என்றும் வாழ்வதற்கான வழி
அதிகாரம் 46
என்றும் வாழ்வதற்கான வழி
யெகோவா நமக்குப் பல நல்ல பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அவர் நமக்குக் கொடுத்திருக்கிற மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று உயிர் ஆகும். இது இல்லாமல் நாம் எதையுமே செய்யமுடியாது, அல்லவா? — ஆனால் இந்தப் பரிசை நாம் வைத்துக் கொள்ள விரும்புகிறோமென்றால், நாம் செய்யவேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன.
இப்பொழுதுதானே நீ அந்தக் காரியங்களில் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறாய். நானும் செய்து கொண்டிருக்கிறேன். இதை நாம் பகல் முழுவதும் இரவு முழுவதும், நாம் தூங்கும் போதுங்கூட செய்து கொண்டிருக்கிறோம். நாம் அதை நிறுத்துவோமாகில், நாம் உடனே மரித்துவிடுவோம். இது என்னவென்று உனக்குத் தெரியுமா? — ஆம், நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.
உயிருடன் வைத்துக்கொள்ள நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் மற்ற காரியங்களும் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றை நீ குறிப்பிட முடியுமா? — நாம் உணவு சாப்பிடுகிறோம். நாம் தண்ணீர் குடிக்கிறோம். நாம் தூங்குகிறோம். இந்தக் காரியங்கள் இல்லாமல் நாம் வாழ முடியாத வண்ணமாய்க் கடவுள் நம்மை உண்டாக்கியிருக்கிறார்.
இவற்றில் எதுவும் செய்வதற்குக் கடினமாயில்லை. உண்மையில், எனக்குச் சாப்பிட பிரியம். உனக்கும் பிரியம் அல்லவா? — ஆனால் உணவு எப்படி நம்மை உயிருடன் வைக்கிறது? உனக்குத் தெரியுமா? நாம் அதை விழுங்கின பின்பு என்ன நடக்கிறது? —
அந்த உணவை நம்முடைய உடல் மிகச் சின்னஞ்சிறிய துண்டுகளாக நொறுக்குகிறது. பின்பு இரத்தம் இவற்றை நம்முடைய உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் கொண்டுசெல்லுகிறது. இந்த உணவானது புதிய எலும்பு, புதிய சதை, புதிய ரோமம், நகங்கள், கண்கள், மேலும் உடலின் மற்றப் பாகங்கள் ஆகியவற்றை உருவாக்கி அமைக்க அதிசயமான ஒரு முறையில் உபயோகப்படுத்தப்படுகிறது. இது உனக்குத் தெரியுமா? —
பழைய உடற்பகுதிகளுக்கு என்ன நடக்கிறதென்று நீ அதிசயப்படக்கூடும். இவை ஒரு சமயத்திற்கு ஒரு சிறு பகுதியாகப் படிப்படியாய் மரித்துக் கொண்டே வந்து கழிவு பொருட்களாக நீக்கப்பட்டுப் போகின்றன. புதியவை அவற்றினிடத்தை எடுத்துக் கொள்ளுகின்றன.
இந்த மாற்றங்கள் நம்முடைய உடலில் எங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விதம் நம்முடைய முழு உடலும் மாற்றப்படுவதற்கு அதிகக் காலம் எடுப்பதில்லை. இவ்விதம் அது செய்யும் வண்ணமாக யெகோவா நம்முடைய உடலை உண்டாக்கினார். இதை அது என்றுமாகச் செய்து கொண்டிருக்கும்படிக்கு அவர் அதைச் செய்தார். ஆம், மனிதன் என்றும் வாழும்படியாகக் கடவுள் அவனை உண்டாக்கினார்.
ஆனால் ஜனங்கள் மரிக்கின்றனர். ஏன்? — ஏனென்றால் ஆதாம் கடவுளுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தான். ஆதாமிலிருந்து நாம் பாவத்தை அடைந்தோம். கடவுளோடு மனிதனுக்கு இருந்த நல்ல உறவை அவன் கெடுத்தான். நம்முடைய உயிரும் கடவுள்பேரில் சார்ந்திருக்கிறது.
என்றும் வாழ்ந்திருக்க, காற்றையும் தண்ணீரையும் உணவையும் தூக்கத்தையும் பார்க்கிலும் அதிகம் நமக்குத் தேவை. கடவுளுடன் நல்ல நிலைநிற்கை நமக்கு வேண்டியதாயிருக்கிறது.
நம்மை என்றுமாக உயிர்வாழ வைக்கக்கூடிய வைத்தியன் ஒருவனுமில்லை. மரிக்காதபடி நம்மை வைப்பதற்கு எவ்வித மாய மாத்திரையும் இல்லை. நாம் என்றும் வாழக்கூடியதற்கு ஒரே வழியானது, கடவுளிடத்தில் நெருங்கி சேர்வதேயாகும். இதை எப்படிச் செய்வதென்று பெரிய போதகர் நமக்குச் சொல்லுகிறார்.
நாம் நம்முடைய பைபிள்களை எடுத்து அவற்றை யோவான் 17-ம் அதிகாரம், 3-ம் வசனத்திற்குத் திருப்புவோம். இங்கே நாம் இயேசு சொன்னதைக் காண்கிறோம். “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”
நித்தியமாக வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று பெரிய போதகர் சொன்னார்? — நாம் அறிவை உட்கொள்ள வேண்டும். இது நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதன் காரணமாகவே நாம் பைபிளைப் படிக்கிறோம்.
