Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளை நேசிக்கிறவர்களுடன்நட்பு கொள்ளுங்கள்

கடவுளை நேசிக்கிறவர்களுடன்நட்பு கொள்ளுங்கள்

அதிகாரம் 29

கடவுளை நேசிக்கிறவர்களுடன்நட்பு கொள்ளுங்கள்

உன்னுடைய நண்பர்களில் சிலர் யாவர், எனக்குச் சொல். அவர்களுடைய பெயர்கள் என்ன? —

நண்பர்கள் இருப்பது நல்லது. அவர்களோடு உன் நேரத்தைச் செலவிட நீ விரும்பும் ஆட்களாக அவர்கள் இருக்கின்றனர். நீ அவர்களோடு பேசவும் காரியங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்யவும் விரும்புகிறாய்.

மேலும் சரியான வகையான நண்பர்களைக் கொண்டிருப்பதும் முக்கியமானது. அவர்கள் சரியான வகையானவர்களா இல்லையா என்பதை நாம் எப்படிச் சொல்லக்கூடும்? —

நம்முடைய வாழ்க்கையில் மிக அதிக முக்கியமான ஆள் யார் என்று நீ சொல்வாய்? — யெகோவா தேவனே, அல்லவா? நம்முடைய உயிரும், நம்முடைய சுவாசமும், எல்லா நல்ல காரியங்களும் அவரிடத்திலிருந்து வருகின்றன. கடவுளுடன் கொண்டுள்ள நம்முடைய நட்பைக் கெடுக்கும் எதையும் செய்ய நாம் ஒருபோதும் விரும்புகிறதில்லை, அல்லவா? — ஆனால் நாம் யாரை நண்பர்களாகத் தெரிந்துகொள்ளுகிறோம் என்பதானது அந்த நட்பைக் கெடுக்கக்கூடும் என்று உனக்குத் தெரியுமா? — அது சரி. ஆகவே நாம் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

இதை எப்படிச் செய்வதென்று பெரிய போதகர் நமக்குக் காட்டினார். அவர் சொன்னதாவது: ‘நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறதைச் செய்வீர்களானால் நீங்கள் எனக்குச் சிநேதிகர்.’ ஏன் அப்படி? — ஏனென்றால் இயேசு ஜனங்களுக்குச் சொன்ன எல்லாம் கடவுளிடத்திலிருந்து வந்தது. ஆகவே செய்ய வேண்டுமென்று கடவுள் சொன்னதைச் செய்தவர்களே தம்முடைய நண்பர் என்று இயேசு சொல்லிக் கொண்டிருந்தார்.—யோவான் 15:14.

கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிராத ஆட்களிடத்தில் இயேசு தயவாக இருக்கவில்லை என்று இது அர்த்தங்கொள்ளுகிறதில்லை. அவர்களிடத்தில் அவர் தயவாக இருந்தார். அவர் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களோடு சாப்பிடவுஞ்செய்வார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட சில ஆட்கள், இயேசு, ‘பாவிகளின் நண்பர்’ என்று சொன்னார்கள். ஆனால் இது உண்மைதானா? — —மத்தேயு 11:19.

இல்லை, உண்மையல்ல. அவர்கள் வாழ்ந்த விதத்தைத் தாம் விரும்பினதன் காரணமாக இயேசு அவர்கள் வீடுகளுக்குப் போகவில்லை. கடவுளைப் பற்றி அவர்களிடத்தில் தாம் பேசக்கூடும்படியே அவர்களைப் போய்ச் சந்தித்தார். அவர்கள் தங்கள் கெட்டவழிகளை விட்டு மாறி கடவுளைச் சேவிக்கும்படி அவர்களுக்கு உதவி செய்ய அவர் பிரயாசப்பட்டார்.

இது ஒரு நாள் எரிகோ பட்டணத்தில் நடந்தது. எருசலேமுக்குப் போகும் தம்முடைய வழியில் இயேசு எரிகோவை வெறுமென கடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு ஜனக்கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் சகேயு என்ற பெயரையுடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் இயேசுவைப் பார்க்க விரும்பினான். ஆனால் சகேயு மிகவும் குள்ளனாக இருந்தான், கூட்டத்தின் காரணமாக அவனால் பார்க்க முடியவில்லை. ஆகவே, இயேசு கடந்து செல்கையில், அவரை நன்றாகப் பார்க்கும்படி அவன் அந்தப் பாதையில் அவர்களுக்கு முன்னால் ஓடி ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான்.

இயேசு அந்த மரத்தண்டையில் வந்தபோது அவர் அண்ணாந்து பார்த்து: ‘சீக்கிரமாய் இறங்கி வா. இன்று நான் உன் வீட்டுக்கு வருவேன்,’ என்று சொன்னார். ஆனால் சகேயு கெட்ட காரியங்களைச் செய்திருந்த ஒரு செல்வந்தனாக இருந்தான். இப்படிப்பட்ட ஒரு மனிதனின் வீட்டுக்குப் போக இயேசு ஏன் விரும்பினார்? —

அந்த மனிதன் வாழ்ந்த விதத்தை இயேசு விரும்பினதன் காரணமாக அல்ல. கடவுளைப் பற்றிச் சகேயுவினிடத்தில் பேசும்படியே அவர் சென்றார். தம்மைப் பார்க்க அந்த மனிதன் எவ்வளவு பெரும் முயற்சி செய்தான் என்பதை அவர் கண்டார். ஆகவே சகேயு அநேகமாய்ச் செவி கொடுப்பான் என்று அவருக்குத் தெரியும். நாம் என்னவிதமாய் வாழவேண்டுமென்று கடவுள் சொல்லுகிறார் என்பதைப்பற்றி அவனிடத்தில் பேசுவதற்கு இது நல்ல சமயமாக இருக்கும்.

