Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோராகிய உங்களுக்கு ஓர் ஆலோசனை

பெற்றோராகிய உங்களுக்கு ஓர் ஆலோசனை

பெற்றோராகிய உங்களுக்கு ஓர் ஆலோசனை

பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடத்தில் கொண்டுள்ள அன்பு ஓர் அதிசயமான பண்பாகும். சந்தேகமில்லாமல், பெற்றோர் பெரும்பாலரைப்போல், நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பதில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறீர்கள்.

ஆனால் இதில், உங்கள் பிள்ளைகளுக்கு வெறுமென உணவும் உடையும் கொடுத்து கல்வி பயிலும்படி அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடுவதைப் பார்க்கிலும் அதிகம் இருக்கிறதென்பதை நீங்கள் மதித்துணருகிறீர்களென்று நாங்கள் நிச்சமாயிருக்கிறோம். வாழ்க்கையை வெற்றிகரமாய் எதிர்ப்பட, பிள்ளைகளுக்கு ஒழுக்க சம்பந்தமான வழிநடத்துதல், வாழ்க்கையில் பொருத்தி வாழ்வதற்கான நியமங்கள் தேவை. அவர்களுடைய மிக இளம் வயது முதற்கொண்டே இவை அவர்களுக்குத் தேவை. உதவியை மிகப் பிந்தி பெறுகிற பிள்ளைகளுடைய விஷயத்தில், இருதயத்திற்குக் கடுந்துயரத்தை உண்டுபண்ணுகிற காரியங்கள் நடக்கக்கூடும், நடக்கவும் செய்கின்றன.

ஒருவேளை, பல பெற்றோரைப்போல் நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு, எங்கே ஆரம்பிப்பது எதைக் கற்பிப்பது என்பதைக் குறித்ததில் ஒருவாறு தடுமாற்ற நிலையில் இருப்பதாக உணரக்கூடும். மெய்யாகவே எங்காவது காணக்கூடிய எவற்றிலும் மிகச் சிறந்த நியமங்கள் பைபிளில் காணப்படுகின்றன. பைபிளில் மூலாதாரத்தைக் கொண்ட போதனை திட்டவட்டமான அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பிள்ளைகள், தங்களுக்குச் சொல்லப்படுவது வெறுமென தங்கள் தகப்பனுடைய அல்லது தாயினுடைய அபிப்பிராயமல்ல; தங்கள் சிருஷ்டிகரே அதைச் சொல்லுகிறார், அது அவருடைய சித்தம் என்பதை மதித்துணருகிறவர்களாகின்றனர். வேறு எந்த முறையிலும் ஈடுசெய்ய முடியாத பெற்றோரின் புத்திமதிக்கு இது பலத்தைக் கொடுக்கிறது.

தங்கள் பிள்ளைகளின் மனதில் சரியான நியமங்களை ஆழமாய்ப் பதியவைப்பதில் தனிப்பட்ட அக்கறையை எடுக்கும்படி பைபிளின் பக்கங்களில் கடவுள் பெற்றோரை ஊக்கப்படுத்துகிறார். இந்த உத்தரவாதத்தை வேறு எவரிடமாவது கடத்திவிடுவது சுலபமாய்த் தோன்றலாம். ஆனால் அப்படிச் செய்வதானது, வெகு சுவை நிறைந்த அனுபவத்தை இழந்து விடுவதைக் குறிக்கும். நீங்கள் மட்டுமேயல்லாமல் வேறு எவரும் செய்யக்கூடாத ஒரு முறையில் உங்கள் பிள்ளையின் இருதயத்தைத் தொடும் நல்ல வாய்ப்பை விட்டுவிடுவதைக் குறிக்கும்.

