Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் பத்துக் கற்பனைகளின் கீழ் இருக்கிறோமா?

நாம் பத்துக் கற்பனைகளின் கீழ் இருக்கிறோமா?

அதிகாரம் 24

நாம் பத்துக் கற்பனைகளின் கீழ் இருக்கிறோமா?

1. எந்தச் சட்டங்களுக்கு நாம் கீழ்படிய வேண்டுமென்று யெகோவா தேவன் விரும்புகிறார்? “மோசேயின் நியாயப்பிரமாணம்” என்று, அல்லது சில் சமயங்களில் “நியாயப்பிரமாணம்” என்று பைபிள் அழைக்கிறதை நாம் கைக்கொள்ளவேண்டுமா? (1இராஜாக்கள் 2:4, தீத்து 3:9) இது “யெகோவாவின் நியாயப்பிரமாணம்,” என்றும்கூட அழைக்கப்படுகிறது, ஏனென்றால் இதைக் கொடுத்தவர் அவரே. (1நாளாகமம்) தினவர்த்தமானம் 16:40, தி. மொ.) மோசே வெறுமென இந்த நியாயப்பிரமாணத்தை அந்த ஜனங்களுக்குக் கொண்டுசென்று கொடுத்தான்.

2. மோசேயின் நியாயப்பிரமாணமானது 10 முக்கிய கற்பனைகள் உட்பட 600-க்கு மேற்பட்ட தனித்தனி சட்டங்கள் அல்லது கற்பனைகள் அடங்கியிருக்கிறது. மேசே சொன்னபிரகாரம் “நீங்கள் கைக்கொள்ள வேண்டு என்று அவர் [யெகோவா] உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய. . .அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்” (உபாகமம் 4:13; யாத்திராகமம் 31:18) ஆனால் இந்த பத்துக் கற்பனைகள் உட்பட இந்த நியாயப்பிரமாணத்தை யெகோவா யாருக்குக் கொடுத்தார்? இதை அவர் மனிதவர்க்கம் முழுவதற்கும் கொடுத்தாரா? இந்த நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன?

இஸ்ரவேலுக்கு ஒரு தனிப்பட்ட நோக்கத்திற்காக

3. இந்த நியாயப்பிரமாணம் மனிதவர்க்கம் முழுவதற்கும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேல் ஜனமான, யாக்கோபின் இந்தச் சந்ததியருடன் யெகோவா ஒர் உடன்படிக்கையை அல்லது ஒர் ஒப்பந்தத்தைச் செய்தார். இந்த ஜனத்துக்கு மாத்திரமே யெகோவா தம்முடைய சட்டங்களைக் கொடுத்தார். உபாகமம் 5:1-3-லும் சங்கீதம் 147:19, 20-லும் பைபிள் இதைத் தெளிவாக்குகிறது.

4. அப்போல்தலனாகிய பவுல் பின்வருமாறு கேள்விக்கேட்டான்: அப்படியானால் நியாயப்பிரமாணம் எதற்கு? அம், என்ன நோக்கத்திற்காக யெகோவா தம்மமுடைய சட்டத்தை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்? பவுல் பதிலலித்ததாவது. “வாக்குத்தத்தத்திற்குரிய சந்ததி வருமளவும் அது மீறுதல்கள் நிமித்தமாகக் [மீறுதல்களை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு, NW] கூடச் சேர்க்கப்பட்[டது] ஆதலால் நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடம் வழிநடத்துகிற உபாத்தியானது” (கலாத்தியர் 3:19-24. தி.மொ.) கிறிஸ்து வந்து சேருகையில் இஸ்ரவேல் ஜனம் அவரை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய்யிருக்கும்படியாக அதைப் பாதுகாத்து வழிநடத்திவருவதே இந்த நியாயப்பிரமாணத்தின் தனிப்பட்ட நோக்கமாயிருந்தது. நியாயப்பிரமாணம் கட்டளையிட்ட அந்தப் பல பலிகள் தாங்கள் பாவிகள் தங்களுக்கு ஒரு மீட்பர் தேவைப்படுகிறார் என்பதை இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டி வந்தனர்.-எபிரேயர் 10:1-4.

