Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விவாதங்கள்

நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விவாதங்கள்

அதிகாரம் 2

நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விவாதங்கள்

சமீப ஆண்டுகளில் நம்முடைய எதிர்காலத்தை உட்படுத்தும் கடுமையான விவாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விரைவில் தொடர்ந்து நம்மீது வந்துகொண்டிருக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. நிலைமைகள் அவ்வளவு மோசமாயிருப்பதால் எங்கும் மக்கள் வெறிகொண்டவண்ணம் துயர்த் தீர்ப்பை நாடித் தேடுகின்றனர். ஒருவேளை அவர்களுக்குக் கடவுளில் நம்பிக்கை இருக்கலாம், ஆனால் இங்கே பூமியில் நிலைமைகள் முன்னேற்றமடைய போகிறதென்றால், மனிதரே அதைக் கொண்டுவர வேண்டுமென அவர்களுக்குத் தோன்றலாம். சிலர் இதை இப்போதிருக்கும் அரசாங்கங்களின் மூலம் அல்லது இந்த அரசாங்கங்களின் தீர்மானங்களுக்கு எதிராகப் பெருங்கூட்டமாய்க் கண்டனம் தெரிவித்தலினால் செய்ய முயலுகின்றனர். மற்றவர்கள் புரட்சியே ஒரே வழியென நம்புகின்றனர். சட்டங்களை மாற்றுவது, ஆளும் அதிகாரிகளை அல்லது முழு அரசாங்கங்களையுமே அகற்றி வேறு அமர்த்துவது நிலைமைகளை நிச்சயமாய் முன்னேற்றுவிக்குமென அவர்கள் உணருகின்றனர். ஆனால் உண்மை நிகழ்ச்சிகள் என்ன காட்டுகின்றன? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முயன்று பார்த்தப் பின்னும், பாரபட்சமற்ற நீதியையும், உண்மையான பாதுகாப்பையும் நிலையான மகிழ்ச்சியையும் அதன் குடிமக்கள் எல்லாருக்கும் கொண்டுவந்த ஓர் அரசாங்கத்தையுங்கூட மனிதர் உண்டுபண்ணவில்லை. இதற்குக் காரணமென்ன?

2அதிகாரத்திலுள்ள ஆட்களின் குறிக்கோள்கள் எவ்வளவு உயர்நோக்கமுள்ளவையாக இருந்தாலும் சரி, அதிகாரத்திலுள்ள மனிதரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட படைகளே மனித அரசாங்கங்கள் யாவற்றையும் கையாண்டு நடத்துகின்றன. யார் நடத்துவது? மனித இயல்புக்கு மீறிய ஆவிகள், பிசாசான சாத்தானும் அவனுடைய பேய்களும் நடத்துகின்றனர். இத்தகைய ஆவி ஆட்கள் இருக்கிறார்களென்று நம்புவதைப் பலர் ஏளனஞ் செய்வது மெய்யே. ஆனால் இயேசு கிறிஸ்து அவ்வாறு செய்யவில்லை; சாத்தானின் வரலாற்றை அவர் நேரில் அறிந்திருந்தார், “இந்த உலகத்தின் அதிபதி” என அவனைக் குறித்துப் பேசினார். (யோவான் 12:31) இந்தப் பூகோள அரசியல் ஒழுங்குமுறையை ஒரு மூர்க்க மிருகமாக பைபிள், அடையாளக் குறிப்பான மொழிநடையில் கருத்து உருப்படுத்திக் காட்டுகிறது. மேலும், “வலுசர்ப்பம் [சாத்தான்] தன் வல்லமையையும் தன் சிங்காசனத்தையும் பெரிய அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது,” என்றும் வெளிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 2, தி.மொ.; தானியேல் 7:2-8; 12, 23-26-ஐ ஒத்துப் பாருங்கள்.) இன்னும் நம்முடைய நாளைக் குறித்து, பெருகின அளவில் “பூமிக்கு . . . ஐயோ ஆபத்து! பிசாசு உங்களிடம் இறங்கிவிட்டான்,” என்று பைபிளில் முன்னறிவித்துள்ளது. (வெளிப்படுத்துதல் 12:12, தி.மொ.) மனித சமுதாயம் உட்புகுத்தப்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்குத் திருப்திகரமான காரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் இது எப்படி நேரிட்டது? இதிலிருந்து விடுதலைபெற நாம் என்ன செய்யலாம்?

