Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நான் உம்மை நேசிக்கிறேன்,’ என்று கடவுளுக்குச் சொல்வது எப்படி

‘நான் உம்மை நேசிக்கிறேன்,’ என்று கடவுளுக்குச் சொல்வது எப்படி

அதிகாரம் 45

‘நான் உம்மை நேசிக்கிறேன்,’ என்று கடவுளுக்குச் சொல்வது எப்படி

நீ பிறப்பதற்கு முன்பாகவே யாரோ உன்னை நேசித்தார்கள் என்பது உனக்குத் தெரியுமா? — நீ வரப்போகிறாய் என்று எங்களுக்குத் தெரியுமே. நிச்சயமாகவே, நீ பார்ப்பதற்கு எப்படி இருப்பாய் என்று எங்களுக்கு அப்பொழுது தெரியாது. நீ இன்னும் உன் அம்மாவுக்குள் வளர்ந்து கொண்டிருந்தாய். ஆனால் ஏற்கெனவே உன் அப்பாவும் அம்மாவும் தாங்கள் உன்னை நேசித்தார்கள் என்று காட்ட பல காரியங்களைச் செய்து கொண்டிருந்தனர்.

இதன் காரணமாகவே நீ பிறந்தவுடனே போட்டுக்கொள்வதற்கு உனக்கு உடைகள் இருந்தன. நீ தூங்குவதற்கு உனக்கு ஒரு சிறிய தொட்டில் இருந்தது.

மேலும், ஆ, கடைசியாக உன்னைப் பார்த்தபோது உன் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்! அப்பொழுது அவர்கள் உன்னை நேசித்தார்கள். இப்பொழுதும் உன்னை நேசிக்கிறார்கள். மிக, மிக அதிகமாய் நேசிக்கிறார்கள். நீயுங்கூட உன் அப்பாவையும் அம்மாவையும் நேசிக்கிறாய் அல்லவா? —

இப்பொழுது நான், நீ பிறப்பதற்கு முன்பாகவே உன்னை நேசித்த இன்னொருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். யார் என்று உனக்குத் தெரியுமா? — யெகோவா தேவனே. உண்மையில் நாம் பிறப்பதற்கு முன்பாகவே கடவுள் நம்மெல்லோரையும் நேசித்தார். அவர் நேசித்தார் என்பது நமக்கு எப்படித் தெரியுமென்று உனக்குத் தெரியுமா? —

எப்படியென்றால், வெகுகாலத்திற்கு முன்பாகக் கடவுள், தம்முடைய குமாரனை நமக்காக தம்முடைய உயிரைக் கொடுக்கும்படி, அவரை அனுப்பினார். மேலும், நாம் உண்மையில் விரும்புவோமானால், என்றும் சந்தோஷமாக வாழக்கூடிய ஓர் அழகிய தோட்டமாகக் கடவுள் இந்தப் பூமியைச் செய்யப் போகிறார்.

இது கடவுளிடமாக என்னவிதமாய் உணரும்படி உன்னைச் செய்விக்கிறது? — இது அவரை மிக, மிக அதிகமாய் நேசிக்கும்படி என்னைச் செய்விக்கிறது. என் வாழ்நாளெல்லாம் அவரைச் சேவிக்கும்படி நான் விரும்புகிறேன். நீயும் அப்படியே விரும்புகிறாயா? —

ஆனால் இதை நாம் கடவுளிடத்தில் எப்படிச் சொல்வது? — இதைக் கடவுளிடத்தில் சொல்வது எப்படியென்று இயேசு அறிந்திருந்தார். அவர் செய்ததை நான் உனக்குச் சொல்லுகையில் கவனித்துக் கேள்.

