Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபத்தின் மூலமாய் உதவியை அடைவது எப்படி?

ஜெபத்தின் மூலமாய் உதவியை அடைவது எப்படி?

அதிகாரம் 27

ஜெபத்தின் மூலமாய் உதவியை அடைவது எப்படி?

இந்த உலகத்தின் பொல்லாத செல்வாக்குக்கு அடிமைப்படாதபடி தங்களை வைத்துக்கொள்ள, ஜெபத்தின் மூலமாய் வரும் உதவி கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாய்த் தேவை. ‘பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பார்’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 11:13) நாம் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் அவருடைய அமைப்புடன் கூட்டுறவு கொள்வதும் எவ்வளவு அவசியமோ அப்படியே கடவுளுடைய பரிசுத்த ஆவி, அல்லது செயல்படுத்துகிற சக்தியும் நமக்குத் தேவை. ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு, நாம் அதற்காக ஜெபிக்க வேண்டும்.

2 ஜெபமானது கடவுளிடம் பேசும் மரியாதையான பேச்சு ஆகும். அது ஒருவேளை, காரியங்களுக்காகக் கடவுளைக் கேட்கையில் செய்வதைப் போன்ற, வேண்டுதல் வகையானதாக இருக்கலாம். ஆனால் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்தலாக அல்லது அவரைத் துதிப்பதாகவுங்கூட ஜெபம் இருக்கலாம். (1 நாளாகமம் 29:10-13) நம்முடைய பரலோகத் தகப்பனோடு ஒரு நல்ல உறவைக் கொண்டிருக்க, நாம் அவரிடம் ஜெபத்தில் தவறாமல் பேசி வரவேண்டும். (ரோமர் 12:12; எபேசியர் 6:18) நாம் கேட்பதன் மூலம் பெற்றுக்கொள்ளுகிற அவருடைய செயல்படுத்துகிற சக்தியானது, சாத்தான் அல்லது அவனுடைய உலகம் நம்மீது கொண்டுவரக்கூடிய எத்தகைய தொல்லைகளின் அல்லது சோதனைகளின் மத்தியிலும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நம்மைப் பலப்படுத்தக்கூடும்.—1 கொரிந்தியர் 10:13; எபேசியர் 3:20.

3 கடவுளுக்குப் பிரியமாயிராத ஏதோ பழக்கத்தை அல்லது நடத்தையை விட்டொழிக்கும்படியாக உங்களுக்கு மெய்யான ஒரு போராட்டம் இருந்துகொண்டிருக்கலாம். அப்படியானால், யெகோவாவின் உதவியைத் தேடுங்கள். ஜெபத்தில் அவரிடம் திரும்புங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் அவ்வாறு செய்தான், அவன் பின்வருமாறு எழுதினான்: “என்னைப் பலப்படுத்துகிறவருக்குள் எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு வல்லமையுண்டு.” (பிலிப்பியர் 4:13, தி.மொ.; சங்கீதம் 55:22; 121:1, 2) ஒழுக்கக் கேட்டுப் போக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ஒரு பெண் பின்வருமாறு கூறினாள்: “அந்த நிலைமையிலிருந்து வெளியேற உங்களுக்கு உதவி செய்ய வல்லமையுடையவராயிருக்கிறவர் அவர் ஒருவரே. யெகோவாவுடன் அந்தத் தனிப்பட்ட உறவு உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது, அந்தத் தனிப்பட்ட உறவைக் காத்துக் கொள்வதற்கான ஒரே வழி ஜெபிப்பதேயாகும்.”

4 என்றபோதிலும் ஒருவர் பின்வருமாறு சொல்லலாம்: ‘கடவுளுடைய உதவிக்காக நான் பல தடவைகள் ஜெபித்திருக்கிறேன், என்றபோதிலும் தவறு செய்வதிலிருந்து, நான் என்னை இன்னும் காத்து வைத்துக்கொள்ள முடியவில்லை.’ புகை பிடிக்கிறவர்கள் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒருவரை: “நீங்கள் எப்போது ஜெபிக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அவர்: “இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்பும், காலையில் விழித்தெழும்புகையிலும், நான் பலவீனப்பட்டு புகைபிடித்த பின்பும், நான் செய்தத் தவறுக்காக வருந்துகிறேன் என்று யெகோவாவிடம் சொல்லுகிறேன்,” என்பதாகப் பதிலளித்தார். அதற்கு அவருடைய நண்பர் கூறினார்: “கடவுளுடைய உதவி உமக்கு உண்மையில் தேவைப்படுகிற சமயமானது, புகைபிடிப்பதற்காகக் கையை நீட்டும் அந்த விநாடியில் தானே அல்லவா? அந்தச் சமயத்திலேதானே உங்களைப் பலப்படுத்தும்படி நீங்கள் யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும்.” அவர் அவ்வாறு செய்தபோது, புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவியைப் பெற்றார்.

