நித்திய வாழ்க்கைக்கு ஓர் எதிரி
அதிகாரம் 2
நித்திய வாழ்க்கைக்கு ஓர் எதிரி
பூமியில் மகிழ்ச்சியான வாழ்க்கை—அநேகமாய் எல்லோருமே விரும்புகிறார்கள். அப்படியானால் ஏன் இத்தனையநேகர் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள்? என்ன தவறு ஏற்பட்டுவிட்டது? அநேகமாய் எல்லோருமே சமாதானத்தை விரும்புகையில், தேசங்கள் ஏன் போர் தொடுக்கின்றன, மக்கள் ஏன் ஒருவரையொருவர் பகைக்கின்றனர்? இந்தக் கெட்ட காரியங்களைச் செய்யும்படி தூண்டி வழிநடத்துகின்ற சக்தி ஏதாவது இருக்கிறதா? பொதுவான ஒரு காணக்கூடாத சக்தி தேசங்களை அடக்கியாளுவதாய் இருக்கக்கூடுமா?
2 மனிதவர்க்கத்தின் பயங்கர கொடுமையை—ஆட்களை மூச்சுத் திணறச் செய்து அப்படியே எரித்துக் கொல்லும்படி போரில் பயன்படுத்தப்படும் பயங்கர வாயுக்கள், மற்றும் கொடிய வெடி குண்டுகள், அணுகுண்டுகள் ஆகியவற்றை—தாங்கள் கவனிக்கையில் பலர் இதைக்குறித்து யோசித்திருக்கின்றனர். மேலும் நெருப்பை எறியும் சாதனம், கான்சன்ட்ரேஷன் முகாம்கள், சமீப ஆண்டுகளில் கம்போடியாவில் நடந்ததைப் போல் உதவியற்ற இலட்சக்கணக்கான ஆட்களின் படுகொலை ஆகியவற்றையும் எண்ணிப் பாருங்கள். இந்த எல்லாத் தீமைகளும் வெறுமென தற்செயலாய் நடந்தனவென்று நீங்கள் நினைக்கிறீர்களா? மனிதன் சுயமாய் பயங்கர செயல்களை நடப்பிக்கக்கூடியவனாக இருந்தாலும், அவனுடைய செயல்களின் பொல்லாப்பை நீங்கள் கவனிக்கையில், அவன் காணக்கூடாத ஒரு தீய சக்தியின் செல்வாக்கிற்குள் வந்திருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?
3 இந்தக் காரியத்தை வெறுமென ஊகிப்பதற்கு அவசியமில்லை. அறிவுத் திறமையுள்ள காணக்கூடாத ஓர் ஆள் மனிதரையும் தேசங்களையும் அடக்கியாண்டு வந்திருக்கிறான் என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. பைபிளில், இயேசு கிறிஸ்து இந்த வல்லமை வாய்ந்தவனை “இந்த உலகத்தின் அதிபதி” என்று அழைக்கிறார். (யோவான் 12:31; 14:30; 16:11) அவன் யார்?
4 அவன் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நமக்கு உதவியாக, இங்கே பூமியில் இயேசுவின் ஊழியத்தின் தொடக்கத்தில் என்ன நடந்ததென்பதை யோசித்துப் பாருங்கள். இயேசு முழுக்காட்டப்பட்ட பின்பு வனாந்தரத்திற்குள் சென்றார். அங்கே பிசாசாகிய சாத்தான் என்று அழைக்கப்பட்ட காணக்கூடாத ஒரு சிருஷ்டியால் அவர் சோதிக்கப்பட்டார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. இந்தச் சோதனையின் ஒரு பாகம் மத்தேயு 4:8, 9.
பின்வருமாறு விவரிக்கப்பட்டிருக்கிறது: “மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம், உமக்குத் தருவேன் என்று சொன்னான்.”—5 இந்தப் பிசாசு, இயேசு கிறிஸ்துவுக்கு எதை அளிக்க முன்வந்தான் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். “உலகத்தின் சகல ராஜ்யங்களையும்.” இந்த எல்லா உலக அரசாங்கங்களும் உண்மையில் இந்தப் பிசாசுக்கு உரியவையாக இருந்தனவா? ஆம், மற்றப்படி அவன் அவற்றை இயேசுவுக்கு அளிக்க எப்படி முன்வந்திருக்கக்கூடும்? அவை சாத்தானுடையவை என்பதை இயேசு மறுக்கவில்லை, அவை சாத்தானுடையவையாக இருந்திராவிட்டால் அவர் அப்படிச் செய்திருப்பார். சாத்தான் உண்மையில் இவ்வுலகத்தின் சகல தேசங்களின் காணக்கூடாத அதிபதியாக இருக்கிறான்! பைபிள் பின்வருமாறு தெளிவாகச் சொல்லுகிறது: “உலக முழுவதும் இந்தத் தீயோனின் அதிகாரத்திற்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19, NW) உண்மையில், கடவுளுடைய வார்த்தை, சாத்தானை “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள்,” என்று அழைக்கிறது.—2 கொரிந்தியர் 4:4, NW.
