நியாயத்தீர்ப்பு நாளும் அதற்குப் பின்பும்
அதிகாரம் 21
நியாயத்தீர்ப்பு நாளும் அதற்குப் பின்பும்
நியாயத்தீர்ப்பு நாள் என்ன காட்சியை உங்கள் மனதுக்குக் கொண்டு வருகிறது? சிலர் பின்வருமாறு கற்பனை செய்து பார்க்கிறார்கள்: ஒரு பெரிய சிங்காசனம், அதற்கு முன்னால், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிற ஆட்கள் ஒரு நீண்ட வரிசையாய் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையிலுள்ள ஒவ்வொரு ஆளும் சிங்காசனத்துக்கு முன்பாகக் கடந்து போகையில், அவன் கடந்த காலங்களில் செய்த செயல்களைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படுகிறான், அவை யாவும், அந்த நியாயாதிபதியின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவன் செய்த அந்தக் காரியங்களின் ஆதாரத்தின் பேரில் அவன் பரலோகத்துக்கோ, அல்லது எரிநரகத்திற்கோ அனுப்பப்படுகிறான்.
2 பைபிளோவெனில், நியாயத்தீர்ப்பு நாளைப்பற்றிய மிக வேறுபட்ட ஒரு காட்சியை அளிக்கிறது. அது அஞ்சி நடுங்குவதற்கான அல்லது திகிலடைவதற்கான ஒரு நாளல்ல. கடவுளைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறதென்பதைக் கவனியுங்கள்: “ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.” (அப்போஸ்தலர் 17:31) கடவுளால் நியமிக்கப்பட்ட இந்த நியாயாதிபதி, நிச்சயமாக, இயேசுகிறிஸ்துவே.
3 கிறிஸ்து நேர்மையாகவும் நீதியாகவும் நியாயந்தீர்ப்பாரென்று நாம் நிச்சயமாயிருக்கலாம். ஏசாயா 11:3, 4-ல் அவரைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம் இதைக் குறித்து நமக்கு உறுதியளிக்கிறது. ஆகவே, பொதுவாக மக்கள் கொண்டுள்ள கருத்துக்கு எதிர்மாறாக, அவர், ஆட்கள் கடந்த காலங்களில் செய்த பாவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை நியாயந்தீர்க்கமாட்டார், அந்தப் பாவங்கள் பல அறியாமையிலும் செய்யப்பட்டிருக்கலாம். ஒருவன் சாகையில் அவன் செய்திருக்கிற எந்தப் பாவங்களிலிருந்தும் விடுதலை செய்யப்படுகிறான் என்று பைபிள் விளக்குகிறது. “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே,” என்று அது சொல்லுகிறது. (ரோமர் 6:7) இது, ஒருவன் உயிர்த்தெழுப்பப்படுகையில், அவன் சாவதற்கு முன்பாகச் செய்திருந்தவற்றை அடிப்படையாகக் கொண்டல்ல, நியாயத்தீர்ப்பு நாளின்போது அவன் செய்கிறவற்றைக் கொண்டே நியாயந்தீர்க்கப்படுவான் என்று அர்த்தங் கொள்கிறது.
1 கொரிந்தியர் 6:1-3) “நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது,” என்று இந்தப் பைபிள் எழுத்தாளன் சொல்லுகிறான். இந்த நியாயாதிபதிகள் கிறிஸ்துவை உண்மையுடன் பின்பற்றும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பைபிள் தொடர்ந்து சொல்லுகிற பிரகாரம், இவர்கள் “உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.” ஆகவே நியாயத்தீர்ப்பு நாள் 1,000 ஆண்டுகள் நீடித்ததாயிருக்கும். இது, கிறிஸ்துவும் அவரைப் பின்பற்றும் அபிஷேகம் பண்ணப்பட்ட 1,44,000 பேரும் “புதிய வானங்களாக” “புதிய பூமி”யின் மேல் ஆளுகை செய்யப்போகும் அதே 1,000 ஆண்டு காலப்பகுதியாகும்.—வெளிப்படுத்துதல் 20:4, 6; 2 பேதுரு 3:13.