அரசாட்சியைப் பற்றிய விவாதம்

3யெகோவா தேவன், முதல் மனித ஜோடி, ஆதாம் ஏவாளைப் படைத்து, ஏதேன் தோட்டத்தில் வைத்தபோது தம்மிடம் அவர்களுக்கிருந்த உறவைப் பற்றி அவர்களுக்கு அறிவூட்டினார் என்று பைபிளின் முதல் அதிகாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அவர் அவர்களுடைய தகப்பனும், தாராளமாய்த் தங்களுக்கு வேண்டியன அளிப்பவரும், மேலும் சர்வலோகப் பேரரசருமாக இருந்தார். அவர்கள் தொடர்ந்து வாழ்வது கடவுளுக்குக் கீழ்ப்படிவதன்பேரில் சார்ந்திருந்ததென அவர்கள் தங்கள் சொந்த நன்மையின் பொருட்டு மதித்துணர வேண்டியிருந்தது.—ஆதியாகமம் 2:16, 17; அப்போஸ்தலர் 17:24, 25-ஐ ஒத்துப் பாருங்கள்.

4அந்தச் சமயத்தில் சிருஷ்டிப்பு முழுவதும் பரிபூரணமாயிருந்தது. மிருகங்களைப் போலிராமல், தேவதூதரும் மனிதரும் தெரிவு-சுயாதீன திறமை கொண்டிருந்தனர். ஆனால் மனிதன் படைக்கப்பட்ட பின் வெகு சீக்கிரத்திலேயே தேவதூதர்களில் ஒருவன், சொந்தத் தீர்மானங்களைச் செய்யும் இந்த அதிசயமான திறமையைத் தவறான முறையில் பயன்படுத்தி, யெகோவாவின் அரசாட்சியை எதிர்த்துக் கலகஞ்செய்தான். இவ்வாறு அவன் தன்னை எதிரி, அல்லது எதிர்த்து நிற்பவனாக்கிக் கொண்டான், இதுவே சாத்தான் என்ற பெயரின் சொல்லர்த்தமாகும். (யாக்கோபு 1:14, 15; வெளிப்படுத்துதல் 12:9, ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.) புகழ் பேராசையால் தூண்டப்பட்டு, அந்த முதல் மானிட ஜோடியைக் கவர்ச்சியூட்டியிழுத்து யெகோவா தேவனிடமிருந்து தூர விலகச் செய்து, தன் சொந்த செல்வாக்கின்கீழ் அவர்களைக் கொண்டுவரும்படி வகைதேடினான். இதன் விளைவாகத் தன்னைத் தங்கள் கடவுளாகக் கனப்படுத்தும் மனிதரால் பூமி நிரம்பியிருக்கக் கூடியதை அவர்களில் கண்டான். (ஏசாயா 14:12-14; லூக்கா 4:5-7, ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.) ஏதேனில் நிகழ்ந்ததைப் பற்றிய இந்த விவரம் வெறும் கட்டுக்கதை அல்ல. இயேசு கிறிஸ்து இதைச் சரித்திரப் பூர்வ உண்மை நிகழ்ச்சியாகக் குறிப்பிட்டுப் பேசினார்.—மத்தேயு 19:4, 5.

