கரண்டிகள்
தங்கம், வெள்ளி அல்லது செம்பால் இவை செய்யப்பட்டிருந்தன. வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் தூபப்பொருளை எரிக்கவும், பலிபீடத்திலிருந்து தணலை அள்ளவும், தங்கக் குத்துவிளக்கில் இருந்த தீய்ந்துபோன திரிகளை எடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. இவை தூபக்கரண்டிகள் என்றும் அழைக்கப்பட்டன.—யாத் 37:23; 2 நா 26:19; எபி 9:4.