4 ஆகவே நியாயத்தீர்ப்பு நாள் சொல்லர்த்தமான 24-மணி நேர நாள் அல்ல. இந்த நியாயத்தீர்ப்பு செய்வதில் இயேசு கிறிஸ்துவுடன் பங்கு கொள்ளப் போகிறவர்களைக் குறித்துப் பேசுகையில் பைபிள் இதைத் தெளிவாக்குகிறது. (5 இந்தப் பக்கங்களைப் பாருங்கள். இந்த நியாயத்தீர்ப்பு நாள் மனிதவர்க்கத்துக்கு எவ்வளவு அதிசயமானதாயிருக்கும் என்பதைப் பற்றிய ஓரளவான அபிப்பிராயத்தை இவை கொடுக்கின்றன. அந்த மிக மேன்மையும் மகிமையுமான காலத்தைப் பற்றி பைபிளின் சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதினான்: “வயல்வெளியும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது காட்டு மரங்களெல்லாம் கெம்பீரிக்கும். யெகோவாவுக்கு முன்பாகவே அந்த ஆரவாரம், அவர் வருகிறார்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார் [வந்திருக்கிறார், NW]; அவர் பூலோகத்தை நீதியினாலும் ஜாதிகளைத் தமது உண்மையினாலும் நியாயந்தீர்ப்பார்.”—சங்கீதம் 96:12, 13, தி.மொ.
6 அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிறவர்கள் நியாயத்தீர்ப்பு நாளின்போது இந்தப் பூமியை ஒரு பரதீஸாக்கும்படி உழைப்பார்கள். இந்தப் பரதீஸூக்குள் மரித்தோர் திரும்ப வரவேற்கப்படுவார்கள். (லூக்கா 23:43) மரணத்தால் நீண்ட காலமாகப் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் மறுபடியும் ஒன்று சேர்க்கப்படுகையில் ஆ, எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி அங்கிருக்கும்! ஆம், சமாதானமாய் வாழ்வதும், நல்ல சுக ஆரோக்கியத்தை அனுபவித்து மகிழ்வதும், கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய போதனைகளைப் பெறுவதும் ஆ, எவ்வளவு இன்பமாயிருக்கும்! பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) நியாயத்தீர்ப்பு நாளின்போது மக்கள் எல்லோரும் யெகோவாவைப் பற்றிக் கற்றுக் கொள்வார்கள். மேலும் அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைச் சேவிக்க அவர்களுக்கு எல்லா வாய்ப்பும் அளிக்கப்படும்.
7 இப்படிப்பட்ட பரதீஸிய நிலைமைகளின்கீழ் இயேசு கிறிஸ்துவும் அவருடைய 1,44,000 உடனுழைக்கும் அரசர்களும் மனிதவர்க்கத்தை நியாயந்தீர்ப்பார்கள். யெகோவாவைச் சேவிக்கத் தெரிந்துகொள்ளுகிற மக்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பார்கள். ஆனால், இந்த மிகச் சிறந்த சூழ்நிலைமைகளின் கீழுங்கூட, சிலர் கடவுளைச் சேவிக்க மறுப்பார்கள். வேத எழுத்துக்கள் சொல்லுகிற பிரகாரம்: “துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக் கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ் செய்து கர்த்தருடைய [யெகோவாவின், தி.மொ.] மகத்துவத்தைக் கவனியாதே போகிறான்.” (ஏசாயா 26:10) ஆகவே தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளவும் நீதியைக் கற்றுக்கொள்ளவும் முழு வாய்ப்பும் கொடுக்கப்பட்ட பின்பு இப்படிப்பட்ட பொல்லாதவர்கள் அழிக்கப்படுவார்கள். சிலர் நியாயத்தீர்ப்பு நாள் முடிவதற்கு முன்பாகவுங்கூட கொல்லப்படுவார்கள். (ஏசாயா 65:20) அந்தப் பரதீஸான பூமியைக் கறைப்படுத்துவதற்கு அல்லது கெடுப்பதற்குத் தொடர்ந்திருக்கும்படி அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
8 யெகோவாவின் மகா நியாயத்தீர்ப்பு நாளின்போது பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவது ஆதியாகமம் 19:4-11, NW.
