Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

5

பைபிளின் செய்தி

பைபிளின் செய்தி

மனிதரை ஆட்சி செய்ய யெகோவா தேவனுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அவருடைய ஆட்சியே சிறந்தது. பூமியையும் மனிதரையும் அவர் படைத்த நோக்கம் நிறைவேறும்.

கி.மு. 4026-க்கு பின்

மனிதரை ஆள யெகோவாவுக்கு உரிமை இருக்கிறதா, அவர் நீதியாக ஆட்சி செய்கிறாரா என்று ‘பாம்பு’ கேள்வி கேட்டது. ஒரு ‘வித்து’ (வாரிசு) வருவார், அவர் கடைசியில் பாம்பை, அதாவது சாத்தானை, நசுக்குவார் என யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (ஆதியாகமம் 3:1-5, 15) இருந்தாலும், சாத்தானின் கட்டுப்பாட்டில் உள்ள மனித ஆட்சியை யெகோவா கொஞ்ச காலத்துக்கு அனுமதிக்கிறார்.

கி.மு. 1943

வாக்குப்பண்ணப்பட்ட “சந்ததி” (வாரிசு) ஆபிரகாமின் வம்சத்தில் வரும் என்று யெகோவா சொல்கிறார்.—ஆதியாகமம் 22:18.

கி.மு. 1070-க்கு பின்

வாக்குப்பண்ணப்பட்ட “சந்ததி” அவர்களுடைய வம்சத்தில் வரும் என்று தாவீது ராஜாவிடமும் பின்பு சாலொமோனிடமும் யெகோவா உறுதியளிக்கிறார்.—2 சாமுவேல் 7:12, 16; 1 இராஜாக்கள் 9:3-5; ஏசாயா 9:6, 7.

கி.பி. 29

வாக்குப்பண்ணப்பட்ட “சந்ததி” இயேசுவே; இவரே தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார உரிமையுள்ளவர் என யெகோவா அடையாளம் காட்டுகிறார்.—கலாத்தியர் 3:16; லூக்கா 1:31-33; 3:21, 22.

கி.பி. 33

இயேசுவைக் கொல்வதன் மூலம் வாக்குப்பண்ணப்பட்ட ‘சந்ததியை’ சாத்தான் தற்காலிகமாகக் காயப்படுத்துகிறான். இயேசு தம்மையே பலியாகக் கொடுத்து, பூமியில் என்றென்றும் வாழும் உரிமையைத் தியாகம் செய்கிறார்; மனிதரைப் பாவத்திலிருந்து விடுவிக்க இயேசு கொடுத்த இந்தப் பலியை யெகோவா ஏற்றுக்கொள்கிறார். இதன் அடிப்படையில் ஆதாமின் வம்சத்தாருடைய பாவங்களை மன்னித்து, முடிவில்லா வாழ்வை அளிக்கப்போகிறார்.—ஆதியாகமம் 3:15; அப்போஸ்தலர் 2:32-36; 1 கொரிந்தியர் 15:21, 22.

சுமார் கி.பி. 1914

பாம்பை, அதாவது சாத்தானை, இயேசு பூமிக்குத் தள்ளுகிறார், கொஞ்ச காலத்துக்கு இங்கே விட்டு வைத்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 12:7-9, 12.

எதிர்காலத்தில்...

சாத்தானை இயேசு 1,000 ஆண்டுகள் சிறை வைப்பார், பின்பு அவன் தலையை நசுக்குவார், அதாவது அழிப்பார். யெகோவா எதற்காக இந்தப் பூமியையும் மனிதரையும் படைத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறும். அவருடைய பெயர்மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கும், அவர் ஆட்சி செய்யும் முறையே சரி என நிரூபிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 20:1-3, 10; 21:3, 4.