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்”

5. நிச்சயமாகவே இயேசு கிறிஸ்து அவருடை பிறப்பின்போது தேவதூதர்கள் அறிவித்தபடியே வாக்குப்பண்ணப்பட்ட அந்த மீட்பராக இருந்தார். (லூக்கா 2:8-14) ஆகவே கிறிஸ்து வந்து தம்முடைய பரிபூரண உயிரைப் பலியாகச் செலுத்தினபோது அந்த நியாயப்பிரமாணத்துக்கு என்ன நேரிட்டது? அது விளக்கப்பட்டது இனிமேலும் “நாம் அந்த உபாத்திக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல,” என்று பவுல் விளக்கினான். ( கலாத்தியர் 3:25, தி.மொ.) இந்த நியாயப்பிரமாணத்தை விளக்கினது இஸ்ரவேலருக்கு ஒரு விடுதலையாயிருந்தது அது அவர்களைப் பாவிகளாக வெளிப்படுத்திக் காட்டிக்கொண்டிருந்தது ஏனென்றால் அந்த நியாயப்பிரமாணத்தைத் பரிபூரணமாய்க் கைக்கொள்வதில் அவர்கள் எல்லாருமே குறைவுப்பட்டார்கள். “கிறிஸ்து. . . நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” என்று பவுல் சொன்னார். (கலாத்தியர் 3: 10-14. அகவே: “கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.” என்றும் பைபிள் சொல்லுகிறது-ரோமர் 10:4; 6:14.

6. உண்மையில் இந்த நியாயப்பிரமாணமானது, இஸ்ரவேலருக்கும் நியாயப்பிரமாணத்துக்குக் கீழிராத மற்ற ஜனங்களுக்கும் இடையில் ஒரு தடங்கலாக அல்லது “சுவராகச்” சேவித்தது. என்றபோதிலும், கிறிஸ்து தம்முடைய உயிரைப் பலியாகச் செலுத்தினதன் மூலம் “சட்டத்திட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் [இஸ்ரவேலரையும் இஸ்ரவேலரல்லாதவர்களையும்] தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்”தார். (எபேசியர் 2:11-18) மோசேயின் நியாயப்பிரமாணத்தினிடமாக யெகோவா தேவன்தாமே எடுத்த நடவடிக்கையைக் குறித்து நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு [இஸ்ரவேலரைப் பாவிகளாகத் தீர்த்ததினிமித்தம்] எதிரிடையாகவும் கட்டளைகளால் [பத்துக் கற்பனைகள் உட்பட] நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் [வாதனைக்குரிய கழுமரத்தின்மேல், NW] ஆணியடித்”தார். (கொலோசெயர் 2:13, 14) ஆகவே, கிறிஸ்துவின் பரிபூரண பலியினால், இந்த நியாயப்பிரமாணம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

7. என்றபோதிலும், இந்த நியாயப்பிரமாணம்: பத்துக் கற்பனைகள், மற்றச் சட்டங்கள் என்பதாக இரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறதென்று சிலர் சொல்லுகின்றனர். முடிவடைந்தவை அந்த மற்றச் சட்டங்களே, பத்துக் கற்பனைகளோவென்றால் இன்னும் நிலைத்திருக்கின்றன என்றும் அவர்கள் சொல்லுகின்றனர். என்றாலும் இது உண்மையல்ல. தம்முடைய மலைப் பிரசங்கத்தில் இயேசு இந்தப் பத்துக் கற்பனைகளிலிருந்து மட்டுமல்லாமல் நியாயப்பிரமாணத்தின் மற்றப் பாகங்களிலிருந்தும் எடுத்துக் குறிப்பிட்டார், அவற்றிற்கிடையே எவ்வித வேறுபாட்டையும் செய்யவில்லை. இவ்வாறாக, மோசேயின் நியாயப்பிரமாணம் இரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்படவில்லை என்று இயேசு காட்டினார்.—மத்தேயு 5:21-42.

8 அப்போஸ்தலனாகிய பவுல் என்ன எழுதும்படி கடவுளால் ஏவப்பட்டான் என்பதையும் கவனியுங்கள்: “இப்பொழுதோ நாம் . . . அதினின்று [நியாயப்பிரமாணத்திலிருந்து] விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.” யூதர்கள் பத்துக் கற்பனைகளிலிருந்தல்லாமல் அந்த மற்றச் சட்டங்களிலிருந்து மாத்திரமே விடுதலையாக்கப்பட்டிருக்கிறார்களா? இல்லை, எப்படியென்றால், பவுல் மேலும் தொடர்ந்து பின்வருமாறு சொல்லுகிறான்: “பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றபடி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.” (ரோமர் 7:6, 7; யாத்திராகமம் 20:17) “இச்சியாதிருப்பாயாக” என்பதானது பத்துக் கற்பனைகளின் கடைசி கற்பனையாக இருப்பதனால், இஸ்ரவேலர் அந்தப் பத்துக் கற்பனைகளிலிருந்தும் விடுதலையாக்கப்பட்டார்கள் என்று அர்த்தப்படுத்துகிறது.

