Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தற்போதைய ஒழுங்குமுறை எவ்வளவு காலம்நீடித்திருக்கும்?

தற்போதைய ஒழுங்குமுறை எவ்வளவு காலம்நீடித்திருக்கும்?

அதிகாரம் 3

தற்போதைய ஒழுங்குமுறை எவ்வளவு காலம்நீடித்திருக்கும்?

பைபிளில் மிக உயிர்ப்புள்ள வண்ணம் விவரிக்கப்பட்டுள்ளவையும் அர்மகெதோனில் முடிவடையவிருக்கிறவையுமான சம்பவங்கள் நடைபெறும் வரையில் எவ்வளவு காலம் இருக்குமென அறிய விரும்புவது இயல்பானதே. தற்போதைய இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை எப்பொழுது அழிக்கப்படும்? இந்தப் பூமி, நீதியை நேசிப்போர் முழு சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழக்கூடிய ஓர் இடமாவதைக் காண நாம் உயிரோடிருப்போமா?

2இந்தக் கேள்விகளுக்குப் பதில்தரும் கவனிக்கத்தக்க நுட்பவிவரங்களை இயேசு கிறிஸ்து அளித்தார். தம்முடைய அப்போஸ்தலர் பின்வருமாறு கேட்டபோது அவ்வாறு செய்தார்: “நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் உண்மையான அழிவைக் குறித்து இயேசு தெளிவாய்ப் பின்வருமாறு கூறினார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனுங்கூட அறியார்.” (மத்தேயு 24:3, 36, NW; தி.மொ.) எனினும் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை [கிரேக்கில்: ஸின்டேலியா],” அதாவது கடைசி “முடிவுக்கு [கிரேக்கில்: டெலாஸ்]” வழிநடத்துகிற காலப்பகுதியைக் காணும் இந்தச் சந்ததியை மிக நுட்பவிவரமாய் அவர் நிச்சயமாகவே விவரித்தார். இதை உங்கள் பைபிளில் மத்தேயு 24:3—25:46-லும், மேலும் மாற்கு 13:4-37-லும் லூக்கா 21:7-36-லும் உள்ள அதற்கிணையான விவரங்களிலும் நீங்களே வாசித்துப் பாருங்கள்.

3இந்த விவரங்களை நீங்கள் வாசிக்கையில், பொ.ச. 70-ல் எருசலேமுக்கும் அதன் ஆலயத்துக்கும் உண்டான அழிவையும் அதற்கு வழிநடத்தின சம்பவங்களையும் இயேசு ஓரளவு மாத்திரமே விவரித்தாரென தெரிந்துகொள்வீர்கள். அதைப் பார்க்கிலும் மிகப் பரந்த செயல்விளைவையுடைய ஒன்றையும் அவர் மனதில் கொண்டிருந்தாரென தெரிகிறது. ஏன்? ஏனென்றால் மத்தேயு 24:21-ல், “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்”தைப் பற்றி அவர் பேசுகிறார். இது, ஒரு நகரத்துக்கும் அதில் சிக்கிக்கொண்ட ஜனத்துக்கும் அழிவு உண்டாவதைப் பார்க்கிலும் மிக அதிகத்தைக் குறிக்கிறது. மேலும் லூக்கா 21:31-ல் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், நெடுங்காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த “தேவனுடைய ராஜ்யத்தின்” வருகையைக் குறிப்பவையென சொல்லப்பட்டிருக்கிறது. கூர்ந்து கவனிக்கும்படி இயேசு, சொன்ன குறிப்பிடத்தக்க அந்த “அடையாளம்” என்ன?

கூட்டு அடையாளம்

4போர்கள், உணவு குறைபாடுகள், விரிவாய்ப் பரவியுள்ள கொள்ளை நோய்கள், மகா பூமியதிர்ச்சிகள், அக்கிரமம் பெருகும் காலத்தின்போது அன்பற்ற மனப்பான்மை ஆகியவற்றை அவர் முன்னறிவித்தார், ஆனால் தனிமையில் இவற்றில் ஒன்றும் “அந்த அடையாளம்” அல்ல. அந்தக் காட்சி முழுமையாவதற்கு, முன்னறிவித்த இந்த எல்லா முக்கிய பகுதிகளும் ஒரே சந்ததியின் வாழ்நாளில் நிறைவேற வேண்டும். மேலும், “வெளியேற வழிதெரியாமல் ஜாதிகளின் தத்தளிப்பும்” மேலே வானங்களிலும் தங்களைச் சுற்றியுள்ள சமுத்திரங்களிலும் நடைபெறும் சம்பவங்களின் காரணமாக “பயத்தினால் மனிதர் சோர்ந்து போவதும்” இவற்றோடு சேர்ந்திருக்கும். (லூக்கா 21:10, 11, 25-32; மத்தேயு 24:12; 2 தீமோத்தேயு 3:1-5-ஐ ஒத்துப் பாருங்கள்.) இந்த எல்லாவற்றிற்கும் மாறாக ஆனால் இந்த அடையாளத்தின் பாகமாக, தம்மைப் பின்பற்றுவோர் உலகமனைத்திலும் துன்புறுத்தப்படுவதன் மத்தியிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி பூகோளமெங்கும் பிரசங்கிக்கப்படுவதை இயேசு முன்னறிவித்தார். (மாற்கு 13:9-13) இந்தக் கூட்டு விவரிப்பு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்துக்குத் தனிப்பட பொருந்துகிறதா?

