Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமியின் புதிய அரசுருக்கு உண்மைத் தவறாதிருக்கிறீர்களா?

பூமியின் புதிய அரசுருக்கு உண்மைத் தவறாதிருக்கிறீர்களா?

அதிகாரம் 18

பூமியின் புதிய அரசுருக்கு உண்மைத் தவறாதிருக்கிறீர்களா?

பொ.ச. 33-ன் நைசான் 9 அன்று, இயேசு கிறிஸ்து தம்மை யூதருக்கு அவர்களுடைய அரசராக, முன்னறிவிக்கப்பட்ட மேசியாவாக முன்வந்து அளித்தார். ஒலிவ மலையை விட்டிறங்கி எருசகபலேமை நோக்கி அவர் சென்றபோது, திரள்கூட்டமான சீஷர்கள் களிகூர்ந்து இயேசு நடப்பித்திருந்த வல்லமைவாய்ந்த செயல்களினிமித்தம் கடவுளைத் துதித்தார்கள். (லூக்கா19:37,38; சகரியா 9:9) ஆனால் அரசராகத் தாங்கள் வாழ்த்தி வரவேற்றினவருக்கு உண்மைத் தவறாதவர்களாக நிரூபிப்பார்களா? அவர்கள் உண்மைத் தவறாமை சீக்கிரத்தில் பரீட்சைக்குட்படுத்தப்பட்டது.

2. 1914 முதற்கொண்டு பரலோகத்தில் ஊக்கமாய் ஆட்சி செய்து கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்து பூமியின் புதிய அரசாக மனிதவர்க்கத்தார் எல்லாருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறார். மனித வர்க்கத்தின் பிரச்சனைகளைத் தீர்க்கும் உண்மையான பரிகாரங்களைக்கொண்ட, கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின்கீழ் வாழும் எதிர்பார்ப்பு, சகல தேசங்களிலுமிருந்து வரும் மக்களைக் களிகூரச்செய்திருக்கிறது, ஆனால் அவர்கள் அவருக்கு உண்மைத் தவறாதிருப்பார்களா? தனியே நம் ஒவ்வொருவரையும் பற்றியெதென்ன?

அரசரின் சொந்த உண்மைத் தவறாமையைப் பற்றிய பதிவு

3. சர்வலோகப் பேரரசராகிய யெகோவாவுக்குத் தம்முடைய சொந்த உண்மைத் தவறாமை அசைக்கப்படாதென இயேசு கிறிஸ்து ஏராளாமான அத்தாட்சியைக் கொடுத்திருக்கிறார். தகுந்தவாரே அவர் யெகோவாவின் ‘‘பக்தன்” [உண்மைத் தவறாதவர், NW] என வேத எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார். (சங்கீதம் 16:10, தி.மொ.,; ப்போஸ்தலர் 2: 24-27) “உண்மைத் தவறாமை” என்பதற்கு இங்கே பயன்படுத்தியுள்ள எபிரேய சொல் அன்புள்ள இரக்கங்கொண்டிருப்பதன் எண்ணம் அடங்கியிருக்கிறது. இது வெறுமென சட்டம் அல்லது நீதியின்பேரில் ஆதாரங்கொண்ட உணர்ச்சியற்ற ஒன்றல்ல, அன்பினாலும் நன்றி மதித்துணர்வாலுங்கூட தூண்டப்படுகிறது.-ஒப்பிட்டுப் பாருங்கள்; சங்கீதம் 40:8 யோவான் 14:31.

4. பரலோகத்தில், சாத்தான், கடவுளுக்கு மாத்திரமே உரியதான கனத்தைத் தனக்குத் தேட தொடங்கினபோதும், தேவ, தூதர்களில் மற்றவர்கள் யெகோவாவின் பரலோக அமைப்பில் தங்களுக்குரிய பொருத்தமான இடங்களை விட்டுவிட்டபோதும், கடவுளுடைய முதற்பேறான குமாரன் அவர்களுடைய மனநிலையைப் பின்பற்றவில்லை. அப்படிச் செய்வது அவருடைய எண்ணத்திலுங்கூட தோன்ற முடியாதிருந்தது! அவருடைய தன்னலத் தியாக பக்தி அத்தகையதாயிருக்க, தம்முடைய தகப்பனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு, இந்த உண்மைத் தவறாதக் குமாரன் தன்னுடைய பரலோக மகிமையை விட்டுவிட்டு, மனிதனாகிய வாதனையின் கழுமரத்தில் மரிப்பதற்ருங்கூட தம்மைக் கீழ்ப்படுத்தினார். அன்புடன் அவர், தம்மில் சார்ந்தவரையில் ஒரு நுட்ப விவரமும் நிறைவேறாமற் போகாதபடி நிச்சயப்படுத்திக்கொண்டார்.-பிலிப்பியர் 2:5-8; லூக்கா 24:44-48.