6 இயேசு: “என் ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமானதல்ல,” என்று ஏன் சொன்னார் என்பதை விளங்கிக்கொள்ள இந்தத் தகவல் நமக்கு உதவி செய்கிறது. (யோவான் 18:36) மேலும், சமாதானமாக வாழ்வதே இயல் நிலையிலுள்ள எல்லா ஆட்களின் ஆவலாக இருக்கையில் தேசங்களின் மக்கள் ஏன் ஒருவரையொருவர் பகைத்து அழித்துப்போட முயலுகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவும் இது நமக்கு உதவி செய்கிறது. ஆம், “சாத்தான் . . . உலகமனைத்தையும் மோசம் போக்குகிறான்.” (வெளிப்படுத்துதல் 12:9) அவன் நம்மையுங்கூட மோசம் போக்க [தவறாக வழிநடத்த, NW] விரும்புவான். கடவுளுடைய பரிசாகிய நித்திய ஜீவனை [வாழ்க்கையை] நாம் பெற்றுக் கொள்ள அவன் விரும்புகிறதில்லை. ஆகையால் நாம் கெட்டதைச் செய்வதற்கு அவனால் செல்வாக்குச் செலுத்தப்பட இடங்கொடாதபடி நம்மை வைத்துக் கொள்ள நாம் போராட வேண்டியதாய் இருக்கிறது. (எபேசியர் 6:12) நம்மைத் தவறாக வழிநடத்த சாத்தான் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்த்து நிற்கும்படி, நாம், சாத்தானையும் அவன் எப்படி வேலை செய்கிறான் என்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பிசாசு யார்
7 பிசாசாகிய சாத்தான் மெய்யான ஓர் ஆள். சில ஆட்கள் நம்புவது போல் அவன் வெறுமென மனிதவர்க்கம் முழுவதிலுமுள்ள அந்தத் தீயத்தன்மை அல்ல. நிச்சயமாகவே, மனிதர் கடவுளைக் காணமுடியாதது போல இந்தப் பிசாசையும் அவர்கள் காண முடியாது. கடவுளும் பிசாசும் ஆவி ஆட்கள். மனிதரைப் பார்க்கிலும் உயர்ந்தவர்களும் நம்முடைய கண்களுக்குக் காணக்கூடாதவர்களுமான உயிர்வகையினர்.—யோவான் 4:24.
8 ‘ஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறாரென்றால், அவர் ஏன் இந்தப் பிசாசை உண்டாக்கினார்?’ என்று ஒருவேளை எவராவது கேட்கக்கூடும். (1 யோவான் 4:8) உண்மை என்னவென்றால் கடவுள் பிசாசைப் படைக்கவில்லை. ‘என்றாலும் கடவுள் எல்லோரையும் படைத்தார் என்றால், இந்தப் பிசாசையுங்கூட கட்டாயமாகவே படைத்திருக்க வேண்டும். வேறு யார் படைத்திருக்கக் கூடும்? பிசாசானவன் எங்கிருந்து வந்தான்?’ என்று ஒருவர் கேட்கக்கூடும்.
9 கடவுள் தம்மைப்போன்ற மிகப் பல ஆவி ஆட்களைப் படைத்தார் என்று பைபிள் விளக்குகிறது. பைபிளில், இந்த ஆவிகள், தூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மேலும், இவர்கள் “தேவ புத்திரர்” என்றுங்கூட அழைக்கப்படுகிறார்கள். (யோபு 38:7; சங்கீதம் 104:4; எபிரெயர் 1:7, 13, 14) கடவுள் அவர்கள் எல்லோரையும் பரிபூரணராகப் படைத்தார். அவர்களில் ஒருவர்கூட ஒரு பிசாசாகவோ, சாத்தானாகவோ இருக்கவில்லை. “பிசாசு” என்ற இந்தச் சொல் பழிதூற்றுபவன் என்ற கருத்தையும், “சாத்தான்” என்ற சொல் எதிரி என்ற கருத்தையும் கொண்டிருக்கிறது.