5போர்களும், பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும், மற்றவையும் மனித சரித்திரத்தில் திரும்பத் திரும்ப இருந்து வந்திருக்கின்றனவெனக் கூறி, பரியாசக்காரர் ஒருவேளை கேலி செய்யலாம். ஆனால் இத்தகைய சம்பவங்கள் யாவும் ஒன்றுசேர்ந்து தோன்றுகையிலும், ஒருசில தனித்தனி இடங்களில் மாத்திரமல்லாமல், பூகோள அளவிலும் வெகு காலத்துக்கு முன்பே முன்னறிவித்துள்ள ஓர் ஆண்டில் தொடங்கி ஒரு காலப்பகுதிக்கு நீடித்துள்ள காலத்திலும் ஏற்படுகையில் தனி உட்பொருளைக் கொண்டிருக்கின்றன.

6பின்வரும் உண்மை நிகழ்ச்சிகளைக் கவனியுங்கள்: 1914-ல் தொடங்கின போர் அத்தகைய அளவுகளில் மிகைப்பட்டிருந்ததனால் முதல் உலகப் போர் என அறியலாயிற்று, அது முதற்கொண்டு பூமிக்குச் சமாதானம் ஒருபோதும் உண்மையில் திரும்ப வரவில்லை. முதல் உலகப் போரைப் பின்தொடர்ந்து மனிதவர்க்கம் முன்னொருபோதும் அனுபவித்திராத மிகப் பெரிய பஞ்சங்களில் ஒன்று ஏற்பட்டது. இன்றுங்கூட ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 4 கோடி ஆட்கள் உணவு குறைபாடுகளினால் சாகிறார்கள். 1918-ல் உண்டான ஸ்பானிஷ் சளிக்காய்ச்சல், நோயின் சரித்திரத்திலேயே ஈடு இணையற்ற வீதத்தில் உயிர்களைக் கொள்ளைக் கொண்டது, மேலும் விஞ்ஞான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் இருந்துங்கூட கோடிக்கணக்கான ஆட்கள் இப்பொழுதும் புற்றுநோய், இருதய நோய், அருவருப்பூட்டும் மேக நோய்கள், மலேரியா, நத்தைக் காய்ச்சல், நதிக் குருடு ஆகியவற்றால் வாதிக்கப்படுகிறார்கள். பெரும் பூமியதிர்ச்சிகள் அடுத்தடுத்து உண்டாகும் விரைவு, 1914-க்கு முந்திய இரண்டாயிரம் ஆண்டுகளின்போது அது இருந்த சராசரியைவிட ஏறக்குறைய 20 மடங்குகள் அதிகமாய்ப் பெருகிவிட்டது. பயமும் தத்தளிப்பும் பூகோள அளவில் எல்லா வயதினரான மக்களையும் அல்லற்படுத்துகின்றன. இதன் காரணங்களில் சில, பொருளாதார கலவரம், வன்முறை குற்றச் செயல்கள், நீர் மூழ்கிக் கப்பல்களிலிருந்து எறியும் அல்லது வானங்களிலிருந்து பாய்ந்து விழ வீசும் போர்த் தளவாடங்களால் அணுசக்திப் போரில் முற்றிலும் அழிவதன் பயமுறுத்தல் ஆகியவையாகும்—20-ம் நூற்றாண்டுக்கு முன்னால் ஒருபோதும் சாத்தியமாயிராதது.