நிச்சயமாகவே மிக மேன்மையான சிலாக்கியமாகும். எனினும், அது எல்லாரும் அனுபவிக்கப்போகாத ஒரு சிலாக்கியமென பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உதாரணமாக, பூர்வ சோதோமின் ஜனங்களைக் கவனியுங்கள். சோதோமின் ஆண்கள் லோத்துவின் வீட்டுக்கு வந்திருந்த ‘ஆண்களோடு’ பாலுறவுகொள்ளும்படி தேடினரென பைபிளில் சொல்லியிருக்கிறது. அவர்களுடைய ஒழுக்கக்கேட்டு நடத்தை அவ்வளவு மிதமீறி சென்றிருந்ததால் அவர்கள் குருடாகும்படி அற்புதமாய்ச் செய்யப்பட்டபோதிலுங்கூட, லோத்தின் வீட்டுக்கு வந்தவர்களோடு பாலுறவு கொள்ளும்படி வீட்டுக்குள் நுழைய “வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.”—9 இத்தகைய பயங்கர பொல்லாத ஆட்கள், நியாயத்தீர்ப்பின் நாளில் உயிர்த்தெழுப்பப்படுவார்களா? அவர்கள் உயிர்த்தெழுப்பப்படமாட்டார்கள் என்றே வேத எழுத்துக்கள் குறிப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக, மனுஷகுமாரத்திகளோடு பாலுறவுகள் கொள்ளும்படி பரலோகத்தில் தங்களுக்குரிய இடத்தை விட்டுவிட்ட தூதர்களைப் பற்றி, தேவாவியால் ஏவப்பட்ட இயேசுவின் சீஷரில் ஒருவனான யூதா முதலில் எழுதினான். பின்பு பின்வருமாறு தொடர்ந்து கூறினான்: “சோதோம் கொமோராவும் சுற்று ஊர்களும் அவர்களைப்போல் விபசாரத்தில் மிதமிஞ்சி அந்நிய மாம்சத்தை நாடித் தொடர்ந்ததினாலே நித்திய அக்கினியாகிய தண்டனையடைந்து திருஷ்டாந்தமாகக் கிடக்கின்றன.” (யூதா 6, 7, தி.மொ.; ஆதியாகமம் 6:1, 2) ஆம், அவர்களுடைய மிதமிஞ்சிய ஒழுக்கக்கேட்டினிமித்தம் சோதோமின் மற்றும் சுற்றுப்புற ஊர்களின் ஜனங்கள் அழிவை அனுபவித்தனர், அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் உயிர்த்தெழுப்பப்படமாட்டார்களென தோன்றுகிறது.—2 பேதுரு 2:4-6, 9, 10a.
10 சோதோமியர் உயிர்த்தெழுப்பப்படுவதில்லை என்றே இயேசுவும் குறிப்பிட்டார். தாம் அற்புதங்களை நடப்பித்த பட்டணங்களில் ஒன்றான கப்பர்நகூமைப் பற்றிப் பேசினபோது, அவர் பின்வருமாறு கூறினார்: “உன்னில் [கப்பர்நகூமில்] செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 11:22-24) தாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த இஸ்ரவேலர் ஜனக்கூட்டத்தாரின் மனதில், பூர்வ சோதோமியர் நியாயத்தீர்ப்புநாளில் உயிர்த்தெழுதலுக்கு முற்றிலும் தகுதியற்றவர்கள் என்றிருந்தது, அந்தப் பூர்வ சோதோமியருக்கு இலகுவாயிருக்கும் என்று சொல்வதனால் இயேசு இங்கே அந்தக் கப்பர்நகூமின் ஜனங்கள் அவர்களைப்பார்க்கிலும் எவ்வளவு அதிகக் கண்டனத்துக்குத் தகுதியுடையோரென அறிவுறுத்தினார்.
11 அப்படியானால், நிச்சயமாகவே, உயிர்த்தெழுதலுக்குத் தகுதியுடையோராயிருக்கும்படி நாம் நம் வாழ்க்கையை நடத்த நம்மால் கூடிய எல்லாவற்றையும் செய்யவேண்டும். ஆனால் பின்வருமாறு இன்னும் கேட்கப்படலாம்: நீதியைக் கற்று அதன்படி நடப்பது, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட சிலருக்கு மற்றவர்களைப் பார்க்கிலும் அதிகக் கடினமாயிருக்குமா? பின்வருவதைக் கவனியுங்கள்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தெபோராள், ரூத், தானியேல் போன்ற நீதியுள்ள ஆட்கள் தாங்கள் மரிப்பதற்கு முன்னால், அவர்களெல்லாரும் அப்போஸ்தலர் 24:15.
