Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரிக்கவிருக்கும் இப்பொழுது வாழும் மக்களின் தீர்க்கதரிசன மாதிரிகளும் விவரிப்புகளும்

கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரிக்கவிருக்கும் இப்பொழுது வாழும் மக்களின் தீர்க்கதரிசன மாதிரிகளும் விவரிப்புகளும்

கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரிக்கவிருக்கும் இப்பொழுது வாழும் மக்களின் தீர்க்கதரிசன மாதிரிகளும் விவரிப்புகளும்

பின்வரும் தொகுதிகளால் அல்லது தனியாட்களால் முன்குறித்துக் காட்டப்பட்டனர்:

(1) நோவாவின் குமாரரும் மருமகள்களும் (ஆதியாகமம் 6-9).

(2) லோத்தும் அவனுடைய குமாரத்திகளும் (ஆதியாகமம் 19).

(3) யோசேப்பின் மனந்திரும்பின பத்து ஒன்றுவிட்ட சகோதரர் (ஆதியாகமம் 37, 42-45).

(4) பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு, யோசேப்புக்குத் தங்களை விற்றுப்போட்ட எகிப்தியர்

(ஆதியாகமம் 41; 47:13-26).

(5) இஸ்ரவேலரோடு எகிப்தை விட்டு வெளியேறின பலஜாதியாரான திரள் ஜனங்கள் (யாத்திராகமம் 12:38).

(6) பிராயச்சித்த நாளின்போது இஸ்ரவேலின் லேவியரல்லாத பன்னிரண்டு கோத்திரத்தார் (லேவியராகமம் 16; மத்தேயு 19:28).

(7) இஸ்ரவேலில் தங்கியிருந்த அந்நியர் (லேவியராகமம் 19:34).

(8) மோசேயின் மைத்துனனான ஓபாப் (எண்ணாகமம் 10:29-32).

(9) எரிகோவின் ராகாப் (யோசுவா 2, 6).

(10) இஸ்ரவேலோடு சமாதானத்தை நாடின கிபியோனியர் (யோசுவா 9, 10).

(11) கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் (நியாயாதிபதிகள் 4, 5).

(12) அரசன் சவுலின் குமாரன் யோனத்தான் (1 சாமுவேல் 18; 23:16, 17).

(13) தாவீதுடன் சேர்ந்து போர் செய்த அந்நியர்கள் (2 சாமுவேல் 15:18-22).

(14) சேபாவின் ராணி (1 இராஜாக்கள் 10).

(15) குஷ்டரோகம் சுத்தமாக்கப்பட்ட நாகமான் (2 இராஜாக்கள் 5).

(16) ரேகாபின் குமாரனான யோனதாப் (2 இராஜாக்கள் 10:15-28).

(17) யெகோவாவின் ஆலயத்தைநோக்கி ஜெபித்த அந்நியர்கள் (2 நாளாகமம் 6:32, 33).

(18) நிதனீமியரும் இஸ்ரவேலரல்லாத சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் (எஸ்றா 2,8).

(19) ரேகாபியர் (எரேமியா 35).

(20) எத்தியோப்பியனான எபெத்மெலேக் (எரேமியா 38; 39:16-18).

(21) மனந்திரும்பின நினிவே பட்டணத்தார் (யோனா 3).

கூடுதலாக, பின்வருமாறு தீர்க்கதரிசனமாய் விவரிக்கப்பட்டுள்ளனர்:

(1) ஆபிரகாமின் வித்தின்மூலமாய் ஆபிரகாமைக் கொண்டு தங்களை ஆசீர்வதித்துக்கொள்ளும் பூமியின் வம்சங்கள் (ஆதியாகமம் 12:3; 22:18).

(2) யெகோவாவின் ஜனங்களோடுகூட களிகூரும் ஜாதிகள் (உபாகமம் 32:43).

(3) நீதியுள்ளோர், யெகோவாவில் நம்பிக்கைக் கொண்டிருப்போர் (சங்கீதம் 37:9, 29).