5பிசாசைக் குறித்து இயேசு பின்வருமாறு கூறினார்: “அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கி”றான். (யோவான் 8:44) கடவுளுடைய உண்மையின்பேரில் சந்தேகத்தை எழுப்பி ஏவாளிடம் பேசினதே பிசாசின் பதிவுசெய்யப்பட்ட முதல் பொய். கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிய மறுக்கும்படி அவன் தூண்டினான், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அவரவருடைய சொந்தத் தராதரங்களை ஏற்படுத்தி வைத்துக்கொள்வதே நன்மை தருமென அவன் விவாதித்தான். (ஆதியாகமம் 3:1-5; எரேமியா 10:23-ஐ ஒத்துப் பாருங்கள்.) இவ்வாறு அங்கே ஏதேனில் யெகோவாவின் அரசாட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பின் நிகழ்ந்த சம்பவங்கள் காட்டினபடி, கடவுளிடத்தில் கொண்டிருக்கும் அறிவுள்ள எல்லா சிருஷ்டிகளின் உத்தமத்தின்பேரிலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. அவர்கள் கடவுளை உண்மையில் நேசித்ததனிமித்தமே அவரைச் சேவித்தார்களா, அல்லது அவரைவிட்டு விலகிப்போகும்படி அவர்களைத் தூண்டி செய்விக்க முடியுமா? (யோபு 1:7-12; 2:3-5; லூக்கா 22:31) இந்த விவாதங்கள் பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாரையும் பாதிக்கும். சர்வலோகப் பேரரசர் என்ன நடவடிக்கை எடுப்பார்?

6அந்தக் கலகக்காரரை உடனடியாக அழிப்பதற்குப் பதில், இந்தப் பிரச்னைகளை எல்லாக் காலத்துக்கும் ஒரே முடிவாகத் தீர்ப்பதற்கு குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியை யெகோவா ஞானமாய் அனுமதித்தார். தமக்கு எந்தக் குறிப்பையோ நிரூபித்துக்கொள்ள அல்ல, தெரிந்துகொள்ளும் சுயாதீனமுடைய சிருஷ்டிகள் தம்முடைய அரசாட்சிக்கு எதிராகக் கலகஞ்செய்ததால் உண்டான கெட்ட விளைவுகளைத் தாங்கள்தாமே நேரில் காணும்படி இடமளிக்கவும், மேலும், இந்த மிக முக்கியமான காரியங்களில் தாங்கள்தாமே எங்கே நிலைகொள்கிறார்கள் என்பதைக் காண்பிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் கடவுள் இதைச் செய்தார். இந்த விவாதங்கள் தீர்க்கப்பட்ட பின், சமாதானத்தைக் குலைக்க ஒருவரும் மறுபடியும் ஒருபோதும் அனுமதிக்கப்படார்.

7யெகோவா தேவன் மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராதலால், அவர்களுடைய உரிமையுள்ள அரசராகவும் இருந்தார். (வெளிப்படுத்துதல் 4:11) எனினும் காலப்போக்கில், நன்மை தீமையைக் குறித்து தங்கள் சொந்தத் தராதரங்களை ஏற்படுத்தி வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் தங்கள் உடன் தோழரான மனிதர்மீது ஆட்சி செலுத்தும்படியான ஆவலையும், சாத்தானும் அவனுடைய பேய்களும் மனிதரில் தூண்டிவிடத் தொடங்கினர். நிம்ரோதே முதலாவது தன்னை அரசனாக நிலைநாட்டிக் கொண்டவன், இவன் மெசொபொத்தேமியாவிலிருந்த பட்டணங்களின்மீது ஆட்சி செலுத்தினான். இவன் “யெகோவாவுக்கு எதிர்ப்பில் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான் [மிருகங்களையும் மனிதரையும் வேட்டையாடினான்].” (ஆதியாகமம் 10:8-12, NW) நிம்ரோதின் நாட்களிலிருந்து தற்போது வரையில், கூடிய எல்லா வகை மனித அரசாங்கமும் முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது. ஆனால் சரித்திர ஆராய்ச்சி மாணாக்கர் எவருக்கும் தெரிந்திருக்கிறபடி, மொத்தப் பதிவு, ஊழலும் இரத்தஞ் சிந்துதலுமாகவே இருந்திருக்கிறது.—பிரசங்கி 8:9.

8இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, சாத்தான், அவரையுங்கூட தன் செல்வாக்கின்கீழ் கொண்டுவர முயற்சி செய்தான். ஒரே ஒரு வணக்கச் செயலுக்குப் பரிமாற்றமாகக் “குடியிருக்கப்பட்ட பூமியின் எல்லா ராஜ்யங்களையும்” இயேசுவுக்கு அளிக்க அவன் முன்வந்தான். (லூக்கா 4:1-13, NW) பின்னால் ஜனங்கள் அவரை அரசராக்க வேண்டுமென நாடினர், ஆனால் இயேசு விலகிப்போய்விட்டார். (யோவான் 6:15) இந்த உலகத்தின் அரசியல் ஒழுங்குமுறை என்னவென அவர் அறிந்திருந்தார், அதைச் சீர்ப்படுத்த முயலுவது தம்மைக் குறித்தக் கடவுளுடைய சித்தமல்லவென அவர் தெளிவாக உணர்ந்தார்.

9இயேசு, தம்முடைய கடவுளும் தகப்பனுமான யெகோவாவுக்கு உண்மைத்தவறா முழு பற்றுறுதியை மெய்ப்பித்துக் காட்டினார். தம்முடைய தகப்பனின் வழிகளை அவர் நேசித்து அவருக்குப் பிரியமான காரியங்களையே எப்பொழுதும் செய்தார். (யோவான் 8:29) மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு முடிவுகள் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமே வருமென்று அவர் அறிந்திருந்தார், அது பரலோகத்திலிருந்து ஆளப்போகும் மெய்யான அரசாங்கம், மனிதவர்க்கத்துக்குத் தேவைப்படும் நீதியுள்ள அன்பான வழிநடத்துதலை அது அளிக்கும். இந்த ராஜ்யம் ஒன்றே சாத்தானின் மற்றும் அவனுடைய பேய்களின் செல்வாக்கை நீக்கிப்போட முடியும். இது மாத்திரமே, எல்லா இனங்களையும் தேசங்களையும் சேர்ந்த ஜனங்களை ஒரே பூகோளக் குடும்பமாகச் சமாதானமாய் வாழ்வதற்கு ஒற்றுமைப்படுத்த முடியும். இது ஒன்றே மனிதவர்க்கத்தைப் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமைப்பட்டிருப்பதிலிருந்து விடுவிக்க முடியும். இது ஒன்றே மனிதவர்க்கத்துக்கு நீடித்து நிலைத்திருக்கும் சமாதானத்தைக் கொண்டுவர முடியும். இந்த ராஜ்யம் அரசியலாளரால் ஏற்படுத்தி வைத்து பாதிரிமாரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஏதோ ஏற்பாடு அல்ல. இதன் அக்கறைகளை முன்னேற்றுவிக்க மெய்க் கிறிஸ்தவர்கள் மாம்சப்பிரகாரமான போருக்குரிய படைக்கலங்களை உதவியாக நாடுகிறதில்லை. இது கடவுளுடைய சொந்த அரசாங்கம், கடவுள்தாமே சிங்காசனத்திலேற்றியுள்ள பரிபூரண பரலோக அரசரைக் கொண்டது. இயேசு அதைப் பற்றிப் பிரசங்கித்ததும் அதற்காக ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்ததுமான அந்த ராஜ்யம் இதுவே.—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 20:1, 2; 21:3, 4.

எந்தப் பக்கத்தை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்?