7இந்த எல்லாவற்றிற்கும் மத்தியில், இயேசு முன்னறிவித்தபடி, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை உலகமெங்கும் அறிவிக்கும் மாபெரும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. 200-க்கு மேற்பட்ட நாடுகளிலும் சமுத்திரத் தீவுகளிலும், யெகோவாவின் சாட்சிகள், இந்த உலக சம்பவங்களின் உட்கருத்தை கடவுளுடைய வார்த்தையின் நோக்கு நிலையில் விளங்கிக் கொள்ள எல்லா வாழ்க்கைத் துறைகளிலுமிருந்துவரும் மக்களுக்கு உதவிசெய்ய, இலவசமாய், ஒவ்வொரு ஆண்டும் பல கோடிக்கணக்கான மணிநேரத்தைச் செலவிடுகிறார்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக, இந்த “மிகுந்த உபத்திரவத்”தைத் தப்பிப்பிழைக்கும் வழியை இந்தச் சாட்சிகள் ஜனங்களுக்கு மெய்யார்வத்துடன் குறித்துக் காட்டுகிறார்கள். சாட்சிகளே “அநேகமாய் உலகத்திலுள்ள வேறு எந்த மதத் தொகுதியைப் பார்க்கிலும் அதிக துன்புறுத்தலைக் குறைந்த குற்றத்துக்குச் சகிக்கிறார்கள்,” என்று கானடா செய்தி அறிவிப்பு ஒன்று குறிப்பிட்டபடி, துன்புறுத்தலையும் பொருட்படுத்தாமல் சாட்சிகள் இதைச் செய்கிறார்கள்.

8திட்டமாய்க் குறித்துள்ள ஒரு காலப்பகுதி முடிவுறுவதைத் தம்முடைய தீர்க்கதரிசனத்தின் பாகமாக இயேசு குறிப்பிட்டுப் பின்வருமாறு சொன்னதையும் நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்: “புறஜாதியாரின் [“தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்,” NW] நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்பட்டதாயிருக்கும்.” (லூக்கா 21:24, தி.மொ.) இந்தக் “குறிக்கப்பட்ட காலங்கள்” முடிவடைந்துவிட்டனவா?

“தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்”

9இதற்குப் பதிலை மதித்துணர எருசலேம்தானே குறித்து நிற்கும் உட்பொருளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். சீயோன் மலையில் அதன் அரசரின் அரண்மனையைக் கொண்டிருந்த இந்நகரம் “மகாராஜாவின் நகரம் . . . கர்த்தரின் [யெகோவாவின், தி.மொ.] நகரம்” என்று பேசப்பட்டது. (சங்கீதம் 48:2, 8; மத்தேயு 5:34, 35) தாவீதின் ராஜ வம்ச அரசர்கள் “யெகோவாவின் சிங்காசனத்தில்” வீற்றிருந்ததாகச் சொல்லப்பட்டனர். ஆகவே யெகோவா பூமியில் அரசாட்சி செலுத்தினதற்கு எருசலேம் காணக்கூடிய அடையாளமாயிருந்தது. (1 நாளாகமம் 29:23, தி.மொ.) இவ்வாறு, பாபிலோனிய சேனைகள் எருசலேமை அழிக்கவும், அதன் அரசனை நாடுகடத்திக் கொண்டு செல்லவும், தேசத்தைப் பாழாய்க் கிடக்க விடவும் கடவுள் அனுமதித்தபோது, அரசன் தாவீதின் அரச சந்ததியின் மூலம் செலுத்தப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின்மீது அவர்கள் மிதித்தார்கள். பொ.ச.மு. 607-ல் இது நடைபெற்றபோது, “[புறஜாதி] தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” தொடங்கினதை அது குறித்தது, அது முதற்கொண்டு தாவீதின் சந்ததியான ஒருவரும் எருசலேமில் அரசராக ஒருபோதும் ஆளவில்லை.

10அப்படியானால், ‘எருசலேமின்மீது மிதிப்பதன்’ முடிவு எதைக் குறிக்கும்? யூதருக்குள் மாத்திரமே அல்ல முழு மனிதவர்க்கத்தின் விவகாரங்களிலும் இப்பொழுது அதிகாரம் செலுத்துவதற்கு, யெகோவா, தாவீதின் சந்ததியில் தோன்றின, தாமே தெரிந்தெடுத்த அரசரை மறுபடியும் சிங்காசனத்திலேற்றிவிட்டார் என்பதைக் குறிக்கும். இவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. (லூக்கா 1:30-33) ஆனால் அவர் எங்கிருந்து ஆளுவார்? பூமிக்குரிய எருசலேம் நகரத்திலிருந்தா? கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட சிலாக்கியங்கள் மாம்சப் பிரகாரமான இஸ்ரவேலிலிருந்து எடுத்துவிடப்படப் போகின்றனவென்று இயேசு தெளிவாகக் கூறினார். (மத்தேயு 21:43; 23:37, 38-ஐயும் பாருங்கள்.) அதன்பின், உண்மையான கடவுளின் வணக்கத்தார், உண்மைத் தவறாத ஆவி சிருஷ்டிகளாலாகிய கடவுளுடைய பரலோக அமைப்பான “மேலான எருசலேமைத்” தங்கள் தாயாக நோக்கினர். (கலாத்தியர் 4:26) அந்தப் பரலோக எருசலேமிலேயே இயேசு, பூமியின்மீது ஆளும் அதிகாரத்தைச் செலுத்துவதற்குச் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவார். (சங்கீதம் 110:1, 2) இது “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்” முடிவில் நடைபெறும். அது எப்பொழுது?