மேசியாவின் வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்தார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவரைப்பற்றிக் கற்றுக்கொள்வதிலும், அவர் பரலோகத்தில் ஆட்சிசெய்வதை அறிவதிலும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள்! ஆகையால், நீதியின்படி நடப்பது, அச்சமயத்தில் உயிர்த்தெழுப்பப்படும் “அநீதிமான்கள்” எவருக்காவது இருப்பதைப்பார்க்கிலும், இந்த “நீதிமான்களுக்கு” அதிக இலகுவாயிருக்கும்.—உயிர்த்தெழுதல்கள்—“ஜீவனுக்கும்” “நியாயத்தீர்ப்புக்கும்”
12 நியாயத்தீர்ப்பு நாளில் இருக்கப்போகும் இந்த நிலையை விவரிப்பவராய் இயேசு பின்வருமாறு கூறினார்: “ஞாபகார்த்தக் கல்லறைகளில் இருக்கிறவர்கள் அவருடைய குரலைக்கேட்டு வெளியே வருவார்கள், நல்லக் காரியங்களைச் செய்தவர்கள் ஜீவனுக்குரிய ஓர் உயிர்த்தெழுதலுக்கும், தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்புக்குரிய ஓர் உயிர்த்தெழுதலுக்கும் வருவார்கள் . . . நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; நான் செய்யும் இந்தத் தீர்ப்பு நீதியாயிருக்கிறது, ஏனென்றால் நான் என் சொந்த சித்தத்தைத் தேடுகிறதில்லை, என்னை அனுப்பினவருடைய சித்தத்தையே தேடுகிறேன்.” (யோவான் 5:28-30, NW) “இந்த ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதல்” என்பது என்ன, மேலும் “நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதல்” என்பதும் என்ன? இவற்றைப் பெறுகிறவர்கள் யாவர்?
13 மரித்தோர் இந்தப் பிரேதக்குழியிலிருந்து வெளியே வருகையில் அவர்களுடைய கடந்த கால செயல்களைக் கொண்டு அவர்கள் நியாயந்தீர்க்கப்படுகிறதில்லை என்பதை நாம் தெளிவாகக் கண்டறிந்திருக்கிறோம். அதற்கு மாறாக, நியாயத்தீர்ப்பு நாளின்போது அவர்கள் செய்பவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் தீர்க்கப்படுகிறார்கள். ஆகவே, “நல்லக் காரியங்களைச் செய்தவர்கள்” என்றும் “தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்து வந்தவர்கள்,” என்றும் இயேசு குறிப்பிட்டபோது நியாயத்தீர்ப்பு நாளின்போது அவர்கள் செய்யப்போகும் நல்லக் காரியங்களையும் கெட்டக் காரியங்களையுமே அவர் குறிப்பிட்டார். அவர்கள் செய்யும் நல்லக் காரியங்களினிமித்தமாக, உயிர்த்தெழுப்பப்பட்ட பலர், அந்த 1,000 ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளின் முடிவுக்குள் மனித பரிபூரணத்துக்குப் படிப்படியாய் முன்னேறியிருப்பார்கள். இவ்வாறாக மரித்தோரிலிருந்து அவர்கள் திரும்பிவந்தது “ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலாக” நிரூபிக்கும், எப்படியெனில் அவர்கள் பாவமில்லாத பரிபூரண ஜீவனை அடைவார்கள்.
14 மறுபட்சத்தில், நியாயத்தீர்ப்பு நாளின்போது, ‘தீய அல்லது கெட்டக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்து வந்தவர்களைப்’ பற்றியதென்ன? அவர்கள் மரித்தோரிலிருந்து திரும்பி வந்தது “நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலாக” நிரூபிக்கும். இதன் பொருளென்ன? இது நியாயத்தீர்ப்பை அல்லது மரண தண்டனைத் தீர்ப்பைக் குறிக்கிறது. ஆகவே இந்த ஆட்கள் நியாயத்தீர்ப்பு நாளின்போதோ அல்லது அதன் முடிவிலோ அழிக்கப்படுவர். காரணமென்னவெனில் இவர்கள் கெட்டக் காரியங்களைச் செய்கிறார்கள்; நீதியைக் கற்று நடைமுறையில் பழக்கமாய்ச் செய்துவர இவர்கள் பிடிவாதமாய் மறுத்துவிடுகின்றனர்.
இந்த நியாயத்தீர்ப்பு நாள் எப்பொழுது தொடங்குகிறது?
