உங்களை உண்டாக்கினவர் யார்?
உங்களை உண்டாக்கினவர் யார்?
1 கடவுள் வானங்களையும் பூமியையும் உண்டாக்கினார்.—ஆதியாகமம் 1:1
2. யெகோவா கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. அவருடைய பெயர் யெகோவா.—சங்கீதம் 83:17
யெகோவா பரலோகத்தில் இருக்கிறார், அவர் ஆவியாக இருக்கிறார். அவரை நீங்கள் பார்க்க முடியாது.—ஏசாயா 66:1; யோவான் 1:18; 4:24
3 யெகோவா தேவன் பரலோகத்தில் அநேக தேவதூதர்களை உண்டாக்கினார். அவர்களும் ஆவியாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருந்தார்கள். கடந்த காலங்களில் அவர்கள் மனிதர் கண்களுக்குக் காணப்படுவதற்காக சில சமயங்களில் மானிட உருவத்தில் தோன்றினார்கள்.—எபிரெயர் 1:7
4 யெகோவா மிருகங்களை வெகு காலத்திற்கு முன்பாக மனிதனை உண்டாக்குவதற்கும் முன்பாக உண்டாக்கினார்.—5 யெகோவா ஆதாம் என்ற மனிதனையும் ஏவாள் என்ற அவனுடைய மனைவியையும் உண்டாக்கினார்.—ஆதியாகமம் 1:27
கடவுள் அவர்களை ஓர் அழகான நந்தவனத் தோட்டத்தில் அல்லது பரதீசில் வைத்தார். அவர் ஆதாமுக்கு ஒரே ஒரு மனைவியை மாத்திரம் உண்டாக்கினார். அந்த மனிதன் தன்னுடைய ஒரே மனைவியுடன் வாழவேண்டும்.—ஆதியாகமம் 2:8, 21, 22, 24
6 மனிதன் ஒரு ஆத்துமா.—ஆதியாகமம் 2:7
7 மிருகங்கள் ஆத்துமாக்கள்—ஆதியாகமம் 1:24