5. இயேசு பூமியில் இருந்தபோது, செய்யும்படி கடவுள் அவருக்குக் கொடுத்திருந்த வேலையிலிருந்து அவரை விலகிப்போகச் செய்யகூடுமானால், கடவுள்தாமே தம்முடைய குமாரனைத் தள்ளிப்போடச் செய்விக்ககும் ஏதாவதொன்றைச் செய்யும்படி அவரை வசீகரிக்க, சாத்தான் அவர்மீது மிகுந்த நெருக்கடியைக் கொண்டுவந்தான். மேன்மையிலும் வல்லமையிலும் விளையக்கூடிய-ஆனால் சாத்தான் அதிபதியாயிருக்கும் உலகத்தின் பாகமாயிருக்கும் காரியங்களைச் செய்யும்படி அவன் இயேசுவைத் துரிதப்படுத்தினான். இயேசு. தம்முடைய வழிகாட்டியாக பிரசுத்த வேத எழுத்துக்களை மேற்கோள் எடுத்துக் காட்டி, அவற்றைச் செய்ய மறுத்துவிட்டார். (மத்தேயு 4:1-10) இயேசுவுக்கு மிக மேன்மையான திறமைகள் இருந்தன, அவற்றை அவர் நன்றாய்ப் பயன்படுத்தினார், ஆனால் எப்பொழுதும் தம்முடைய பிதாவின் சித்தத்துக்குப் பொருந்தவே அவற்றைப் பயன்படுத்தினார். அவர் செய்யும்படி கடவுள் அவரை அனுப்பியிருந்த அந்த வேலையைச் செய்வதிலேயே அவர் தம்மை முழுமையாய் ஈடுபடுத்தினார். (யோவான் 7:16-18; 8:28, 29; 14:10) உண்மைத் தவறாமைக்கு எத்தகைய சிறந்த முன்மாதிரி.

6. இயேசு நிருபிக்கப்பட்ட உண்மைத் தவறாமையினிமித்தம், யெகோவா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, ‘‘தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் மாமத்தில். . . முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குக் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:9-11) இந்த ‘‘எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்,” இயேசு யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றக் கூடும்படி அவருக்கு அளிக்கப்பட்ட வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. அவருக்கு ‘முழங்காலை முடக்குவது’ அவருடைய பதவியை ஒப்புக்கொண்டு அவருடைய அதிகாரத்துக்குக் கீழடங்குவதைக் குறிக்கிறது. அரசராக அவருக்கு உன்மைத் தவறாமல் கீழ்ப்படிந்திருப்பதையும் இது உட்படுத்துகிறது.

யெகோவாவின் அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களுக்கு உண்மைத் தவறாத அன்பு

7. இயேசு பரலோகத்துக்கு ஏறிப்போன பின்பு அவரை இனிமேலும் மனிதக் கண்களால் காணமுடியாதிருப்பது அவரைப் பின்பற்றினோருக்கு இருதயத்தைப் பரிசோதிக்கும் உண்மைத் தவறாமைக்குரிய பரீட்சைகளை கொண்டுவருவதில் முடிவடையும் அவர் அவர்களுக்குக் கற்பித்திருந்த நியமங்களின்படி அவர்கள் வாழ்வார்களா? இவ்வுலகத்திலிருந்து தங்களைப் பிரித்து வைத்திருப்பார்களா? கண்காணிக்கும் பொறுப்புகளைப் பரிசுத்த ஆவி அளித்திருப்போருக்கு அவர்கள் மரியாதை காட்டுவார்களா? இயேசு அவர்களுக்கு நியமித்த வேலையைச் செய்வதில் முழு ஆத்துமாவோடும் ஈடுபடுவார்களா?