15 நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன்புதானே என்ன நடந்தேறுகிறதென்பதை அப்போஸ்தலனாகிய யோவான் தரிசனத்தில் கண்டான். அவன் பின்வருமாறு எழுதினான்: “பின்பு பெரிய வெண் சிங்காசனத்தையும் அதின் மேல் வீற்றிருக்கிறவரையுங் கண்டேன். அவர் சமுகத்தை விட்டுப் பூமியும் வானமும் அகன்று போயின . . . மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் சிங்காசனத்துக்கு முன் நிற்கக் கண்டேன்; மரித்தோர் . . . தீர்ப்புப் பெற்றார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:11, 12, தி.மொ.) ஆகவே நியாயத்தீர்ப்பு நாள் தொடங்குவதற்கு முன்பாக, “பூமியும் வானமும்” ஆனவற்றாலாகிய இந்தத் தற்போதைய காரிய ஒழுங்கு முறை ஒழிந்து போம். பொல்லாதவர்கள் எல்லோரும் அர்மகெதோனில் அழிக்கப்பட்டுப் போகையில் கடவுளைச் சேவிப்பவர்கள் மாத்திரமே தப்பிப்பிழைத்திருப்பர்.—1 யோவான் 2:17.
16 இவ்வாறாக, நியாயத்தீர்ப்பு நாளில் நியாயந்தீர்க்கப்படுபவர்கள் இந்த உயிர்த்தெழுப்பப்பட்ட “மரித்தோர்” மாத்திரமே அல்லர். “உயிரோடிருக்கிறவர்க”ளாகிய, அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிறவர்களும் அவர்களுக்குப் பிறக்கக்கூடிய பிள்ளைகளுங்கூட நியாயந்தீர்க்கப்படுவர். (2 தீமோத்தேயு 4:1) அவர்கள் எப்படி நியாயந்தீர்க்கப்படுகிறார்கள் என்பதை யோவான் தன்னுடைய தரிசனத்தில் கண்டான். அவன் எழுதினதாவது: “புஸ்தகங்கள் [சுருள்கள், NW] விரிக்கப்பட்டன; . . . அந்தப் புஸ்தகங்களில் [சுருள்களில்] எழுதியவைகளைக் கொண்டு மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே தீர்ப்புப் பெற்றார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன, ஒவ்வொருவரும் தத்தம் செய்கைகளின்படியே தீர்ப்புப் பெற்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:12, 13, தி.மொ.
17 “மரித்தோரும்” “உயிரோடிருக்கிறவர்களுங்”கூட அதிலிருக்கிறவற்றைக் கொண்டு தீர்ப்பு செய்யப்படுகிற அந்த விரிக்கப்பட்ட “சுருள்கள்” யாவை? அவை நம்முடைய தற்போதைய பரிசுத்த பைபிள் மட்டுமல்லாமல் கூடுதலாகச் சேர்க்கப்படுகிற சட்டங்களும் கட்டளைகளும் அடங்கிய தேவாவியால் ஏவப்பட்ட எழுத்துக்கள் அல்லது புத்தகங்கள், அவற்றை வாசிப்பதன் மூலம் பூமியிலிருக்கும் எல்லா மக்களும் கடவுளுடைய சித்தத்தை அறியக் கூடியவர்களாக இருப்பார்கள். பின்பு, இந்தச் “சுருள்களில்” இருக்கும் சட்டங்களும் கட்டளைகளுமானவற்றின் அடிப்படையின் பேரில், பூமியிலிருக்கும் ஒவ்வொருவரும் நியாயந்தீர்க்கப்படுவர். இவற்றில் எழுதப்பட்டிருப்பவற்றிற்குக் கீழ்ப்படிகிறவர்கள் கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலியின் நன்மைகளைப் பெற்றுக்கொண்டு, படிப்படியாய் மனித பரிபூரணத்துக்கு முன்னேறுவார்கள்.