10 என்றபோதிலும், கடவுளுடைய இந்த ஆவி குமாரர்களில் ஒருவன் தன்னைப் பிசாசாக ஆக்கிக் கொண்ட, அதாவது, மற்றொருவரைப் பற்றிக் கெட்ட காரியங்களைப் பேசுகிற வெறுக்கத்தக்கப் பொய்யனாக்கிக் கொண்ட அந்தச் சமயம் வந்தது. அவன் தன்னைச் சாத்தானாகவும், அதாவது, கடவுளுடைய எதிரியாகவும் ஆக்கிக் கொண்டான். அவன் அவ்வாறு படைக்கப்படவில்லை, ஆனால் பின்னால் அந்த வகையான ஆளானான். உதாரணமாக: ஒரு திருடன், திருடனாகப் பிறக்கவில்லை. அவன், நேர்மையுள்ள பெற்றோரையும் சட்டத்தைக் கைக்கொண்டு நடக்கும் சகோதரர்களையும் சகோதரிகளையும் உடையவனாக, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்திருக்கக்கூடும். பணத்தைக் கொண்டு என்னென்ன வாங்கக்கூடுமென்ற தன் சொந்த ஆசை ஒருவேளை அவன் ஒரு திருடனாகும்படி செய்வித்திருக்கலாம். அப்படியானால் கடவுளுடைய ஆவி குமாரரில் ஒருவன் எப்படித் தன்னைப் பிசாசாகிய சாத்தானாக்கிக் கொண்டான்?
11 பிசாசாக மாறின இந்தத் தூதன், கடவுள் இந்தப் பூமியையும் பின்னால் ஆதாம், ஏவாள் ஆகிய அந்த முதல் மனிதத் தம்பதிகளையும் படைத்தபோது அங்கிருந்தான். (யோபு 38:4, 7) ஆகையால் பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படி கடவுள் அவர்களுக்குச் சொன்னதை அவன் கேட்டிருப்பான். (ஆதியாகமம் 1:27, 28) சிறிது காலத்திற்குப் பின் பூமி முழுவதும், கடவுளை வணங்கிக் கொண்டிருக்கும் நீதியுள்ள மக்களால் நிரப்பப்பட்டிருக்குமென்று அவன் அறிந்திருந்தான். அதுவே கடவுளுடைய நோக்கமாக இருந்தது. என்றபோதிலும், இந்தத் தூதன் தன் சொந்த அழகையும் அறிவுத் திறமையையும் பற்றிப் பேரளவாய் எண்ணி, கடவுளுக்குக் கொடுக்கப்பட போகிற அந்த வணக்கத்தைத் தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினான். (எசேக்கியேல் 28:13-15; மத்தேயு 4:10) இந்தத் தவறான ஆசையைத் தன் மனதிலிருந்து அகற்றிப் போடுவதற்குப் பதிலாக, அவன் அதைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான். இது, தான் ஆசைகொண்ட அந்தக் கனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அவனை வழிநடத்தினது. அவன் என்ன செய்தான்?—யாக்கோபு 1:14, 15.
12 இந்தக் கலகக்கார தூதன், அந்த முதல் மனுஷியாகிய ஏவாளிடம் பேசுவதற்கு தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு பாம்பை பயன்படுத்தினான். அருகிலுள்ள ஒரு மிருகம் அல்லது பொம்மை பேசுவதுபோல, திறமையுள்ள ஒருவன் தோன்றச் செய்யக்கூடியதைப் போல் இதை அவன் செய்தான். ஆனால் உண்மையில், ஏவாளிடம் பேசிக்கொண்டிருந்தவன், பைபிளில் “பழைய பாம்பு” என்றழைக்கப்படுகிற இந்தக் கலகக்கார தூதனே. (வெளிப்படுத்துதல் 12:9) இவன் ஏவாளிடம், கடவுள் அவளிடம் உண்மையைச் சொல்லவில்லை, அவள் அடைய வேண்டிய அறிவை அவளுக்குத் தராமல் தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னான். (ஆதியாகமம் 3:1-5) இது வெறுக்கத்தக்கப் பொய், இது அவனை ஒரு பிசாசாக்கிற்று. இவ்வாறு அவன் கடவுளின் ஓர் எதிரியாக, அல்லது ஒரு சாத்தானாகவும் ஆனான். நீங்கள் காண்கிறபடி, இந்தப் பிசாசு கொம்புகளையுடையவனாகவும், ஒரு கவைமுள்ளை வைத்துக்கொண்டு பூமிக்கடியிலுள்ள வதைக்கும் இடம் ஒன்றை மேற்பார்வையிட்டு வருவதாகவும் நினைப்பது தவறு. அவன் வெகு வல்லமை வாய்ந்த ஒரு தூதன், ஆனால் பொல்லாத தூதன்.