8. உரிய காலத்தில் ‘‘மற்றச் செம்மறியாடுகள்” பரலோக ராஜ்யத்தின் சுதந்தகவாளிகளாகிய ‘‘சிறு மந்தை”யுடன் கூட்டுறவில் கூட்டிச் சேர்க்கப்பட வேண்டும். அரசாகக் கிறிஸ்துவுடனும் ஒருவர் மற்றவருக்கும் உள்ள உறவுகளில் தங்களுக்கு நியமிக்கப்பட்ட நிலைகளை அவர்கள் உண்மையில் மதித்துணருவார்களா? இயேசு கிறிஸ்துவின் கீழிருக்கும் ‘‘ஒரே மந்தை”யின் பாகமாயுள்ள எல்லாருக்குள்ளும் உண்மையான பரிமாற்றமுள்ள அன்பு வளர்ந்திருக்கிறதென உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றனர். இது அரசன் சவுலின் குமாரன் யோனத்தான் தாவீதின்பேரில் கொண்டிருந்த முறிக்கமுடியாத, அழியாத அன்பால் முன்குறித்துக் காட்டப்பட்டது. இராட்சதன் கோலியாத்தைக் கொன்றதில் தாவீது யெகோவாவிடம் கொண்டிருந்த முழு பக்தியையும் கடவுள்பேரில் அவன் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் கண்கூடாகக் கண்டதின்பேரில், யோனத்தான் உள்ளத்தின் ஆழத்தில் அன்பு கனிந்து அவனுடைய ‘‘ஆத்துமாதானேயும் தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றுசேர இணைந்ததாயிற்று, யோனத்தான், அவனைத் தன் சொந்த ஆத்துமாவைப்போல் நேசிக்கத் தொடங்கினான்.” யெகோவா அரசாட்சியைத் தாவீதின்பேரில் தங்கச் செய்வார் யோனத்தான்பேரில் அல்லவென்பது தெளிவாகத் தெரியவந்தபோதும் அவன்பேரில் அவனுடைய அன்பு குறையவில்லை. யோனத்தான் தாவீதுக்காகத் தன் உயிரையுங்கூட மீண்டும் மீண்டும் அபாயத்தில் வைத்தான்.-1 சாமுவேல் 17:45-47; 18:1; 23:16,17,

9. யோனாத்தானைத் தவிர, தாவீதுடன் தங்களை அன்புடன் இணைத்துக்கொண்ட இஸ்ரவேலரல்லாதவர்களும் இருந்தனர். இவர்கள் கூலிப் படைவீரர் அல்லர், யெகோவாவால் அபிஷேகம்பண்ணப்பட்டவனென்று தாவீதுக்கு கொண்டிருந்த பக்கியினால் செயல்பட்ட தைரியமிகுந்த பலசாலிகள். கிரேத்தியரும், பிலேத்தியரும், பெலிஸ்தியர் நகரமாகிய காத் பட்டணத்தாராக முன்னிருந்தவர்களும் இவருகளுக்குள் இருந்தனர். தாவீதின் குமாரன் அப்சலோம் இஸ்ரவேல் மனிதரின் இருதயங்களை வஞ்சகமாய்த் தன்வசம் கவரத் தேடினபோது இவர்கள் தாவீதுடன் உண்மைத் தவறாமல் உறுதியாய் நிலைத்திருந்தனர். அப்சலோமின் மேன்மையும் தந்திரமும் எத்தகையதாயினும் அவனுடைய மழுப்புதலான பேச்சால் இவர்கள் நம்பிக்கைக்துரோகப் போக்கில் செல்ல வழிநடத்தப்படவில்லை.-2 சாமுவேல் 15:6, 10, 18-22.

10. கிறிஸ்துவுக்கும், அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிப்பேருக்கும், ‘‘மற்றச் செம்மறியாடுகளுக்கும்” உள்ள உறவின் இருதயத்துக்கு ஊக்கமூட்டும் மற்றொரு விவரிப்பு சங்கீதம் 45-ல் காணப்படுகிறது. இது வெறுமென அழகிய செய்யுள் அல்ல, மேசியானிய ராஜ்யத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம்-கடவுள்தாமே ‘‘சிங்காசனமாக” இருக்கிறார், அதாவது, இயேசுவின் அரசப்பதவிக்கு அஸ்திபாரமும் ஆதாரமுமாயயிருக்கிறார். (சங்கீதம் 45:1-7; எபிரேயர் 1:8,9) அரசரின் திருமண நாளில், ‘‘ராஜகுமாரத்தி”யாகிய கிறிஸ்துவின் மணவாட்டி அவரிடம் கொண்டுவரப்படுவதைச் சங்கீதக்காரன் விவரிக்கிறான். அவளுடன் ‘‘அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள்” இருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக இருக்கும்படி ஆவலோடு எதிர்பார்க்கிறவர்கள். இந்த ‘‘மணவாட்டி”யின் கடைசியானவர் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஒன்றுசேரும் வரையில் இவர்கள் ‘‘மகிழ்ச்சியோடும் களிப்போடும்” இந்த மனவாட்டி வகுப்புடன் தொடர்ந்து செல்கின்றனர். அவர்களுடன், இவர்கள் ‘‘ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்,” பரலோகத்துக்கு ஏறிப்போவதனால் அல்ல, ஆனால் அரசரின் சேவைக்குத் தங்களை முன்வந்து அளிப்பதன்மூலமே. நீங்கள் இந்த மகிழ்ச்சியுள்ள ஊர்வலத்தின் பாகமாகியிருக்கிறீர்களா?-சங்கீதம் 45:13-15.

