Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 6​—⁠முன்னுரை

பகுதி 6​—⁠முன்னுரை

கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்கள் வந்துசேர்ந்த பிறகு, வழிபாட்டுக் கூடாரம் கடவுளை வணங்குவதற்கான முக்கிய இடமாக ஆனது. குருமார்கள் திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுத்தார்கள், நியாயாதிபதிகள் மக்களை வழிநடத்தினார்கள். ஒருவருடைய தீர்மானங்களும் செயல்களும் மற்றவர்கள்மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்வோம். இஸ்ரவேலர்கள் ஒவ்வொருவருமே யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டியிருந்தது. தெபொராள், நகோமி, யோசுவா, அன்னாள், யெப்தாவின் மகள், சாமுவேல் ஆகியோர் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார்கள். கடவுள் இஸ்ரவேலர்களுக்குத் துணையாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டதால், ராகாப், ரூத், யாகேல், கிபியோனியர்கள் போன்ற வேறு தேசத்து மக்களும் இஸ்ரவேலர்களின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

இந்தப் பகுதியில்

பாடம் 29

யோசுவாவை யெகோவா தேர்ந்தெடுக்கிறார்

யோசுவாவுக்குக் கடவுள் கொடுத்த ஆலோசனைகள் நமக்கும் பிரயோஜனமாக இருக்கின்றன.

பாடம் 30

உளவாளிகளை ராகாப் ஒளித்து வைக்கிறாள்

எரிகோவின் மதில்சுவர் இடிந்து விழுந்தது. ஆனால், ராகாபின் வீடு மதிலில் கட்டப்பட்டிருந்தாலும், இடியாமல் அப்படியே இருக்கிறது.

பாடம் 31

யோசுவாவும் கிபியோனியர்களும்

“சூரியனே, அசையாமல் நில்” என்று கடவுளிடம் யோசுவா ஜெபம் செய்தார். கடவுள் பதில் கொடுத்தாரா?

பாடம் 32

புதிய தலைவரும் தைரியமுள்ள இரண்டு பெண்களும்

யோசுவா இறந்த பிறகு, இஸ்ரவேலர்கள் சிலைகளை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தன. நியாயாதிபதி பாராக், பெண் தீர்க்கதரிசி தெபொராள், கூடார ஆணி வைத்திருந்த யாகேல் ஆகியோர் மூலமாக அவர்களுக்கு உதவி கிடைத்தது.

பாடம் 33

ரூத்தும் நகோமியும்

கணவனை இழந்த இரண்டு பெண்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போனார்கள். அவர்களில் ஒருத்தியான ரூத், வயலில் வேலை செய்ய போனாள். அங்கே போவாஸ் அவளைக் கவனித்தார்.

பாடம் 34

மீதியானியர்களை கிதியோன் தோற்கடிக்கிறார்

மீதியானியர்கள் இஸ்ரவேலர்களைப் பாடாய்ப் படுத்தியதால், அவர்கள் உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சினார்கள். கிதியோனின் சிறிய படை எப்படி எதிரி படையிலிருந்த 1,35,000 வீரர்களைத் தோற்கடித்தது?

பாடம் 35

ஆண் குழந்தைக்காக அன்னாளின் ஜெபம்

அன்னாளையும் பெனின்னாளையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சீலோவில் இருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கு எல்க்கானா போகிறார். ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று அன்னாள் அங்கே ஜெபம் செய்கிறாள். ஒரு வருஷத்திற்குள், சாமுவேல் பிறக்கிறான்!

பாடம் 36

யெப்தா செய்த சத்தியம்

யெப்தா என்ன சத்தியம் செய்தார், ஏன்? யெப்தா செய்த சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதும் அவருடைய மகள் என்ன சொன்னாள்?

பாடம் 37

யெகோவா சாமுவேலிடம் பேசுகிறார்

தலைமைக் குருவான ஏலியின் இரண்டு மகன்களும் வழிபாட்டுக் கூடாரத்தில் குருமார்களாகச் சேவை செய்தார்கள். ஆனால், கடவுளுடைய சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. சாமுவேல் அவர்களைப் போல் இல்லை. யெகோவா சாமுவேலிடம் பேசினார்.

பாடம் 38

யெகோவா சிம்சோனுக்குப் பலம் தருகிறார்

பெலிஸ்தியர்களை எதிர்ப்பதற்காக சிம்சோனுக்குக் கடவுள் பலம் கொடுத்தார். ஆனால், சிம்சோன் தவறான முடிவு எடுத்ததால் பெலிஸ்தியர்களின் கையில் சிக்கினார்.