டார்டரஸ்
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இந்த வார்த்தை சிறையில் இருப்பது போன்ற தாழ்ந்த நிலையைக் குறிக்கிறது. நோவாவின் காலத்தில் கீழ்ப்படியாமல்போன தேவதூதர்கள் இந்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 2 பேதுரு 2:4-ல் உள்ள டார்டரூ (“டார்டரசில் தள்ளுதல்”) என்ற வினைச்சொல், பொய்மத புராணங்களிலுள்ள டார்டரசுக்குள் (அதாவது, சின்னச் சின்ன தெய்வங்களுக்கென்று இருக்கிற இருட்டான பாதாளச் சிறைக்குள்) ‘பாவம் செய்த தேவதூதர்கள்’ தள்ளப்பட்டதைக் குறிப்பதில்லை. அதற்குப் பதிலாக, கீழ்ப்படியாத அந்தத் தூதர்கள் பரலோகத்தில் அவர்களுக்குரிய இடத்திலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் கடவுளால் நீக்கப்பட்டார்கள் என்பதையே குறிக்கிறது; அதோடு, அவருடைய அருமையான நோக்கங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி மனம் இருளடைந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் குறிக்கிறது. அவர்களுடைய எதிர்காலமும் இருண்டுபோய் இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய தலைவனான பிசாசாகிய சாத்தானோடு சேர்ந்து நிரந்தரமாக அழிக்கப்படப்போகிறார்கள். அதனால், கலகக்கார தேவதூதர்கள் தள்ளப்பட்டிருக்கிற கீழ்த்தரமான நிலைமையைத்தான் டார்டரஸ் என்ற வார்த்தை அர்த்தப்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 20:1-3-ல் உள்ள ‘அதலபாதாளம்’ வேறு, டார்டரஸ் வேறு.