11 தானியேல் 4:10-17-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த “ஏழு காலங்களின்” பெரிய நிறைவேற்றத்தின் முடிவில் 1914-ல் இது வருமென பல பத்தாண்டுகளுக்கு முன்பே தெரியவந்தது a ஆனால் அதன் உட்கருத்தை முழு விளக்க விவரமாய்க் காண்பது அதைப் பின் தொடர்ந்த ஆண்டுகளின்போதே படிப்படியாய் வந்தது. ராஜ்ய வல்லமையில் தாம் பரலோகத்தில் வந்திருப்பதைக் குறிப்பாய்த் தெரிவிக்குமென இயேசு சொன்ன இந்தக் கூட்டு அடையாளத்தின் நுட்ப விவரங்கள் தங்கள் கண்களுக்கு முன் படிப்படியாய் வெளிப்படுவதை பைபிள் மாணாக்கர் கண்டனர். தாங்கள் நிச்சயமாகவே “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்குள்” பிரவேசித்துவிட்டனரெனவும், 1914-ல் கிறிஸ்து அரசராக ஆளத் தொடங்கிவிட்டாரெனவும், இந்தக் காரியங்களின் தொடக்கத்தைக் கண்ட அந்தச் சந்ததிக்குள் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு வருமெனவும் தெளிவாயிற்று.

உங்கள் எதிர்பார்ப்புகள் எவ்வளவு சரியானவை?

12இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடைபெறும் உண்மையான நிகழ்ச்சிகளைத் தெரிந்துள்ள சிலர் இவை குறித்துக் காட்டும் முடிவை ஏற்பதைக் கடினமாகக் காண்கின்றனர். ஏன்? ஏனென்றால் அவர்கள் வேறு ஒன்றை எதிர்பார்க்கின்றனர். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை காணக்கூடியதாயிருக்குமெனவும், மனிதவர்க்கத்தை மொத்தமாய் மதம் மாற்றுவதில் பலன்தருமெனவும் அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் யூதருங்கூட எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார்கள், அவை நிறைவேறவில்லை. மேசியாவின் வருகை மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தும் ஆரவாரமான தோற்றமாயிருக்குமெனவும் அது தங்களை ரோமின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாக்குமெனவும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். தங்கள் தவறான எதிர்பார்ப்புகளைப் பற்றிக்கொண்டு கடவுளுடைய சொந்தக் குமாரனை ஏற்க மறுத்துவிட்டனர். கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் வந்திருக்கையில் இந்தப் பிழையைத் திரும்பச் செய்வது எவ்வளவு ஞானமற்றது! வேத எழுத்துக்கள்தாமே உண்மையில் சொல்வதைக் காண்பது எவ்வளவு மேம்பட்டது!

13கிறிஸ்து தம்முடைய சத்துருக்களின் மத்தியில் ஆளத் தொடங்குவாரென பைபிளில் காட்டியிருக்கிறது. (சங்கீதம் 110:1, 2) கிறிஸ்துவுக்கு ராஜ்ய அதிகாரம் கொடுக்கப்பட்ட பின் சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து பூமிக்கு அருகில் விழத் தள்ளப்படுவதையும், ஆகவே பூமிக்கு அதிகரிக்கப்பட்ட ஆபத்து உண்டாயிருக்கப்போகும் ஒரு காலப்பகுதியையும் குறித்து அதில் சொல்லியிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:7-12) அக்காலத்தின்போது தப்பிப்பிழைப்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி ஆட்களுக்கு வாய்ப்பளிக்க ராஜ்ய செய்தி தீவிர முயற்சியுடன் பிரசங்கிக்கப்படும். (மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 12:17) ஆனால் அது உலக மதமாற்றுதலில் பயன் தருமா? அதற்கு முற்றிலும் மாறாக மனித சரித்திரத்திலேயே அதற்கு ஒப்பில்லாத பேரழிவு அதைப் பின்தொடருமென பைபிளில் காட்டியிருக்கிறது. மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை மனிதர் தங்கள் மாம்சக் கண்களால் ஒருபோதும் காணப் போவதில்லையெனினும், கிறிஸ்து அரசாதிகாரத்தில் வந்திருப்பதைக் குறித்த உண்மைகளை மனப்பூர்வமாய் ஏற்றிராத யாவரும், முன்னறிவித்துள்ளபடி, அவரே தங்கள்மீது அழிவைக் கொண்டுவருகிறாரென்பதைக் கட்டாயமாகக் “காணச்” செய்யப்படுவர். வெளிப்படுத்துதல் 1:7; மத்தேயு 24:30; பின்வருபவற்றோடு ஒத்துப்பாருங்கள்: 1 தீமோத்தேயு 6:15, 16; யோவான் 14:19.

