திருடனாய்விட்ட அப்போஸ்தலன்
அதிகாரம் 37
திருடனாய்விட்ட அப்போஸ்தலன்
யாராவது எப்பொழுதாவது உன்னிடத்திலிருந்து எதையாகிலும் திருடியிருக்கிறார்களா? — நீ அதைப் பற்றி எவ்விதம் உணர்ந்தாய்? — எவன் அதைத் திருடினானோ அவன் ஒரு திருடன். திருடனை ஒருவரும் விரும்புவதில்லை.
இயேசுவின் அப்போஸ்தலரில் ஒருவன் ஒரு திருடனானான் என்பது உனக்குத் தெரியுமா? — அவனுடைய பெயர் யூதாஸ் காரியோத்து.
செய்ய வேண்டிய சரியான காரியங்களை யூதாஸ் தெரிந்திருந்தான். அவன் சிறிய பையனாக இருக்கும் பொழுதேயுங்கூட கடவுளுடைய சட்டத்தை அவன் கேட்டிருந்தான். கடவுள் ஒருமுறை பரலோகத்திலிருந்து உரத்தக் குரலில் பேசியுங்கூட: ‘நீ திருடக் கூடாது,’ என்று தம்முடைய ஜனத்திற்குச் சொன்னார் என்பதை அவன் அறிந்திருந்தான். கடவுளுடைய சட்டம் சரியானதென்று யூதாஸ் தெரிந்திருந்தான்.—யாத்திராகமம் 20:15.
அவன் பெரியவனாக வளர்ந்தபோது பெரிய போதகரைச் சந்தித்தான். இயேசு சொன்ன காரியங்களை யூதாஸ் விரும்பினான். யூதாஸ் இயேசுவின் ஒரு சீஷனானான். பின்னால் இயேசு, யூதாஸைத் தம்முடைய பன்னிரண்டு அப்போஸ்தலரில் ஒருவனாக இருக்கும்படியுங்கூட தெரிந்தெடுத்தார்.
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிட்டனர். அவர்கள் ஒன்றாகப் பிரயாணஞ்சென்றனர். அவர்கள் ஒன்றாகச் சாப்பிட்டனர். அந்தத் தொகுதிக்குரிய பணமும் ஒன்றாக ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது. இந்தப் பெட்டியைக் கவனித்துக்கொள்ள இயேசு அதை யூதாஸினிடம் கொடுத்தார்.
நிச்சயமாகவே, அந்தப் பணம் யூதாஸுக்கு உரியதாக இருக்கவில்லை. அதை எப்படி உபயோகிப்பதென்பதை அவனுக்குச் சொல்ல வேண்டியவர் இயேசுவே. ஆனால் சிறிது காலத்திற்குப் பின் யூதாஸ் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியுமா? அவன் அந்தப் பெட்டியிலிருந்து பணம் எடுக்கக் கூடாதபோது அதிலிருந்து எடுக்கத் தொடங்கினான். மற்றவர்கள் பார்க்காதபோது
அவன் அதை எடுப்பான். அவன் ஒரு திருடனானான். இப்பொழுது அவன் பணத்தைப் பற்றியே எல்லா சமயத்திலும் நினைத்துக் கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டான். மேலுமதிகமான பணத்தை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயன்றான்.ஒரு நாள் ஒரு பெண் மிகச் சிறந்த தைலம் கொஞ்சம் எடுத்து, இயேசுவை ஆரோக்கியமான உணர்ச்சியடைய செய்யும்படி அவருடைய பாதத்தின்மேல் அதை உபயோகித்தாள். ஆனால் யூதாஸ் குறை கூறினான். அந்தத் தைலம் விற்கப்பட்டிருக்க வேண்டும், அப்பொழுது ஏழைகளுக்குக் கொடுக்கத் தங்களுக்கு அதிகப் பணம் இருக்கும் என்று அவன் சொன்னான். உண்மையில், தான் திருடக் கூடும்படியாகப் பெட்டியில் அதிகப் பணத்தைச் சேர்க்கவே அவன் விரும்பினான். இப்படிப்பட்ட ஓர் ஆளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? — —யோவான் 12:1-6.
