கடவுளுடைய தூதர்களிடத்திலிருந்து உதவி
அதிகாரம் 24
கடவுளுடைய தூதர்களிடத்திலிருந்து உதவி
தாங்கள் பார்க்கக் கூடியவற்றை மாத்திரமே நம்புவதாகச் சில ஆட்கள் சொல்லுகின்றனர். ஆனால் அது முட்டாள்தனம். நாம் ஒருபோதும் பார்த்திராத உண்மையான காரியங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நீ குறிப்பிட முடியுமா? —
காற்றைப் பற்றியதென்ன? நாம் அதை சுவாசிக்கிறோம். நாம் அதை உணர முடியுமா? — உன் கையை மேலே தூக்கு. இப்பொழுது நான் அதில் ஊதுகிறேன். நீ அதை உணர்ந்தாயா? — ஆம், ஆனால் நாம் காற்றைப் பார்க்க முடியாது அல்லவா? —
நாம் பார்க்க முடியாத ஆட்களுங்கூட இருக்கிறார்களா? — ஆம். கடவுள் ஒருவர். நான் அவரை ஒருபோதும் பார்த்ததே இல்லை, ஆனால் அவர் உண்டாக்கியிருக்கிற பொருட்களை நான் பார்த்திருக்கிறேன். நீயுங்கூட அந்தப் பொருட்களைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? — ஆகவே கடவுள் உண்மையாய் இருக்கிறார் என்று நாம் தெரிந்து கொள்ளுகிறோம்.
மேலும் பரலோகத்தில் தம்முடன் வாழ்வதற்கு கடவுள் ஏராளமான ஆட்களை உண்டாக்கினார் என்றும் பைபிள் சொல்லுகிறது. கடவுள் அவர்களைப் பார்க்க முடியும், அவர்களும் கடவுளைப் பார்க்க முடியும். ஆனால் நாம் அவர்களைப் பார்க்க முடியாதபடி அவர் அவர்களை உண்டாக்கினார். அவர்களை மிகவும் பலமுள்ளவர்களாகவும், மனிதரைப் பார்க்கிலும் மிக அதிக பலமுள்ளவர்களாகவும் அவர் உண்டாக்கினார். அவர்கள் தூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பெரிய போதகர் தூதர்களைப் பற்றி அறிந்திருந்தார். அவர் பரலோகத்தில் இருந்தபொழுது ஒரு தூதனாக இருந்தார். மற்ற தூதர்களுடன் வாழ்ந்தார். லட்சக்கணக்கான தூதர்கள் அவருக்குத் தெரியும். நாம் யெகோவாவைச் சேவிக்கிறோம் என்றால் இந்தத் தூதர்கள் நம்மில் அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர்.
யெகோவாவைச் சேவித்த தானியேல் என்ற பெயரையுடைய ஒரு மனிதன் இருந்தான். தானியேல் பாபிலோனில் வசித்தான். அங்கே இருந்த ஆட்கள் பலர் யெகோவாவை நேசிக்கவில்லை. தானியேல் யெகோவாவினிடம் ஜெபிப்பதை நிறுத்தாததால் அவன் சிங்கங்களின் கெபிக்குள் எறியப்படும்படியும் அவர்கள் செய்வித்தனர். அங்கே தானியேல் பசியாயிருந்த அந்த எல்லா சிங்கங்களுடனும் இருந்தான். என்ன நடக்கும்? ‘கடவுள் தம்முடைய தூதனை அனுப்பி அந்தச் சிங்கங்களின் வாய்களை மூடிப்போட்டார்.’ தானியேலுக்கு எவ்விதத் தீங்கும் உண்டாகவில்லை! தேவதூதர்கள் அதிசயமான காரியங்களைச் செய்யக்கூடும்.—மற்றொரு சமயத்தில் பேதுரு ஜெயிலில் இருந்தான். பேதுரு பெரிய போதகரின் ஓர் அப்போஸ்தலனாக இருந்தான். இயேசு கடவுளுடைய குமாரன் என்று அவன் ஜனங்களுக்குச் சொன்னபோது சில ஆட்கள் அதை விரும்பவில்லை. ஆகவே அவர்கள் பேதுருவை ஜெயிலில் போட்டனர். அவன் தப்பிப்போய்விடாதபடி உறுதிப்படுத்திக் கொள்ள போர்ச் சேவகர் பேதுருவைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். பேதுருவுக்கு உதவி செய்யக்கூடிய எவராவது அங்கே இருந்தார்களா? —
பேதுரு இரண்டு காவற்காரருக்கு மத்தியில் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கைகளில் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: ‘இதோ! யெகோவாவின் தூதன் வந்தான், அந்தச் சிறைச்சாலை அறையில் ஒரு வெளிச்சம் பிரகாசிக்க ஆரம்பித்தது. தேவதூதன் பேதுருவை விலாவிலே தட்டி, “சீக்கிரமாய் எழுந்திரு!” என்று சொல்லி எழுப்பினான்.’