ஒருநாள் அவர் யோர்தான் நதிக்குச் சென்றார். முழுக்காட்டுபவனாகிய யோவான் அங்கே இருந்தான். இயேசுவும் யோவானும் தண்ணீருக்குள் நடந்து சென்றனர். தண்ணீர் அவர்கள் இடுப்பு வரையாகவும் இருந்தது. அவர்கள் என்ன செய்யப் போகிறவர்களாக இருந்தார்கள் என்பதைப் பற்றி உனக்கு ஏதாவது அபிப்பிராயம் இருக்கிறதா? —

அந்த மனிதன் தன் புயங்களை இயேசுவின் தோள்களுக்குப் பின்னால் சுற்றிப் பிடித்தான். வெறும் ஓர் வினாடிக்கு அவன் இயேசுவை முழுவதுமாகத் தண்ணீருக்குள் மூழ்கவைத்து, பின்பு மறுபடியுமாக அவரை வெளியே தூக்கிவிட்டான். அவன் அவரை முழுக்காட்டினான். அவன் இதை ஏன் செய்தான்? இதைச் செய்யும்படி இயேசு அந்த மனிதனைக் கேட்டார். ஆனால் ஏன்? உனக்குத் தெரியுமா? —

தன் வாழ்நாளெல்லாம், ஆம், என்றுமாக, தான் கடவுளைச் சேவிக்க விரும்பினதைக் கடவுள் தெரிந்துகொள்ளும்படிக்கு இயேசு இதைச் செய்தார். ஆனால் இயேசு தண்ணீரின் கீழ் அந்த விதமாக வைக்கப்படும்படி கடவுள் விரும்பினாரா? — ஆம், அவர் விரும்பினார். நமக்கு எப்படித் தெரியும்? —

எப்படியென்றால், இயேசு தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது: ‘நீ நான் நேசிக்கும் என்னுடைய குமாரன். உன் பேரில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்,’ என்று ஒரு பெரிய குரல் பரலோகத்திலிருந்து சொல்வதை அவர் கேட்டார்.—மாற்கு 1:9-11.

இதன் பின்பு இயேசு என்ன செய்தார்? — செவிகொடுக்க மனமுள்ள எல்லோருக்கும் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டு சுற்றிச் செல்ல ஆரம்பித்தார். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் எப்படி என்றுமாக வாழக்கூடும் என்பதைப் பற்றி அவர்களுக்குச் சொன்னார்.

பெரிய போதகர் தங்களுக்குக் கற்பித்ததை ஆண்களிலும் பெண்களிலும் சிலர் நம்பினார்கள். ஆனால் அவர்களுக்கு விசன உணர்ச்சி உண்டாயிற்று. ஏன் என்று உனக்குத் தெரியுமா? —

ஏனென்றால் தாங்கள் செய்திருந்த பல கெட்ட காரியங்களைப் பற்றி அவர்கள் நினைத்தார்கள். அந்தக் காரியங்கள் கடவுளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்தக் காரியங்கள் தவறானவை என்று பைபிள் சொன்னதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இப்பொழுது அவர்கள் இயேசுவைப் போல் இருந்து கடவுளை மகிழ்விக்க விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் என்ன செய்தார்கள் என்று உனக்குத் தெரியுமா? —

இயேசு முழுக்காட்டப்பட்டதுபோல் தாங்களும் முழுக்காட்டப்பட வேண்டுமென்று அவர்கள் கேட்டார்கள். தாங்கள் கடவுளை நேசிப்பதாகவும் தங்கள் வாழ்நாளெல்லாம் அவரைச் சேவிக்க விரும்புவதாகவும் கடவுளுக்குச் சொல்ல அவர்கள் விரும்பினார்கள்.

இன்று நாம் அதே காரியத்தைச் செய்யக்கூடும். சந்தேகமில்லாமல், இப்பொழுது நீ இன்னும் வளர்ந்து கொண்டிருப்பவனாக இருக்கிறாய். ஆனால் உன் முழு வாழ்க்கையையும் வெறுமென வளர்ந்து கொண்டிருப்பதில் நீ செலவிடப்போவதில்லை, அல்லவா? — நிச்சயமாகவே இல்லை. ஏதோ ஒரு நாள் நீ வளர்ந்தவனாகி விட்டிருப்பாய். அப்பொழுது நீ என்ன செய்யப் போகிறாய்? —

நீ இயேசுவைப் போல் இருப்பாயா? — இயேசுவில் நம்பிக்கை வைத்த அந்த ஆண்களும் பெண்களும் செய்ததை நீ செய்வாயா? நீ முழுக்காட்டப்படுவாயா? — அப்படிச் செய்வாயானால், நீ கடவுளை நேசிக்கிறாய் என்று அவருக்குச் சொல்லுகிறவனாக இருப்பாய். நீ அவரை உன் வாழ்நாளெல்லாம் சேவிக்க விரும்புகிறாய் என்று அவருக்குச் சொல்லுகிறவனாக இருப்பாய். நீ இதைச் செய்வாயென்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். நீ அப்படிச் செய்வாயானால் கடவுள் மிகவும் மகிழ்ச்சியடைவார்.