14ஆனால் 1914 முதற்கொண்டு இப்பொழுது 75 ஆண்டுகள் கடந்துவிட்டிருப்பது, நாம் அந்த ஆண்டிலிருந்து உண்மையில் “கடைசி நாட்களில்” இருந்துவந்தோமா, மேலும் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுபவராகக் கிறிஸ்துவின் வருகை சமீபித்துவிட்டதா என்பவற்றைக் குறித்து ஏதாவது சந்தேகம் இருக்குமெனக் காட்டுகிறதல்லவா? இல்லவே இல்லை! 1914 தொடங்கி, இந்த “அடையாளத்தின்” நிறைவேற்றத்தை அதன் ஆரம்பத்திலிருந்து காணப்போகிறவர்களைக் குறித்து இயேசு பின்வருமாறு கூறினார்: “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மாற்கு 13:30) இந்தச் சந்ததியின் உறுப்பினர் எண்ணிக்கையில் விரைவாய்க் குறைந்துகொண்டிருக்கிற போதிலும் இன்னும் இங்கிருக்கின்றனர்.

15பூகோள அடிப்படையில் சராசரி வாழ்க்கை எதிர்பார்ப்பு இப்பொழுது 60 ஆண்டுகள் மாத்திரமே என புள்ளிவிவரங்கள் காட்டுவது உண்மையே, ஆனால் பல லட்சக்கணக்கான ஆட்கள் அந்த வயதுக்கு மேற்பட்டு வாழ்கிறார்கள். கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்களின்படி, 1980-ல், 1914-ல் உயிரோடிருந்தவர்களில் ஏறக்குறைய 25,00,00,000 பேர் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தனர். அந்தச் சந்ததி இன்னும் போய்விடவில்லை. எனினும் கவனத்தைக் கவருவதாய், 1900-த்தில் அல்லது அதற்கு முன்னால் பிறந்தவர்களில் 1980-ல் இன்னும் உயிரோடிருந்தவர்கள் 3,53,16,000 பேர் மாத்திரமேயென மதிப்பிடப்பட்டதாக ஐக்கிய நாட்டுச் சங்கம் பிரசுரித்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன. ஆகவே ஆட்கள் எழுபதுக்கும் எண்பதுக்கும் மேற்பட்ட வயதுகளை அடைகையில் இந்த எண்ணிக்கை விரைவில் குறைகிறது. இயேசுவின் தீர்க்கதரிசன அடையாளத்தின் எல்லா நுட்ப விவரங்களோடுகூட கவனிக்கையில், இந்த உண்மைகள், முடிவு நெருங்கியிருக்கிறதென்று உறுதியாய்த் தெரிவிக்கின்றன.—லூக்கா 21:28.

16அக்கறையற்றிருப்பதற்கு இது சமயமல்ல. அவசர உணர்ச்சியுடன் செயல்படுவதற்குரிய காலம் இது! இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எச்சரித்தபடி: “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்து] வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”—மத்தேயு 24:44.

[அடிக்குறிப்புகள்]

a நுட்ப விவரங்களுக்கு, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” புத்தகம், பக்கங்கள் 144-157, 210-214 பாருங்கள்.

[கேள்விகள்]

1. பைபிளின் வாக்குத்தத்தங்களைப் பற்றி, நம்மில் பலர் என்ன கேள்விகளைக் கேட்டிருக்கிறோம்?

2. (எ) இதைப் போன்ற என்ன கேள்வியை இயேசுவின் அப்போஸ்தலர் கேட்டார்கள்? (பி) தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் அழிவு எப்பொழுதென்று நமக்குத் திட்டவட்டமாய்த் தெரியுமா? (சி) ஆனால் மிக உதவியான என்ன தகவலை இயேசு அளித்தார்?

3. இயேசுவின் பதில் வெறும் முதல் நூற்றாண்டு சம்பவங்களை மாத்திரமே விவரிக்கவில்லையென நாம் எப்படி அறிகிறோம்?

4. இயேசு கொடுத்த அந்த “அடையாளம்” என்ன?

5. எவை இந்தச் சம்பவங்களை, நடந்த சரித்திரமே திரும்ப நடப்பதைப் பார்க்கிலும் மிகைப்பட்டவையாக்கும்?

