Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கீழ்ப்படிதல் உன்னைப் பாதுகாக்கும்

கீழ்ப்படிதல் உன்னைப் பாதுகாக்கும்

அதிகாரம் 7

கீழ்ப்படிதல் உன்னைப் பாதுகாக்கும்

னக்கு விரும்பினதையெல்லாம் நீ செய்யக்கூடுமானால் அது உனக்குப் பிரியமாயிருக்குமா? என்ன செய்ய வேண்டுமென்று ஒருவருமே எனக்குச் சொல்லாமல் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நீ நினைத்த நேரங்கள் இருக்கின்றனவா? நீ உண்மையுடன் எனக்கு அதைச் சொல்.

ஆனால் எது உனக்கு மிகவும் நல்லது? உனக்கு விருப்பமான எதையும் செய்வது உண்மையில் விவேகமானதா? அல்லது உன் தகப்பனுக்கும் தாய்க்கும் கீழ்ப்படிகையில் காரியங்கள் நல்ல விதமாக முடிவடைகின்றனவா?நீ உன் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று கடவுள் சொல்லுகிறார். ஆகவே அதற்கு ஒரு நல்ல காரணம் கட்டாயமாகவே இருக்க வேண்டும். இதை நாம் விளங்கிக்கொள்ளக் கூடுமாவென்று பார்க்கலாம்.

உன் வயதென்ன?உன் தகப்பனுடைய வயது என்னவென்று உனக்குத் தெரியுமா?உன் தாயின் வயதென்ன?நீ வாழ்ந்து வந்திருப்பதைப் பார்க்கிலும் அதிகக் காலம் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஒரு ஆள் எவ்வளவு அதிகக் காலம் வாழ்ந்து வருகிறானோ அவ்வளவு அதிகக் காலம் அவனுக்குக் காரியங்களைக் கற்றறிவதற்கும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அவன் அதிகக் காரியங்களைக் கேட்கிறான். அதிகக் காரியங்களைப் பார்க்கிறான். அதிகக் காரியங்களைச் செய்துவருகிறான். ஆகவே சிறுபிள்ளைகள் பெரியவர்களிடத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

உன்னையோ அல்லது என்னையோ அல்லது வேறு எந்த ஆளையோ பார்க்கிலும் அதிக காலம் வாழ்ந்திருக்கிறவர் யார்?யெகோவா தேவனே அதிக காலம் வாழ்ந்திருக்கிறார். அவர் உன்னைவிட அதிகம் அறிந்திருக்கிறார், என்னைவிடவும் அதிகம் அறிந்திருக்கிறார். நமக்கு எது நல்லது என்று அவர் நமக்குச் சொல்கையில் அது சரி என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர் சொல்வதை நாம் செய்வோமாகில், அது நம்மைப் பாதுகாக்கும். நாம் எப்பொழுதும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

ஆகவே நானுங்கூட கீழ்ப்படிதலுள்ளவனாய் இருக்க வேண்டும் என்பதை நீ காண்கிறாய். நான் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது அவசியம். இது என்னுடைய சொந்த நன்மைக்கானதேயாகும். நீ கடவுளுக்குக் கீழ்ப்படிகையில் அது உனக்கு நன்மையைக் கொண்டுவருகிறது.

நாம் நம்முடைய பைபிளை எடுத்து, பிள்ளைகள் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் அவர்களுக்குச் சொல்லுகிறார் என்பதைப் பார்ப்போம். எபேசியர் புத்தகத்தை நீ கண்டுபிடிக்க முடிகிறதா?—எபேசியர் ஆறாம் அதிகாரம், முதலாம், இரண்டாம், மூன்றாம் வசனங்களை நாம் வாசிக்கப் போகிறோம். அது சொல்வதாவது: “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.”

இது பைபிளில் இருக்கிறது. ஆகவே யெகோவா தேவன்தாமே, நீ உன் தகப்பனுக்கும் தாய்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று உனக்குச் சொல்லுகிறார்.

உன் தகப்பனையும் தாயையும் “கனம் பண்ணு” என்பதன் அர்த்தம் என்ன?இது நீ அவர்களுக்கு மரியாதையைக் காட்ட வேண்டுமென்று அர்த்தமாகிறது. நீ அவர்கள் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு அதை முணுமுணுக்காமல் செய்ய வேண்டும். நீ கீழ்ப்படிவாயானால் “உனக்கு நன்மை உண்டாயிரு”க்கும் என்று கடவுள் வாக்கு கொடுக்கிறார்.

தாங்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருந்ததன் காரணமாகத் தங்கள் உயிர் காப்பாற்றப்பட்ட சில ஆட்களைப் பற்றிய ஒரு கதை எனக்குத் தெரியும். உனக்கு அதைக் கேட்கப் பிரியமா?

வெகு காலத்திற்கு முன்பாக அந்தப் பெரிய நகரமாகிய எருசலேமில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த நகரத்திலிருந்த ஜனங்களில் பெரும்பான்மையோர் கெட்டவர்களாக இருந்தனர். அவர்கள் கடவுளுக்குச் செவி கொடுக்கவில்லை. அவர்களுக்குக் கற்பிக்கும்படி, யெகோவா தம்முடைய சொந்தக் குமாரனை அனுப்பினார். அப்பொழுதும் அவர்கள் செவிகொடுக்கவில்லை. கடவுள் அவர்களுக்கு என்ன செய்வார்?