18 இந்த 1,000 ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளின் முடிவில் பூமியிலெங்கும் ஒருவரும் ஆதாமின் பாவத்தின் காரணமாகச் சாகும் நிலையில் இரார். மெய்யாகவே, முழு கருத்தில் எல்லோரும் உயிருக்கு வந்திருப்பார்கள். பைபிள் பின்வருமாறு சொல்லுகையில் இதையே குறிப்பிடுகிறது: “மரணமடைந்த மற்றவர்கள் [பரலோகத்துக்குப் போகிற 1,44,000 பேரல்லாமல் மற்றவர்கள்] வெளிப்படுத்துதல் 20:5) இங்கே “மரணமடைந்த மற்றவர்களைப்” பற்றி குறிப்பிடப்படுவது அந்த 1,000 ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளின் முடிவில் மற்றவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறார்களென்று பொருள் கொள்ளுகிறதில்லை. அதற்கு மாறாக, எல்லா ஆட்களும் கடைசியாக மனித பரிபூரணத்தை அடைவதில் அவர்கள் உயிருக்கு வருகிறார்கள் என்றே பொருள் கொள்ளுகிறது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இருந்த அதே பரிபூரண நிலைமையில் அவர்கள் இருப்பார்கள். அப்பொழுது என்ன நடக்கும்?
அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.” (நியாயத்தீர்ப்பு நாளுக்குப் பின்பு
19 இயேசு கிறிஸ்து, கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிற எல்லாவற்றையும் செய்து முடித்தவராய், “தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.” இது இந்த 1,000 ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளின் முடிவில் நடக்கும். அதற்குள்ளாக எல்லா சத்துருக்களும் வழியிலிருந்து விலக்கப்பட்டிருப்பார்கள். இவற்றில் கடைசி சத்துரு ஆதாமிலிருந்து சுதந்தரித்த மரணமே. அது அழிக்கப்படும்! அப்பொழுது இந்த ராஜ்யம் யெகோவா தேவனின் உடைமையாகிறது. அவர் அதை நேர்முகமாய் அரசராக ஆளுகை செய்கிறார்.—1 கொரிந்தியர் 15:24-28.
20 “ஜீவ சுருளில்” அல்லது “ஜீவ புஸ்தகத்தில்” யாருடைய பெயர் எழுதப்பட வேண்டுமென்பதை யெகோவா எப்படித் தீர்மானிப்பார்? (வெளிப்படுத்துதல் 20:12, 15) மனிதவர்க்கத்தைச் சோதிக்கும் ஒரு சோதனையின் மூலமாகத் தீர்மானிப்பார். இப்படிப்பட்ட ஒரு சோதனையின் கீழ் ஆதாமும் ஏவாளும் எப்படித் தவறினார்கள் என்பதையும், யோபு, தான் சோதிக்கப்பட்டபோது எப்படித் தன் உத்தமத்தைக் காத்துக்கொண்டான் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ஆனால் அந்த 1,000 ஆண்டுகளின் முடிவு வரையாக உயிர் வாழ்கிற மனிதரில் பெரும்பான்மையர் தங்களுடைய விசுவாசம் ஒருபோதும் சோதிக்கப்பட்டிராதவர்களாக இருப்பார்கள். அவர்கள் தாங்கள் உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்பாக யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி அறியாதவர்களாக இருந்தார்கள். சாத்தானின் பொல்லாதக் காரிய ஒழுங்கு முறையின் பாகமாக அவர்கள் இருந்தார்கள்; “அநீதிமான்களாக” இருந்தார்கள். பின்பு, அவர்களுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, சாத்தானிடமிருந்து வரும் எவ்வித எதிர்ப்புமில்லாமல் பரதீஸில் வாழ்ந்ததன் காரணமாக யெகோவாவைச் சேவிப்பது அவர்களுக்கு எளிதாயிருந்தது. ஆனால், அப்பொழுது பரிபூரணராயிருக்கும் இந்தக் கோடிக்கணக்கான மனிதர், மேலும் தொடர்ந்து யெகோவாவைச் சேவிப்பதை நிறுத்திப்போட முயலும்படி சாத்தானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அவர்கள் விடாமல் தொடர்ந்து அவரைச் சேவிப்பார்களா? சாத்தான், அந்தப் பரிபூரண ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தான் செய்ததை இவர்களுக்கும் செய்யக்கூடுமா?
21 இப்படிப்பட்ட கேள்விகளைத் தீர்க்க, சாத்தானையும் அவனுடைய பேய்களையும், வெளிப்படுத்துதல் 20:7-10, 15). ஆனால் “ஜீவ புஸ்தகத்தில்” தங்கள் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதாகக் காணப்படுகிறவர்கள் அந்த மகிமையான பூமிக்குரிய பரதீஸில் நிலைத்திருப்பார்கள். “ஜீவ புஸ்தகத்தில்” தங்கள் பெயர் எழுதப்பட்டிருப்பதானது, யெகோவா அவர்களை இருதயத்திலும், மனதிலும், உடலிலும் பரிபூரணமாய் நீதியுள்ளவர்களாயும் இவ்வாறு பூமியில் பரதீஸில் என்றும் வாழ்வதற்குத் தகுதியுள்ளவர்களாயும் இருப்பதாகத் தீர்ப்பளிக்கிறார் என்று பொருள் கொள்ளுகிறது.