6, 7. இந்த இருபதாம் நூற்றாண்டின் என்ன சம்பவங்களும் நிலைமைகளும் அந்தக் கூட்டு அடையாளத்துக்குத் தெளிவாய் ஒத்திருக்கின்றன? (பதில் தருகையில், உங்கள் பைபிளைப் பயன்படுத்தி இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் எந்தப் பகுதிகளைக் குறிப்பிட்டுப் பேசுகிறீர்களென்பதைக் காட்டுங்கள்.)

8. இந்தத் தீர்க்கதரிசனத்தில் எந்தக் காலப்பகுதியும் உட்படுத்தப்பட்டது?

9. (எ) தேசங்களால் “மிதிக்கப்பட்ட” அந்த “எருசலேம்” எது? (பி) இந்த ‘மிதித்தல்’ எப்போது தொடங்கினது?

10. (எ) இந்த ‘மிதித்தலின்’ முடிவு எதைக் குறிக்கும்? (பி) அப்பொழுது இயேசு எந்த “எருசலேமிலிருந்து” ஆளுவார், ஏன்?

11, அட்டவணை உட்பட (பக்கம் 27). (எ) “குறிக்கப்பட்ட காலம்” முடிவடைவதை எவ்வாறு கணக்கிடுவது? (பி) ஆகவே அந்தக் “குறிக்கப்பட்ட காலங்கள்” முடிவடைந்தபோது என்ன தொடங்கினது? (சி) 1914-ஐ சரித்திராசிரியர் எவ்வாறு கருதுகின்றனர்? (பக்கம் 29-ஐப் பாருங்கள்.)

12. என்ன பிழையான எதிர்பார்ப்புகள் இந்த முடிவை ஏற்பதைச் சிலருக்குக் கடினமாக்குகின்றன? (மத்தேயு 24:26, 27; யோவான் 14:3, 19)

13. பைபிள்தானே என்ன சம்பவங்களைக் கிறிஸ்து வந்திருப்பதோடு சம்பந்தப்படுத்துகிறது?

14, 15. 1914-லிருந்து ஆண்டுகள் கடந்து சென்றுகொண்டிருப்பது ஏன், நாம் உண்மையில் “கடைசி நாட்களில்” இருப்பதைப் பற்றிச் சந்தேகிப்பதற்குக் காரணத்தைக் கொடுப்பதில்லை?

16. ஆகவே, நம்முடைய மனப்பான்மை எவ்வாறு இருக்கவேண்டும்?

[பக்கம் 29-ன் பெட்டி]

1914-ஐப் பற்றி சரித்திராசிரியரின் கருத்து

1914-ல் தொடங்கின போர், நல்ல காரணங்களினிமித்தமே மகா  பார், முதல் உலகப் போர் என அழைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு நாசகரமான போர் அதற்கு முன்னால் ஒருபோதும் நடந்ததே இல்லை. அதன்பின் நடந்த போர்கள் 1914-ல் தொடங்கினதைத் தொடர மாத்திரமே செய்திருக்கின்றன. அந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டின் விளைவுகளைப் பற்றிய இந்தக் குறிப்புகளைக் கவனியுங்கள்:

● “இந்தப் போர் ஐரோப்பாவின் நிலப்படத்தை மாற்றி, மூன்று வல்லரசுகளை அழித்தப் புரட்சிகளைத் தூண்டிவிட்டதுமட்டுமல்லாமல், அதன் நேர்முக மற்றும் மறைமுகப் பாதிப்புகள் அதற்கப்பால் வெகு தொலைவளவாய் ஏறக்குறைய எல்லாத் துறைகளையும் எட்டின. போருக்குப் பின் அரசியல் அறிஞர்களும் மற்றோரும், படிப்படியாகத் தொடரும் இவற்றின் வேகத்தைக் குறைத்து அல்லது அவற்றை நிறுத்தி, காரியங்களை முன்னிருந்த இயல்பான நிலைக்கு, அதாவது 1914-க்கு முன்னிருந்த அந்த உலகத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால் அது இயலாததாய்விட்டது. அந்தப் பூமியதிர்ச்சி அவ்வளவு மிகக் கடுமையாகவும் அவ்வளவு மிக நீடித்தும் இருந்ததனால் அந்தப் பழைய உலகம் அதன் அடியோடு இடித்து வீழ்த்தப்பட்டுப் போயிற்று. அதன் சமுதாய ஒழுங்குமுறைகளுடனும், அதற்குரிய எல்லா எண்ணங்களுடனும் அதன் ஒழுக்க நியமங்களுடனும், அது இருந்த முறைப்படி அதைத் திரும்பக் கட்டக்கூடியவர் ஒருவருமில்லை.