10நீங்கள் எதிர்ப்படவேண்டிய விவாதம் இதுவே: யெகோவா தேவன், சர்வலோகத்தின் சிருஷ்டிகர், அதன் தனி உரிமையுள்ள அரசராகவும், அதன் ஈடற்ற உன்னத அரசராகவும் இருப்பதை நீங்கள் மதித்துணருகிறீர்களா? பைபிளில் குறித்து வைக்கப்பட்டுள்ளபடி அவருடைய நோக்கத்தையும் அவருடைய கட்டளைகளையும் கற்றறிய நேரமெடுக்கிறீர்களா? அவருடைய உன்னத நிலைக்கு மரியாதை கொடுத்து அவருடைய வழிகளை உயர்வாய் மதிப்பதை, அவருக்கு அன்புடன் கீழ்ப்படிவதன்மூலம் காட்டுகிறீர்களா?—சங்கீதம் 24:1, 10; யோவான் 17:3; 1 யோவான் 5:3.

11வேறு ஏதோ போக்கைத் தெரிந்துகொள்ளும் ஆட்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா? கடவுளுக்குச் செவிகொடுப்பதற்குப் பதில் தாங்கள் சுதந்தரமாய் நடப்பதையே வற்புறுத்துவதால் மனிதர் நன்மையடைவார்களென்ற சாத்தானின் விவாதத்தின் விளைவாக என்ன உண்டாயிற்று? இந்தப் பூமி கடவுளுக்குச் சொந்தமானதென்றும் மனிதவர்க்கம் முழுவதும், அந்த முதல் ஜோடியின் சந்ததியாராக, சகோதரராயிருக்கும்படி கருதப்பட்டனரென்றும் ஒப்புக்கொள்ள மறுத்தது இந்த நூற்றாண்டில் மாத்திரமே நடந்தப் போர்களில் ஒன்பது கோடி தொண்ணூறு லட்சம் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் படுகொலை செய்யப்படுவதில் விளைவடைந்தது. பைபிளின் ஒழுக்கத் தராதரங்களைப் பொருத்திப் பிரயோகிக்கத் தவறினது பிளவுற்றக் குடும்பங்களையும் மேகநோய் பெருவாரியாகப் பரவியிருப்பதையும், குடிவெறி துர்ப்பழக்கத்துக்கு அடிமையாதலால் உடலாரோக்கியம் கெடுவதையும், வன்முறைக் குற்றச் செயல்களையும் உண்டுபண்ணியிருக்கிறது. வன்முறை முடிவைத் தப்பும் ஆட்களும் ஆதாமிலிருந்து சுதந்தரித்தப் பாவத்தினால் மரணத்தை எதிர்ப்படுகின்றனர். சிருஷ்டிகரின் ஞானமுள்ள அன்பான கட்டளைகளைப் புறக்கணிக்கையில் மக்கள் தங்களுக்குத்தாமேயும் தங்களைச் சுற்றியுள்ளோருக்கும் தீங்கிழைத்துக் கொள்கின்றனர் என்றே எல்லா அத்தாட்சியும் காட்டுகிறது. (ரோமர் 5:12; ஏசாயா 48:17, 18-ஐ ஒத்துப் பாருங்கள்.) நிச்சயமாகவே நீங்கள் விரும்புவது இத்தகைய வாழ்க்கை அல்ல. இதைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