உலகத் தொந்தரவுகளுக்கு மூலகாரணன்
13 இந்தப் பிசாசு ஏவாளுக்குச் சொன்ன அந்தப் பொய் அவன் திட்டமிட்டபடியே வேலை செய்தது. அவள் அதை நம்பினாள். ஆகவே கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனாள். மேலும் தன்னுடைய கணவனும் கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்தாள். (ஆதியாகமம் 3:6) கடவுளில்லாமல் மனிதன் வாழ்க்கை நடத்தக்கூடும் என்பதே பிசாசின் விவாதமாக இருந்தது. கடவுளுடைய உதவியில்லாமல் மக்கள் தங்களைத் தாங்களே வெற்றிகரமாய் ஆண்டுகொள்ளக்கூடுமென்று அவன் வாதாடினான். மேலும் ஆதாம் ஏவாளின் சந்ததியாக இருக்கப்போகிற அவர்களெல்லோரையும் கடவுளை விட்டு விலகிச் செல்லும்படி தான் திருப்பக்கூடும் என்றும் அவன் சவால் விட்டான்.
14 நிச்சயமாகவே, கடவுள் சாத்தானை உடனடியாகக் கொன்றிருக்கலாம், ஆனால் அது, சாத்தான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு, ஆம், கவனித்துக் கொண்டிருந்த அந்தத் தூதர்களின் மனதில் நிலைத்திருக்கக்கூடிய அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்காது. ஆகையால் சாத்தான் தன்னுடைய விவாதங்களை நிரூபிக்க முயலும்படி, கடவுள் அவனுக்குக் காலம் அனுமதித்தார். என்ன விளைவுகளுடன்?
15 கடவுளுடைய உதவியில்லாமல் மனிதர் தங்களைத் தாங்களே வெற்றிகரமாய் ஆளமுடியாதென்று காலப் போக்கு நிரூபித்திருக்கிறது. அவர்களுடைய முயற்சிகள் முற்றிலுமாய்த் தோல்வியடைந்துவிட்டிருக்கின்றன. மனிதரின் அரசாங்கங்களின் கீழ் மக்கள் பயங்கரமாய்த் துன்பப்பட்டிருக்கின்றனர். வேத எழுத்துக்கள் காட்டுகிறபடி, இந்த அரசாங்கங்கள் மக்கள் அறியாவண்ணம் பிசாசால் அடக்கியாளப்பட்டு வந்திருக்கின்றன. மேலும் கடவுள் காலத்தை அனுமதித்ததானது, சாத்தான், எல்லா ஆட்களையும் கடவுளை வணங்குவதிலிருந்து விலகிப் போகச் செய்யக்கூடாமற்போனான் என்றும் தெளிவாய்க் காட்டுகிறது. கடவுளுடைய அரசாட்சிக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கிற சிலர் எப்பொழுதுமே இருந்திருக்கின்றனர். உதாரணமாக, கடவுளைச் சேவிப்பதிலிருந்து யோபுவை நிறுத்திப்போட சாத்தான் முயன்றும் வெற்றியடையாமற் போனான் என்பதை நீங்கள் பைபிளில் வாசிக்கலாம்.—16 இவ்வாறு பிசாசின் விவாதங்கள் பொய்யாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. கடவுளுக்கு எதிராக ஒரு வஞ்சகப் பகையான கலகத்தைத் தொடங்கி வைத்திருப்பதற்காக அவன் மிக நிச்சயமாகவே அழிவுக்குப் பாத்திரனாயிருக்கிறான். மகிழ்ச்சிகரமாய் கடவுள் சாத்தானின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அந்தக் காலத்தை நாம் இப்பொழுது எட்டியிருக்கிறோம். இதைச் செய்வதற்கான முதற்படியை விவரிப்பதாய் பைபிள், பரலோகத்தில் நடந்த ஒரு முக்கியமான போரைப்பற்றிச் சொல்லுகிறது. இதை, நிச்சயமாகவே, பூமியிலுள்ள மக்கள் காணவோ கேட்கவோ இல்லை. பின்வரும் இந்தப் பைபிள் விவரப்பதிவைக் கவனமாய் வாசியுங்கள்:
17 “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுகிறிஸ்து] அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் வெளிப்படுத்துதல் 12:7-9, 12.
