Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நகலெடுப்பவர்கள்

நகலெடுப்பவர்கள்

நகலெடுப்பவர்கள் அல்லது எழுத்தர்கள் என்று பைபிள் குறிப்பிடும் நபர்கள், வேதாகமத்தின் சில பகுதிகளையும் மற்ற ஆவணங்களையும் நகலெடுத்தார்கள்.—எஸ்றா 7:6.

பழங்காலத்தில், கைகளால்தான் நகலெடுத்தார்கள். அதற்கு ரொம்ப நேரம் எடுத்தது, அதிகத் திறமை தேவைப்பட்டது, அதற்காக ரொம்ப சிரமப்படவும் வேண்டியிருந்தது. (சங் 45:1) பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நகலெடுப்பவர்களின் பெயர்கள்: எஸ்றா, சாதோக், சாப்பான். (நெ 12:26; 13:13; எரே 36:10) அசல் பிரதிகள் பழையதாகி இற்றுப்போனாலும் வேதவசனங்கள் அழியாமல் இருப்பதற்கு நகலெடுப்பவர்கள் உதவி செய்தார்கள். இன்னும் நிறைய பேர் கடவுளுடைய வார்த்தையை நிறைய பேர் வாசிக்க ஆரம்பித்ததால் இன்னும் நிறைய நகல்கள் தேவைப்பட்டன. பொதுவாக, நகலெடுப்பவர்கள் தாங்கள் எழுதியவற்றை மிக நுணுக்கமாகச் சரிபார்க்கவும் திருத்தவும் வேண்டியிருந்தது. அவர்களில் சிலர் தாங்கள் நகலெடுத்த வார்த்தைகளையும் எழுத்துக்களையும் எண்ணிக்கூடப் பார்த்தார்கள். இப்படி, அவர்கள் திறமையாக நகலெடுத்ததாலும், எல்லாவற்றையும் கவனமாகச் சரிபார்த்ததாலும், பல நூற்றாண்டுகளாகக் கடவுளுடைய வார்த்தை அழியாமல் இருப்பதற்கு உதவினார்கள்.