இதன் பலன் என்னவாக இருந்தது. சகேயு தன் கெட்ட வழிகளிலிருந்து மாறினான். எடுத்துக் கொள்வதற்குத் தனக்கு உரிமையில்லாதிருந்த பணத்தை அவன் திரும்பக் கொடுத்துவிட்டு, இயேசுவைப் பின்பற்றுபவனாக ஆனான். அப்பொழுது தானே இயேசுவும் சகேயுவும் நண்பரானார்கள்.—லூக்கா 19:1-10.

ஆகவே, பெரிய போதகரிடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வோமாகில், நம்முடைய நண்பரல்லாத ஆட்களை எப்பொழுதாவது போய் பார்ப்போமா? — ஆம், ஆனால் அவர்கள் வாழும் விதத்தை நாம் விரும்புவதன் காரணமாக நாம் அவர்களுடைய வீட்டுக்குப் போக மாட்டோம். அவர்களோடு சேர்ந்து தவறான காரியங்களை நாம் செய்யமாட்டோம். கடவுளைப் பற்றி அவர்களிடத்தில் நாம் பேசும்படியாகவே அவர்களைப் போய்ப் பார்ப்போம்.

ஆனால் விசேஷமாய் நம்முடைய நேரத்தை எவர்களோடு செலவிட விரும்புகிறோமோ அவர்களே நம்முடைய நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் சரியான வகையான நண்பர்களாக இருப்பதற்கு அவர்கள் கடவுள் விரும்பும் வகையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் பார்த்தோம். ஆனால் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நாம் எப்படிச் சொல்லக்கூடும்? —

ஒரு நல்ல வழியானது: “நீங்கள் யெகோவாவை நேசிக்கிறீர்களா? என்று அவர்களைக் கேட்பதாகும். யெகோவா யார் என்றும்கூட அவர்களில் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அவரைப்பறிக் கற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவார்களேயானால், நாம் அவர்களுக்கு உதவி செய்யலாம். பின்பு நாம் யெகோவாவை நேசிப்பதுபோல் அவர்களும் அவரை நேசிக்கிறவர்களாகும் காலம் வருகையில், அப்பொழுது நாம் நெருங்கிய நண்பர்கள் ஆகலாம்.

ஓர் ஆள் நமக்கு நல்ல நண்பனாகக் கூடுமா என்பதைக் கண்டுபிடிக்க வேறொரு வழியுங்கூட இருக்கிறது. அவன் செய்கிற காரியங்களைக் கவனித்துப் பார். அவன் மற்றவர்களுக்கு அன்பற்றக் காரியங்களைச் செய்துவிட்டு, பின்பு அதைப் பற்றிச் சிரித்துக் கொள்ளுகிறானா? அது சரியல்ல, அல்லவா? — அவன் எப்பொழுதும் தொந்தரவுக்குள் மாட்டிக்கொள்ளுகிறானா? அவனோடுகூட நாமும் தொந்தரவுக்குள் மாட்டிக்கொள்ள நாம் விரும்பமாட்டோம், அல்லவா? — அல்லது அவன் வேண்டுமென்றே கெட்ட காரியங்களைச் செய்துவிட்டு, பின்பு தான் அகப்பட்டுக் கொள்ளாததால் தான் வெகு கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொள்ளுகிறானா? அவன் அகப்பட்டுக் கொள்ளாவிட்டாலுங்கூட, அவன் செய்ததைக் கடவுள் பார்த்தார், அல்லவா? — இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிற ஆட்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்களென்று நீ நினைக்கிறாயா? —

உன்னுடைய பைபிளை எடுத்து, நம்முடைய கூட்டாளிகள் எப்படி நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிறார்கள் என்பதைப் பற்றி அது என்ன சொல்லுகிறது என்பதை நாம் பார்க்கலாம். இது ஒன்று கொரிந்தியர் 15-ம் அதிகாரம், 33-ம் வசனத்தில் இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொண்டாயா? —

அது வாசிப்பதாவது: “மோசம் போகாதிருங்கள். துர்ச் சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” இது நாம் கெட்ட ஆட்களோடு போவோமானால் நாம் கெட்டவர்களாகிவிடப் போகிறோம் என்று அர்த்தங்கொள்ளுகிறது. மேலும் நல்ல கூட்டாளிகள் நல்ல பழக்கங்களை உண்டாக்கிக் கொள்ள நமக்கு உதவி செய்வார்கள் என்பதும் உண்மை.

நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஆள் யெகோவா என்பதை நாம் ஒருபோதும் மறவாமல் இருப்போமாக. அவரிடம் கொண்டுள்ள நம்முடைய நட்பை நாம் கெடுத்துக்கொள்ள விரும்புகிறதில்லை, அல்லவா? — ஆகவே கடவுளை நேசிக்கிறவர்களுடன் மாத்திரமே நட்பு கொள்ள நாம் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

(சரியான வகையான கூட்டாளிகளைப் பற்றிய முக்கியத்துவம் 1 யோவான் 2:15; 2 நாளாகமம் 19:2 [2 பராலிபோமெனன் 19:2, டூ.வெ.]; சங்கீதம் 119:115 [118:115, டூ.வெ.]; 2 தீமோத்தேயு 2:22 ஆகியவற்றிலுங்கூட தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வேத வசனங்களை ஒன்றாகச் சேர்ந்து வாசியுங்கள்.)