் அழிப்பதற்குப் போதிய அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கிறது.
“உணவு குறைபாடுகள் இருக்கும்.”—மத்தேயு 24:7, NW.
முதல் உலகப் போரைத் தொடர்ந்து, சரித்திரத்திலேயே மிகப் பெரிய பஞ்சம் வந்தது. வட சீனாவில் மாத்திரம் ஒவ்வொரு நாளும் 15,000 பேர் பட்டினியால் மாண்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உலகத்தில் நான்கில் ஒரு பாகம் பட்டினி! அது முதல், பூமியில் பலருக்கு உணவு பற்றாக்குறைதான்.
“ஒவ்வொரு 8.6 வினாடிகளுக்கும், எவராவது ஒருவர் ஊட்டச்சத்துக் குறைவு நோயால் சாகின்றனர்,” என்று தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை 1967-ல் சொன்னது. இன்றும் ஆண்டுக்கு 5 கோடி மக்கள் சாகின்றனர்! 1980-க்குள், நான்கில் ஒரு பாகமான மக்கள் (100,00,00,000 ஆட்கள்) பட்டினியாயிருந்தனர். உணவு ஏராளமாயிருக்கிற இடங்களிலுங்கூட, பலர் அதை வாங்க முடியவில்லை.
லூக்கா 21:11, தி.மொ.
“இங்குமங்கும் . . . கொள்ளை நோய்கள்.”—முதல் உலகப் போரை அடுத்து ஸ்பானிஷ் காய்ச்சலினால் மாண்டவர்கள் சரித்திரத்திலேயே எந்தக் கொள்ளைநோயாலும் மாண்டவர்களைவிட அதிகம். சுமார் 2.1 கோடி! கொள்ளைநோய்கள் அதிகரிக்கின்றன. இருதயக்கோளாறினாலும் புற்று நோயாலும் இலட்சக்கணக்கானோர் மாளுகின்றனர். மேக நோய், மலேரியா, நத்தைக் காய்ச்சல், நதிக் குருடு ஆகிய பயங்கர நோய்களும் நாடு நாடாக, முக்கியமாய் ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்படுகின்றன.
“பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.”—மத்தேயு 24:7.
1914 முதல் பல பெரும் பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. சரித்திரத்தில் இவ்வளவு அதிகம் ஒருபோதும் ஏற்பட்டிருக்கவில்லை. பொ.ச. 856-ம் ஆண்டிலிருந்து 1914 வரை, பெரும் பூமியதிர்ச்சிகள் 24 மாத்திரமே ஏற்பட்டிருந்தன; சுமார் 19,73,000 உயிர்ச்சேதத்தை உண்டுபண்ணின. ஆனால் 1915- லிருந்து 1978 வரை 43 பெரும் பூமியதிர்ச்சிகளில் ஏறக்குறைய 16,00,000 ஆட்கள் மாண்டனர்.
“அக்கிரமம் மிகுதியாகும்.”—மத்தேயு 24:12.
அக்கிரமும் பெருங்குற்றச் செயல்களும் மிகுதியாகிக் கொண்டுவருகின்றன. கொலை, கற்பழித்தல், களவுகள் போன்ற வன்முறைக்குற்றச் செயல்கள் இப்பொழுது அத்துமீறி விட்டன. ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே, சராசரி, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு வினைமையான குற்றம் வீதம் செய்யப்பட்டு வருகிறது. பகல் நேரத்திலுங்கூட பாதுகாப்பாய் இருப்பதாக ஒருவரும் உணருகிறதில்லை. இரவில் மக்கள், வெளியில் செல்ல பயந்து, வீடுகளில் பூட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
“பயந்து . . . மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—பயம் இன்று தனித்தியங்கும் உணர்ச்சியாக இருக்கிறது. அணுசக்தி விஞ்ஞானியாகிய ஹெரல்ட் சி. யுரே பின்வருமாறு கூறினார்: “நாம் பயத்தில் சாப்பிட்டு, பயத்தில் தூங்கி, பயத்தில் வாழ்ந்து, பயத்தில் சாவோம்.” இது எப்பொழுதும் இருந்துவரும் அணுசக்தி போரின் பயமுறுத்தலின் பயம் அல்ல. தங்கள் பாதுகாப்பையும் உயிரையும் பயமுறுத்துகிற பெருங் குற்றச்செயல்கள், தூய்மைக் கேடு, நோய், பணவீக்கம் போன்ற பல காரியங்களுக்கும் மக்கள் பயப்படுகின்றனர்.
“பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள்.”—2 தீமோத்தேயு 3:2.