9. இது பத்துக் கற்பனைகளின் நான்காவது கற்பனையாகிய, வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்ட இந்தச் சட்டமுங்கூட விலக்கப்பட்டதென்று அர்த்தமாக்குமா? ஆம் அப்படியே அர்த்தங்கொள்கிறது. வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் ஆண்டில் மற்றத் தனிப்பட்ட நாட்களைக் கொண்டாட வேண்டுமென்றும் கட்டளையிட்ட இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கடவுஷுடஐ நியாயப்பிரமாணத்தின்கீழ் கிறிஸ்தவர்கள் இல்லையென்று கலாத்தியர் 4:8-11-லும் கொலோசெயர் 2:16,17-லும் பைபிள் சொல்வது காட்டுகிறது. வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்வது கிறிஸ்தவர்களுக்குரிய கட்டளையல்லவென்பது ரோமர் 14:5-லிருந்தும்கூட தெரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.

கிறிஸ்தவர்களுக்குரிய சட்டங்கள்

10. கிறிஸ்தவர்கள் பத்துக் கற்பனைகளின்கீழ் இராததனால் அவர்கள் எந்தச் சட்டங்களையும் கைக்கொள்ள வேண்டியதில்லை என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை இயேசுதம்முடைய சொந்த பரிபூரண மனிதர் உயிரின் இந்த மேம்பட்ட பலியின்மேல் செய்யப்பட்ட ஒரு “ஒரு புதியய உடன்படிக்கையைத்” தொடங்கி வைத்தார். கிறிஸ்தவர்கள் இந்த புதிய உடன்படிக்கையின்கீழ் வருகின்றனர். கிறிஸ்தவ சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருக்கின்றனர். (எபிரேயர் 8:7-13); லூக்கா 22:20) இந்தச்சட்டங்களில் பல மோசேயின் நியாயயப்பிரமாணத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இது எதிர்பாராததாகவோ வழக்கத்திற்கு மாறாகவோ இல்லை ஒரு புதிய அரசாங்கம் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்கையில் இதைப் போன்ற காரியம் அடிக்கடி ஏற்படுகிறது அந்தப் பழைய அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு விலக்கப்பட்டு வேறொன்று அதனிடத்தில் வைக்கப்படலாம். என்றாலும் இந்தப் புதிய அரசியல் அமைப்பு அந்தப் பழைய அமைப்பின் சட்டங்கள் பலவற்றை இன்னும் வைத்திருக்கலாம். இதைப்போலவே, அந்த நியாயப்பிரமான உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. என்றாலும் அதன் அடிப்படை சட்டங்களும் நியாயங்களுமானவற்றில் பல கிறிஸ்தவத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

11. 203-ம் பக்கத்திலுள்ள அந்தப் பத்துக் கற்பனைகளை நீங்கள் வாசித்து பின்வரும் கிறிஸ்தவக் கட்டளைகளோடும் போதகங்களோடும் அவற்றை ஒத்துப்பார்க்கையில், எப்படி இவ்வாறு இருக்கிறதென்பதைக் கவனியுங்கள்: ‘உன் தேவனாகிய கர்த்தரைப் [யெகோவாவையே NW] பணிந்துகொள்ள வேண்டும்” (மத்தேயு 4:10; 1 கொரிந்தியர் 10:20-22) “விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்ககொள்வீர்களாக.” (1 யோவான் 5:21; 1 கொரிந்தியர் 10-14 ) ‘“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக [தகுதியற்ற முறையில் கையாளப்படாதிருப்பதாக]” (மத்தேயு 6:9) “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்.” (எபேசியர் 6:1,2) கொலை செய்தல், விபசாரஞ் செய்தல், களவு செய்தல், பொய் சொல்லுதல், இச்சித்தல் ஆகியவையும் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களுக்குக் விரோதமானவை என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது-வெளிப்படுத்துதல் 21:8; 1 யோவான் 3:15; எபிரேயர் 13:4; 1தெசலோனிக்கேயர் 4:3-7; எபேசியர் 4:25,28; 1 கொரிந்தியர் 6:9-11; லூக்கா 12:15; 3:5.