என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.”—18 பரலோகத்தில் இந்தப் போர் எப்பொழுது நடந்தது? அநேகமாய், 1914-ல் தொடங்கின முதல் உலகப் போர் நடந்த சமயத்தின்போது இது நடந்ததென்று அத்தாட்சி காட்டுகிறது. வெளிப்படுத்துதல் குறித்துக் காட்டுகிறபடி, அந்தச் சமயத்தில் சாத்தான் பரலோகங்களிலிருந்து நீக்கப்பட்டான். இது நாம், அது முதற்கொண்டு இவனுடைய அந்தக் “கொஞ்சக் காலப்” பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தங்கொள்ளுகிறது. இவ்வாறாக, இவை, சாத்தானுடைய உலகத்தின் “கடைசி நாட்கள்.” அக்கிரமம் மிகுதியாதல், பயம், போர்கள், உணவு குறைபாடுகள், நோய்கள், இன்னும் நாம் அனுபவித்துவரும் மற்ற துயர் தரும் நிலைமைகள் ஆகியவை இந்த உண்மைக்கு நிரூபணமாக இருக்கின்றன.—மத்தேயு 24:3-12; லூக்கா 21:26; 2 தீமோத்தேயு 3:1-5.
19 தன் “கொஞ்சக் காலம்” முடியப் போகிறது என்பதை சாத்தான் அறிந்திருக்கிறபடியால், கடவுளைச் சேவிப்பதிலிருந்து ஆட்களைத் தடுத்து வைக்க முன்னொரு போதும் இராதவண்ணம் மிகக் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறான். எத்தனை ஆட்களைக் கூடுமோ அத்தனை பேரையும் அவன் தன்னோடு கீழே அழிவுக்குள் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்புகிறான். நல்ல காரணத்துடனேயே பைபிள் அவனை, எவரை விழுங்கலாமோவென்று வகைதேடித் திரிகிற கெர்ச்சிக்கிற சிங்கமாக விவரிக்கிறது. (1 பேதுரு 5:8, 9) அவன் பிடியில் அகப்பட நாம் விரும்புகிறதில்லையென்றால், அவன் தாக்கும் வழிகளையும், மக்களை அவன் மோசம் போக்கும் வழிகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.—2 கொரிந்தியர் 2:11.
சாத்தான் மக்களை எப்படி மோசம்போக்குகிறான்
20 மக்கள் தன்னைப் பின்பற்றும்படி செய்விக்க சாத்தான் பயன்படுத்தும் முறைகள் எப்பொழுதுமே எளிதாகக் காணக்கூடியவை என்று எண்ணாதீர்கள். மக்களை ஏமாற்றுவதில் அவன் நிபுணன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவன் பயன்படுத்தி வந்திருக்கிற முறைகள் உண்மையில் அவ்வளவு தந்திரமுள்ளவையாக இருந்திருப்பதால் சாத்தான் ஒருவன் இருக்கிறான் என்றுங்கூட இன்று பல மக்கள் நம்புகிறதில்லை. அவர்களுக்கு அக்கிரமமும் தீமையும் எப்பொழுதும் இருக்கப் போகிற சாதாரண காரியங்களாக இருக்கின்றன. தற்காலத்தில், மரியாதையுள்ளவர்களைப் போன்ற ஒரு வெளித்தோற்றத்தையுடையவர்களாய் மறைவில் மிகப் பொல்லாதக் காரியங்களை நடப்பிக்கும் குற்றச் செயல் தலைவர்களைப்போல் சாத்தான் பெரும்பாலும் வேலை செய்கிறான். “சாத்தான் தானும் ஒளியின் தூதன் வேஷம் போட்டுக் கொள்ளுகிறானே,” என்று பைபிள் விளக்குகிறது. (2 கொரிந்தியர் 11:14, தி.மொ.) ஆகவே, மக்களை மோசம் போக்குவதற்கான அவனுடைய சதித்திட்டங்கள் தீங்கற்றவையாயும் நன்மை தருபவையாகவுங்கூட தோன்றும்.