அவர்கள் 1,000 ஆண்டுகளாக இருந்திருந்த அந்த அபிஸிலிருந்து யெகோவா கட்டவிழ்த்து விடுகிறார். இதன் விளைவென்ன? யெகோவாவைச் சேவிப்பதை விட்டு விலகும்படி சாத்தான் சில ஆட்களைச் செய்விக்கிறான் என்று பைபிள் காட்டுகிறது. இவர்கள் “கடற்கரை மணலத்தனையாய்” இருப்பார்கள், அதாவது இவர்களுடைய எண்ணிக்கை தீர்மானிக்கப்படாததாய் இருக்குமென்று பொருள் கொள்ளுகிறது. இந்தச் சோதனை நிறைவேற்றப்பட்ட பின்பு, சாத்தானும் அவனுடைய பேய்களும், அவர்களோடு அந்தச் சோதனையில் தவறிப் போனவர்களும் அந்த அடையாளக் குறிப்பான ‘அக்கினிக் கடலுக்குள்’ எறியப்படுகிறார்கள். அதுவே இரண்டாம் (நித்திய) மரணம். (தற்போதைய நியாயத்தீர்ப்பு நாள்
22 ஆகவே 1,000 ஆண்டுகளுக்கு மேற்படும் எதிர்காலத்துக்குள் நடக்கப்போகிற நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவலை பைபிள் கொடுக்கிறது. மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகிறவற்றைக் குறித்துப் பயப்படுவதற்குக் காரணமில்லை என்றும் அது காட்டுகிறது. ஆனால் கேள்வியானது: யெகோவா தேவன் எதிர்காலத்தில் வைத்திருக்கிற அந்த நல்ல காரியங்களை அனுபவித்து மகிழ நீங்கள் அங்கே இருப்பீர்களா? என்பதே. இது, ஒரு முந்தின நியாயத்தீர்ப்பு நாளை, அதாவது தற்போதைய, “தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாளை,” நீங்கள் தப்பிப் பிழைத்திருப்பீர்களா என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது.—2 பேதுரு 3:7.
23 ஆம், கிறிஸ்து திரும்பி வந்து தம்முடைய பரலோக சிங்காசனத்தில் உட்கார்ந்தது முதற்கொண்டு, மனிதவர்க்கம் முழுவதும் நியாயத்தீர்ப்பில் இருந்து கொண்டிருக்கிறது. இந்தத் தற்போதைய “நியாயத்தீர்ப்பு நாள்” அந்த 1,000 ஆண்டு நியாயத்தீர்ப்பு நாள் தொடங்குவதற்கு முன்னதாக வருகிறது. இந்தத் தற்போதைய நியாயத்தீர்ப்பின்போது மக்கள் “வெள்ளாடுகளாகக்” கிறிஸ்துவின் இடது பக்கமாகவும் அல்லது “செம்மறியாடுகளாக” அவருடைய வலது பக்கமாகவும் பிரிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த “வெள்ளாடுகள்,” கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட “சகோதரர்” கடவுளுக்குச் செய்யும் சேவையில் அவர்களுக்கு உதவி செய்யத் தவறினதன் காரணமாக அழிக்கப்படுவார்கள். காலப் போக்கில், இந்த “வெள்ளாடுகள்” மனந்திரும்பாத பாவிகளாக, பொல்லாதவர்களாக, அநீதியைப் பழக்கமாய்ச் செய்துவருவதில் கடினப்பட்டவர்களாகத் தங்களைக் காட்டுகிறார்கள். மறுபட்சத்தில் அந்தச் “செம்மறியாடுகள்” எல்லா வகையிலும் கிறிஸ்துவின் “சகோதரரை” ஆதரித்துவருவதன் காரணமாக ராஜ்ய ஆட்சியின் கீழ் உயிரளிக்கப்படுகிறவர்களாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.—மத்தேயு 25:31-46.
[கேள்விகள்]
1. நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றிய பொதுவான கருத்து என்ன?