அப்பொழுது பேதுருவின் சங்கிலிகள் அவனுடைய கைகளிலிருந்து விழுந்து போய்விட்டன! தூதன் அவனிடம்: ‘நீ உடுத்திக் கொள், உன் செருப்புகளைப் போட்டுக்கொண்டு என் பின்னே வா,’ என்று சொன்னான். அந்தத் தேவதூதன் பேதுருவுக்கு அப்போஸ்தலர் 12:4-11.
உதவி செய்ததனால் காவற்காரர்கள் அவர்களை நிறுத்த முடியவில்லை. இப்பொழுது அவர்கள் ஓர் இரும்புக் கதவண்டை வந்தார்கள், ஓர் அசாதாரண காரியம் நடந்தது. அந்தக் கதவு தானாய்த் திறவுண்டது! பேதுருவும் அந்தத் தூதனும் வெளியே சென்றார்கள். அந்தத் தூதன் பேதுருவை விடுவித்திருந்தான்.—தேவதூதர்கள் நமக்குக்கூட உதவி செய்வார்களா? — ஆம், செய்வார்கள். இது, அவர்கள் நமக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட ஒருபோதும் விடமாட்டார்கள் என்று அர்த்தங்கொள்ளுகிறதா? — நீ வெளியே தெருவில் ஒரு காருக்கு முன்னால் ஓடுவாயானால், ஒரு தூதன் உன்னைப் பாதுகாப்பானா? — இல்லை. நாம் முட்டாள்தனமாகக் காரியங்களைச் செய்வோமானால் நமக்குத் தீங்கு ஏற்படுவதிலிருந்து தூதர்கள் நம்மைத் தடுத்து வைப்பதில்லை. ஓர் உயர்ந்த கட்டடத்திலிருந்து நீ கீழே குதிப்பாயானால், நீ விழாதபடி தேவதூதர் உன்னைப் பிடித்துக் கொள்வார்களா? — ஒரு காலத்தில் இயேசுவை இப்படிச் செய்ய வைக்கும்படி பிசாசு முயற்சி செய்தான். ஆனால் இயேசு அதைச் செய்ய மறுத்துவிட்டார். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.—லூக்கா 4:9-13.
கடவுள் இந்தத் தூதருக்கு விசேஷித்த வேலையைக் கொடுத்திருக்கிறார். கடவுளை வணங்கும்படி எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுகிற ஒரு தூதனைப் பற்றி பைபிள் பேசுகிறது.—வெளிப்படுத்துதல் 14:6, 7.
தூதர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள்? தாங்கள் சொல்வது எல்லாருக்கும் கேட்கும்படியாக அவர்கள் பரலோகத்திலிருந்து கத்திப் பேசுகிறார்களா? — இல்லை; ஆனால் பூமியிலிருக்கும் மெய்க் கிறிஸ்தவர்கள் மற்றவர்களிடத்தில் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள், அவர்களுடைய வேலையில் தேவதூதர்கள் அவர்களை வழிநடத்துகிறார்கள். கடவுளைப் பற்றி அறிய உண்மையில் விரும்புகிறவர்களுக்குக் கேட்பதற்கான வாய்ப்பு இருக்கும்படி தேவதூதர்கள் நிச்சயப்படுத்திக் கொள்கின்றனர். நாம் இந்த வேலையில் பங்கு கொள்ளலாம், தேவதூதர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.