21 சாத்தான் ஒரு நண்பனைப் போல் ஏவாளிடம் பாவனை செய்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பின்பு தன் சொந்த நன்மைக்காகவே இருக்குமென்று அவள் நினைத்ததைச் செய்யும்படி அவன் அவளை வஞ்சித்து மோசடி செய்தான். (ஆதியாகமம் 3:4-6) இன்றுங்கூட இவ்வாறே இருக்கிறது. உதாரணமாக, தன்னுடைய மனித பிரதிநிதிகளின் மூலமாய்ச் சாத்தான், மனித அரசாங்கங்களின் அக்கறைகளைக் கடவுளுக்குச் செய்யும் தங்கள் சேவையைப் பார்க்கிலும் மேலாக வைக்கும்படி மக்களைத் தந்திரமாய்த் தூண்டி இயக்குவிக்கிறான். இது நாட்டுப்பற்றுக்குரிய ஆவியைப் பிறப்பித்து, பயங்கர போர்களில், விளைவடையச் செய்திருக்கிறது. சமீப காலங்களில், சமாதானத்தையும் பாதுகாப்பையும் தாங்கள் நாடித் தேடுவதில் பற்பல திட்டங்களைக் கொண்டு வரும்படி சாத்தான் மக்களைத் தூண்டுவித்திருக்கிறான். இவற்றில் ஒன்று ஐக்கிய நாட்டு அமைப்பாகும். ஆனால் இது சமாதானமுள்ள ஓர் உலகத்தை உண்டுபண்ணியிருக்கிறதா? சற்றேனும் இல்லை! அதற்கு மாறாக, மனிதருக்குச் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான கடவுளுடைய ஏற்பாட்டிலிருந்து, அதாவது, “சமாதானப்பிரபு”வாகிய இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்டு நெருங்கி வந்து கொண்டிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்திலிருந்து மக்களின் கவனத்தைத் தூர விலக்குவதற்கு வழிவகையாக இது நிரூபித்திருக்கிறது.—ஏசாயா 9:6; மத்தேயு 6:9, 10.
22 நாம் நித்திய ஜீவனைப் பெறவேண்டுமென்றால், கடவுளையும் அவருடைய அரச-குமாரனையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய திருத்தமான அறிவு நமக்குத் தேவை. (யோவான் 17:3) இந்த அறிவை நீங்கள் பெற பிசாசாகிய சாத்தான் விரும்புகிறதில்லை என்றும், இதைப் பெறுவதிலிருந்து உங்களை நிறுத்திப்போட தன்னால் கூடிய எல்லாவற்றையும் அவன் செய்வான் என்றும் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். இதை அவன் எப்படிச் செய்வான்? ஒரு வழியானது, நீங்கள் எதிர்ப்பைப் பெறும்படி அவன் பார்த்துக் கொள்வதாகும், ஒருவேளை உங்களை நிந்தனைக்கு ஆளாகும்படி செய்யலாம். பைபிள் நமக்குச் சொல்லுகிறது: “கிறிஸ்து இயேசுவுக்குள் தெய்வ பக்தியாய் ஜீவிக்க விரும்புகிற யாவரும் இம்சைக்குள்ளாவார்கள்.”—2 தீமோத்தேயு 3:12, தி.மொ.
23 நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினருங்கூட, நீங்கள் வேத எழுத்துக்களை ஆராய்வதைத் தாங்கள் விரும்புகிறதில்லை என்று உங்களுக்குச் சொல்லக்கூடும். இயேசுகிறிஸ்து தாமேயும் பின்வருமாறு எச்சரித்தார்: “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” (மத்தேயு 10:36, 37) உறவினர் உங்களுக்கு மனத்தளர்வுண்டாக்க முயலக்கூடும், உண்மையான மனதுடனேயே அவர்கள் இவ்வாறு செய்வார்கள். ஏனெனில் பைபிளில் காணப்படுகிற அருமையான சத்தியங்களை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஆனால் எதிர்ப்பு வருகையில், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதை நீங்கள் நிறுத்தி விடுவீர்களானால், கடவுள் உங்களை எப்படிக் கருதுவார்? மேலும், நீங்கள் தாமே படிப்பதை நிறுத்திவிட்டால், பைபிளின் திருத்தமான அறிவானது ஜீவன் அல்லது மரணம் என்ற அப்பேர்ப்பட்ட முக்கியத்துவத்தை உடையதென்பதை அந்த நண்பர்களும் உங்களுக்கு அருமையானவர்களும் விளங்கிக் கொள்ளும்படி நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக் கொள்ளுகிற காரியங்களில் நீங்கள் உறுதியாய் நிலைத்திருப்பதானது காலப்போக்கில் அவர்களும் சத்தியத்தைக் கற்கும்படி அவர்களைக் கவர்ந்திழுக்கக்கூடும்.
