பிறந்த நாட்கள் கொண்டாடின இருவர்
அதிகாரம் 30
பிறந்த நாட்கள் கொண்டாடின இருவர்
உனக்கு விருந்துகள் பிரியமா? — அவை நல்ல விருந்துகளாக இருந்தால், மிகுந்த மகிழ்ச்சிக்குரியவையாக இருக்கக்கூடும்.
ஆனால் எல்லா விருந்துகளும் நல்லவையாக இல்லை. சில விருந்துகளில் அவ்வளவு கூச்சல் போடப்படுவதால் அடுத்த வீட்டிலுள்ள ஆட்கள் கோபமூட்டப்படுகின்றனர். சில விருந்துகளைக் கடவுளுங்கூட அங்கீகரிப்பதில்லை. இது உனக்குத் தெரியுமா? — கடவுள் அதை அங்கீகரிக்கவில்லை என்று நீ தெரிந்திருப்பாயானால் அந்த விருந்தில் இருக்க நீ விரும்புவாயா? —
பைபிள் விருந்துகளைப் பற்றிச் சொல்லுகிறது. இயேசு ஒரு சமயத்தில் ஒரு விருந்துக்குச் சென்றார். அவருடைய அப்போஸ்தலருங்கூட சென்றனர். இது ஒருவருக்கு விவாகமானபோது வைக்கப்பட்ட விருந்து. இந்த வகையான விருந்துக்கு நீ எப்பொழுதாவது போயிருக்கிறாயா? —
இரண்டு பிறந்தநாள் விருந்துகளைப் பற்றியுங்கூட பைபிள் சொல்லுகிறது. இவற்றில் ஒன்று பெரிய போதகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு வைக்கப்பட்டதா? — இல்லை. இந்த இரண்டு பிறந்தநாள் விருந்துகளும், யெகோவாவைச் சேவிக்காத மனிதருக்காக வைக்கப்பட்டவை.
இந்தப் பிறந்தநாள் விருந்துகளில் ஒன்று அரசனாகிய ஏரோது அந்திப்பாருக்காக வைக்கப்பட்டது. கலிலேயா மாகாணத்தில் இயேசு வசித்து வந்தபோது இவன் அதன் அரசனாக இருந்தான்.
அரசனாகிய ஏரோது பல கெட்ட காரியங்களைச் செய்தான். தன்னுடைய சகோதரனின் மனைவியைத் தான் எடுத்துக் கொண்டான். அவளுடைய பெயர் ஏரோதியாள். அவன் அப்படிச் செய்தது தவறு என்று கடவுளுடைய ஊழியனாகிய முழுக்காட்டுபவனான யோவான் ஏரோதுக்குச் சொன்னான். ஏரோது அதை விரும்பவில்லை. ஆகவே அவன் யோவானைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்தான்.—லூக்கா 3:19, 20.
யோவான் சிறைச்சாலையில் இருக்கையில், ஏரோதுவின் பிறப்பை நினைவுகூருவதற்கான அந்த நாள் வந்தது. ஏரோது ஒரு பெரிய விருந்தளித்தான். முக்கிய ஆட்கள் பலரை அவன் அழைப்பித்தான். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து சந்தோஷம் அனுபவித்தார்கள்.
அப்பொழுது ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து அவர்களுக்காக நடனமாடினாள். அவளுடைய நடனத்தில் அவர்கள் எல்லோரும் அவ்வளவு சந்தோஷப்பட்டதால் அரசனாகிய ஏரோது அவளுக்கு ஒரு பெரிய பரிசைக் கொடுக்கும்படி விரும்பினான். அவன் அவளைக் கூப்பிட்டு, ‘என் ராஜ்யத்தில் பாதி வரையாக, நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும் நான் அதை உனக்குத் தருவேன்,’ என்று சொன்னான்.
அவள் என்ன வேண்டுமென்று கேட்பாள்? பணமாக இருக்குமா? அழகிய உடைகளாக இருக்குமா? தனக்கே சொந்தமான ஓர் அரண்மனையாக இருக்குமா? என்ன சொல்வதென்றே அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. ஆகவே அவள் தன் தாய் ஏரோதியாளிடம் சென்று, “நான் என்ன கேட்கவேண்டும்?” என்று கேட்டாள்.
ஏரோதியாள் முழுக்காட்டுபவனாகிய யோவானை மிக அதிகமாய்ப் பகைத்தாள். ஆகவே அவள் அவனுடைய தலையைக் கேட்கும்படி தன் மகளுக்குச் சொன்னாள். அந்தப் பெண் அரசனிடம் திரும்பச் சென்று: ‘நீர் இப்பொழுதே ஒரு தட்டில் முழுக்காட்டுபவனாகிய
யோவானின் தலையை எனக்குத் தரவேண்டும்,’ என்று சொன்னாள்.யோவானைக் கொல்ல அரசனாகிய ஏரோதுக்கு மனமில்லை. ஏனென்றால் யோவான் ஒரு நல்ல மனிதன் என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் ஏரோது வாக்கு கொடுத்துவிட்டான், மேலும் தன்னுடைய மனதை மாற்றிக் கொள்வானானால் விருந்துக்கு வந்திருந்த மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றும் அவன் பயந்தான். ஆகவே யோவானின் தலையை வெட்டும்படி சிறைச்சாலைக்கு ஒரு மனிதனை அவன் அனுப்பினான். சீக்கிரத்தில் அந்த மனிதன் திரும்பி வந்தான். அவன் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்திருந்தான். அதை அவன் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தான். பின்பு அந்தப் பெண் ஓடி அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள். இது பயங்கரம் அல்லவா? — —மாற்கு 6:17-29.