12. கிறிஸ்தவர்கள் ஒரு வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்ளும்படி கட்டளையிடப்படவில்லை என்றபோதிலும் இந்த ஏற்பாட்டிலிருந்து நாம் ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். இஸ்ரவேல் சொல்லர்த்தமான ஒரு முறையில் ஓய்ந்திருந்தனர். ஆனால் கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ஒரு முறையில் ஓய்ந்திருக்க வேண்டும் எப்படி? விசுவாசத்தினிமித்தமும் கீழ்ப்படிதலின்நிமித்தமும் உண்மையான கிறிஸ்தவர்கள் தன்னல வேலைகளைச் செய்வதைவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். இந்தத் தன்னல வேலைகளில் தங்கள் சொந்த நீதியை ஸ்தாபிக்க எடுக்கும் முயற்சிகளும் உட்பட்டிருக்கின்றன. (எபிரேயர் 4:10) இந்த ஆவிக்குரிய ஓய்வு, வாரத்தில் ஒருநாள் மட்டுமல்ல, எல்லா ஏழு நாட்களும் கைக்கொள்ளப்படுகிறது. ஆவிக்குரிய அக்கறைகளுக்காக ஒரு நாளை ஒதுக்கி வைக்கும்படி கட்டளையிட்ட இந்த சொல்லர்த்தமான ஓய்வுநாள் சட்டம், இஸ்ரவேலர் தங்களுடைய எல்லா நேரத்தையும் தங்கள் சொந்த பொருள்சம்பந்த அனுகூலத்தை நாடித் தேடுவதற்கே தன்னலமாய்ப் பயன்படுத்துவதிலிருந்து அவர்களைப் பாதுகாத்து வைத்தது. ஆவிக்குரிய பிரகாரமாய் இந்த நியமத்தை ஒவ்வொரு நாளும் பொருத்திப் பிரயோகிப்பதானது, பொருளாசைக்கு எதிராகப் பாதுகாக்கும் மேலுமதிக மேலுமதிக பயனுள்ள ஒரு பாதுகாப்பாய் இருக்கிறது.

13. ஆகவே கிறிஸ்தவர்கள் பத்துக் கற்பனைகளைக் கைக்கொள்வதற்கு மாறாக, ‘“கிறிஸ்துவினுடைய பிரமானத்தை நிறைவேற்றும்”படியே ஊக்குவிக்கப்படுகின்றனர். (கலாத்தியர் 6:2) இயேசு பல கட்டளைகளையும் போதனைகளையும் கொடுத்தார், அவற்றிற்கு நாம் கீழ்படிவதன் மூலம் அவருடைய பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறோம் அல்லது நிறைவேற்றுகிறோம் முக்கியமாக, அன்பின் முக்கியத்துவத்தை இயேசு அறிவுறுத்தினார். (மத்தேயு 22: 36-40; யோவான் 13:34,35) ஆம், மற்றவர்களை நேசிப்பது ஒரு கிறிஸ்தவச் சட்டம். இது, பைபிள் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம் மோசேயின் நியாயப்பிரமாணம் முழுவதன் அடிப்படையாக இருக்கிறது: “உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோல அயலாரிடத்திலும் அன்பு கூறவேண்டுமென்கிற இந்த ஒரே வார்த்தையில் நியாயப்பிரமாணம் நிறைவேற்றியிருக்கிறது,”-கலாத்தியர் 5:13,14, தி.மொ,; ரோமர் 13: 8-10.

14. அதன் பத்துக் கற்பனைகளோடுகூட மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்ட அந்த நியாயப்பிரமாணம், கடவுளிடமிருந்து வந்த நீதியுள்ள சட்டத் தொகுப்பாக இருந்தது. இன்று நாம் அந்த நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லையென்றபோதிலும் அதில் அடங்கியுள்ள தெய்வீக நியமங்கள் நமக்கு இன்னும் மிகுந்த பயனுள்ளவையாய் இருக்கின்றன. அவற்றைப்படித்து பொருத்தி பிரயோகிப்பதன் மூலம் பெரிய நியாயப்பிரமாணிகராகிய யெகோவாதேவனிடமாக நாம் போற்றுதலை வளர்ப்பவர்களாயிருப்போம், ஆனால் முக்கியமாக நாம் கிறிஸ்தவப் பிரமாணங்களையும் (சட்டங்களையும்) போதகங்களையும் படித்து நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்க வேண்டும். யெகோவாவின் பேரிலுள்ள அன்பானது அவர் இப்பொழுது நமக்குக் கட்டளையிடும் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி நம்மைத் தூண்டிசெய்விக்கும்.- 1யோவான் 5:3.

[கேள்விகள்]

1. மோசே ஜனங்களுக்குக் கொண்டு சென்று கொடுத்தது எந்தச் சட்டம்?

2. இந்த நியாயப்பிரமாணம் எவற்றாலாகியது?