அவர்களுடைய நகரம் அழிக்கப்படும்படி கடவுள் செய்யப் போகிறார் என்று பெரிய போதகர் அவர்களை எச்சரித்தார். போர்ச் சேவகரின் சேனைகள் அந்த நகரத்தைச் சுற்றி முற்றுகையிட்டு அதை அழித்துப் போடுவார்கள் என்று அவர் சொன்னார். மேலும் அவர், ஜனங்கள் சரியானதை நேசிப்பார்களேயாகில் அவர்கள் எப்படித் தப்பிக்கொள்ளக்கூடும் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார். அவர் சொன்னது இதுவே:

‘எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதுவே எருசலேமை விட்டு வெளியேறி மலைகளுக்கு ஓடிப்போவதற்கான காலம்.’—லூக்கா 21:20-22.

இயேசு நடக்கும் என்று சொன்னபடியே இது நடந்தது. ரோம சேனைகள் எருசலேமைத் தாக்க வந்தன. அவை அதைச் சுற்றிலும் முற்றுகை போட்டன. பின்பு ஏதோவொரு காரணத்தினிமித்தமாக விலகிப்போய்விட்டன. அபாயம் கடந்த போய்விட்டது என்பதாக ஜனங்களில் பெரும்பான்மையோர் நினைத்தனர். அவர்கள் நகரத்திலேயே தங்கியிருந்தனர். ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு சொல்லியிருந்தார்?

நீ எருசலேமில் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பாயானால் என்ன செய்திருப்பாய்?இயேசுவை உண்மையில் நம்பினவர்கள் தங்கள் வீடுகளை விட்டு எருசலேமிலிருந்து வெகு தூரம் மலைகளுக்குள் ஓடிப் போனார்கள். பெரியவர்களாக வளர்ந்திருந்தவர்கள் மட்டுமல்ல, சிறு பிள்ளைகளுங்கூட அவர்களோடு சென்றனர்.

ஆனால் அவர்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருந்ததனால் உண்மையில் பாதுகாக்கப்பட்டார்களா?ஒரு முழு வருடம் ஆயிற்று; எருசலேமுக்கு ஒன்றும் சம்பவிக்கவில்லை. மூன்று வருடங்கள் ஒன்றும் சம்பவிக்கவில்லை. ஆனால் அப்பொழுது நான்காம் வருடத்தில் ரோம சேனைகள் திரும்பி வந்தன. எருசலேமில் தங்கியிருந்தவர்களுக்கு இப்பொழுது தப்பிக்கொள்ள காலம் வெகு பிந்திவிட்டது. இந்தச் சமயம் அந்தச் சேனைகள் நகரத்தை அழித்துப் போட்டன. அதற்கு உள்ளே இருந்த பெரும்பான்மையான ஜனங்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்திருந்தவர்களுக்கு என்ன சம்பவித்தது?அவர்கள் எருசலேமுக்கு வெகு தூரத்தில் இருந்தார்கள். ஆகவே அவர்களுக்குத் தீங்கு ஏற்படவில்லை. கீழ்ப்படிதல் அவர்களைப் பாதுகாத்தது.

நீ கீழ்ப்படிதலுள்ளவனாய் இருப்பாயானால் அது உன்னைப் பாதுகாக்குமா?ஆம், எப்படி என்று நான் உனக்குக் காட்டுகிறேன். தெருவில் ஒருபோதும் விளையாடாதே என்று நான் உனக்குச் சொல்லக்கூடும். நான் ஏன் அதைச் சொல்லுகிறேன்?ஏனென்றால் நீ ஒருவேளை ஒரு மோட்டார் காரால் இடிக்கப்பட்டு கொல்லப்படுவாய். ஆனால் ஒருநாள் நீ ஒருவேளை நினைக்கலாம்: “இப்போது ஒரு காரும் தெருவில் இல்லை. எனக்கு ஒன்றும் நடக்காது. மற்றப் பிள்ளைகள் தெருவில் விளையாடுகிறார்கள், அவர்களுக்கு எந்தத் தீமையும் நேரிடுவதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை.”

இந்த விதமாகவே எருசலேமிலிருந்த பெரும்பான்மையான ஜனங்கள் நினைத்தனர். ரோம சேனைகள் அங்கிருந்து போய்விட்ட பின், அபாயம் இல்லாததுபோல் தோன்றினது. மற்றவர்கள் நகரத்திலேயே தங்கியிருந்தனர். ஆகவே அவர்களுங்கூட அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தனர், ஆனால் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. இதன் விளைவாக, அவர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். தெருவில் விளையாடுகிற பிள்ளைகளுங்கூட தங்கள் உயிரை இழக்கக்கூடும். கீழ்ப்படிவது எவ்வளவு மேலானதாயிருக்கிறது!

ஏதோ சில சமயங்களில் மாத்திரமே கீழ்ப்படிதல் போதுமானதல்ல. ஆனால் நீ எப்பொழுதும் கீழ்ப்படிவாயானால், அது உண்மையில் உன்னைப் பாதுகாக்கும்.

“உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்,” என்று உனக்குச் சொல்பவர் யார்?கடவுள்தாமே சொல்கிறார். அவர் உன்னை உண்மையில் நேசிப்பதன் காரணமாகவே இதைச் சொல்லுகிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்.

(கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தைக் காட்டும் சிறந்த வேத வசனங்கள் மேலும் சில: பிரசங்கி 12:13; கொலோசெயர் 3:20; நீதிமொழிகள் 23:22.)