24மறுபட்சத்தில், சாத்தான், கடவுளுக்கு வெறுப்புண்டாக்குகிற ஏதோ ஒழுக்கக்கேடான செயலில் நீங்கள் பங்குகொள்ளும்படி உங்களைத் தூண்டி ஈடுபட வைப்பதற்குக் காரணமாயிருப்பான். (1 கொரிந்தியர் 6:9-11) அல்லது பைபிளைப் படிப்பதற்கு நேரமில்லாமல் உங்களுக்கு அதிக வேலையிருப்பதாக நீங்கள் உணரும்படி அவன் ஒரு வேளை செய்விக்கக்கூடும். ஆனால், நீங்கள் இதைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பார்ப்பீர்களானால், இந்த வகையான அறிவை அடைவதைப் பார்க்கிலும் அதிக முக்கியமானது ஏதாவது இருக்கக்கூடுமா? பூமியில் பரதீஸில் நீங்கள் நித்திய ஜீவனை அடைவதற்கு உங்களை வழிநடத்தக்கூடிய இந்த அறிவைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுத்து நிறுத்த எந்த விதமான காரியத்திற்கும் நீங்கள் இடங்கொடாதேயுங்கள்!
25 “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,” என்று பைபிள் துரிதப்படுத்துகிறது. இப்படிச் செய்வீர்களானால், “அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.” (யாக்கோபு 4:7) சாத்தானுடைய தாக்குதலை நீங்கள் எதிர்த்து நிற்பீர்களானால், அவன் அதை விட்டுவிடுவான். இனிமேலும் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டான் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை! தான் விரும்புகிறதை நீங்கள் செய்யும்படி உங்களைச் செய்விக்க அவன் மறுபடியும் மறுபடியுமாக முயலுவான். ஆனால் நீங்கள் விடாமல் தொடர்ந்து அவனை எதிர்த்து வருவீர்களானால், கடவுளுக்கு எதிரான ஒரு போக்கை நீங்கள் ஏற்கும்படி உங்களைச் செய்விக்க அவனால் ஒருபோதும் முடியாது. ஆகையால், பைபிளில் மிக முக்கிய அறிவைப் பெற்று நீங்கள் கற்பதை நடைமுறையில் பிரயோகிக்க முற்படுங்கள். மக்களை மோசம் போக்குவதற்குச் சாத்தான் பயன்படுத்தும் மற்றொரு வழிவகையாகிய பொய் மதத்தால் வஞ்சிக்கப்படாதபடி உங்களைத் தடுத்து வைப்பதற்கு இது மிகவும் இன்றியமையாதது.
[கேள்விகள்]
1. மகிழ்ச்சியும் சமாதானமும் பெரும்பாலும் அனுபவிக்கப்படாமற் போவதால், என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2. சரித்திரத்தில் என்ன குற்றச் செயல்கள், காணக்கூடாத ஒரு தீய வல்லமை மனிதரை அடக்கியாண்டு வருவதாக இருக்குமோவென்று பலர் யோசிக்கும்படி செய்கிறது?
3. இவ்வுலகத்தின் ஆட்சியைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
4. பிசாசு, இயேசுவுக்கு என்ன காண்பித்தான்? அவருக்கு எதை அளிக்க முன்வந்தான்?
5. (எ) உலக அரசாங்கங்கள் முழுவதும் பிசாசின் உடைமைதானா என்பதை எது காட்டுகிறது? (பி) பைபிளின் பிரகாரம் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள்” யார்?
6. (எ) சாத்தானின் ஆட்சியைப் பற்றிய இந்தத் தகவல் எதை விளங்கிக் கொள்ள நமக்கு உதவி செய்கிறது? (பி) சாத்தான் நம்மை என்ன செய்ய விரும்புகிறான், ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்?
7. நாம் ஏன் பிசாசைப் பார்க்க முடியாது?
8. கடவுள் பிசாசைப் படைத்தார் என்பதாக ஏன் பல ஆட்கள் நம்புகின்றனர்?
9. (எ) தேவதூதர்கள் என்ன வகையான ஆட்கள்? (பி) “பிசாசு,” “சாத்தான்” என்ற வார்த்தைகளின் கருத்தென்ன?
10. (எ) பிசாசாகிய சாத்தானை யார் உண்டாக்கினார்? (பி) ஒரு நல்ல ஆள் தன்னை எப்படி ஒரு கடுங் குற்றவாளியாக்கிக் கொள்ளக்கூடும்?
