“இராயனுடையது இராயனுக்கு”
அதிகாரம் 33
“இராயனுடையது இராயனுக்கு”
நாம் ஏதாவது பணத்தை எடுத்து அதைப் பார்வையிடலாம். இந்தப் பணத்தின்மேல் நீ என்ன காண்கிறாய்? — இந்தப் பணத்தை உண்டாக்கினது யார்? — அரசாங்கமே உண்டாக்கினது.
மக்கள் உபயோகிக்கும் இந்தப் பணத்தை அரசாங்கங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக உண்டாக்கி வந்திருக்கின்றன. பெரிய போதகர் பூமியில் இருக்கையில், ரோம அரசாங்கம் பணத்தை உண்டாக்கினது. அந்த அரசாங்கத்தின் அரசன் யாராக இருந்தான் என்று உனக்குத் தெரியுமா? — அவன் இராயன் என்று அழைக்கப்பட்டான்.
அந்நாட்களிலிருந்த ஜனங்களுக்கு ரோம அரசாங்கம் பல நல்ல காரியங்களைச் செய்தது. இன்றும் அரசாங்கங்கள் நமக்குப் பல நல்ல காரியங்களைச் செய்கின்றன. பிரயாணஞ்செய்வதற்கு அவை பாதைகளை அமைக்கின்றன. நம்மைப் பாதுகாப்பதற்கு அவை காவல் சேவகருக்கும் தீயணைப்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்கின்றன.
இந்தக் காரியங்களைச் செய்வதற்கு அரசாங்கத்திற்குப் பணம் செலவாகிறது. அரசாங்கத்திற்கு இந்தப் பணம் எங்கிருந்து கிடைக்கிறதென்று உனக்குத் தெரியுமா? — மக்களிடத்திலிருந்தே அதைப் பெற்றுக்கொள்ளுகிறது. மக்கள் அரசாங்கத்திற்குச் செலுத்தும் அந்தப் பணமே வரிகள் என்றழைக்கப்படுகிறது.
வரிகளைச் செலுத்துவதற்குப் பல ஆட்கள் பிரியப்படுகிறதில்லை. இயேசு பூமியில் இருக்கையில் யூதர்களில் சிலர், ரோம அரசாங்கத்திற்கு எவ்வித வரிகளையும் செலுத்த விரும்பவில்லை. அப்படிப்பட்ட வரிகளை அவர்கள் வெறுத்தனர். ஆகவே, ஒரு நாள் சில மனிதர் பெரிய போதகரிடம் வந்து: ‘இராயனுக்கு வரிகளை நாங்கள் செலுத்த வேண்டுமா இல்லையா?’ என்று அவரைக் கேட்டார்கள்.
இயேசுவை அகப்பட வைக்கும்படியான ஒரு சூழ்ச்சியாக இந்தக் கேள்வியை அம்மனிதர் கேட்டனர். எப்படியென்றால், ‘நீங்கள் வரிகளைச் செலுத்தவேண்டும்,’ என்று இயேசு பதிலளித்தால்
யூதர்களில் பலர் இயேசு சொன்னதை விரும்ப மாட்டார்கள். ஆனால், ‘இல்லை, நீங்கள் வரிகளைச் செலுத்த வேண்டியதில்லை,’ என்றும் இயேசு சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது குற்றமாக இருக்கும்.ஆகவே இயேசு சொன்னது இதுவே. அவர் அந்த மனிதர்களிடத்தில்: “ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள்,” என்றார். அவர்கள் ஒரு பணத்தை அவரிடம் கொண்டுவந்தபோது, இயேசு அவர்களிடம்: ‘யாருடைய படமும் பெயரும் அதன்மேல் இருக்கின்றன?’ என்று கேட்டார்.
“இராயனுடையது,” என்று அந்த மனிதர் சொன்னார்கள்.
ஆகவே இயேசு: “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்,” என்றார்.—லூக்கா 20:19-26.
இது மிகச் சிறந்த பதில் அல்லவா? — இதில் எவ்விதக் குற்றத்தையும் ஒருவரும் கண்டுபிடிக்க முடியவில்லை. இராயன் மக்களுக்காகக் காரியங்களைச் செய்வானாகில், இந்தக் காரியங்களுக்காக அவனுக்குச் செலுத்த இராயன் உண்டாக்கின அந்தப் பணத்தை உபயோகிப்பது சரியே. ஆகவே இந்த விதமாய் இயேசு நாம் பெற்றுக்கொள்ளும் காரியங்களுக்காக அரசாங்கத்திற்கு வரிகளைச் செலுத்துவது சரி என்று காட்டினார்.
இப்பொழுது, நீ வரிகளைச் செலுத்துவதற்குப் போதிய வயதை உடையவனாக இருக்கமாட்டாய். ஆனால் நீ அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா? — அரசாங்கத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிதலேயாகும்.
இதை நமக்குச் சொல்லுகிறவர் கடவுளே. ‘மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியுங்கள்,’ என்று அவருடைய வார்த்தை சொல்லுகிறது. இந்த ‘மேலான அதிகாரங்கள்’ யார்? — அரசாங்கத்தில் அதிகாரமுடைய மனிதர். ஆகவே நாம் உண்மையில் சட்டத்திற்குக் கீழ்ப்படிய ரோமர் 13:1, 2.
வேண்டும். கடவுள் அப்படிச் சொல்லுகிறார்.—ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். தெருவில் காகிதமோ மற்றக் குப்பை கூளமோ போடக்கூடாது என்று ஒரு சட்டம் இருக்கலாம். நீ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமா? — ஆம், நீ அதற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்.