இன்று பல வீடுகளில் பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாகச் சிறிது சிறிதாய்த் தொடர்ந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் பெரியவர்களாக வளருகையில் மிக முக்கியத்துவமுடைய காரியங்களைப்பற்றி அவர்களிடம் பேசுவது அதிகமதிகமாய்க் கடினமாகிக்கொண்டு போவதாகப் பெற்றோர் அநேகத் தடவைகளில் காண்கின்றனர். “பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்” புத்தகமாகிய இது, உங்கள் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு நிலைமையைத் தடுப்பதற்கு உதவிசெய்யும்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து வாசிக்கக்கூடிய வண்ணமாய் இது திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் மேலாக, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உரையாடலைத் தூண்டிவிடும்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இது பிள்ளைகளின் பங்கில் ஒரு பதிலை வரவழைப்பதாய் இருக்கிறது. அச்சடிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகளில், பொருத்தமாக அமையும் பல கேள்விகளை நீங்கள் காண்பீர்கள். இவற்றிற்கு வருகையில் நீங்கள் சற்று நிறுத்தும்படியும் உங்கள் பிள்ளைகள் தங்கள் எண்ணத்தை வெளியிடும்படி ஊக்கப்படுத்தவும் ஓர் இடைக்கோடு () இருப்பதை நீங்கள் காண்பீர்கள். பிள்ளைகள் தாங்களும் உட்பட்டிருக்க விரும்புவர். இந்த உட்படுதல் இல்லாமல் பிள்ளையின் கவனம் விரைவில் குறைந்துபோய் விடுகிறது. அதிக முக்கியமாக, உங்கள் பிள்ளையின் மனதில் என்ன இருக்கிறதென்பதை அறிந்துகொள்ள இந்தக் கேள்விகள் உங்களுக்கு உதவிசெய்யும். நிச்சயமாகவே, முற்றிலும் சரியாயிராத பதில்களைப் பிள்ளை சொல்லக்கூடும். ஆனால் ஒவ்வொரு கேள்வியையும் பின்தொடர்ந்துவரும் அச்சடிக்கப்பட்ட விஷயம், ஆரோக்கியமான மாதிரியின்படி யோசனை செய்வதை விருத்திச்செய்ய பிள்ளைக்கு உதவிசெய்யும்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

பிள்ளை வாசிக்க ஆரம்பிக்கையில், இந்தப் புத்தகத்தை உங்களிடம் வாசித்துக் காட்டும்படியும், சில சமயங்களில் தானே தனியாக வாசிக்கவும் உற்சாகப்படுத்துங்கள். அவன் எவ்வளவு அதிகமாக அதை வாசிக்கிறானோ, அவ்வளவு அதிகமாக அதன் நல்ல புத்திமதி அவனுடைய மனதிலும் இருதயத்திலும் ஆழமாய்ப் பதியும். ஆனால், பெற்றோராகிய உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையில் பாசமும் மரியாதையுமாகிய இந்த உறவுகளைப் பலப்படுத்த, இந்தப் புத்தகத்தைக் கட்டாயமாகவே ஒன்றாகச் சேர்ந்து வாசியுங்கள். அவ்விதம் தவறாமல் செய்து வாருங்கள்.

ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் சில பைபிள் வசனங்களின் இடக்குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒன்றாக எடுத்துப் பார்க்க சிறிது நேரம் ஏன் எடுக்கக்கூடாது? இதன் மூலமாய் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பைபிளை நன்றாய் உபயோகிக்கக் கற்றுக்கொள்ளக்கூடும். இந்த வேதவசனங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை விளக்குங்கள். நீங்கள் எடுத்துப் பார்க்கும் வேதவசனங்களில் ஏதாவது கடினமான வார்த்தைகள் இருக்குமானால் இந்தப் புத்தகத்தில் செய்யப்படுகிறதுபோல அதை விளங்கிக்கொள்ள உதவிசெய்யுங்கள். இதைச் செய்வதன்மூலம், நீங்கள் உங்கள் பிள்ளையின் கவனத்தை, வாழ்க்கையில் மிகச் சிறந்த வழிக்காட்டுதலைக் கொடுக்கக்கூடிய ஊற்று மூலமாகிய பைபிளுக்கு வழிநடத்துகிறவர்களாக இருப்பீர்கள்.

சிருஷ்டிகருக்குப் பிரியமாயிருக்கவும், உங்கள் நித்திய ஆசீர்வதத்திற்கேதுவாகவும், உங்கள் வாழ்க்கையை உருப்படுத்தி அமைப்பதற்கு இந்தப் புத்தகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உதவிசெய்யுமென்று நாங்கள் உண்மையுடன் நம்புகிறோம்.

பிரசுரிப்போர்