2. (எ) நியாயத்தீர்ப்பு நாளை யார் ஏற்பாடு செய்திருக்கிறார்? (பி) அவர் யாரை நியாயாதிபதியாக நியமித்திருக்கிறார்?
3. (எ) கிறிஸ்து நேர்மையாக நியாயந்தீர்ப்பார் என்று நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்? (பி) எந்த அடிப்படையின்பேரில் மக்கள் நியாயந்தீர்க்கப்படுவர்?
4. (எ) நியாயத்தீர்ப்பு நாள் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்? (பி) கிறிஸ்துவுடன் யார் நியாயாதிபதிகளாக இருப்பார்கள்?
5, 6. (எ) பைபிளின் ஒரு சங்கீதக்காரன் இந்த நியாயத்தீர்ப்பு நாளை எப்படி விவரித்தான்? (பி) நியாயத்தீர்ப்பு நாளின்போது பூமியில் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
7. நியாயத்தீர்ப்பு நாளின்போது, கடவுளைச் சேவிக்கத் தெரிந்து கொள்ளுகிறவர்களுக்கும், அப்படிச் செய்ய மறுத்து விடுகிறவர்களுக்கும் என்ன நடக்கும்?
8.சோதோம் மனிதரின் ஒழுக்க நிலைமை எவ்வாறு இருந்தது?
9, 10. சோதோமின் பொல்லாத ஆட்களுக்கு உயிர்த்தெழுதலின் எதிர்பார்ப்பைப் பற்றி வேத எழுத்துக்கள் என்ன தெரிவிக்கின்றன?
11. ஏன் நியாயத்தீர்ப்பு நாளில் “அநீதிமான்கள்” எவருக்காயினும் இருப்பதைப்பார்க்கிலும் “நீதிமான்களுக்கு” இலகுவாயிருக்கும்?
12. யோவான் 5:28-30-ன்படி யார் “ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலைப்” பெறுவார்கள்? யார் “நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலைப்” பெறுவார்கள்?
13. ஒருவன் “ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலைப்” பெறுவது அவனுக்கு எதைக் குறிக்கும்?
14. ஒருவன் “நியாயத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலைப்” பெறுவது அவனுக்கு எதைக் குறிக்கும்?
15. நியாயத்தீர்ப்பு நாள் தொடங்குவதற்கு முன்புதானே என்ன நடக்கிறது?
16. (எ) நியாயத்தீர்ப்பு நாளின்போது மரித்தோர் மட்டுமல்லாமல் வேறு எவரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்? (பி) எதைக் கொண்டு அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
17. “உயிரோடிருக்கிறவர்களும்” “மரித்தோரும்” நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிப்படையான அந்தச் “சுருள்கள்” யாவை?
18. (எ) நியாயத்தீர்ப்பு நாளின் முடிவில் நிலைமை என்னவாயிருக்கும்? (பி) அந்த 1,000 ஆண்டுகளின் முடிவில் “மரித்தோர்” எவ்வகையில் உயிருக்கு வருகிறார்கள்?
19. நியாயத்தீர்ப்பு நாளின் முடிவில் கிறிஸ்து என்ன செய்கிறார்?
20. (எ) “ஜீவ புஸ்தகத்தில்” யாருடைய பெயர்கள் எழுதப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிக்க யெகோவா என்ன செய்வார்? (பி) மனிதவர்க்கத்துக்கு ஒரு கடைசி சோதனை ஏன் தகுந்ததாயிருக்கிறது?
21. (எ) யெகோவா எப்படி மனிதவர்க்கம் சோதிக்கப்பட செய்வார்? (பி) இந்தச் சோதனை முடிவடைகையில், அதில் உட்பட்ட எல்லோருக்கும் என்ன நடக்கும்?
22. நியாயத்தீர்ப்பு நாளையும் மனிதவர்க்கத்தின்மேல் வரும் அந்தக் கடைசி சோதனையையும் காண்பதற்கு, நாம் இப்பொழுது எதைத் தப்பிப்பிழைக்க வேண்டும்?
23. (எ) இப்பொழுது மக்கள் எந்த இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு வருகின்றனர்? (பி) ஒவ்வொரு வகுப்புக்கும் என்ன நடக்கும்? ஏன்?
[பக்கம் 178-ன் படங்கள்]
சோதோமில் இருந்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளில் இலகுவாயிருக்கும் என்று இயேசு ஏன் சொன்னார்?