கெட்ட ஓர் உலகத்தைக் கடவுள் அழிக்கிறார்
கெட்ட ஓர் உலகத்தைக் கடவுள் அழிக்கிறார்
18 ஆதாமின் சந்ததியார் பெருகினார்கள். அவர்களும் மிக மோசமானவர்களாக ஆனார்கள். கடவுள் அவர்களை அழிக்க தீர்மானித்தார்.—ஆதியாகமம் 6:1, 5, 7
19 ஆனால் நோவா என்ற நல்லவன் ஒருவன் இருந்தான்.—ஆதியாகமம் 6:8, 9
கெட்ட ஜனங்கள் அழிக்கப்படும் போது, அவனும் அவனுடைய குடும்பமும் காப்பாற்றப்பட யெகோவா தேவன் ஒரு பெரிய கப்பலை கட்டும்படி சொன்னார். இந்தக் கப்பல் ஒரு பெரிய பெட்டியைப் போன்ற வடிவமுடையது. அது பேழை என்று அழைக்கப்பட்டது.—ஆதியாகமம் 6:13, 14
20 அவர்கள் மிருகங்களைப் பேழைக்குள்ளே அழைத்துச் சென்றார்கள்.—21 யெகோவா ஒரு பெரிய மழையை வரப்பண்ணினார். கெட்டவர்கள் எல்லோரும் மாண்டார்கள். பேழையில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?—ஆதியாகமம் 6:17; 7:11, 12, 21; 1 பேதுரு 3:10-12