11. (எ) கடவுளுடைய என்ன நோக்கத்தைப் பற்றி ஒரு கலகக்கார தூதன் அறிந்திருந்தான்? (பி) இந்தத் தூதனுக்கு என்ன ஆசை இருந்தது, இது என்ன செய்யும்படி அவனை வழி நடத்தினது?
12. (எ) இந்தத் தூதன் ஏவாளிடம் எப்படிப் பேசினான்? அவளிடம் என்ன சொன்னான்? (பி) இந்தத் தூதன் எப்படிப் பிசாசாகிய சாத்தான் ஆனான்? (சி) இந்தப் பிசாசின் தோற்றத்தைப் பற்றிய தவறான கருத்து என்ன?
13. (எ) இந்தப் பிசாசின் பொய்க்கு ஏவாள் எப்படிப் பிரதிபலித்தாள்? (பி) பிசாசின் விவாதங்கள் என்னவாக இருந்தன?
14. கடவுள் ஏன் சாத்தானை உடனடியாக அழித்துவிடவில்லை?
15, 16. (எ) பிசாசின் விவாதங்களைப் பற்றியதில் காலப்போக்கு என்ன நிரூபித்திருக்கிறது? (பி) என்ன நிகழ்ச்சி சமீபித்திருக்கிறது?
17. (எ) பரலோகத்தில் நடந்த போரை பைபிள் எப்படி விவரிக்கிறது? (பி) பரலோகத்தில் இருந்தவர்களுக்கும் பூமியிலிருந்தவர்களுக்கும் இதன் விளைவுகள் என்னவாயின?
18. (எ) பரலோகத்தில் இந்தப் போர் எப்பொழுது நடந்தது? (பி) சாத்தான் “கீழே தள்ளப்பட்டது” முதற்கொண்டு பூமியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
19. (எ) இப்பொழுது சாத்தான் என்ன செய்ய கடுமையாய் முயன்று கொண்டிருக்கிறான்? (பி) நம் பங்கில் என்ன செய்வது ஞானமாயிருக்கும்?
20. (எ) சாத்தானுடைய தாக்குதல் எவ்வளவு வெற்றிகரமாக இருந்திருக்கிறது? (பி) அவனுடைய சதித்திட்டங்கள் அடிக்கடி தீங்கற்றவையாகவும் நன்மை தருபவையாகவுங்கூட தோன்றுமென்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
21. சாத்தான் பயன்படுத்தியிருக்கிற ஒரு சதித்திட்டம் என்ன?
22. நாம் எந்த அறிவைப் பெறுவதைச் சாத்தான் விரும்புகிறதில்லை?
23. (எ) நமக்கு மனத்தளர்வை உண்டாக்க நண்பர்களையும் உறவினரையுங்கூட சாத்தான் எப்படிப் பயன்படுத்தக்கூடும்? (பி) எதிர்ப்பு வருகையில் நீங்கள் ஏன் ஒருபோதும் அதற்குக் கீழ்ப்பட்டுவிடக்கூடாது?
24. (எ) உயிரளிக்கும் அறிவை உட்கொண்டு வருவதிலிருந்து மக்களைத் தடுத்துவைக்க வேறு எந்த வழிகளைப் பிசாசு பயன்படுத்துகிறான்? (பி) கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது எவ்வளவு முக்கியமானதென்று நீங்கள் உணருகிறீர்கள்?
25. நாம் விடாமல் தொடர்ந்து பிசாசை எதிர்த்து வருவோமானால், அவன் நமக்கு என்ன செய்ய முடியாதவனாய் இருப்பான்?
[பக்கம் 16, 17-ன் படம்]
இந்த உலக அரசாங்கங்க ளெல்லாம் தன்னுடையவையாக இருந்திராவிட்டால் சாத்தான் அவற்றைக் கிறிஸ்துவுக்குக் கொடுக்க முன்வந்திருக்கக் கூடுமா?
[பக்கம் 19-ன் படம்]
இந்தத் திருடன் ஒரு திருடனாகப் பிறக்கவில்லை, அப்படியே பிசாசானவனும் “பிசாசாகப்” படைக்கப்படவில்லை
[பக்கம் 20, 21-ன் படம்]
பரலோகத்தில் போர், சாத்தானும் பேய்களும் பூமிக்குத் தள்ளப்படுவதில் முடிவடைந்தது. இதன் விளைவுகளை நீங்கள் இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்
[பக்கம் 24-ன் படம்]
நீங்கள் தொடர்ந்து பைபிள் படிப்பது எதிர்க்கப்படலாம்