அப்பொழுதே உடனடியாக இயேசு யூதாஸினிடம் அவன் திருடனென்று சொல்லிவிடவில்லை. ஆனால் அவ்வளவு அன்பாக இருந்திருந்த அந்தப் பெண்ணுக்குத் தொந்தரவை உண்டாக்க வேண்டாமென்று அவர் நிச்சயமாக அவனிடம் சொன்னார். யூதாஸ் அதை விரும்பவில்லை. அவன் என்ன செய்வான்?
அவன் வருத்தப்பட்டிருக்க வேண்டும். தான் திருடி வந்திருந்தானென்று அவன் இயேசுவினிடம் சொல்லியிருக்க வேண்டும். மேலும் தான் திருடியிருந்த பணத்தை அவன் திரும்பப் போட்டுவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, அவன் பயங்கரமான ஒன்றைச் செய்தான்.
இயேசுவின் சத்துருக்களாக இருந்த தலைமை ஆசாரியர்களிடம் அவன் சென்றான். அவர்கள் இயேசுவைக் கைது செய்ய விரும்பினார்கள். ஆனால் ஜனங்கள் தங்களைக் காணாதபடி இரவில் அதைச் செய்ய அவர்கள் விரும்பினார்கள். யூதாஸ் அவர்களிடம்: ‘நீங்கள் எனக்குப் பணம் கொடுப்பீர்களானால், நீங்கள் இயேசுவை எப்படிப் பிடிக்கக் கூடுமென்பதை நான் உங்களுக்குச் சொல்வேன். நீங்கள் எனக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்று கேட்டான். அந்த ஆசாரியர்கள்: ‘நாங்கள் உனக்கு முப்பது மத்தேயு 26:14-16.
வெள்ளிக் காசுகளைக் கொடுக்கிறோம்,’ என்றார்கள். அது ஏராளமான பணம்.—பொல்லாத யூதாஸ் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டான். இது பெரிய போதகரை அவன் அந்த மனிதருக்கு விற்றுப் போடுவதைப் போலவே இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பயங்கர காரியத்தை எவராவது செய்வதை நீ எண்ணிப் பார்க்க முடிகிறதா? — ஒரு ஆள் திருடனாகையில் இந்த வகையான காரியமே நடக்கிறது. அவன் கடவுளை நேசிப்பதைப் பார்க்கிலும் பணத்தையே அதிகமாக நேசிக்கிறான்.
இந்தக் காரியம் நமக்கு விளங்குகிறதென்பதை நாம் இப்பொழுது நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். திருடுவதென்றால் என்னவென்பதை விளங்கிக்கொள்ள, எதையாவது சொந்தமாகக் கொண்டிருப்பதென்றால் என்னவென்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஆட்கள் பொருட்களைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள். எப்படியென்றால் அவர்கள் அவற்றிற்காக வேலை செய்திருக்கின்றனர். அல்லது அவற்றை அவர்கள் பணத்தைக்கொண்டு வாங்கியிருக்கின்றனர். அல்லது ஒருவேளை அவை அவர்களுக்குப் பரிசுகளாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
உன்னுடைய தகப்பன் வேலை செய்கையில் அவர் அதற்காகப் பணம் சம்பளமாய்க் கொடுக்கப்படுகிறார். அவருக்கு அந்தப் பணம் சொந்தமானதா? — ஆம், ஏனென்றால் அவர் அதற்காக வேலை செய்தார். அது உன்னுடையதல்ல; அது அவருடையதே.
அந்தப் பணத்தைக்கொண்டு அவர் உன்னுடைய வீட்டிலுள்ள பொருட்களை வாங்குகிறார். அவை அவருக்குச் சொந்தமானவை. அவை அவருக்குச் சொந்தமாக இருப்பதால் அவற்றை யார் உபயோகிக்கலாம் என்று சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. நீ அவற்றைக்கொண்டு விளையாடலாமா விளையாடக்கூடாதா என்பதை அவர் உனக்குச் சொல்லுகிறார். மேலும் உன் தாய் உனக்கு அதைச் சொல்லும்படியாகவுங்கூட அவர் அனுமதிக்கலாம்.