12அன்போடு கூறி, பைபிளில் பின்வரும் அழைப்பு கொடுக்கப்படுகிறது: “யெகோவா நல்லவர் என்று ருசித்தறியுங்கள்; அவரில் அடைக்கலம் புகும் மனுஷன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW].” (சங்கீதம் 34:8, தி.மொ.) இதைச் செய்வதற்கு நீங்கள் யெகோவாவை அறிய வேண்டும், பின்பு அவருடைய அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தவேண்டும். இப்படிச் செய்து வருகையில், உங்கள் வாழ்க்கை கருத்து நிரம்பியதாகிவரும். கணநேரத்துக்குப் பிரச்னைகளை மறந்திருக்கும்படி உங்களுக்கு ஒருவேளை உதவி செய்வதும் ஆனால் பின்னால் அநேகமாய் இருதய வேதனையை உண்டுபண்ணுவதுமான சொற்ப விநாடிகளுக்கு இருக்கும் இன்பத்துக்காகப் பேராசையுடன் நாடுவதற்குப் பதில், வாழ்க்கையின் பிரச்னைகளை வெற்றிகரமாய்ச் சமாளிப்பதும் நீடித்து நிலைத்திருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதும் எவ்வாறென கற்றுக் கொள்வீர்கள். (நீதிமொழிகள் 3:5, 6; 4:10-13; 1:30-33) மேலும், கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாய் வரும் அதிசயமான ஆசீர்வாதங்களில் பங்குகொள்ளும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஆவலோடு நாடுவது இந்த வகையான வாழ்க்கை என்றால், இப்பொழுதே செயல்படுவது இன்றியமையாதது. ஏன்?

எல்லா தேசங்களும் அர்மகெதோனுக்காக முன்னேறுகின்றன

13வேண்டுமென்றே அல்லது அசட்டை மனப்பான்மையுடன் எப்படியாயினும் சாத்தானின் வழிநடத்துதலைப் பின்பற்றும் மனிதரையும் அமைப்புகளையும் யெகோவா என்றென்றும் கண்டிக்காது விட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. கடவுளுடைய சட்டத்தை மதியாமலும், பூமியைத் தவறான முறையில் பயன்படுத்திக்கொண்டும், மற்றவர்களின் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டும் தொடர்ந்திருக்க அவர்களை அனுமதிக்கப்போவதில்லை. “யெகோவாவின் மகத்தான நாள்” என்று பைபிள் அழைத்திருப்பதில் தங்கள் கணக்குத் தீர்ப்பு நாளை அவர்கள் எதிர்ப்படுகிறார்கள்.—செப்பனியா 1:2, 3, 14-18, தி.மொ.

14தற்போதைய காரிய ஒழுங்குமுறை முடிவடையும் நாட்களின்போது நடைபெறவிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்தினதில், இயேசு கிறிஸ்து, “பேய் ஆவிகள் [பேய்களால் ஏவப்பட்ட வெளிப்படுத்தல்கள், NW]” “பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்ல கடவுளுடைய மகா நாளின் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்க அவர்களிடம் புறப்பட்டுப்” போகும் என்று தெரிவித்தார். அந்த வெளிப்படுத்துதல் காட்டினபடி, “எபிரெயு பாஷையில் அர்மகெதோன் [ஹார்-மகெதோன், NW] எனப்படும் இடத்தில் அவர்களைக் கூட்டிச் சேர்த்தன.” இந்தக் கூட்டிச் சேர்த்தல் இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கிறது!—வெளிப்படுத்துதல் 16:14, 16, தி.மொ.

15பைபிளில் பேசப்பட்டிருக்கும் அர்மகெதோனை அணுசக்திப் போரைத் தடுத்து நிறுத்துவதன்மூலம் தவிர்க்க முடியாது. சர்வதேச ஒப்பந்தங்கள் கலந்துபேசி முடிவு செய்வதனால் தடுத்து நிறுத்த முடியாது. இந்தப் பெயர் பூர்வ நகரமாகிய மெகிதோவிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் மத்திய கிழக்கிலுள்ள ஓர் இடத்தைப் பார்க்கிலும் மிக அதிகம் இதில் உட்படுகிறது. காணக்கூடாத “இந்த உலகத்தின் அதிபதி”யால் தூண்டி நடத்தப்பட்டு, சகல தேசங்களும், தங்கள் அரசியல் கருத்துப் பாங்குகள் பல்வேறு வகைப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், யெகோவா தேவனுக்குத் தங்கள் எதிர்ப்பைக் கண்கூடாகக் காட்டும் உலகளாவிய ஒரு சூழ்நிலைமைக்குக் கூட்டிச் சேர்க்கப்படுகின்றனர். “குடியிருக்கப்பட்ட பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள்” தங்களைப் பின்பற்றுவோர் எல்லாரோடுங்கூட, தங்கள் எதிர்ப்புநிலைகொள்ளும்படி செய்யப்படுகின்றனர். அர்மகெதோனுக்கு நேர் முன்புதானே, கடவுளுடைய ராஜ்யத்துக்கும் அதை யாவரறிய அறிவிக்கும் எல்லாருக்கும் விரோதமான அவர்கள் எதிர்ப்பு பூமியெங்கும் மிகப்பேரளவில் கடுமையாகும். சாத்தான் இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ எவ்வாறாயினும், கடவுளுடைய வார்த்தை அறிவிக்கிறபடி, “உலக முழுவதும் தீயோனின் வல்லமைக்குள் கிடக்கிறது.” பொல்லாத உலகம் முழுவதும் அதில் தங்கள் நம்பிக்கை வைக்கும் எல்லாரும், ஆம் அதன் வழிகளைப் பின்பற்றும் யாவரும் ஒழியவேண்டும்.—1 யோவான் 5:19, NW; 2:15-17.

