கடவுள் மறுபடியும் கெட்டவர்களை அழிப்பாரா?
கடவுள் மறுபடியும் கெட்டவர்களை அழிப்பாரா?
22 இன்றுங்கூட ஆட்கள் அதிக கெட்டவர்களாக இருக்கிறார்கள். இங்கே என்ன கெட்ட காரியங்கள் செய்யப்படுகின்றன?
23 சிலர் மற்றவர்களைக் கொன்று போடுகிறார்கள். இதை நீங்கள் செய்யக்கூடாது என்று கடவுள் சொல்லுகிறார்.—யாத்திராகமம் 20:13; 1 யோவான் 3:11, 12
யாத்திராகமம் 20:15; எபேசியர் 4:28
24 சிலர் திருடுகிறார்கள். நீங்கள் திருடக்கூடாது என்று கடவுள் சொல்லுகிறார்.—25 சில ஜனங்கள் அநேக மனைவிகளை விவாகம் செய்து கொள்ளுகிறார்கள். சிலர் தனித்தனி வீடுகளில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோடு வாழ்கிறார்கள். இன்னும் சில தம்பதிகள் விவாகம் செய்து கொள்ளாமலேயே வாழ்கிறார்கள். இவையெல்லாம் பைபிள் சொல்லுவதற்கு எதிராக இருக்கிறது.—மத்தேயு 19:4-6; 1 கொரிந்தியர் 7:1-4; 1 தீமோத்தேயு 3:1, 2
26 கடவுள் ஆதாமிற்கு ஒரே ஒரு மனைவியை மட்டும் கொடுத்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?—ஆதியாகமம் 2:22, 24
யாத்திராகமம் 20:4, 5; ஏசாயா 44:9-17; 1 யோவான் 5:21
27 சிலர் விக்கிரகங்களை வணங்குகிறார்கள். வணக்கத்தில் விக்கிரகங்களையோ அல்லது சொரூபங்களையோ உபயோகிக்கக்கூடாது என்று கடவுள் சொல்லுகிறார்.—28 தங்களை மாற்றிக்கொள்ளாத கெட்ட ஆட்களை யெகோவா அழித்து விடுவார்.—சங்கீதம் 37:9, 10; லூக்கா 13:5; 1 கொரிந்தியர் 6:9, 10