5 இது, கடவுளிடம் ஜெபிப்பதும், அதோடு அவருடைய வார்த்தையைப் படித்து அவருடைய காணக்கூடிய அமைப்புடன் கூட்டுறவு கொள்வதும், சரியானதைச் செய்வதை உங்களுக்கு எளிதாக்கிவிடுமென்று சொல்வதில்லை. அதற்கு இன்னும் முயற்சி வேண்டியதாயிருக்கிறது; ஆம், ஒரு கடினமான போராட்டம் வேண்டியதாயிருக்கிறது, இது துன்பப்படுதலுங்கூட உட்பட்டதாயிருக்கலாம். (1 கொரிந்தியர் 9:27) கெட்ட பழக்கங்களானவை கெட்ட காரியத்துக்காக ஏங்கும் கடும் ஆவலில் விளைவடையக்கூடும். ஆகவே ஒருவன் பாவச் செயலிலிருந்து விலகுகையில் பொதுவாய்த் துன்பப்படுவதில் விளைவடைகிறது. சரியானதைச் செய்வதற்காகத் துன்பப்படுவதற்கு நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?—1 பேதுரு 2:20, 21.

கடவுள் செவிகொடுக்கிற ஜெபங்கள்

6 ஜெபிப்பது கடினமாயிருப்பதாகப் பலர் காண்கிறார்கள். “நான் பார்க்க முடியாத ஒருவரிடம் ஜெபிப்பது எனக்குக் கடினமாயிருக்கிறது,” என்று ஓர் இளம் பெண் தெரிவித்தாள். மனிதர் ஒருவருமே கடவுளைப் பார்த்திராததனால், கடவுளிடம் ஜெபிப்பதற்கும் அவரால் செவிகொடுக்கப்படுவதற்கும் நமக்கு விசுவாசம் தேவை. யெகோவா உண்மையில் இருக்கிறார்; நாம் கேட்பதை அவர் செய்யக்கூடும் என்று நாம் நம்புவது அவசியம். (எபிரெயர் 11:6) நாம் இந்த வகையான விசுவாசத்தை உடையவர்களாய், உண்மையான இருதயத்துடன் கடவுளை அணுகுவோமானால், அவர் நமக்கு உதவி செய்வார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். (மாற்கு 9:23) இவ்வாறாக, அந்த ரோம சேனாதிபதியாகிய கொர்நேலியு அந்தச் சமயத்தில் கடவுளுடைய அமைப்பின் பாகமாயிராதபோதிலும், வழிநடத்துதலுக்காக அவன் உள்ளப்பூர்வமாய் ஜெபித்தபோது, கடவுள் அவனுடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார்.—அப்போஸ்தலர் 10:30-33.