இன்று பெற்றோர் பிள்ளைகளை அடக்க முடியவில்லை. இளைஞர் எல்லா அதிகாரத்தையும் எதிர்க்கின்றனர். இளைஞரின் குற்றச்செயல் எல்லா நாடுகளையும் பாதிக்கின்றன. சில நாடுகளில், பாதிக்கு மேற்பட்ட குற்றச்செயல்கள், 10 முதல் 17 வயதினரால் செய்யப்படுகிறது. கொலை, கற்பழித்தல், திடீர் தாக்குதல், களவு, கொள்ளையிடுதல், வாகனங்களைத் திருடுதல் பிள்ளைகளால் செய்யப்படுகின்றன. பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை சரித்திரத்தில் இவ்வளவு சாதாரணமாக இருந்ததேயில்லை.
“பணப்பிரியர்.”—2 தீமோத்தேயு 3:2.
எங்கு பார்த்தாலும் பேராசையின் செயல்கள். பணத்துக்காக பலர் எதையுமே செய்யக்கூடும். அவர்கள் திருடவும் கொல்லவுங்கூடும். மற்றவர்களை நோய்ப்படுத்தி கொல்லக்கூடிய பொருட்களைப் பேராசைக்காரர் உண்டுபண்ணி விற்பதும் அசாதாரணமாயில்லை. வெளிப்படையாகவோ, அல்லது தாங்கள் வாழும் முறையிலோ, மக்கள் பணத்தைக் குறித்து: ‘இதுவே என் தெய்வம்,’ என்று சொல்கிறார்கள்.
“தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்.”—இன்று பெரும்பான்மையான மக்கள், கடவுளுக்குப் பிரியமானதை அல்ல, தங்களுக்குப் பிரியமானதையே செய்கின்றனர். கடவுள் கண்டனம் செய்பவற்றையே பலர் மிகவும் விரும்புகின்றனர். இவற்றில் வேசித்தனம், விபசாரம், குடிவெறி, மயக்க மருந்துகளின் துர்ப்பிரயோகமும் அடங்கியிருக்கின்றன. ஆரோக்கியமான இன்பங்களுங்கூட கடவுளை அறியவும் அவரைச் சேவிக்கவும் எடுக்கும் எந்த முயற்சிக்கும் முன்னதாக வைக்கப்படுகின்றன.
“தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக் கிறவர்கள்.”—2 தீமோத்தேயு 3:5.
உலகத் தலைவர்களும் மக்களும் தெய்வ பக்தியுள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் சர்ச் ஆராதனைகளுக்குப் போகலாம், காணிக்கைகளைக் கொடுக்கலாம். அரசு மக்கள் பைபிளின் மேல் கை வைத்து பதவிப் பிரமாணம் ஏற்கலாம். என்றாலும், இது “தெய்வ பக்தியின் வேஷமாகவே” இருக்கிறது. பைபிள் முன்னறிவித்ததைப் போல உண்மையான வணக்கம் இன்று அநேகர் வாழ்க்கையில் நன்மைக்கேதுவாய் ஒரு உண்மையான வல்லமையாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறதில்லை.
“பூமியைக் கெடுத்தல்.”—வெளிப்படுத்துதல் 11:18.
சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் தண்ணீரும், பயிர் விளையும் நிலமும் நச்சுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானி பாரி காமனர் எச்சரித்தார்: “இந்தப் பூமி தொடர்ந்து நச்சுப்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படாவிட்டால், இந்தக் கிரகம் மனித வாழ்க்கைக்குத் தகுதியற்றதாகிவிடுமென்று நான் எண்ணுகிறேன்.”
6 முன் கொடுக்கப்பட்டவற்றைக் கவனமாய்ப் பார்த்த பின்பு, கிறிஸ்து கொடுத்த அந்த “அடையாளமும்” அவருடைய சீஷர்களால் முன்னறிவிக்கப்பட்ட அத்தாட்சிகளும் இப்பொழுது நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கின்றனவென்பது தெளிவாய் இருக்கிறதல்லவா? மற்றும் பல நிரூபணங்கள் இருக்கிறபோதிலும், “கடைசி நாட்கள்” என்று பைபிள் முன்னறிவித்த அந்தக் காலத்தில் நாம் உண்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று காட்டுவதற்கு, இங்கே குறிப்பிட்டவை போதுமானதாயிருக்க வேண்டும்.
