சாண்
நீளத்தை அளப்பதற்கான அளவை. தோராயமாக, கையை விரிக்கும்போது கட்டை விரலின் நுனிக்கும் சுண்டு விரலின் நுனிக்கும் இடையிலுள்ள தூரத்துக்குச் சமம். 44.5 சென்டிமீட்டருள்ள முழத்தின் அடிப்படையில், ஒரு சாண் என்பது 22.2 சென்டிமீட்டர் நீளம் இருக்கலாம். (யாத் 28:16; 1சா 17:4, அடிக்குறிப்பு)—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.