7 தங்கள் உள்ளத்திலுள்ளவற்றை வாயின் வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கூறுவது சிலருக்குக் கடினமாயிருக்கிறது. என்றபோதிலும், இது, அவர்கள் கடவுளிடம் ஜெபத்தில் பேசுவதைத் தடுத்து வைக்கக்கூடாது. அவர் நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார் என்றும் நாம் சொல்ல விரும்புவதை அவர் விளங்கிக் கொள்ளுவார் என்றும் நாம் நிச்சயமாய் இருக்கலாம். (மத்தேயு 6:8) இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: ஒரு பிள்ளையிடமிருந்து வரும் எந்த வார்த்தைகளை நீங்கள் மிக அதிகமாய் மதித்துணருவீர்கள்—அவனுடைய எளிய, உள்ளப் பூர்வ நன்றி சொல்லுதலையா அல்லது சொல்லும்படி எவரோ அவனுக்குச் சொல்லிக் கொடுத்த அந்தத் தனிப்பட்ட வார்த்தைகளையா? அதைப்போலவே பரலோகத்திலிருக்கிற நம்முடைய தகப்பனும், நம்மிடமிருந்து வரும் எளிய, உள்ளப்பூர்வ வார்த்தைகளையே பாராட்டுகிறார். (யாக்கோபு 4:6; லூக்கா 18:9-14) எந்தத் தனிப்பட்ட வார்த்தைகளோ மத மொழியோ தேவைப்படுகிறதில்லை. மற்றவர்கள் மனதைக் கவர்ச்சி செய்ய அசாதாரணமான அல்லது ஆரவார மொழி நடையில் ஜெபிக்கிறவர்களுடைய, அல்லது ஒரே காரியங்களை உள்ளப்பூர்வமற்ற முறையில் திரும்பத் திரும்ப சொல்லுகிறவர்களுடைய ஜெபங்களுக்கு அவர் செவி கொடுத்துக் கேட்கவுங்கூட மாட்டார்.—மத்தேயு 6:5, 7.

8 நீங்கள் மெளனமாய் ஜெபிக்கையிலுங்கூட, கடவுள் கேட்கக்கூடும். நெகேமியா அவ்வாறு ஜெபித்தபோது, கடவுள் அவனுடைய இருதயப்பூர்வமான வேண்டுகோளின்படி செய்தார், அன்னாளைக் குறித்ததிலும் அவ்வாறே செய்தார். (நெகேமியா 2:4-8; 1 சாமுவேல் 1:11-13, 19, 20) ஜெபிக்கும்பொழுது ஒருவன் எந்த நிலையிலிருந்து ஜெபிக்கிறான் என்பதுகூட முக்கியமானதல்ல. எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருக்கையில் நீங்கள் ஜெபிக்கலாம். என்றபோதிலும், தலை குனிதல் அல்லது முழங்கால்படியிடுதல் போன்ற பணிவான நிலை தகுந்ததென்று பைபிள் காட்டுகிறது. (1 இராஜாக்கள் 8:54; நெகேமியா 8:6; தானியேல் 6:10; மாற்கு 11:25; யோவான் 11:41) அவரவருடைய தனிப்பட்ட ஜெபங்கள், மனிதர் பாராதபடி மறைவில் தனிமையான இடத்தில் செய்யப்படக்கூடுமானால் நல்லதென்று இயேசு தெரிவித்தார்.—மத்தேயு 6:6.

9 ஜெபம் நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம். இந்தக் காரணத்தினிமித்தமாக நம்முடைய ஜெபங்கள், வேறு எவரையும் நோக்கி அல்ல, நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனை மாத்திரமே நோக்கிச் செய்யப்பட வேண்டும். (மத்தேயு 4:10) மேலும், நம்முடைய பாவங்களை நீக்கிப் போடும்படி தம்முடைய உயிரைக் கொடுத்தவராகிய இயேசுவின் மூலமாய்க் கிறிஸ்தவர்கள் கடவுளை அணுகவேண்டுமென்று பைபிள் காட்டுகிறது. இது, நாம், நம்முடைய ஜெபங்களை இயேசுவின் பெயரில் சொல்ல வேண்டுமென்று குறிக்கிறது.—யோவான் 14:6, 14; 16:23; எபேசியர் 5:20; 1 யோவான் 2:1, 2.

10 என்றபோதிலும், எல்லா ஜெபங்களும் யெகோவாவுக்குப் பிரியமானதாய் இருக்கிறதா? பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “பிரமாணத்தைக் கேளாதபடி, தனது செவியை விலக்குவோன் ஜெபம் அருவருப்பு.” (நீதிமொழிகள் 28:9, தி.மொ.; 15:29; ஏசாயா 1:15) ஆகவே கடவுள் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுக்கும்படி நாம் விரும்புகிறோமென்றால் ஒரு அடிப்படைத் தேவையானது, நாம் அவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பதே. மற்றப்படி நேர்மையுள்ள ஒருவர், ஒழுக்கக் கேடானதென்று தான் கருதுகிற ஒரு ரேடியோ நிகழ்ச்சி நிரலுக்கு எப்படிச் செவிகொடுக்கமாட்டாரோ, அப்படியே கடவுளும் நமக்குச் செவிகொடுக்க மாட்டார். பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அவர் கற்பனைகளை நாம் கைக்கொண்டு, அவர் பார்வையில் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக் கொள்ளுகிறதெதுவோ அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுகிறோம்.”—1 யோவான் 3:22.