16மேலிருந்து கீழ்வரை இந்த உலகம் ஊழலால் நிரம்பியிருக்கிறது. தகாவழிப் பேர்போன குற்றவாளிகள் மட்டுமல்ல, சாதாரண குடிமக்கள்தாமே சட்டத்துக்கு உணர்ச்சியற்று மதியாதிருத்தலையும் தங்கள் உடன்தோழனான மனிதனின் உடலுக்கும் உடைமைக்கும் அக்கறையில்லாமையையும் காட்டுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள்தாமே, தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் சொல்பவற்றிற்குக் கவனம் செலுத்த அவர்கள் மறுத்துவிடுகின்றனர். அவருடைய அரசாட்சியை அவர்கள் மதிக்கிறதில்லை. தம்முடைய பெயரின்பேரில் கொண்டுவரப்பட்டுள்ள அவதூறை, முற்றிலும் அகற்றுவதற்கும், மேலும் நீதியை நேசிப்பவர்கள் உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழக்கூடும்படி இந்தப் பூமியைப் பரதீஸாக்குவதற்கு வழியை ஆயத்தம் செய்யவும் கடவுள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.

17அழிவு வருகையில், அது யெகோவாவிடமிருந்து வருகிறதென்பதில் சந்தேகம் எதுவும் இராது. பாழ்க்கடிப்பு பூகோளத்தைச் சுற்றிப் பெருவாரியாகப் பரவும். தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றும் அவருடைய சேனைகள் செயல்படுகையில் யெகோவா நடவடிக்கை எடுக்கிறாரென தேசங்கள் தெரிந்துகொள்வார்கள். அரசாங்க அதிகாரத்துவம் நொறுங்கி வீழ்கையில், ஒவ்வொரு மனிதனின் கையும் அவனவன் தோழனுக்கு எதிராகத் திரும்பும். வானங்களிலிருந்து, கடவுளுடைய சொந்தக் குமாரன் இந்த முடிவுக்கு வழிநடத்துவார்.—வெளிப்படுத்துதல் 6:16, 17; 19:11-13; சகரியா 14:13.