சில சமயங்களில் மற்றப் பிள்ளைகளுடைய வீட்டில் அவர்களுடன் விளையாட நீ போகிறாய், அல்லவா? — அவர்களுடைய வீட்டிலிருக்கும் பொருட்கள் அவர்களுடைய தகப்பனுக்குச் சொந்தமானவை. அவர்களுடைய வீட்டிலிருந்து ஏதாவதொன்றை எடுத்து உன்னுடைய வீட்டுக்கு நீ கொண்டுவருவது சரியாக இருக்குமா? — அவர்களுடைய தகப்பனோ தாயோ நீ அதைக் கொண்டுபோகலாம் என்று உனக்குச் சொன்னால்
தவிர அப்படிச் செய்வது சரியாக இராது. அவர்களைக் கேட்காமல் ஏதாவதொன்றை நீ வீட்டுக்குக் கொண்டுவருவாயானால், அது திருடுவதாக இருக்கும்.ஒரு ஆள் ஏன் திருடுகிறான்? — அவன், மற்றொரு ஆளுக்குச் சொந்தமான ஏதோ ஒன்றைப் பார்க்கலாம். ஒருவேளை அது ஒரு சைக்கிளாக இருக்கலாம். அவன் அதை எவ்வளவு அதிகமாய்ப் பார்க்கிறானோ அவ்வளவு அதிகமாய் அதைப்பற்றி யோசிக்கிறான், அவ்வளவு அதிகமாய் அது அவனுக்கு ஆசையாக இருக்கிறது. அவன் அன்புள்ள ஒரு ஆளாக இராவிட்டால், அந்த மற்றவன் என்ன விதமாய் உணருவான் என்பதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. ஆகவே, அவன் அந்த மற்றவனை அடித்து அந்தச் சைக்கிளை அவனிடத்திலிருந்து பிடுங்கிக்கொள்ள முயலக்கூடும். அல்லது அந்த மற்றவன் பார்க்காமல் இருக்கும் வரை காத்திருக்கக்கூடும். அவன் பார்க்காதபோது அந்தச் சைக்கிளை அவன் எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். அவன் உண்மையில் என்ன செய்கிறான்? — அவன் திருடுகிறான்.
அந்தச் சைக்கிளை அவன் திருடுவதை அந்த மற்றவன் ஒருவேளை பார்க்காமலிருக்கலாம். ஆனால் அவன் அதைச் செய்வதை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். யார் என்று உனக்குத் தெரியுமா? — அவன் அதைச் செய்வதை யெகோவா தேவன் பார்க்கிறார். அவன் ஒரு திருடன் என்பதைக் கடவுள் பார்க்கிறார்.
அந்த மற்றவனுக்குப் பல பொருட்களோ அல்லது ஒருசில பொருட்கள்தானோ இருப்பது எவ்வித வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. சில ஆட்கள் ஒரு கடைக்குப் போய் அங்கே ஏராளமான பொருட்களைப் பார்க்கின்றனர். தங்களுக்கு மிகவும் வேண்டிய ஏதோ ஒன்றை அவர்கள் காண்கின்றனர். இந்த ஒரே ஒன்றைக் காணாமல் ஒருவரும் தேடப்போவதில்லை என்று அவர்கள் ஒருவேளை தங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளக்கூடும். ஆகவே அவர்கள் அதை எடுத்துக் கொள்கின்றனர், ஆனால் அதற்காகக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுப்பதில்லை. இது சரியா? — இல்லை, அது திருடுவதாகும்.
ஆட்கள் இதைச் செய்கையில், அவர்கள் யூதாஸைப்போல் இருக்கின்றனர். எப்படியென்றால் யூதாஸ் ஒரு திருடனாயிருந்தான்! நாம் ஒருபோதும் அவனைப்போல் இராதபடி நிச்சயமாயிருப்போமாக.
(திருடுவது தவறு. பைபிள் இதை மாற்கு 10:17-19; ரோமர் 13:9; எபேசியர் 4:28 ஆகியவற்றில் தெளிவாக்குகிறது.)