11 இது, நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ அதற்காக உழைத்து வரவும் வேண்டுமென்று குறித்துக் காட்டுகிறது. உதாரணமாக, ஒருவன், தான் புகையிலை அல்லது மரிஹூவானா பயன்படுத்துவதை நிறுத்துவதற்குத் தனக்கு உதவி செய்யும்படி கடவுளைக் கேட்டுவிட்டு பின்பு வெளியே சென்று இவற்றை வாங்குவது தவறாகும். ஒழுக்கக்கேடான நடத்தையைத் தவிர்க்கத் தனக்கு உதவி செய்யும்படி அவன் யெகோவாவைக் கேட்டுவிட்டு, பின்பு ஒழுக்கக்கேடான நடத்தையை முதன்மைப்படுத்திக் காட்டும் புத்தகங்களை வாசிப்பதும் திரைப்படங்களையும் டெலிவிஷன் நிகழ்ச்சி நிரல்களையும் பார்ப்பதுமாக அவன் இருக்க முடியாது. அல்லது சூதாடுவது ஒருவனின் பலவீனமாக இருக்கிறதென்றால், அதை நிறுத்துவதற்குத் தனக்கு உதவி செய்யும்படி கடவுளிடம் ஜெபித்துவிட்டு, பின்பு சூதாட்டம் நடத்தப்படுகிற குதிரைப் பந்தயங்களுக்கு அல்லது அப்படிப்பட்ட மற்ற இடங்களுக்குச் சென்றுவரக் கூடாது. நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் செவிகொடுக்க வேண்டுமென்றால், நாம் கேட்கிறபடி உண்மையில் நடக்க விரும்புவதினாலேயே கேட்கிறோமென்று நம்முடைய செயல்களின் மூலமாய் நாம் அவருக்குக் காட்ட வேண்டும்.

12 அப்படியானால் யெகோவாவை நோக்கிச் செய்யும் நம்முடைய ஜெபங்களில் நாம் சேர்த்துக்கொள்ளக்கூடிய நம்முடைய தனிப்பட்ட காரியங்கள் யாவை? உண்மையில், நம்முடைய உடல் நலம், பிள்ளைகளைச் சரியாய் வளர்ப்பது ஆகியவை உட்பட கடவுளுடன் கொண்டுள்ள நம்முடைய உறவைப் பாதிக்கும் எதுவும் ஜெபிப்பதற்குத் தகுந்த பொருளாக இருக்கிறது. (2 இராஜாக்கள் 20:1-3; நியாயாதிபதிகள் 13:8) “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்,” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினான். (1 யோவான் 5:14) ஆகவே முக்கியமான காரியமானது நம்முடைய வேண்டுதல்கள் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக இருக்க வேண்டுமென்பதே. இது அவருடைய சித்தம் என்னவென்பதை நாம் முதலாவதாகக் கற்றறிய வேண்டுமென்று பொருள் கொள்ளுகிறது. (நீதிமொழிகள் 3:5, 6) பின்பு நாம் ஜெபிக்கையில், வெறுமென நம்முடைய சொந்தத் தனிப்பட்ட அக்கறைகளிலேயே கவனமுள்ளவர்களாய் இருப்பதற்கு மாறாக, கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் கவனத்துக்குள் கொண்டுவருவோமானால், நம்முடைய ஜெபங்கள் யெகோவாவுக்கு ஏற்கத்தக்கதாய் இருக்கும். யெகோவா நமக்குக் கொடுத்து வருகிற நல்ல காரியங்களுக்காக ஒவ்வொரு நாளும் அவருக்கு நன்றி செலுத்துவது தகுதியானது.—யோவான் 6:11, 23; அப்போஸ்தலர் 14:16, 17.

