Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிந்தனையைத் தூண்டும் கேள்விகள்

சிந்தனையைத் தூண்டும் கேள்விகள்

கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்காக, ஏதோவொன்றை வலியுறுத்துவதற்காக, ஒரு முக்கியமான குறிப்பைச் சொல்வதற்காக, அல்லது ஒரு விஷயத்தை அலசிப் பார்க்கும்படி தூண்டுவதற்காக இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை.

சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் பைபிளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. மிகத் திறமையாகக் கற்பிப்பதற்கு அவை உதவுகின்றன. யெகோவா தன்னுடைய பூர்வகால மக்களைக் கண்டிப்பதற்கு இப்படிப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தினார். (ஏசா 40:18, 21, 25; எரே 18:14) முக்கியமான உண்மைகளை வலியுறுத்துவதற்காக இயேசு இப்படிப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தினார். (லூ 11:11-13) மக்களை யோசிக்க வைப்பதற்காகவும் அவர் அவற்றைப் பயன்படுத்தினார்; சிலசமயங்களில், இப்படிப்பட்ட கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டார். (மத் 11:7-9) அப்போஸ்தலன் பவுலும் இப்படிப்பட்ட கேள்விகளைச் சிறந்த விதத்தில் பயன்படுத்தினார்.—ரோ 8:31-34; 1கொ 1:13; 11:22.

சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியை பைபிளில் நாம் வாசிக்கும்போது, சற்று நிறுத்தி, அந்தக் கேள்வியிலுள்ள குறிப்பைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, “உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பாரா?” என்று இயேசு கேட்டார்; அந்தக் கேள்வியிலுள்ள குறிப்பு இதுதான்: “ஒரு அப்பா இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யவே மாட்டார்.”—மத் 7:9-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.