பைபிள் சொல்லுகிற மற்றொரு பிறந்த நாள் விருந்தைப் பற்றியதென்ன? அது இதைப் பார்க்கிலும் நல்லதாக இருந்ததா? —
இந்த விருந்து எகிப்து தேசத்தின் ஒரு அரசனுக்காக வைக்கப்பட்டது. இந்த விருந்திலும் அவன் ஒருவனுடைய தலை வெட்டப்படும்படி செய்தான். பின்பு பறவைகள் தின்னும்படி அவனைத் தொங்க வைத்தான்.—ஆதியாகமம் 40:20-22.
இந்த விருந்துகளைக் கடவுள் அங்கீகரித்தார் என்று நீ நினைக்கிறாயா? — அந்த விருந்துகளில் இருக்க நீ விரும்பியிருப்பாயா? —
பைபிளில் இருக்கிற ஒவ்வொன்றும் ஒரு காரணத்திற்காகவே அங்கே இருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் நல்ல ஆட்களின் மாதிரியைப் பார்த்து நடக்கும்படி அது அவர்களைப்பற்றி நமக்குச் சொல்லுகிறது. கெட்ட ஆட்கள் செய்தவற்றை நாம் செய்யாதபடி அது அவர்களைப்பற்றி நமக்குச் சொல்லுகிறது. இரண்டு பிறந்த நாள் விருந்துகளைப்பற்றி மாத்திரமே பைபிள் சொல்லுகிறது. அவை இரண்டும் கெட்டவையாக இருந்தன. ஆகவே பிறந்த நாள் விருந்துகளைப் பற்றி கடவுள் நமக்கு என்ன சொல்லுகிறாரென்று நீ சொல்வாய்? நாம் பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரா? —
இன்று இப்படிப்பட்ட விருந்துகளின்போது ஆட்கள் யாரோ ஒருவருடைய தலையை வெட்டுவதில்லை என்பது உண்மையே. ஆனால் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்த ஆட்களிலிருந்தே பிறந்த நாட்களைக் கொண்டாடும் இந்த முழு அபிப்பிராயமும் தொடங்கினது. அவர்கள் புற தெய்வ வணக்கத்தார். அவர்கள் யெகோவாவைச் சேவியாத
ஜனங்கள். நாம் அவர்களைப் போல் இருக்க வேண்டுமா? —பெரிய போதகரைப் பற்றியதென்ன? அவர் பிறந்த நாள் கொண்டாடினாரா? — இல்லை. பைபிளில் ஒரு இடத்திலும், இயேசுவுக்குப் பிறந்த நாள் விருந்து வைத்ததாக எதுவுமே சொல்லப்பட்டில்லை.
இயேசு மரித்தப் பிறகுங்கூட, அவரை உண்மையாய்ப் பின்பற்றினவர்கள் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அவர்கள் புற தெய்வ வணக்கத்தாரைப்போல் இருக்க விரும்பவில்லை. ஆனால் பின்னால் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பின மனிதர் இருந்தனர். இவர்கள் இயேசு பிறந்த மெய்யான தேதியை உபயோகிக்க முடியவில்லை, ஏனென்றால் அது எப்பொழுது என்று பைபிள் சொல்லுகிறதில்லை. ஆகவே அவர்கள் புற தெய்வ வணக்கத்தாருக்கு இருந்த திருநாள் ஒன்றின் தேதியைத் தெரிந்து கொண்டார்கள். அதுவே டிசம்பர் 25. இன்றுங்கூட, அப்பொழுதே ஜனங்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடுகிறார்கள். கடவுள் இதை அங்கீகரிக்கிறார் என்று நீ நினைக்கிறாயா? —
கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்தநாள் அல்லவென்று பெரும்பான்மையோர் அறிந்திருக்கின்றனர். என்றபோதிலும் பலர் அதைக் கொண்டாடுகின்றனர். கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைப்பற்றி அவர்கள் உண்மையில் கவலைப்படுகிறதில்லை. ஆனால் நாம் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிறோம், அல்லவா? —
ஆகவே நமக்கு விருந்துகள் இருக்கையில் அவை நல்லவையாக இருக்கும்படி நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். நாம் அவற்றை வருடத்தில் எந்தச் சமயத்திலாவது வைத்துக்கொள்ளலாம். ஒரு விசேஷித்த நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நாம் சில விசேஷித்த உணவைச் சாப்பிட்டு விளையாட்டுகள் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கலாம். இதைச் செய்ய உனக்குப் பிரியமா? — ஆனால் நம்முடைய திட்டங்களைப் போடுவதற்கு முன்னால் அது கடவுள் அங்கீகரிக்கும் வகையான விருந்தாக இருக்கும்படி நாம் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.
(கடவுள் அங்கீகரிப்பதையே எப்பொழுதும் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம், யோவான் 8:29; ரோமர் 12:2; நீதிமொழிகள் 12:2; 1 யோவான் 3:22 ஆகியவற்றிலும் காட்டப்பட்டிருக்கிறது.)