7 என்றபோதிலும்: ‘போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், பூமியதிர்ச்சிகள் போன்றவை சரித்திரம் முழுவதிலுமே அடிக்கடி நேரிட்டிருக்கின்றன. ஆகவே அவை மறுபடியுமாக நேரிடுமென்று முன்னறிவிப்பது கடினமாயிராது,’ என்று சில ஆட்கள் சொல்லக்கூடும். ஆனால் சிந்தித்துப் பாருங்கள்: பைபிள் இந்தக் காரியங்களை மட்டுமே முன்னறிவிக்கவில்லை, இவை உலகமெங்கும் விரிவான அளவில் நேரிடுமென்றும் தெரிவித்தது. மேலும், இவைகளெல்லாம் 1914-ல் உயிரோடிருந்த அந்தச் சந்ததியின்பேரில் நேரிடும் என்றுங்கூட பைபிள் சொன்னது. என்றபோதிலும் முதன்மை நிலையிலிருந்த உலகத் தலைவர்கள், 1914-க்கு முன்புதானே எதை முன்னறிவித்துக் கொண்டிருந்தனர்? உலக சமாதானத்தை வாக்குக் கொடுக்கும் நிலைமைகள் முன்னொருபோதும் இராதவண்ணமாய் அதிக ஆதரவாக இருந்தனவென்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். உலக சமாதானத்தை வாக்குக் கொடுக்கும் நிலைமைகள் முன்னொருபோதும் இராதவண்ணமாய் அதிக ஆதரவாக இருந்தனவென்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்றபோதிலும் பைபிள் முன்னறிவித்த இந்தப் பயங்கர இக்கட்டுகள் சரியான காலத்தில், 1914-ல் தொடங்கின! உண்மையில், 1914-ம் ஆண்டு சரித்திரத்திலேயே ஒரு திருப்புக் கட்டமாக இருந்ததென்று உலகத் தலைவர்கள் இப்பொழுது சொல்கின்றனர்.
8 1914 முதற்கொண்டு இருந்துவரும் இந்தக் காலப் பகுதியை முத்திரையிட்டிருக்கிற இந்தப் பல காரியங்களுக்குக் கவனத்தை இழுத்தப் பின்பு இயேசு பின்வருமாறு கூறினார்: “இவைகளெல்லாம் [இந்த ஒழுங்குமுறையின் முடிவு உட்பட] சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது.” (மத்தேயு 24:34, 14) எந்தச் சந்ததியை இயேசு கருதினார்? 1914-ல் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் அந்தச் சந்ததியையே இயேசு கருதினார். இந்தச் சந்ததியில் மீந்திருக்கிறவர்களாய் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற ஆட்கள் இப்பொழுது மிகவும் வயதானவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும், இவர்களில் சிலர், இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைக் காண இன்னும் உயிரோடிருப்பார்கள். ஆகவே இதைப் பற்றி நாம் உறுதியாயிருக்கலாம். அதாவது: இப்பொழுது சீக்கிரத்தில் எல்லா பொல்லாப்புக்கும் பொல்லாத ஆட்களுக்கும் அர்மகெதோனில் ஒரு திடீர் முடிவு உண்டாக்கும்.
[கேள்விகள்]
1. கிறிஸ்து பரலோகத்தில் அரசாளத் தொடங்கியிருக்கையில், அவரைப் பின்பற்றுகிறவர்களாய்ப் பூமியிலிருக்கிறவர்கள் அதை எப்படித் தெரிந்து கொள்வார்கள்?
2. கிறிஸ்துவின் சீஷர் அவரை என்ன கேள்வி கேட்டார்கள்?
3. (எ) “உம்முடைய வருகைக்கும்,” “உலகத்தின் முடிவுக்கும்” என்ற கூற்றுகளின் உண்மையான பொருள் என்ன? (பி) அப்படியானால், கிறிஸ்துவின் சீஷர்களால் கேட்கப்பட்ட அந்தக் கேள்வி எப்படித் திருத்தமாய் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது?
4. (எ) இயேசு கொடுத்த அந்த “அடையாளம்” எவற்றால் ஆகியது? (பி) எந்த முறையில் இந்த “அடையாளத்தை” ஒரு கைநாட்டுக் குறிக்கு ஒப்பிடலாம்?
5, 6. பின்தொடரும் பக்கங்களில் இந்தக் “கடைசி நாட்களின்” 11 அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்க்கையில் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்” பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்ளுகிறீர்கள்?
7. (எ) கிறிஸ்து வந்திருப்பதையும் “கடைசி நாட்களையும்” பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களை அவ்வளவாய் கவனிக்கத்தக்கதாக்குவது எது? (பி) பைபிள் முன்னறிவித்ததற்கு நேர்மாறாக உலகத் தலைவர்கள், 1914-க்கு முன்புதானே என்ன முன்னறிவித்துக் கொண்டிருந்தனர்?
8. (எ) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை எந்தச் சந்ததி காணுமென்று இயேசு தெரிவித்தார்? (பி) ஆகவே எதைப் பற்றி நாம் உறுதியாயிருக்கலாம்?
[பக்கம் 149-ன் படம்]
இயேசு, ராஜ்ய அதிகாரத்தில் தாம் காணக்கூடாதவராக வந்திருப்பதற்குக் காணக்கூடிய நிரூபணம் என்ன என்பதை சீஷருக்குச் சொன்னார்
[பக்கம் 154-ன் படம்]
அர்மகெதோன்
1914-ல் வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சந்ததியில் சிலர், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் கண்டு அதைத் தப்பிப்பிழைப்பார்கள்