ஆனால் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வது எப்படி நித்தியமாய் வாழ்வதற்கு நமக்கு உதவி செய்யும்? — எல்லா உயிரும் அவரிடத்திலிருந்து வருகிறது என்பதை ஞாபகப்படுத்திக் மத்தேயு 4:4.
கொள். அவருடைய தயவை அடைய, ஒரே மெய்க்கடவுளாக நாம் அவரை வணங்க வேண்டும். அவர் சொல்வதற்கு நாம் செவி கொடுத்தால் தவிர நாம் அவரைச் சரியான முறையில் வணங்க முடியாது. ஒவ்வொரு நாளும் நமக்கு உணவு தேவையாக இருப்பது போலவே, ஒவ்வொரு நாளும் நாம் யெகோவாவைப் பற்றிக் கற்றறிவது அவசியம். இது நம்மை அவருக்கு நெருங்க வைக்கிறது. ‘மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளினாலும் பிழைக்க வேண்டும்,’ என்று பைபிள் சொல்லுகிறது.—கடவுளைத் தவிர வேறொருவரையும் பற்றிய அறிவை நாம் உட்கொள்ளவேண்டும். அவர் யார்? — இயேசு கிறிஸ்துவே. இது ஏனென்றால் பாவத்தை நீக்கும்படி கடவுள் இயேசுவை அனுப்பினார். ஆதாம் கடவுளுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபோது அவன் செய்தத் தீங்கை அவர் நீக்கிப்போடக்கூடும். கடவுளுடன் நல்ல உறவிற்குள் திரும்ப வரும்படி இயேசு நமக்கு உதவி செய்யக்கூடும். இது வேறு எந்த வழியிலும் கூடியதாக இல்லை.
இதன் காரணமாகவே: “வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை,” என்று பைபிள் சொல்லுகிறது. நாம் என்றும் வாழ விரும்புவோமானால் இயேசுவைப் பற்றிக் கற்றறிய வேண்டும். நமக்கு அவரில் உண்மையில் விசுவாசம் இருக்குமானால், நாம் என்றும் வாழக் கூடியவர்களாக இருப்போம். பூமி முழுவதற்கும் நல்ல நிலைமைகளை அவர் கொண்டுவருகையில், நாம் நித்தியமாக வாழவும் சந்தோஷமாக இருக்கவும் அவர் நமக்கு உதவி செய்வார். இது நிச்சயமான காரியம். இதன் காரணமாகவே: “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்,” அப்போஸ்தலர் 4:12; யோவான் 3:36.
என்று பைபிள் சொல்லுகிறது.—இயேசுவில் ‘விசுவாசமாயிருப்பது’ என்றால் அர்த்தமென்ன? — அவரில்லாமல் நாம் உயிருடன் நிலைத்திருக்க முடியாது என்று நாம் உண்மையில் நம்புவது என்று அர்த்தமாகிறது. கடவுள் இயேசுவின் மூலமாய் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார் என்று நாம் நம்புகிறோம் என்பதாகும். நீ இதை நம்புகிறாயா? —
இயேசுவில் ‘விசுவாசமாயிருப்பதானது’ வேறு ஒன்றையுங்கூட குறிக்கிறது. நாம் அவரை அவ்வளவு அதிகமாக நம்புவதனால் அவர் சொல்வதைச் செய்கிறோம் என்பதையும் குறிக்கிறது. நாம் சில காரியங்களை மட்டுமே செய்து மற்றவற்றைச் செய்யாமல் இருப்பதில்லை. அவர் சொல்லுகிற எல்லா காரியங்களையும் நாம் செய்கிறோம். நாம் உண்மையில் செய்ய விரும்புவதன் காரணமாகவே அவற்றைச் செய்கிறோம் என்பதைக் குறிக்கிறது. நீ செய்ய விரும்புவது இதுதானா? —
செய்யும்படி பெரிய போதகர் நமக்குச் சொல்லுகிற காரியங்களில் ஒன்றானது, மற்ற ஆட்களிடம் கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்பதாகும். எப்படியென்று நமக்குக் காண்பிக்க அவர் தாமே அதைச் செய்தார். ஆகவே, நாம் உண்மையில் இயேசுவினிடத்திலிருந்து கற்றிருக்கிறோம் என்றால், இது நாம் செய்யும் ஒன்றாக இருக்கும். நீ இதைச் செய்கிறாயா? —
ஆனால் முக்கியமாக எண்ணப்படுவது இது மாத்திரமே அல்ல. சரியானதென்று பைபிள் சொல்லுகிற காரியங்களை நாம் ஒவ்வொரு நாளும் செய்து வரவேண்டும். கெட்ட காரியங்களைச் செய்யாதபடி நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் மெய்யாகவே ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்று நாம் காட்ட வேண்டும்.
இந்தக் காரியங்களை நாம் செய்கிறோமென்றால், நாம் உண்மையில் பெரிய போதகருக்குச் செவிகொடுத்து வந்திருக்கிறோம் என்று இது காட்டுகிறது.
(இயேசு கிறிஸ்துவின் மெய்யான சீஷர்கள், இந்தப் பூமியிலேதானே உண்மையில் என்றும் சந்தோஷமாக வாழக் கூடியவர்களாக இருப்பார்கள். சங்கீதம் 37:29, 34 [36:29, 34, டூ.வெ.]; மத்தேயு 19:16-21; ரோமர் 6:23 ஆகியவற்றில் இதைப் பற்றி பைபிள் சொல்வதை வாசியுங்கள்.)