உண்மைத் தவறாமை நம்மைத் தேவைப்படுத்துவதென்ன?

11. வாழ்க்கையில் எண்ணற்ற சந்தரப்ப நிலைமைகள் நாம் எத்தகைய ஆட்களெனெ காட்டுகின்றன. யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தில் நாம் உண்மையில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோமா? அது நமக்கு மெய்மையாயிருக்கிறதா? தம்மை உண்மையுடன் பின்பற்றுவோர் ‘இவ்வுலகத்தின் பாகமாயிரார்’ என இயேசு சொன்னார். நீங்கள் இவ்வாறு இருக்கிறீர்களா?-யோவான் 17:15,16.

12. அபூரண மனிதராகிய நம் காரியத்தில், உண்மைத் தவறாமை பரிபூரணத்தைத் வற்புறுத்துவதில்லை. ஆனால் மற்ற மனிதர் நம்மைக் கண்டாலும் காணாவிடினும், பைபிள் கட்டளைகளை வேண்டுமென்றே மீறுவதைத் தவிர்க்கும்படி அது நிச்சயமாகவே கேட்கிறது. உலக வழிகளுக்கு எவ்வளவு நெருங்க நாம் வரமுடியும் என்று காண்பதைப்பார்க்கிலும், பைபிள் நியமங்களை முழுமையாய்ப் பொருத்திப் பிரயோகிக்கப் பிரயைசைப்படும்படி அது நம்மை தூண்டி நடத்தும். தீமையானவற்றிற்கு உண்மையான வெறுப்பை நம்மில் வளர்க்கச் செய்யும்-சங்கீதம் 97:10.

13. தீமையை நாம் உண்மையில் வெறுத்தால் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அதற்கு அருகில் நெருங்கும்படி நம்மைக் கவர்ந்திழுக்க நாம் அனுமதிக்கப்போவதில்லை. பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டு நடத்தையுள்ள ஆட்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையாயிருப்பது ஒருவரைக் கேட்டுக்கு வழிநடத்தலாம். (நீதிமொழிகள் 7:6-23) அவ்வாறே, யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டுவிலகி, தங்கள் முன்னிருந்தத் தோழர்களை வாய்மொழியாய் ‘‘அடிக்கிற” ஆட்களாகிய, விசுவாசத் துரோகிகள் உண்டுபண்ணும் புத்தகங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆசையால் வாங்கி வாசிப்பவர்களுக்கு ஆவிக்குரிய கேடு உண்டாகலாம். (மத்தேயு 24:48-51) நீதிமொழிகள் 11:9 பின்வருமாறு எச்சரிக்கிறது: ‘‘தெய்வமிகழ்வோன் [விசுவாசத்துரோகி, NW] தன்வாயாலே தனது அயலானைக் கெடுப்பான்.” ஆனால் உண்மைத் தவறாமை அவர்களுடைய மழுப்பும் பேச்சாக தவறாக வழிநடத்தப்படாதபடி பாதுகாக்கும்.-2யோவான் 8-11.

14. நாம் உண்மைத் தவறாமையைக் காட்டக்கூடிய மிக முக்கியமான வழிககளில் ஒன்று, இயேசு, செய்யும்படி தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்த வேலையில் முழு ஆத்துமாவுடனும் ஈடுபட்டிருப்பதாகும். நகர நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் சென்று கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் அவர்தாமே முன்மாதிரியை வைத்தார். (லூக்கா 8:1) இயேசு பின்வருமாறு சொன்னபோது உண்மையான கிறிஸ்தவர்கள் இன்று என்ன செய்துகொண்டிருக்க வேண்டுமென முன்னறிவித்தார். ‘‘ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்”. (மத்தேயு 24:14 NW) இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலமே, எங்குமுள்ள ஜனங்கள் தங்கள் தனிப்பட்ட சொந்த தீர்மானத்தைச் செய்யக்கூடும்படி ராஜ்ய விவாதம் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு திரள் கூட்டத்துக்கு அந்த தீர்மானம், மிகுந்த உபத்திரவத்தினூடனே பாதுகாத்து வைக்கப்படுவதற்கு வழிநடத்தும். (வெளிப்படுத்துதல்7:9,10) இந்த அவசரமான வேலையில் நீங்கள் உண்மைத் தவறாமல் பங்குகொள்கிறீர்களா?