(4) மணவாட்டியின் தோழிகளாகிய கன்னிகைகள் (சங்கீதம் 45:14).

(5) நேர்மையாயும் குற்றமற்றும் இருப்போர் (நீதிமொழிகள் 2:21).

(6) யெகோவாவின் ஆலயத்தில் கற்பிக்கப்பட்டு அவருடைய வழிகளில் நடக்கும் ஜாதிகள் (ஏசாயா 2:2-4).

(7) அடையாளத்தை நோக்கி விசாரித்து வரும் ஜாதிகள் (ஏசாயா 11:10).

(8) இருளிலிருந்து வெளிவரும் ஜாதிகள் (ஏசாயா 49:6, 9, 10).

(9) முன்னறியப்படாத ஜாதி (ஏசாயா 55:5).

(10) யெகோவாவுக்கு ஊழியஞ்செய்து அவருடைய பெயரை நேசிக்கும் அந்நியர் (ஏசாயா 56:6).

(11) “சமுத்திரத்தின் ஐஸ்வரியம்,” “ஜாதியாரின் செல்வம்,” ‘மேகம்போல் திரண்ட புறாக்களைப்போன்று பறந்து’ வருவோர் (ஏசாயா 60:5, 6, 8).

(12) இஸ்ரவேலின் மந்தைகளை மேய்க்கும் மறுஜாதியார், அதன் பண்ணையாட்களாயும் திராட்சத்தோட்டக்காரராயும் இருக்கும் அந்நியர் (ஏசாயா 61:5).

(13) கணக்கனுடைய மைக்கூட்டைக் கொண்ட மனிதனால் நெற்றியில் அடையாளம் போடப்படுவோர் (எசேக்கியேல் 9).

(14) யெகோவாவின் திகிலூட்டும் நாளில் அவருடைய பெயரைநோக்கிக் கூப்பிட்டு பாதுகாப்படைவோர் (யோவேல் 2:32).

(15) எல்லா ஜாதிகளிலிருந்தும் வரும் விரும்பத்தக்கவைகள் (ஆகாய் 2:7).

(16) “யெகோவாவினிடம் சேர்ந்த”வர்களாகும் ஜாதிகள் (சகரியா 2:11).

(17) ‘ஒரு யூதனின் வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொள்ளும் பத்து மனிதர்’ (சகரியா 8:23).

(18) அரசர் சமாதானம் கூறும் ஜாதிகள் (சகரியா 9:10).

(19) அரசரின் சகோதரருக்கு நன்மை செய்யும் “செம்மறியாடுகள்” (மத்தேயு 25:31-46).

(20) மனந்திரும்பின கெட்ட குமாரன் (லூக்கா 15:11-32).

(21) நல்ல மேய்ப்பரின் குரலுக்குச் செவிகொடுக்கும் “மற்றச் செம்மறியாடுகள்” (யோவான் 10:16).

(22) கிறிஸ்துவில் விசுவாசங் காண்பித்து ‘ஒருபோதும் சாகாமலிருக்கும்’ ஆட்கள் (யோவான் 11:26).

(23) அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைக் கொண்டிருக்கப்போகிற சிருஷ்டி (ரோமர் 8:20, 21).

(24) கடவுளுடைய குமாரனில் தாங்கள் விசுவாசங் காட்டுவதனால் நித்திய ஜீவனை அடையும் இவ்வுலகத்தார் (1 யோவான் 2:2; யோவான் 3:16, 36).

(25) யெகோவாவின் ஆலயத்தில் இரவும் பகலும் சேவிக்கும் “திரள் கூட்டத்தார்” (வெளிப்படுத்துதல் 7:9-17).

(26) ஜீவத் தண்ணீரைக் குடித்து, தன்முறையாக மற்றவர்களை “வா!” என்று அழைக்கிற எவரும் (வெளிப்படுத்துதல் 22:17).

மேல் கொடுக்கப்பட்டவை இப்புத்தகத்தில் விளக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்டவை மாத்திரமே.