Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயர்வு நவிற்சி அணி

உயர்வு நவிற்சி அணி

ஒரு காரணத்துக்காக வேண்டுமென்றே ஒரு விஷயத்தை மிகைப்படுத்திச் சொல்லும் அணி நடையை இது குறிக்கிறது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்காக அல்லது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. உயர்வு நவிற்சி அணியை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே புரிந்துகொள்ளக் கூடாது.

இயேசு அடிக்கடி இந்த அணி நடையைப் பயன்படுத்தி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். உதாரணத்துக்கு, “உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். (மத் 7:3) இன்னொரு சந்தர்ப்பத்தில், “உங்கள் தலைமுடியில் ஒன்றுகூட விழாது” என்று சொன்னார். (லூ 21:18) தன்னுடைய சீஷர்களின் ஒவ்வொரு முடியும் பாதுகாக்கப்படும் என்று அவர் கண்டிப்பாகச் சொல்லவில்லை. உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்துவதன் மூலம், தன் சீஷர்கள் ‘எல்லா மக்களாலும் வெறுக்கப்பட்டாலும்’ பாதுகாக்கப்படுவார்கள் என்ற உறுதியைத்தான் அளித்தார்.—லூ 21:17.