“. . . மதிப்புகளில் மாற்றம் ஏற்பட்டதும், எத்தனையோ பல துறைகளில் அது முற்றிலும் புதிய மதிப்பு தராதரத்தை நிலைநாட்டினதும் குறைந்த முக்கியத்துவமுடையதல்ல. . . . மிருகத்தனமாக்கப்பட்டு அயலாரின் உடைமையை அசட்டுத்தனமாய்க் கையாண்டவர்கள் போர் முனையிலிருந்த போர்வீரர்கள் மாத்திரமல்ல. பல போலி நம்பிக்கைகளும், மிகுந்தத் தப்பெண்ணங்களும், பொய் மதிப்புகளும் மாத்திரமேயல்ல ஆனால் வாழ்க்கைக்குரிய பல பாரம்பரிய தராதரங்களும் சமுதாய ழுக்கங்களும் தகர்த்தெறியப்பட்டன. மதிப்புகள் மாறிக்கொண்டிருந்தன, காரியங்களுக்கு ஆழமான வேர்கள் எதுவும் இனிமேலும் இல்லை என்பதுபோல் எல்லாம் மிதந்து செல்லும் போக்குடையனவாய்த் தோன்றின—பண வருவாய் அமைப்பு முறையிலும் அதோடு பால்சம்பந்த ஒழுக்க முறையிலும், அரசியல் நியமங்களிலும் அதோடு கலைச் சட்டங்களிலும் அவ்வாறே இருந்தன. . . .

“அக்காலத்தின் தனித்தன்மையாயமைந்த அடிப்படை பாதுகாப்பில்லாமை பொருளாதாரத் துறையில் முக்கியமாய்க் கவனிக்கத்தக்கதாயிருந்தது. இங்கே கண்டிப்பான சட்டங்களையும் ஒரே சீரான மதிப்புகளையும் கொண்ட பல்கூட்டான, எளிதில் கையாளத்தக்க, நன்றாய்ச் சமநிலைப்பட்ட ஒழுங்குமுறையைப் போர் முரட்டுத்தனமாய் அழித்துப் போட்டது. . . . இந்தத் துறையிலும் முன்னிருந்த ‘இயல் நிலைக்குத்’ திரும்ப முடியவில்லை.”—VarldshistoriaFolkens liv och Kultur (Stockholm; 1958), Vol.VII, பக்கங்கள் 421, 422.

● “பாதி நூற்றாண்டு கடந்து சென்றுவிட்டது, எனினும் தேசங்களின் உடலிலும் ஆத்துமாவிலும் அந்த மகா  பாரின் பயங்கர விபத்து விட்டுச் சென்ற தழும்பு இன்னும் மறையவில்லை . . . இந்தக் கடும் அனுபவத்தின் இயற்பியல் மற்றும் ஒழுக்கப் பரிமாணம் அவ்வளவு மிகப் பெரிதானதால், விடப்பட்ட எதுவும் முன்னிருந்ததுபோல் இல்லை. சமுதாயம் அதன் முழுமையில்: அரசாங்க ஒழுங்குமுறைகள், தேசீய எல்லைகள், சட்டங்கள், படைக்கலம் பூண்ட படைகள், அரசாங்கங்களுக்கிடைப்பட்ட உறவுகள், இவை மட்டுமல்ல, கருத்துப் போக்குகள், குடும்ப வாழ்க்கை, செல்வ வளங்கள், பதவிகள், தனிப்பட்ட உறவுகள் ஆகியவையும்—மேலிருந்து அடிவரை எல்லாம் மாற்றப்பட்டன. . . . மனிதவர்க்கம் கடைசியாய் அதன் சமநிலையை இழந்துவிட்டது, இந்நாள்வரை ஒருபோதும் அதைத் திரும்பப் பெற முடியாமல்.”—ஜெனரல் சார்ல்ஸ் டீ கால், 1968-ல் பேசினபோது (Le Monde, நவம்பர் 12, 1968).