கடவுளை நேசிக்காத ஆட்கள் நமக்குத் தொந்தரவை உண்டுபண்ணுவார்களானால் எப்படி? பேதுருவுக்குச் செய்ததுபோல், அவர்கள் நம்மை ஜெயிலில் போடுவார்களானால் எப்படி? தேவதூதர்கள்
நம்மை விடுவிப்பார்களா? — அவர்களால் கூடும். ஆனால் அவர்கள் இதை எப்பொழுதும் செய்வதில்லை.ஒரு சமயத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கைதியாக இருந்தபோது, தேவதூதர்கள் அவனை உடனே விடுவித்துவிடவில்லை. கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிக் கேட்கவேண்டிய ஆட்கள் சிறைச்சாலையில் இருந்தனர். செய்தியைக் கேட்க வேண்டிய அதிபதிகளுங்கூட இருந்தனர். பவுல் அவர்களுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படுவான், அவன் அவர்களுக்குப் பிரசங்கிக்கக்கூடும். ஆனால் பவுல் எங்கே இருந்தான் என்பதை தேவதூதர்கள் எப்பொழுதும் அறிந்திருந்தனர், அவனுக்கு உதவி செய்தனர். நாம் உண்மையில் கடவுளைச் சேவிப்போமானால், அவர்கள் நமக்குங்கூட உதவிசெய்வார்கள்.—அப்போஸ்தலர் 27:23-25.
இந்தத் தூதர்கள் செய்யப்போகிற மற்றொரு பெரிய வேலையுங்கூட இருக்கிறது. அதை அவர்கள் சீக்கிரத்தில் செய்யப் போகிறார்கள். பொல்லாத ஜனங்கள் யாவரையும் அழிக்கப் போகிற கடவுளுடைய காலம் வெகு அருகில் இருக்கிறது. உண்மையான கடவுளை வணங்காதவர்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். தேவதூதர்களைத் தாங்கள் பார்க்க முடியாததால் அவர்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறவர்கள் தாங்கள் எவ்வளவு தவறில் இருக்கின்றனர் என்பதைக் காண்பார்கள். ஆனால் காலம் வெகு பிந்திவிட்டிருக்கும். பொல்லாதவர்கள் ஒருவரும் தப்பிக்கொள்ள மாட்டார்கள். தூதர்கள் அவர்கள் எல்லோரையும் கண்டுபிடிப்பார்கள்.—2 தெசலோனிக்கேயர் 1:6-8.
இது நமக்கு எதைக் குறிக்கும்? — தேவதூதர்கள் இருக்கும் அதே பக்கத்தில் நாம் இருக்கிறோம் என்றால், அவர்கள் நமக்குச் சகோதரர்போல் இருப்பார்கள். பயப்படுவதற்கு எதுவும் இராது. அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.
ஆனால் நாம் அந்தப் பக்கத்தில் இருக்கிறோமா? — நாம் யெகோவாவைச் சேவிக்கிறோம் என்றால் அப்படி இருக்கிறோம். நாம் யெகோவாவைச் சேவிக்கிறோம் என்றால், அவரைச் சேவிக்கும்படி மற்றவர்களுக்குங்கூட நாம் சொல்லிவருவோம்.
(மனிதரின் வாழ்க்கையில் தேவதூதர்கள் எப்படிச் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பதைப் பற்றி மேலுமதிகத்தைக் கற்றறிய சங்கீதம் 34:7 [33:8 டூ.வெ.]; மத்தேயு 18:10; அப்போஸ்தலர் 8:26-31 ஆகியவற்றை வாசியுங்கள்.)