காவல் சேவகருக்குங்கூட நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்க வேண்டுமா? — மக்களைப் பாதுகாக்கும்படி அரசாங்கம் காவல் சேவகருக்குச் சம்பளம் கொடுக்கிறது. அவர்களுக்குக் கீழ்ப்படிவதானது அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவதாகவே இருக்கிறது.
ஆகவே நீ தெருவைக் கடக்க இருக்கையில் ஒரு காவல் சேவகன், “காத்திரு!” என்று சொல்வானாகில் நீ என்ன செய்ய வேண்டும்? — எப்படியாவது மற்றவர்கள் கடந்து ஓடினாலும், நீ அப்படிச் செய்ய வேண்டுமா? — காத்திருக்கிறவனாக நீ ஒருவன் மாத்திரமே இருந்தாலுங்கூட, நீ அப்படிக் காத்திருக்கவே வேண்டும். கீழ்ப்படியும்படி கடவுள் நமக்குச் சொல்லுகிறார்.
நம்முடைய சுற்றுப் புறத்தில் தொந்தரவு இருக்கலாம். “தெருக்களில் வராதே, வெளியில் செல்லாதே,” என்று ஒரு காவல்சேவகன் ஒருவேளை சொல்லலாம். ஆனால் கூச்சல் சத்தம் உன் செவிகளில் விழுந்து, என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீ அறிய விரும்பக்கூடும். அதைப் பார்க்க நீ வெளியே போகலாமா? — இது ‘மேலான அதிகாரங்களுக்குக்’ கீழ்ப்படிவதாக இருக்குமா? —
மேலும் அரசாங்கம் பல இடங்களில் பள்ளிக்கூடங்களையுங்கூட கட்டுகிறது. அந்த உபாத்தியாயர்களுக்கு அது சம்பளம் கொடுக்கிறது. உபாத்தியாயர் சொல்வதைப் பிள்ளைகள் செய்கையில், வகுப்பறையில் அமைதி உண்டாயிருக்கச் செய்கிறது. அப்படியானால் உபாத்தியாயருக்கு நீ கீழ்ப்படிய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார் என்று நினைக்கிறாயா? —
“உன் உபாத்தியாயருக்குக் கீழ்ப்படி,” என்று சொல்லுகிற வேதவசனம் பைபிளில் இல்லை. ஆனால் நீ கீழ்ப்படியவேண்டுமென்று பைபிள் காட்டுகிறது.
மக்களைப் பாதுகாக்கும்படி ஒரு காவல் சேவகனுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுப்பதுபோலவே, கற்பிக்கும்படி உபாத்தியாயருக்கும் சம்பளம் கொடுக்கிறது. ஆகவே ஒரு காவல் சேவகனுக்கோ ஒரு உபாத்தியாயருக்கோ கீழ்ப்படிவதானது அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவதாக இருக்கிறது.அல்லது நாம் இந்த விதமாய் அதை நோக்கலாம். ‘தங்கள் தகப்பனுக்கும் தாய்க்கும் கீழ்ப்படியும்படி’ கடவுள் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறார். ஆனால் உபாத்தியாயர் உன்னைக் கவனித்துக்கொள்ளும்படி உன் தகப்பனும் தாயும் உன்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியிருக்கின்றனர். ஆகவே வீட்டில் உன் பெற்றோருக்கு நீ கீழ்ப்படிவதுபோலவே, உன் உபாத்தியாயருக்கும் கீழ்ப்படிவது சரியே.—எபேசியர் 6:1.
நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பதில்லை. ஆகவே நீ உபாத்தியாயருக்குக் கீழ்ப்படிகிறாயா இல்லையா என்று நான் ஒருவேளை பார்க்க முடியாது. ஆனால் கடவுள் பார்க்கிறார். கடவுளைப் பிரியப்படுத்தவே நாம் உண்மையில் விரும்புகிறோம் அல்லவா? — மேலும், நீ காவல்சேவகனுக்குக் கீழ்ப்படிகிறாயா என்பதை நான் ஒருவேளை பார்க்கமுடியாது. ஆனால் யார் பார்க்கிறார்? — கடவுள் பார்க்கிறார். இதை எப்பொழுதும் நினைவில் வைத்திரு.
நம்முடைய வாழ்க்கையில் கடவுளே முதலாவதாக வருகிறார் என்பதையுங்கூட நினைவில் வைத்திரு. நாம் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிகிறோம், ஏனென்றால் நாம் அதைச் செய்யும்படி கடவுள் விரும்புகிறார். ஆனால் நாம் செய்யக் கூடாது என்று கடவுள் சொல்வதை நாம் செய்யும்படி அவர்கள் சொல்வார்களேயானால் எப்படி? — “நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை,” என்று எவராவது நமக்குச் சொல்வார்களேயாகில், நாம் அதற்குச் செவிகொடுக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரா? —
இயேசுவின் அப்போஸ்தலருக்கு இது நடந்தது. அப்போஸ்தலர் என்ன செய்வார்கள்? நீ என்ன செய்திருப்பாய்? — அவர்கள்: ‘மனிதருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராகக் கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்,’ என்று பதிலளித்தார்கள்.—அப்போஸ்தலர் 5:29.
(சட்டத்திற்கு மரியாதை கொடுப்பது பைபிளில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. தீத்து 3:1; மத்தேயு 5:41; 1 பேதுரு 2:12-14 ஆகியவற்றில் எழுதப்பட்டிருப்பதை வாசியுங்கள்.)