● “1914 முதற்கொண்டு இவ்வுலகத்தில் நிகழ்ச்சிகளின் போக்குகளைப் பற்றி உணர்வுள்ள எல்லாரும், என்றும் பெருகிக்கொண்டே போகும் நாசத்தை நோக்கிச் செல்லும் விதிக்கப்பட்ட மற்றும் முன்தீர்மானிக்கப்பட்ட அணிவரிசை நடையைப் போல் தோன்றுவதால் வெகு ஆழ்ந்தவண்ணம் மனங் கலங்குகின்றனர். அழிவை நோக்கிய திடீர் வீழ்ச்சியைத் தடுத்து விலக்குவதற்கு எதுவும் செய்ய முடியாதென உள்ளார்ந்த அக்கறையுடைய ஆட்கள் பலர் உணருகின்றனர். மனிதக் குலம், கிரேக்கத் துன்பக்கதை வீரனைப்போல் கோபாவேசங்கொண்ட தெய்வங்களால் விடாமல் துரத்தி ஓட்டப்பட்டுக்கொண்டும் இனிமேலும் விதியை அடக்கி ஆளமுடியாமலும் இருக்கும் நிலையில் அதைக் காண்கின்றனர்.”—பெர்ட்ராண்ட் ரஸல், நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை, செப்டம்பர் 27, 1953.

● “தற்போதைய அனுகூல இடநிலையிலிருந்து பின்நோக்கிப் பார்க்கையில் முதல் உலகப் போர் தொடங்கினது—பிரிட்டிஷ் சரித்திராசிரியன் அர்னால்ட் டோயன்பீ பயன்படுத்தின சொற்றொடரின்படி, இ

ருபதாம் நூற்றாண்டு ‘தொல்லைகளின் காலத்தைக்’ கொண்டுவந்துவிட்டதை நாம் இன்று தெளிவாய்க் காண்கிறோம்—இதிலிருந்து நிச்சயமாகவே நம்முடைய நாகரிகம் இன்னும் வெளியேறவில்லை. கடந்த பாதி நூற்றாண்டின் குழப்பங்கள் யாவும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ 1914-ல் தோற்றத்தைக் கொண்டன.”—The Fall of the Dynasties: The Collapse of the Old Order (New York; 1963) எட்மண்ட் டேலராலாகியது, பக்கம் 16.

ஆனால் உலக முழுவதையும் சீர்கேடாக்கின இத்தகைய மாறுதல் கால சம்பவங்களின் காரணமென்ன? பைபிள் ஒன்றே திருப்திகரமான விளக்கத்தைக் கொடுக்கிறது.

[பக்கம் 27-ன் அட்டவணை]

1914—பைபிளின் காலக் கணிப்பாலும் உலக சம்பவங்களாலும் குறிக்கப்பட்ட ஆண்டு

காலக் கணிப்பு

→ “ஏழு காலங்களைக்” கொண்ட ஒரு காலப்பகுதியை பைபிள் முன்னறிவித்தது, அதன்பின் கடவுள் உலக ஆட்சியைத் தாம் தெரிந்துகொண்டவருக்குக் கொடுப்பார் (தானியேல் 4:3-17)

→ “ஏழு காலங்கள்”=2,520 ஆண்டுகள் (வெளிப்படுத்துதல் 11:2, 3; 12:6, 14; எசேக்கியேல் 4:6 ஒத்துப் பாருங்கள்.)

→ “ஏழு காலங்களின்” தொடக்கம்: பொ.ச.மு. 607 (எசேக்கியேல் 21:25-27; லூக்கா 21:24)

→ “ஏழு காலங்களின்” முடிவு: பொ.ச.1914

இயேசு கிறிஸ்து அப்பொழுது பரலோகத்தில் சிங்காசனத்தில் ஏற்றப்பட்டார், தம்முடைய சத்துருக்களின் மத்தியில் ஆட்சி செய்ய தொடங்கினார் (சங்கீதம் 110:1, 2)

சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான்; மனிதவர்க்கத்துக்கு ஆபத்து (வெளிப்படுத்துதல் 12:7-12)

கடைசி நாட்கள் தொடங்கின (2 தீமோத்தேயு 3:1-5)

கடைசி நாட்களைக் குறிக்கும் முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்கள்

→ போர் (முதல் உலகப் போர் 1914-ல் தொடங்கினது; சமாதானம் ஒருபோதும் உண்மையில் திரும்ப வரவில்லை)

→ பஞ்சம் (இப்பொழுது ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 4 கோடி உயிர்களைப் போக்குகிறது)

→ கொள்ளை நோய்கள் (விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்றத்தின் மத்தியிலும்)

→ பூமியதிர்ச்சிகள் (1914 முதற்கொண்டு சராசரி ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 20 தடவைகள் பெரும் பூமியதிர்ச்சிகள் ஏற்படுகின்றன)

→ பயம் (பெருங்குற்றச் செயல்கள், பொருளாதார வீழ்ச்சி, அணுசக்தி போரால் அடியோடழிதல் ஆகியவற்றைப் பற்றி)

1914-ஐக் கண்ட இந்தச் சந்ததி ஒழிந்து போவதற்கு முன்னால் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை கடவுளால் அழிக்கப்படவிருக்கிறது (மத்தேயு 24:3-34; லூக்கா 21:7-32)