Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா நமக்கு ஓர் இரட்சகரைத் தருகிறார்

யெகோவா நமக்கு ஓர் இரட்சகரைத் தருகிறார்

யெகோவா நமக்கு ஓர் இரட்சகரைத் தருகிறார்

29 கடவுள் உண்டாக்கின முதல் ஆவி சிருஷ்டி அவருக்கு முதல் மகனைப் போல இருந்தார்.

கடவுள் அவரை அதிகமாக நேசிக்கிறார். கெட்டவர்களை அழிப்பதற்கும், கீழ்ப்படிதலுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்கும் அவரை உபயோகிப்பார்.—யோவான் 3:16, 36

30 யெகோவா தமது மகனை பூமியில் பிறக்கும்படி அனுப்பினார். அவருக்கு இயேசு என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவருடைய தாயின் பெயர் மரியாள்.—லூக்கா 1:30-35

31 இயேசு வளர்ந்தபோது, அநேக நல்ல காரியங்களைக் கற்பித்தார். யெகோவா ஒருவர்தான் உண்மையான கடவுள் என்று கற்பித்தார்.—மாற்கு 12:29, 30

நாம் யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 4:10; யோவான் 4:23, 24

யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றியும் மக்களுக்குக் கற்றுபித்தார்.—லூக்கா 17:20, 21

32 இயேசு வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார், மற்றும் அநேக நல்ல காரியங்களைச் செய்தார். அவர் கெட்ட காரியங்களைச் செய்யவில்லை.—அப்போஸ்தலர் 10:38; 1 பேதுரு 2:21, 22

ஆனால் அவர் நம்மை பாவத்திலும் மரணத்திலுமிருந்து எப்படி இரட்சிப்பார்?

33 நல்லவர்களை இரட்சிப்பதற்காக அவர் கடவுளுக்கு ஒரு பலியைச் செலுத்த வேண்டியதாக இருந்தது. கடந்த காலங்களில் ஜனங்கள் தங்களுடைய பாவங்களுக்காக மிருகங்களைப் பலியிடும்படி கடவுள் சொல்லியிருந்தார்.—எபிரெயர் 7:25, 27

34 இயேசு மிருகங்களைப் பலி செலுத்தவில்லை. நமக்காக அவர் தம்மையே பலியாக கொடுத்தார்.—மத்தேயு 20:28; எபிரெயர் 10:12

ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?