15. வெகு காலத்துக்கு முன்னால் சங்கீதக்காரன் தாவீது பின்வருமாறு எழுதுகிறான்: ‘‘யெகோவா, உமது சிருஷ்டிகளெல்லாம் உமக்கு நன்றி செலுத்தும்; உமது பக்தர்கள்[உண்மைத்தவராதவர்கள், NW] உம்மை ஸ்தோத்தரிப்பார்கள். மனுப்புத்திரருக்கு உமது வல்லசெயல்களையும் உமது ராஜ்யத்திற்குரிய மகத்துவத்தின் மகிமையையும் தெரிவிக்கும்படி உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து உமது வல்லமையைப்பற்றிப் பேசுவார்கள். உமது ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது”. (சங்கீதம்145:10-13, தி.மொ) இந்த அரசாதிகாரம் இயேசு கிறில்துவின் உண்மைத் தவறாத கைகளிலுள்ள மேசியானிய ராஜ்யத்தின் மூலம் இப்பொழுது செலுத்தப்படுகிறது. இதைப் பற்றி நாம் தாராளமாயும் ஆர்வத்துடனும் பேசிக்கொண்டிருப்பதனால் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நம்முடைய உண்மைத் தவறாமையை மெய்பித்துக் காட்டுகிறோம்.

16. இந்த ராஜ்ய சாட்சி வேலைக்கு உங்கள் சொந்த வாழ்க்கையில் என்ன முக்கியத்திவம் கொடுத்திருக்கிறீர்கள்? மற்றவேலைகளுக்கு மேலாக இதை உண்மையில் முதல் வைக்கிறீர்களா? நீங்கள்தாமே செய்யும் வேலை மற்றவர்கள் செய்வதைப் பார்க்கிலும் மிகுதியாக அல்லது குறைவாக இருக்கலாம். ஒவ்வொருவரின் சந்தரப்ப நிலைமைகள் வேறுபடுகின்றனர். ஆனால் பின்வருபவற்றைப் போன்ற கேள்விகளை நம்மைநாமே கோட்டுக்கொள்வதனால் நாமெல்லோரும் பயனடையலாம்: ‘என்னுடைய பங்கு வெறும் கடமை உணர்ச்சியையே பிரதிபலிக்கிறதா, பேருக்குச் செலுத்தும் சிரத்தையற்ற ஒன்றாகவே இருக்கிறதா? தப்பிப்பிழைப்பதற்கு ஒரு தேவை என்றே நான் வெறுமென அதைக் கருதுகிறேனா? அல்லது யெகோவாவின்பேரிலுள்ள அன்பும், அவருடைய மேசியானிய அரசனுக்குக் கொண்டிருக்கும் பக்தியும் என் உடன்தோழரான மனிதரின்பேரிலுள்ள உண்மையான அக்கறையும், என்வாழ்க்கையிலுள்ள மற்ற அக்கறைகள் அதைச்சுற்றியே கட்டப்படும்படி அதற்குமுதலிடத்தைத் கொடுக்கும்படி என்னைத் தூண்டுகின்றனவா?’ இந்த வேலையை நம்முடைய அரசர் கருதுவதுபோல் நமக்கு அவ்வளவு முக்கியமாயிருக்கிறதென்று மெய்பித்துக்காட்டுவதற்கு வழிகளைத்தேட உண்மைத் தவறாமை நம்மைத் தூண்டுவிக்கும்.

17. பொ.ச. 33-ல் எருசலேமுக்குள் பிரவேசித்தபோது, அரசரென தம்முடைய சீஷரால் ஆரவார மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வரவேற்கப்பட்ட இவர், யெகோவா தம்முடைய மேசியானிய அரசரின் மூலம் செலுத்தும் அரசாட்சியை ஏற்க மறுக்கும் எல்லாரையும் அழிப்பார். ஆனால் தம்முடைய உண்மைத் தவறாமையின் முன்மாதிரியைப் பின்பற்றியுள்ள சகல ஜாதிகளிலுமிருந்தும் வரும் அந்தத் ‘‘திரள் கூட்ட” மான ஆட்களுக்கு அவர் ‘‘சமாதானம் கூறுவார்” அவர்களுக்குள் நீங்கள் இருப்பீர்களா?-சகரியா9:10; எபேசியர் 4:20-24.