3. இந்த நியாயப்பிரமானம் இஸ்ரவேலருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டதென்று நமக்கு எப்படித்தெரியும்?

4. இந்த நியாயப்பிரமானம் இஸ்ரவேல் ஜனத்துக்கு ஏன் கொடுக்கப்பட்டது?

5. கிறிஸ்து வந்து நமக்காக மரித்தபோது இந்த நியாயப்பிரமாணத்துக்கு என்ன நேரிட்டது?

6. (எ) இந்த நியாயப்பிரமாணம் முடிவடைந்தபோது இஸ்ரவேலர் பேரிலும் இஸ்ரவேலரல்லாதவர் பேரிலும் என்ன பாதிப்பை உண்டுபண்ணிற்று? ஏன்? (பி) நியாயப்பிரமாணத்தினிடமாக யெகோவா என்ன நடவடிக்கை எடுத்தார்?

7, 8. இந்தநியாயப்பிரமாணம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை என்று எது நிருபிக்கிறது?

9. வாராந்தர ஓய்வுநாள் சட்டமுங்கூட விளக்கப்பட்டது என்று எது காட்டுகிறது?

10. (எ) கிறிஸ்தவர்கள் எந்தச் சட்டங்களின்கீழ் இருக்கின்றனர்? (பி) இந்தச் சட்டங்களில் பல எங்கிருந்து எடுக்கப்பட்டனர்? அங்கிருந்து அவை எடுக்கப்பட்டது ஏன் நியாயமானதாக இருக்கிறது?

11. கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எந்தச் சட்டங்கள் அல்லது போதகங்கள் பத்துக் கற்பனைகளுக்கு மிகவும் ஒத்திருக்கின்றனர்?

12. ஓய்வுநாள் சட்டத்திற்குரிய இந்த நியமம் கிறிஸ்தவ ஏற்பாட்டுக்குள் எப்படிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது?

13. (எ) எந்தப் பிரமாணத்தை (சட்டத்தைத்) நிறைவேற்றும்படி கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்? அதை அவர்கள் எப்படி நிறைவேற்றுகிறார்கள்? (பி) எந்தச் சட்டத்தை இயேசு அறிவுறுத்தினார்? (சி) எந்தச் சட்டம் மோசேயின் நியாயப்பிரமாணம் முழுவதன் அடிப்படையாக இருக்கிறது?

14. (எ) மோசேயின் நியாயப்பிரமாணத்தின் இந்த நியமங்களை நாம் படித்தும் பொருத்திப் பிரயோகித்தும் வருவதானது என்ன நன்மையில் பலனடையும்? (பி) அன்பு நம்மை என்ன செய்ய தூண்டுவிக்கிறது?

[பக்கம் 203-ன் பெட்டி]

பத்துக் கற்பனைகள்

1. உன் கடவுலாகிய யெகோவா நானே என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு இருக்க வேண்டாம்

2. நீ உனக்கு ஒரு விக்கிரகத்தைச் செய்துகொள்ள வேண்டாம். மோசே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான எந்தச் சொருபத்தையும் செய்துகொள்ள வேண்டாம் நீ அவைகளை வணங்கவும் சேவிக்கவும் வேண்டாம்.

3. உன்கடவுளாகிய யெகோவாவின் திருநாமத்தை வீனிலே வழங்காதே.

4. பரிசுத்தமாய் ஆசரிப்பதற்கென, ஓய்வுநாளை நினைத்துக் கொள்ளவேண்டும். ஆறு நாளும் நீ உழைத்து உன் வேலைகளையெல்லாம் செய்துகொள். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள் அதிலே நீயோ உன்குமாரனோ உன் குமாரத்தியோ. . . யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

5, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ண வேண்டும். அப்படிச் செய்தால் உன் கடவுளாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே நீ நெடுநாளாயிருப்பாய்

6. கொலை செய்யாதே

7. விபசாரம் செய்யாதே

8. களவு செய்யாதே

9. அயலானுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சிசொல்வதே.

10. அயலான் வீட்டை இச்சியாதே அயலானின் மனைவியையும் அவன் வேலைக்காரனையும் அவன் வேலைக்காரியையும் அவன் எருதையும்ம் அவன் கழுதையையும் அயலானுக்குள்ள வேறெதையும் இச்சிக்கவேண்டாம்.-யாத்திராகமம் 20:2-17. தி.மொ 

[பக்கம் 204, 2015-ன் படங்கள்]

நியாயப்பிரமாணது இஸ்ரவேலருக்கும் மற்ற ஜனங்களுக்கும் நடுவே ஒரு சுவராகச் சேவித்தது.