13 கடவுள் ஏற்கும் அந்த வகையான ஜெபத்தைக் குறித்ததில் தம்மைப் பின்பற்றுவோருக்கு வழிநடத்துதலைத் தரும்படி இயேசு அவர்களுக்கு ஒரு மாதிரி ஜெபத்தைக் கொடுத்தார். (மத்தேயு 6:9-13) இந்த ஜெபமானது, கடவுளுடைய பெயர், அவருடைய ராஜ்யம், அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படுவது ஆகியவையே முதலாவதாக வருகின்றனவென்று காட்டுகிறது. அடுத்தப்படியாக, நம்முடைய அன்றாட உணவு, பாவங்கள் மன்னிக்கப்படுவது, சோதனையினின்றும் பொல்லாங்கனாகிய பிசாசான சாத்தானிடமிருந்தும் விடுவிக்கப்படுதல் போன்ற நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்காக நாம் கேட்கலாம்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு ஜெபங்கள்

14 மற்றவர்களுக்காக ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை இயேசு தம்முடைய முன்மாதிரியின் மூலம் காட்டினார். (லூக்கா 22:32; 23:34; யோவான் 17:20) இப்படிப்பட்ட ஜெபங்களின் மதிப்பை அப்போஸ்தலனாகிய பவுல் அறிந்திருந்தான், தனக்காக ஜெபிக்கும்படி அடிக்கடி மற்றவர்களைக் கேட்டான். (1 தெசலோனிக்கேயர் 5:25; 2 தெசலோனிக்கேயர் 3:1; ரோமர் 15:30) சிறைச்சாலையில் இருக்கையில் அவன் பின்வருமாறு எழுதினான்: “உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப் [விடுதலை செய்யப்] படுவேனென்று நம்பியிருக்”கிறேன். (பிலேமோன் 22; எபேசியர் 6:18-20) அதன்பின் சீக்கிரத்திலேயே பவுல் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதானது, அவனுக்காக செய்யப்பட்ட அந்த ஜெபங்களின் பலனை அறிவுறுத்திக் காட்டுகிறது.

15 பவுல் மற்றவர்களுக்காகவும் உதவியான ஜெபங்களைச் செய்தான். “நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும் . . . எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறோம்,” என்று அவன் எழுதினான். (2 தெசலோனிக்கேயர் 1:12) மற்றொரு சபைக்கு அவன் பின்வருமாறு விளக்கினான்: “நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன் . . . நீங்கள் நலமானதைச் செய்யும் பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்.” (2 கொரிந்தியர் 13:7) நிச்சயமாகவே, பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் நேசிக்கிற ஆட்களுக்காகத் திட்டவட்டமான வேண்டுதல்களைச் செய்வது நல்லது. நிச்சயமாகவே, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் [உள்ளப் பூர்வமான மன்றாட்டு] மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”—யாக்கோபு 5:13-16.

16 பைபிள் படிப்பை நடத்துகையில் ஓர் ஊழியர் அடிக்கடி பின்வருமாறு கேட்பதுண்டு: “உங்கள் வாராந்தர பைபிள் படிப்பு சமயத்தில் மட்டுமல்லாமல் மற்றச் சமயங்களிலும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” நமக்குத் தேவையான உதவியைப் பெற நாம் அடிக்கடி கடவுளிடம் ஜெபத்தில் பேச வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:17; லூக்கா 18:1-8) மிகவும் நேசிக்கப்படுகிற நம்பிக்கையுள்ள ஓர் நண்பரிடம் நீங்கள் பேசுவதைப் போல் அவரிடம் மனத்தாழ்மையுடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். பிரபஞ்சம் முழுவதற்கும் மகிமையுள்ள அரசராகிய ஜெபத்தைக் கேட்கிறவரை நோக்கி ஜெபிக்கக் கூடியவர்களாயிருப்பதும், அவர் உங்களுக்குச் செவிகொடுக்கிறாரென்று அறிந்திருப்பதும், மெய்யாகவே, எப்பேர்ப்பட்ட ஓர் அதிசயமான சிலாக்கியம்!—சங்கீதம் 65:2.

[கேள்விகள்]

1. கடவுளிடமிருந்து நமக்கு என்ன உதவி தேவை, அதை நாம் எப்படிப் பெறுகிறோம்?

2. (எ) ஜெபம் என்றாலென்ன? (பி) ஜெபத்தின் பற்பல வகைகள் யாவை? (சி) ஜெபம் ஏன் முக்கியமானது?

3. (எ) கடவுளிடமிருந்து என்ன பலத்தை நாம் பெற்றுக்கொள்ளக்கூடும்? (பி) எப்படி மாத்திரமே நாம் கடவுளுடன் ஒரு நல்ல உறவைக் காத்துக் கொள்ளக்கூடும்?

4. புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒருவர் எப்படி உதவி பெற்றார்?

5. (எ) கடவுளைச் சரியானபடி சேவிக்க என்ன வேண்டியதாயிருக்கிறது? (பி) பாவச் செயலிலிருந்து விலகுவதோடு அநேகமாய்த் துன்பப்படுதலும் உட்பட்டிருக்கிறதென்று எது சுட்டிக் காட்டுகிறது?

6. (எ) பலர் ஏன் ஜெபிப்பதைக் கடினமாகக் காண்கின்றனர்? (பி) நம்முடைய ஜெபங்கள் செவி கொடுக்கப்பட வேண்டுமென்றால் நமக்கு என்ன தேவை?

7. (எ) எவ்வகையான ஜெபங்கள் கடவுளுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன? (பி) எவ்வகையான ஜெபங்களுக்குக் கடவுள் செவிகொடுக்க மாட்டார்?

8. (எ) மெளனமாய்ச் சொல்லப்படுகிற ஜெபங்களுக்குக் கடவுள் செவிகொடுத்துக் கேட்கக்கூடுமென்று எது காட்டுகிறது? (பி) ஏதோ ஒரு திட்டமான நிலையிலாவது இடத்திலாவது நாம் ஜெபிக்க வேண்டுமென்று பைபிள் குறிப்பிடுகிறதா?

9. (எ) நம்முடைய எல்லா ஜெபங்களும் யாரை நோக்கிச் செய்யப்பட வேண்டும்? ஏன்? (பி) நம்முடைய ஜெபங்கள் கடவுளுக்கு ஏற்கத்தக்கதாக இருக்க, யாருடைய பெயரில் அவை செய்யப்பட வேண்டும்?

10. (எ) யாருடைய ஜெபங்கள் கடவுளுக்குப் பிரியமானதாக இல்லை? (பி) கடவுள் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுக்க வேண்டுமானால் என்ன அடிப்படையான தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்?

11. நாம் எதற்காக ஜெபிக்கிறோமோ அதற்காக உழைக்கவும் வேண்டும் என்பதன் கருத்தென்ன?

12. (எ) நம்முடைய ஜெபங்களில் நாம் சேர்த்துக் கொள்ளக்கூடிய காரியங்கள் யாவை? (பி) நம்முடைய ஜெபங்கள் கடவுளுக்குப் பிரியமானதாயிருக்க, நாம் எதைக் கற்றறிய வேண்டும்?

13. (எ) நம்முடைய ஜெபங்களில் எவை முதல் அக்கறை செலுத்துவதற்குரிய காரியங்களாக இருக்க வேண்டுமென்பதை இயேசு எப்படிக் காட்டினார்? (பி) நாம் ஜெபிக்க வேண்டிய இரண்டாவது முக்கியத்துவமுடைய காரியங்கள் யாவை?

14. மற்றவர்களுக்காக ஜெபிப்பதன் முக்கியத்துவத்தைப் பைபிள் எப்படிக் காட்டுகிறது?

15. நாம் நேசிக்கிற ஆட்களைக் குறித்ததில் என்ன வகையான வேண்டுதல்களை நாம் செய்யலாம்?

16. (எ) தேவையான உதவியைப் பெற, நாம் எப்பொழுது ஜெபிக்க வேண்டும்? (பி) ஜெபம் ஏன் அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய சிலாக்கியமாக இருக்கிறது?

[பக்கம் 227-ன் படம்]

புகைபிடிக்கும்படி சோதிக்கப்படுகையில் ஒருவர் என்ன செய்யவேண்டும்— உதவிக்காக ஜெபிக்கவேண்டுமா அல்லது கீழ்ப்பட்டுவிடவேண்டுமா?

[பக்கம் 229-ன் படம்]

உதவிக்காக ஜெபித்துவிட்டு, பின்பு தவறு செய்வதற்கு வழிநடத்தக்கூடிய செயலில் ஈடுபடுகிறீர்களா?

[பக்கம் 230-ன் படம்]

தனிமையில் ஜெபிக்கிறீர்களா அல்லது மற்றவர்களோடு இருக்கையில் மாத்திரமே ஜெபிக்கிறீர்களா?