[கேள்விகள்]

1. பொ.ச. 33-ல் இயேசு தம்மை அரசராக முன்வந்து அளித்தபோது அந்த ஜனக்கூட்டம் எவ்வாறு பிரதிபலித்தது?

2. (எ) கிறிஸ்து பூமியின் புதிய அரசர் என்ற அறிவிப்புக்கு இன்று பலர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? (பி) என்ன கேள்விகள் கருத்துள்ள கவனம் செலுத்துவதற்குத் தகுந்தவை?

3. (எ) இயேசுதாமே யெகோவாவின் ‘உண்மைத் தவறாதவரெ’ ஏன் குறிப்பிடப்பட்டிருக்கிறார்? (பி) உண்மைத் தவறாமை என்றாலென்ன?

4, 5.(எ) சாத்தானின் கலகத்தைப் பின்தொடர்ந்து, பரலோகத்தில் இயேசுவின் உண்மைத் தவறாமை எவ்வாறு காட்டப்பட்டது? (பி) அந்த உண்மைத் தவறாமையைப் பூமியிலும் எவ்வாறு காட்டினார்?

6. இயேசுவுக்குக் கொடுத்தப் பரிசு எம்முறையில் நம் பங்கிலும் உண்மைத் தவறாமையைத் தேவைப்படுத்துகிறது?

7. இயேசுவைப் பின்பற்றுவோர் என்ன காரியங்களில் தங்கள் உண்மைத் தவறாமையைக் குறித்துப் பரீட்சிக்கப்படுகிறார்கள்?

8. யோனத்தானுக்கும் தாவீதுக்குமிடையே இருந்த உண்மைத் தவறாத அன்பு எதை முன்குறித்துக் காட்டினது?

9. தாவீதின் சேனையில் சேவித்த இஸ்ரவேலரல்லாதவர்கள் இதைப்போன்ற உண்மைத் தவறைமையை எவ்வாறு காட்டினார்கள்?

10. (எ) கிறிஸ்துவுக்கும், அபிஷேகம்செய்யப்பட்ட மீதிபேருக்கும், “மற்றச் செம்மறியாடுக”ளுக்கும் மத்தியிலுள்ள நெருங்கிய உறவு சங்கீதம் 45-ல் எவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது? (பி) எந்தக் கருத்தில் ‘தோழிகளாகிய கன்னிகைகள் ராஜ அரமனைக்குள் பிரவேசிக்கிறார்கள்’?

11. ‘நாம் உலகத்தின் பாகமாயிராததை’ எந்த சூழ்நிலைமைகள் நம்மைப் பரீட்சிக்கின்றன?

12. நாம் அபூரணமாயிருந்தபோதிலும், மேலும் என்ன வழிகளில் உண்மைத் தவறாத அத்தாட்சியைக் கொடுக்கலாம்?

13. விசுவாசத் துரோகிகளின் மழுப்பும் பேச்சுக்கு எதிராக உண்மைத் தவறாமை நம்மை எவ்வாறு பாதுகாக்கும்?

14. (எ) அரசர் கிறிஸ்துவுக்கு நம்முடைய உண்மைத் தவறாமையை மெய்பித்துக் காட்டக்கூடிய வழிகளில் மிக முக்கியமான ஒன்று என்ன? (பி) இந்தவேலை ஏன் அவ்வளவு முக்கியமானது?

15. (எ) யெகோவாவின் உண்மைத் தவறாதவர்கள் எதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பாரகளென்று சங்கீதம் 145:10-13-ல் சொல்லியிருக்கிறது? (பி) அது நமக்கு எவ்வாறு பொருந்துகிறது?

16. ராஜ்ய பிரசங்கிப்பில் மாம் பங்கு கொள்ளும் அளவையும் அதைச் செய்யதூண்டப்படும் நம் உள்நோக்கத்தையும் உண்மைத் தவறாமை எவ்வாறு பாதிக்கவேண்டும்?

17. பொல்லாதவர்களைத் தாம் அழிக்கையில் இயேசு யாருக்குச் ‘‘சமாதனம் கூறுவார்”?