18மனிதர் தொடுக்கும் அணுக்குண்டுப் போரின் விளைவுகளைப்போல் இந்த அழிவு வகைதொகையற்று எல்லாரையும் பாதிப்பதாயிராது. ஆனால் யார் தப்பிப்பிழைப்பர்? ஏதோ ஒரு மதத்தைத் தழுவியிருப்பதாகக் கூறும் எல்லாருமா? அல்லது ஒருவேளை கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டும் யாவருமா? இயேசு, இத்தகைய “அநேகரை” “அக்கிரமச் செய்கைக்காரர்” என பெயரிடுகிறார். (மத்தேயு 7:21-23) யெகோவாவுடனும் அவருடைய அரசக் குமாரன், கிறிஸ்து இயேசுவுடனும் நெருங்கிய உறவை உண்மையில் வளர்த்திருப்பவர்கள் மாத்திரமே “புதிய பூமிக்”குள் தப்பிப்பிழைப்பர். தங்கள் வாழ்க்கை முறையினாலும் ராஜ்யத்தைப் பற்றித் தாங்கள் சாட்சிபகருவதனாலும், தாங்கள் உண்மையில் ‘தேவனை அறிந்திருக்கிறார்கள்’ எனவும் ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள்’ எனவும் அவர்கள் மெய்ப்பித்துக் காட்டியிருப்பார்கள். இத்தகைய ஆளாக நீங்கள் உங்களை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறீர்களா?—2 தெசலோனிக்கேயர் 1:7; யோவான் 17:3; செப்பனியா 2:2, 3.

[கேள்விகள்]

1. (எ) இன்றைய என்ன விவாதங்கள் பல ஆட்களின் சிந்தனையை முதன்மையாய் ஆட்கொள்கின்றன? இவற்றைத் தீர்க்கும் பரிகாரங்களுக்காக எங்கே நோக்குகிறார்கள்? (பி) எதைக் கவனிக்க அவர்கள் அடிக்கடித் தவறுகின்றனர்?

2. உலகத்தில் நிலைமைகள் ஏன் இவ்வளவு மோசமாயிருக்கின்றன?

3. கடவுளிடம் மனிதவர்க்கத்தின் சரியான உறவைக் குறித்து ஆதியாகமம் 2:16, 17 என்ன காட்டுகிறது?

4. (எ) சாத்தான் எங்கிருந்து வந்தான்? (பி) என்ன தவறான ஆசை தன்னில் வளரும்படி அவன் அனுமதித்தான்?

5. (எ) ஏதேனில் என்ன விவாதங்கள் எழுப்பப்பட்டன? (பி) இவற்றால் யார் பாதிக்கப்படுகின்றனர்?

6. யெகோவா ஏன் இந்தக் கலகக்காரரை உடனடியாக அழிக்கவில்லை?

7. (எ) மனித அரசாங்கங்கள் எவ்வாறு தொடங்கின? (பி) அவை என்ன வகையான பதிவை உண்டாக்கியிருக்கின்றன?

8. இந்த உலகத்தின் அரசியல் ஒழுங்குமுறையில் தலையிட இயேசு ஏன் மறுத்தார்?

9. (எ) மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தீர்க்க, கடவுளுடைய ராஜ்யம் மாத்திரமே செய்யக்கூடிய எவை செய்யப்பட வேண்டும்? (பி) அந்த ராஜ்யம் என்ன?

10. (எ) நாம் ஒவ்வொருவரும் எதிர்ப்பட வேண்டிய அந்தப் பெரிய விவாதம் என்ன? (பி) அதைப் பற்றி நாம் என்ன செய்துகொண்டிருக்க வேண்டும்?

11. வேறு போக்கைத் தெரிந்துகொள்வது ஏன் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறதில்லை?

12.. (எ) என்ன அன்பான அழைப்பை பைபிள் நமக்குக் கொடுக்கிறது? (பி) நாம் படிப்படியாய்த் தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தி வருகையில் என்ன அனுபவிப்போம்?

13. இப்பொழுது யெகோவாவின் சார்பில் உறுதியான நிலைநிற்கை கொள்வது ஏன் முக்கியம்?

14. எல்லாத் தேசங்களும் இப்பொழுது எதற்குக் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள்?

15, 16. (எ) அர்மகெதோன் என்பதென்ன? (பி) அது ஏன் அவசியம்?

17. (எ) அந்த அழிவு எவ்வளவு பெரிதாயிருக்கும்? (பி) யார் இந்த முடிவுக்கு வழிநடத்துவார்?

18. யார் தப்பிப்பிழைப்பார்கள்?