Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்

இது பொதுவாக புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது; இது பைபிளிலுள்ள கடைசி 27 புத்தகங்களின் தொகுப்பு. யூதக் கிறிஸ்தவர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பவுல், யாக்கோபு, பேதுரு, யூதா ஆகிய எட்டுப் பேர் இந்தப் புத்தகங்களை எழுதினார்கள். (ரோ 3:1, 2) மத்தேயு அநேகமாகத் தன் பதிவை எபிரெய மொழியில் எழுதிவிட்டு, பிற்பாடு அதை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்ததாகத் தெரிகிறது. அவர் மொழிபெயர்த்த புத்தகமும், கிரேக்க வேதாகமத்தின் மற்ற புத்தகங்களும் அன்று புழக்கத்தில் இருந்த கொய்னி கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. (அதனால்தான், அவை “கிரேக்க வேதாகமம்” என்று அழைக்கப்படுகின்றன.) “கிறிஸ்தவ” என்ற வார்த்தை, அந்தப் புத்தகங்களில் உள்ள தகவல்களைக் குறிக்கின்றன; இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய ஆரம்பகால சீஷர்களின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் போதனைகளையும் பற்றிய தகவல்கள் அவற்றில் அடங்கும். “கிறிஸ்தவ” என்ற வார்த்தை, கிறிஸ்தவக் காலத்துக்கு முன்பு எழுதப்பட்ட எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பாகிய செப்டுவஜன்ட்டிலிருந்து கிரேக்க வேதாகமத்தை வித்தியாசப்படுத்திக் காட்டவும் உதவுகிறது.