பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நாம் எப்படி விடுதலை அடைகிறோம்
பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நாம் எப்படி விடுதலை அடைகிறோம்
35 முதல் மனிதனாகிய ஆதாம் பாவம் செய்தான் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவன் ஜீவனையும் பரதீசையும் இழந்தான், அவனுடைய பிள்ளைகளாக நாம் இருப்பதால், நாமுங்கூட மரிக்கிறோம்.—ரோமர் 5:12: 3:23
36 இன்னொரு பரிபூரண மனிதன் நமக்கு ஜீவனை கொடுத்தால் அல்லது நம்மை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டால், நாம் இந்தப் பரிபூரண ஜீவனை திரும்பவும் பெற முடியும்.—1 கொரிந்தியர் 15:45; ரோமர் 5:19, 21
37 இயேசு கடவுளுடைய குமாரனாக இருந்தார். அவர் ஒரு பரிபூரண மனிதனாக இருந்தார். அவர் பாவம் செய்யவில்லை.—எபிரெயர் 5:9; 7:26
38 கடவுளை நேசிக்காத ஆட்களால் கொல்லப்படும்படி தம்மை அனுமதித்தார்.—அப்போஸ்தலர் 2:23
இது நமக்காகதம்மையே பலியாக கொடுப்பதாயிருந்தது.—1 தீமோத்தேயு 2:6
39 வெட்டியெடுக்கப்பட்ட ஒரு குகையில் அல்லது கல்லறையில் இயேசு அடக்கம் பண்ணப்பட்டார். அவர் மூன்று நாட்கள் மரித்திருந்தார். பிறகு கடவுள் அவரை திரும்ப உயிருக்குக் கொண்டுவந்தார்.—40 அவர் பரலோகத்திற்குத் திரும்பிப்போனார். கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு உதவி செய்யும்படி அவர் இப்பொழுது கடவுளிடம் கேட்க முடியும்.—எபிரெயர் 9:24; 1 யோவான் 2:1, 2