ஒருவன் வளர்ந்து பெரிய ஆளாகையில், அவன் செய்யக்கூடிய பல காரியங்கள் இருக்கின்றன. வளர்ந்த ஆட்கள் சிலர் தங்கள் குடும்பங்களுடன் வாழ்கின்றனர். அவர்கள் வேலை செய்து பணம் சம்பாதித்து, தங்கள் குடும்பங்களுக்காகப் பொருட்களை வாங்குகின்றனர். அவர்கள் உடைகள், உணவு, தட்டுமுட்டு சாமான்கள், மோட்டார்கார் போன்றவைகளையுங்கூட வாங்குகிறார்கள். அது நல்லது. ஆனால் தாங்கள் கடவுளை நேசிக்கிறார்களென்று அவருக்குச் சொல்வதற்குரிய முறை இதுவாகுமா? தங்கள் வாழ்நாளெல்லாம் அவரைச் சேவிக்கத் தாங்கள் விரும்புகிறார்களென்று கடவுளுக்குச் சொல்லும் முறை இதுதானா? —

மற்றொருவன் அவர்களிடம் பைபிளைப்பற்றிப் பேச முயலுகையில், இந்த ஆட்களில் பலர் அவனுக்குச் செவி கொடுத்துக் கேட்கவுங்கூட விரும்புகிறதில்லை. அவர்கள் ஒருவேளை பைபிளையுங்கூட வாசிக்கமாட்டர்கள். அவர்களில் சிலர் கடவுளைப் பற்றியோ பெரிய போதகரைப்பற்றியோ என்றாவது பேசுவதுங்கூட அரிதாயிருக்கிறது. தங்கள் பிள்ளைகளிடத்திலுங்கூட பேசுவதில்லை. தாங்கள் சாப்பிடும் உணவுக்காகவுங்கூட இவர்களில் சிலர் கடவுளுக்கு நன்றி சொல்வதில்லை. இரவில் ஜெபத்தில் அவரிடம் பேசுவதுங்கூட இல்லை. இவர்கள் உண்மையில் கடவுளை நேசிக்கிறதில்லை, அல்லவா? — நீ பெரியவனாக வளர்ந்து அவர்களைப்போல் இருக்க விரும்பமாட்டாய், அல்லவா? — அப்படியிருப்பது எவ்வளவு விசனமான காரியமாயிருக்கும்?

பெரிய போதகர், சிறு பிள்ளைகள் உட்பட, எல்லா வகையான ஆட்களிடத்திலும் கடவுளைப்பற்றிப் பேசினார். கடவுளைப் பற்றியும், கடவுள் தம்மை நேசிக்கிறவர்களுக்காகச் செய்யப்போகிற நல்ல காரியங்களைப்பற்றியும் பேசுவதில் அவர் சந்தோஷம் கொண்டார். ‘தகப்பனே, நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை என்றுமாகச் சேவிக்க நான் விரும்புகிறேன்,’ என்று அவர் கடவுளிடத்தில் சொன்னபோது அவர் உண்மையில் அதைக் கருதினார். இப்பொழுது நீ இளைஞனாக இருக்கையிலேயே பெரிய போதகரைப்பற்றி உன்னால் கூடிய எல்லாவற்றையும் கற்றுக்கொள். யெகோவா தேவனுக்கான அன்பினால் உன் இருதயம் நிரம்பி வழியட்டும். அப்பொழுது நீயுங்கூட, ‘நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை என்றுமாகச் சேவிக்க நான் விரும்புகிறேன்,’ என்று கடவுளிடத்தில் சொல்லுகையில் உண்மையில் கருதியே சொல்வாய்.

(கடவுளிடமாக நம்முடைய அன்பை நாம் எப்படி நிரூபிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிற மற்ற வசனங்களை மத்தேயு 6:24-33; 24:14; 1 யோவான் 2:15-17; 5:3 ஆகியவற்றில் நீங்கள் வாசிக்கலாம்.)