Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் என்ன செய்யவேண்டும்?

நீங்கள் என்ன செய்யவேண்டும்?

நீங்கள் என்ன செய்யவேண்டும்?

50 அந்த அழகான பரதீசில் நீங்கள் என்றென்றுமாக வாழ ஆசைப்படுகிறீர்களா?

அப்படியென்றால் கடவுள் சொல்லும் காரியங்களைப்பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். பைபிளை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.—யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 1:3

51 இயேசுவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.—உபாகமம் 18:18, 19; யோவான் 3:16; அப்போஸ்தலர் 3:19-23

52 நல்ல காரியங்களையே செய்யவும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும் முயற்சி செய்யுங்கள்.—ரோமர் 6:17, 18, 22

53 நாம் கொலை செய்யக்கூடாது என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை மறவாதீர்கள்.—யாத்திராகமம் 20:13; 1 யோவான் 3:11, 12

54 மற்றவர்களுடைய பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.—யாத்திராகமம் 20:15; எபேசியர் 4:28

55 ஒருவன் தன் சொந்த மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணோடு வாழவும் தூங்கவும் கூடாது.—யாத்திராகமம் 20:14-17; 1 தெசலோனிக்கேயர் 4:3

56 ஒரு புருஷனுக்கு எத்தனை மனைவிகளைக் கடவுள் அனுமதிக்கிறார் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? புருஷன் தன் மனைவியோடு எவ்வளவு காலத்திற்கு வாழவேண்டும்?—ஆதியாகமம் 2:22, 24; மத்தேயு 19:5, 6; 1 கொரிந்தியர் 7:2, 10, 11

57 நாம் யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.—மத்தேயு 4:10; 1 கொரிந்தியர் 8:6

58 யெகோவா விக்கிரகங்களும் சொரூபங்களும் நமக்கு உதவி செய்யாது. ஏன்?—1 கொரிந்தியர் 8:4

விக்கிரகங்களை வைத்திருப்பது நல்லதா?—உபாகமம் 27:15; 1 யோவான் 5:21

59 வசியப் பொருட்களை வைத்திருப்பதும் தாயத்துக்களை உபயோகிப்பதும் ஏன் கெட்டது?—உபாகமம் 18:10-13; வெளிப்படுத்துதல் 21:8

60 கெட்ட தூதர்கள் அல்லது பேய்கள் கடவுளுக்கு எதிராக கலகஞ் செய்தார்கள். மனிதர்களை தவறாக வழிநடத்துவதற்காக அவர்கள் குறி சொல்லுபவர்களைப் பயன்படுத்துகிறார்கள்.—அப்போஸ்தலர் 16:16

61 நாம் கடவுளிடம் ஜெபம் செய்ய வேண்டும். ஜெபம் என்பது கடவுளிடம் பேசுவதாகும், நாம் அவருக்கு சேவை செய்ய ஆசையாயிருக்கிறோம் என்பதை அவரிடம் சொல்வதையும் அவருடைய உதவியைக் கேட்பதையும் குறிக்கிறது.—பிலிப்பியர் 4:6, 7

62 நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து அவரை விசுவாசிக்க வேண்டும்.—எபிரெயர் 5:9; யோவான்3:16

63 நம்மை இரட்சிப்பதற்காகவே அவர் மரித்தார் என்பதை மறக்க வேண்டாம்.—ரோமர் 5:8

64 இயேசு நம்முடைய காணக்கூடாத ராஜா என்பதையும் மறக்க வேண்டாம். நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.—பிலிப்பியர் 2:9-11; வெளிப்படுத்துதல் 19:16

65 நீங்கள் கற்றுக்கொள்ளும் நல்ல காரியங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்றும் கடவுளை சேவிக்க விரும்பும் ஆட்கள் முழுக்காட்டப்பட வேண்டும் என்றும் இயேசு சொன்னார்.—மத்தேயு 28:19, 20; யோவான் 4:7-15

66 ஆக நீங்கள் இந்த நல்ல காரியங்களைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் பேசலாம்.—மத்தேயு 10:32

67 நன்றாக வாசிக்க தெரிந்து கொண்டால் நீங்கள் இன்னும் அநேக காரியங்களைக் கற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் மற்றவர்களுக்கும் நல்ல விதத்தில் உதவி செய்யலாம்.—2 தீமோத்தேயு 2:15

68 கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று இயேசு சிறு பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். அவர்களிடம் பேசுவதற்கு அவர் ஒருபோதும் அதிக வேலையாக இல்லை.—மத்தேயு 19:13-15

69 கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவரை நேசிக்க வேண்டும் என்று பெற்றோர் எல்லா சமயத்திலும் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.—உபாகமம் 6:6, 7; நீதிமொழிகள் 6:20-22; எபேசியர் 6:4

70 அநேக வித்தியாசமான சர்ச்சுகள் இருக்கின்றன. அவர்களுடைய போதனைகளில் பல பைபிள் போதனைகள் அல்ல. சத்தியத்தைப் போதிக்காத மதங்களை நாம் விட்டு விலக வேண்டும் என்று யெகோவா நமக்குச் சொல்லுகிறார்.—வெளிப்படுத்துதல் 18:4; யோவான் 4:23, 24

71 தம்மைப் பற்றி அதிகமாக உங்களுக்குக் கற்றுக்கொடுக்க யெகோவா இந்தப் பூமியில் தம்முடைய ஜனங்களைக் கொண்டிருக்கிறார். அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?—அப்போஸ்தலர் 15:14; ரோமர் 10:14, 15

72 அவர்கள்தான் யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் மத்தியில் சமாதானம் உண்டு. ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்கிறார்கள்.—ஏசாயா 43:10-12; யோவான் 13:34, 35

73 அவர்கள் யெகோவாவை நேசிப்பதால் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள். இப்படியாக தங்கள் கெட்ட வாழ்க்கை வழியை விட்டுவிட்டு கடவுளை சேவிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை பயன்படுத்த ஆசையாயிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள்.—அப்போஸ்தலர் 2:41

74 அழகான ஒரு பரதீசில் வாழும் நம்பிக்கை யெகோவாவின் சாட்சிகளுக்கு உண்டு.—சங்கீதம் 37:9-11, 29

75 நீங்களும் அவர்களோடு சேர்ந்து அங்கே வாழ்வதற்கு என்ன செய்யலாம்?—யாக்கோபு 1:22, 25; 2:20-26

யெகோவாவுக்கு சேவை செய்ய கற்றுக்கொள்வதற்கு அவர்களோடு சேர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் நேசிக்கிறார்கள், அவர்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்களா? கடவுளைப் பற்றி மற்றவர்களும் அறிந்துகொள்ளும்படி அவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்குப் பிரியமா?—யோவான் 6:45-47

76 யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் உங்களை நேசிக்கிறார்கள், நீங்கள் பரதீசில் என்றென்றுமாக வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.—யோவான் 3:16

இந்தச் சிறிய புத்தகத்திலுள்ள படங்களிலிருந்தும் விஷயங்களிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொண்ட காரியங்கள் பூமியில் வாழ்க்கையை என்றென்றுமாக அனுபவித்துக் களிப்பதற்கான ஆசையை நிச்சயமாக தந்திருக்கும். இதைப்பற்றி இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், உங்கள் ஊரிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சியிடம் பேசுங்கள். அல்லது இந்தச் சிறிய புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள காரியாலயங்களின் விலாசப்பட்டியலில் காணப்படும் உங்களுக்கு அருகாமையிலுள்ள காரியாலயத்துக்கு எழுதலாம், அல்லது உங்களுக்காக மற்றொருவர் எழுதும்படி கேட்கலாம்.